» »சித்ர துர்காவில் நீங்கள் தவறவிடக்கூடாத 5 அதி அற்புத இடங்கள்!!

சித்ர துர்காவில் நீங்கள் தவறவிடக்கூடாத 5 அதி அற்புத இடங்கள்!!

Written By: Balakarthik Balasubramanian

சித்ர துர்காவின் கற்கோட்டைகளின் வாயிலில் நாம் காலடி எடுத்துவைக்க, அந்த இடத்தின் வரலாற்றினையும் புராண இடங்களையும் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள முடிகிறது. பெங்களூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் தான் இந்த சித்ரத் துர்கா. இவ்விடம் வேதவதி நதியின் பள்ளத்தாக்கில் அமைந்து நம் மனதினைக் கொள்ளை அழகால் கவர்கிறது.


சோழர்கள் காலத்துக்கு போகணுமா அப்போ இத கிளிக் பண்ணுங்க

இந்த அழகிய இடத்தினைக் கற்பாறைகள் சூழ, நம் மனம் அதனைக் கண்டு இதமாக மாறி இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே இருக்கிறது. இந்த அழகிய இடத்தினை "சித்ரக்கல் துர்கா" என்றும் அழைப்பர். இங்குக் குடை வடிவில் காணப்படும் இந்தக் கோட்டை, காலத்தால் தாக்குப்பிடித்து கோட்டைக்கே உரியதொரு பெருமையைத் தாங்கி இன்றும் நிற்கிறது. நான் முன்புக் கூறியதை போல் பெங்களூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த இடம் உள்ளது. வேதவதி நதியின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த இடம் மிகவும் பிரசித்திப்பெற்ற ஒன்றாகும். இந்த இடத்தினைப் பாறைகளும், கற்பாறைகளும், பள்ளத்தாக்குகளும் சூழ, அதில் நிற்கும் நம் கால்கள் இதமானதொரு உணர்வினைப் பெறுகிறது என்றுக் கூறவேண்டும். இந்த இடத்தினை "கல்லினக் கோட்டை" (அ) கற்க் கோட்டை என்றும் பெருமையுடன் அழைப்பார்கள்.


உலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?

சித்ர துர்காவில் உள்ள இந்த மலை, இராட்சச அரசனான ஹிடிம்பா மற்றும் அவனுடைய சகோதரியான ஹிடிம்பி ஆகியோரின் உறைவிடம் என்றும் ஒருக் கதை வரலாற்றில் உண்டு. ஹிடிம்பி ஒரு அமைதிப் பிரியை ஆவாள். அதுபோல், தன் பசியைப் போக்க அவளுடைய சகோதரனான ஹிடிம்பா, மனிதர்களை கொன்றுக் குவித்து பசியைப் போக்கிக்கொண்டான் என்றும் கூறுவர். அப்பொழுது வனச்சிறைவாசம் அனுபவிக்க வந்தப் பாண்டவர்களுள் ஒருவனான வலிமைவாய்ந்த பீமன், அந்த அரக்கனுக்கு எதிராகப் போர் புரிந்து ஹிடிம்பனைக் கொன்றான் என்றும் புராணம் கூறுகிறது.


ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா?

சித்ர துர்காவை பிரசித்திப் பெற்ற ஆட்சியாளரான மடக்காரி நாயகா மற்றும் வீரமங்கை ஓனாகே ஒபாவா ஆகியோர் ஆண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஓனாகே ஒபாவா, யாருக்கும் அஞ்சாத ஒரு வீர மங்கை என்றும் அந்த வீர மங்கையின் கரங்களால் ஹைதர் அலிக்கு அடிமைகளாக இருந்த நூற்றுக்கு மேற்பட்ட எதிரிப் படைவீரர்கள் கொல்லப்பட்ட்தாகவும் வரலாறு உண்டு. ஆம், ஹைதர் அலிதான் சித்ரத் துர்காவின் வாயில் வழியே இரகசியமாக நுழைய முயன்ற ஒரு அரசன் ஆவான். இன்று, அந்தக் கோட்டையின் முன்புக் காணப்படும் நுழைவாயிலை "ஒபவானா கிண்டி" என்றும் அழைக்கின்றனர்.

இவ்வாறு வரலாற்றுப் புத்தகமாகவும் பல ஜாம்பவான்களின் சிறப்பாகவும் விளங்கிய இந்த சித்ரத் துர்காவின் பெருமைக்குறிய ஐந்து இடங்களைப் பற்றி தான் நாம் இப்போதுப் பார்க்கப் போகிறோம்.

 சித்ர துர்காக் கோட்டை:

சித்ர துர்காக் கோட்டை:

தூரம்:

சித்ர துர்காப் பேருந்து நிலையத்திலிருந்து 1.3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்தக் கோட்டை, பத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வாழ்ந்த பல்வேறு சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்த மன்னரால் கட்டப்பட்ட ஒன்றாகும். இந்தக் கோட்டை சித்ரத் துர்காவின் முக்கியமான ஒன்றாக விளங்க, இதனைக் காணாமல் ஒருபோதும் நம்மால் இருக்க முடியாது. இந்தக் கோட்டையின் மறு சீரமைப்புப் பணிகளைத் திப்பு சுல்தான் ஆண்டபொழுது செய்தார் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கோட்டையின் கீழ்ப்பகுதியில் ஒருப் பிரம்மாண்டமானக் கோயில் அமைந்துள்ளது. அதுபோல, மேற் பகுதியிலும் சுமார் 18 ஆலயங்கள் அமைந்து நம் மனதினை அமைதிப்படுத்துகிறது.

