» » சட்டையை கழற்றி ராகுவுக்கு மாலையாக போட்ட ஐந்தரையடி பாம்பு..எங்கே தெரியுமா?

சட்டையை கழற்றி ராகுவுக்கு மாலையாக போட்ட ஐந்தரையடி பாம்பு..எங்கே தெரியுமா?

Posted By: Udhaya

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவத்தலமாகும்.\

இந்தியாவின் பிரம்மாண்ட சிவன் சிலைகள்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 29ஆவது சிவத்தலமாகும். கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. இத்தலத்தின் அருகிலேயே வைணவத் தலமான ஒப்பிலியப்பன் திருக்கோயிலும் உள்ளது.

 சட்டையை கழற்றி ராகுவுக்கு மாலையாக போட்ட ஐந்தரையடி பாம்பு..எங்கே தெரியுமா?

PC: Rsmn -

கேரளாவின் 12 அழகிய அரண்மனைகள்!

பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த சண்பகவனம் வந்தானாம். அவன் இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தானாம். ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தாராம். எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமி என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம் ஆனது. இந்த கோயில் இராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி வழிபட்ட தலம். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம்

இவருக்கு உகந்த நிறம் நீலம்ஆகும். இதனால்நீல நிறத்தில் ஆடை அணிந்து வழிபடுவது சிறப்பு. இன்னொரு அதிசயமும் நடக்கின்றது. இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம்.

 சட்டையை கழற்றி ராகுவுக்கு மாலையாக போட்ட ஐந்தரையடி பாம்பு..எங்கே தெரியுமா?

E. A. Rodrigues

இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்ததாக கூறுகின்றனர். இது இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியுள்ளது. இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

குதுப்மினார் - கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் சுற்றுலா

நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன

Read more about: travel, temple