» »கோவாவின் மிக அருகில் இருக்கும் கார்வாரில் நாம் காண வேண்டிய 5 அற்புத கடற்கரைகள்!!

கோவாவின் மிக அருகில் இருக்கும் கார்வாரில் நாம் காண வேண்டிய 5 அற்புத கடற்கரைகள்!!

Posted By: Bala Karthik

உத்தர கன்னடாவின் கடற்கரை நகரம் தான் கார்வார் எனப்பட, காளி நதியின் ஆற்றங்கரையில் இது காணப்படுகிறது. இது மகிழ்ச்சிக்கரமானதாக, பாதுகாக்கப்பட்ட அண்டை இடமாக கோவாவையும் அதன் கடற்கரைகளையும் கொண்டிருப்பதோடு, சாகசங்கள், விளையாட்டுக்கள், உணவு, மற்றும் இயற்கை எனவும் காணப்படுகிறது. கார்வார், உத்தர கன்னடாவின் நிர்வாக தலைமையகமாக காணப்படும் அழகிய நகரமாக, நாட்டின் மேற்கு கடற்கரைப்பகுதியில் இது காணப்படுகிறது.

கார்வாரில் 5 அற்புத கடற்கரைகள்!!

கார்வாரில் 5 அற்புத கடற்கரைகள்!!


கார்வார் என்ற வார்த்தை, ‘கர்வாத்' என்றதிலிருந்து நமக்கு கிடைக்கிறது. ஆங்கிலேயர்களால் கடல் வியாபாரத்தின் தலை நகரமாக கர்வாரை 1862ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கார்வார் துறைமுகம், ஐந்து தீவுகளால் பதுங்கி காணப்பட அவற்றின் பெயராக அஞ்சிதிவ், குதும்கத், தேவ்கத், மோக்ரல் மற்றும் சாம்ஷிகுடாவாகவும் இருக்கிறது. இந்த தீவுகளால் துறைமுகம் பாதுகாக்கப்பட, அபாயகரமான காற்றிலிருந்தும் அழிந்துவிடாமல் பாதுகாக்கிறது. ஐபன் பூட்டா என்பவரால் கார்வார் கடக்கப்பட, ‘பைத்கோல்' எனவும் இதனை அவர் வேலையின்போது அழைத்தார். இரண்டாம் உலகப்போரின் இந்திய கடற்படை பயிற்சி முகாமிற்கு கார்வார் தான் தளமாக பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

PC: Ramnath Bhat

கார்வாரில் 5 அற்புத கடற்கரைகள்!!

கார்வாரில் 5 அற்புத கடற்கரைகள்!!


கார்வார் அதிர்ச்சி தரும் காட்சியை தந்திட, அழகிய நிலப்பரப்பையும் தூய்மையான உப்பங்கழியையும், மலை பாறைகளையும் கொண்டிருக்கிறது. அரபிக்கடலில் இருந்து மலையேற்றம் பெருகி வருவதை போல் உணர, அழகிய காட்சியையும் கண்களுக்கு தருகிறது.

PC: Abhijeet Rane

கார்வாரில் 5 அற்புத கடற்கரைகள்!!

கார்வாரில் 5 அற்புத கடற்கரைகள்!!


கர்வாரின் முக்கிய தொழிலாக விவசாயம் இருக்கிறது. இங்கே மனதை கவரும் கடற்கரைகள் நிறைய காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கார்வார் பகுதியை கடல் உணவுக்கு பெயர் பெற்ற ஒரு இடமாகவும் நினைக்கப்படுகிறது. இங்கே கிடைக்கும் மீன் கறி மிகவும் சிறப்பானது. வித்தியாசமான ஒன்றும் கூட. அவர்கள் சில எளிதான மூலப்பொருட்களான தேங்காய், இஞ்சி, மற்றும் மஞ்சள் ஆகியவற்றையும் சேர்க்கின்றனர்.

இந்த ஆர்டிக்கலின் மூலமாக, கர்வாரின் பல கடற்கரைகளை நாம் தெரிந்துக்கொள்ள, அவற்றின் அழகிய காட்சிகளாலும் மனம் மகிழ்கிறோம்.

PC: Abhijeet Rane

 ரவீந்திரநாத் தாகூர் கடற்கரை:

ரவீந்திரநாத் தாகூர் கடற்கரை:

இந்த பெயர் வைக்கப்பட்டது ஆச்சரியமாகவும், சம்பந்தமற்றும் இருந்திடலாம். இருப்பினும், இருபத்தி இரண்டு வயது தாகூர் தன் சகோதரனுடன் கர்வாரை காண வர, அவர் தான் இந்த நகரத்தின் மாவட்ட நீதிபதியாகவும் இருந்ததும் தெரியவருகிறது. அவனுடைய முதல் குறும்புத்தனமான விளையாட்டு பிடித்து இப்பெயர் வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

PC: Maarten Heerlien

 ரவீந்திரநாத் தாகூர் கடற்கரை:

ரவீந்திரநாத் தாகூர் கடற்கரை:


இந்த கடற்கரையை ‘கார்வார் கடற்கரை' என்றும் அழைக்கப்படுவதோடு, இங்கே காணப்படும் பிரசித்திபெற்ற கடற்கரை இதுவென்பதும் தெரியவருகிறது. இங்கே விளையாட்டு பூங்கா, பொம்மை இரயில், மீன் பூங்கா, காதல் கொள்ளும் இசை நீரூற்று எனவும் காணப்படுகிறது. இந்த கடற்கரை நீந்துவதற்கு சிறந்து காணப்பட, இதன் நீரின் ஆழம் அவ்வளவாக ஒன்றும் காணப்படுவதுமில்லை. கைரளி உத்சவம் எனப்படும் நான்கு நாள் நிகழ்ச்சியானது ரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் திசம்பர் மற்றும் ஜனவரியில் நடக்கிறது.