அதேபோல் கோட்டையின் உள்புறத்தில் ஹைதர் அலி ஆட்சியின்போதுக் கட்டப்பட்ட ஒரு மசூதியும் நம் மனதினை ஆள்கிறது. இந்தக் கோட்டையில் உள்ள கோயில்கள், இராட்சச மன்னனான ஹிடிம்பேஷ்வரனுக்கு அர்பணிக்கப்பட்ட ஒன்றாகும். இந்தக் கோயிலின் உள்ளே இத்தகைய சம்பவங்களை உறுதிப்படுத்தும் வகையில் காணப்படும், ஹிடிம்பனின் ஒரு பல்லும் பீமனுக்கு சொந்தமான ஒரு முரசும் நம்மை ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்தும் செல்கிறது.

Pc: Ankit Darsi

வாணி விலாஸ் சாகர் அணை:

வாணி விலாஸ் சாகர் அணை:


தூரம்:
சித்ர துர்காப் பேருந்து நிலையத்திலிருந்து 58.8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த அணை, சித்ர துர்கா மாவட்டதில் உள்ள ஹிரியூர் எனும் இடத்தில் காணப்படுகிறது. இந்த அணையை "மாரிக் கனிவே" என்றும் அழைப்பார்கள். இந்த அணையினை, வேதவதி நதிக்குக் குறுக்கே, மைசூர் மன்னரால் கட்டப்பட்டது என்றும் கூறுவர். இந்த நதியின் கட்டுமானத்தை மஹாராஜ சாமராஜ உடையாரின் விதவையான ஒரு இராணித் தொடங்கினார் என்றும், மைசூர் ராஜ்யத்தின் நகைகளை இந்தப் பெரிய அணையினைக் கட்டுவதற்காக தியாகம் செய்து, KRS அணையினை விடப் பெரியதாக கட்டினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அணைக்கு அழகான ஒருப் பெயரினை சூட்ட நினைத்தவர்கள், மைசூர் அரசக் குடும்பத்தின் இளம் பெண் வாரிசான வாணி விலாசாவின் பெயரினை இந்த அணைக்குச் சூட்டி மனதார மகிழ்ந்தனர்.

PC:Prayanika

சந்திரவல்லி:

சந்திரவல்லி:


தூரம்:
சித்ர துர்காப் பேருந்து நிலையத்திலிருந்து 3.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்தப் பள்ளத்தாக்கு, மூன்று மலைகளான சித்ரத் துர்கா, கிர்பனாக்கல்லு, சோளாக்குட்டா மூலம் உருவாகி நம் மனதினைக் காட்சிகளால் இதமாக்குகிறது. இந்த இடம், தொல்பொருள் ஆராய்ச்சிகளுக்காக உட்படுத்தப்பட்டு ஹோய்சாலா மற்றும் சடவாகனா வம்சத்தின் வாழ்க்கைப் பற்றி மேலும் நாம் தெரிந்துக்கொள்ள முயற்சிகள் மேற்க்கொண்டு பல இரகசியங்கள் கண்டுப்பிடிக்கவும்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியின் மூலமாக ரோமானிய பேரரசரான அகஸ்டஸ் சீசரின் ஆட்சியில் பயன்படுத்தபட்ட நாணயங்களும், சீனாவின் பேரரசர் ஹன் வூ டி அரசின்போதுப் பயன்படுத்தப்பட்ட நாணயங்களும் கண்டுப்பிடிக்கப்பட்டுக் காட்சிப் பொருளாகவும் வைக்கப்பட்டுள்ளது. புராணத்தின் படி, சந்திரகாசா என்பவரால் ஆளப்பட்ட இந்த இடம் "சந்திரவல்லி" என்றும் அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

PC: Bhat.veeresh

அங்கல்லி மடம்:

அங்கல்லி மடம்:


தூரம்:
சித்ர துர்காப் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இதனை "பிரதேஷப்பன குஹே" என்றும் அழைப்பர். இந்த மடத்தில் அமர்ந்து தியானம் செய்த அங்கால்கி (பெலாகவி) எனும் பெயர் கொண்ட ஒரு துறவியால், இந்த இடத்திற்கு இப்படி ஒருப் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். இந்த இடம் தோன்றிய ஒருக் காலம் கி.பி 1286 என்றும் கன்னடக் கல்வெட்டுக்களின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. இரண்டுப் பெரும் பாறைகளுக்கு நடுவில் அமைந்துக் காட்சியளிக்கும் பஞ்சலிங்கேஸ்வர ஆலயம் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். இந்த ஆலயத்தின் உள்ளேக் காணப்படும் ஐந்து லிங்கங்கள், பஞ்சப் பாண்டவர்களால் நிறுவப்பட்டது என்றும் வரலாறுக் கூறுகிறது. இங்குக் காணப்படும் ஏரி, மேலும் இந்த இடத்திற்கு அழகுச் சேர்த்து நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

PC: Nikhil0000711

அடுமல்லேஷ்வர ஆலயம்:

அடுமல்லேஷ்வர ஆலயம்:


தூரம்:
சித்ர துர்காப் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஆடுரூ மல்லப்பா என்போரால் நிறுவப்பட்ட இந்த ஆலயம், மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். இங்குக் குகைக்குள் அமைந்துள்ளக் கோயில், சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கபட்டதாகும். மேலும் இந்த இடத்தில் காணப்படும் ஒரு சிறு உயிரியல் பூங்கா, குழந்தைகளை வெகுவாக கவர்கிறது. இந்த சிறுப் பூங்காவின் உள்ளே சிறுத்தை, மான், புலி எனப் பல விலங்குகள் நம் மனதினை மகிழ்ச்சி அடைய செய்கிறது. இந்தக் கோயிலின் சிறப்பம்சமாக நந்தி சிலை வாயிலிருந்து வெளிப்படும் நித்திய நீரோடை இருக்க , அதுப் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

PC: Nikhil0000711

Read more about: travel, temple