PC: Prashant Dobhal

 தேவ்பாஹ் கடற்கரை:

தேவ்பாஹ் கடற்கரை:

கர்வாரின் வடக்கில் காணப்படும் இந்த கடற்கரை, தங்க நிற மணலுக்கு மட்டும் பிரசித்திபெற்று விளங்காமல், குளுமையான காற்றுக்கும் பிரசித்திபெற்று விளங்க, ஆனால், நீர் விளையாட்டும் இங்கே காணப்படுகிறது. மீன் பிடித்தல், டால்பின் பார்த்தல், பாய்மர படகு பயணம், ஸ்நோர்கெலிங், தோல்படகு பயணம் என பல விளையாட்டுகளும் காணப்படுகிறது. தேவ்பாஹ் கடற்கரையின் மேற்கு தொடர்ச்சியானது ஒரு பக்கம் காணப்பட, அரபிக்கடல் நீர் மற்றொரு பக்கமும் காணப்படுகிறது. இதனை காணும் நம் மனம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆனந்தத்தை கொள்கிறது.

Manoj Vasanth

 மஜலி கடற்கரை:

மஜலி கடற்கரை:

தேவ்பாஹ் அருகில் இது காணப்பட, மஜலி கடற்கரை ஒரு ரிசார்ட் கடற்கரையாகும். இங்கே படகு பயணம், மீன் பிடித்தல், கயாகிங், பெடலிங்க், டால்பின் பார்ப்பது, பாறை ஏறுவது, பறவை பார்ப்பது என பல சாகசங்களும் அடங்கும். நீங்கள் அமர்ந்து மணலை உங்கள் கைகளால் அள்ளிக்கொட்டியபடி இருக்க, தேனீர் நேரம் என்பதை மறந்து அமர்ந்திருக்க கூடும். மஜலி கடற்கரையிலிருந்து குரூஸ் நதி முதல் தில்மாதி கடற்கரை வரை பிரசித்திபெற்று காணப்படுகிறது. திமால்தி கடற்கரையில் கரு நிற மணலானது காணப்படுகிறது! வறுக்கப்பட்ட மீன் சாதம் இங்கே கிடைப்பதோடு மன நிறைவையும் தருகிறது.

Abhijit Shylanath

 பினாகா கடற்கரை:

பினாகா கடற்கரை:


கர்வாரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வெளியில் காணப்பட, ஒரு மைல் வெளியில் கர்நாடகா - கோவாவின் எல்லையிலும் காணப்படுகிறது. பினாகா கடற்கரையின் வீடாக போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட ‘அவர் லேடி ஆப் சைன்ட். ஆனி தேவாலயம்' காணப்படுகிறது. இது ஒரு கடற்படை தளமாக காணப்பட, இந்தியக் கடற்படையின் செயல்திட்டத்திற்கான திட்டப்பகுதி இது என்பதும் நமக்கு தெரிய வருகிறது. இந்த கடற்கரை, பாறை ஏறுதல், ஆற்றின் பயணம், டால்பின் பார்த்தல், உடைந்த கப்பலை பார்வையிடல் என பல செயல்களையும் கொண்டிருக்கிறது. இந்த கடற்கரையை காண சிறந்த நேரமாகவும், கர்வாரில் காணப்படும் எந்த கடற்கரையை காண சிறந்த நேரமாகவும் ஜூலை மாதம் அமைகிறது.

Balamurugan Natarajan

 கூடி பாஹ் கடற்கரை:

கூடி பாஹ் கடற்கரை:

இரு பக்கங்களிலும் பனை மரங்கள் கூடி பாஹ் கடற்கரையில் சூழ்ந்து காணப்படுகிறது. ஒரு புள்ளியில், காளி நதியை நம்மால் தெளிவாக பார்க்க முடிந்திட, அரபிக்கடலுடனும் அது சேர்கிறது. இது ஒரு பார்வையாக அமைய! கூடி பாஹ் கடற்கரையின் மற்ற சில சலுகைகளாக படகுப்போட்டி, கயாகிங்க், வாழை மர படகு போட்டி என பலவும் காணப்படுகிறது. இந்த கடற்கரையின் கரையானது அழகுடன் காணப்பட, ஒட்டுமொத்த மாநிலமும் அழகாக காணப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு பெயர்பெற்ற இந்த கடற்கரை, அனைத்து வயதினருக்கும் ஏற்று காணப்படுகிறது.

Ramnath Bhat

Read more about: travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்