India
Search
  • Follow NativePlanet
Share
» »நம்ம கோயமுத்தூரிலிருந்து வார விடுமுறைக்கு செல்ல 6 அருமையாக சுற்றுலா இடங்கள்!!

நம்ம கோயமுத்தூரிலிருந்து வார விடுமுறைக்கு செல்ல 6 அருமையாக சுற்றுலா இடங்கள்!!

By Bala Karthik

மாபெரும் மேற்கு தொடர்ச்சியானது படர்ந்திருக்க நொய்யல் ஆற்றினை தழுவியும் தமிழ் நாட்டின் கோயம்புத்தூர் முக்கிய நகரத்தில் காணப்படுகிறது. பருத்தி உற்பத்தியும், எண்ணிலடங்கா ஆடை தொழிற்சாலையுமென காணப்பட, இவ்விடத்தை சில சமயங்களில் 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' எனவும் அழைக்கப்படுகிறது.

கோவன்புதூர் என்னும் வார்த்தையிலிருந்து இந்த கோயம்புத்தூர் என்னும் பெயர் கிடைக்க, கோவனின் புது நகரமெனவும் பொருள் தருகிறது. இந்த முன்னால் பெயரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பே கோயம்புத்தூர் எனப்படுகிறது. 2015ஆம் ஆண்டில், இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோயம்புத்தூர் மதிப்பீடு செய்யப்பட்டது.

அழகான, அமைதியான நகரமாக இந்த வாழ்விடத்தை கருதப்பட, வரமாகவும் பார்க்கப்படுவதோடு, ஆராயும் விரும்பிகளுக்கு இங்கிருந்து பல வார விடுமுறை இடங்களுக்கும் புறப்பட எளிதாகவே இருக்கிறது. நீங்கள் கோயம்புத்தூரிலோ அல்லது அதன் அருகாமையிலுள்ள நகரத்திலோ வசிப்பீர்களென்றால், உங்களுடைய நீண்ட வார விடுமுறை பயணத்துக்கு இவ்விடமானது 6 இடங்களையும் அருகாமையில் கொண்டு அசத்தலாகவும் அவை அமைந்திருக்கிறது.

குன்னூர்:

குன்னூர்:

தூய்மையான காற்றை சுவாசித்து, மத்தியில் தூய்மையான காற்றுடன் கூடிய மாசற்ற இயல்பை கொண்டிருக்க, அத்துடன் பசுமையான காட்சிகளால் கண்களுக்கு இதமானதோர் உணர்வினை தந்திட, குளுமையான கால நிலையையும் ஒருங்கிணைத்து காணப்பட, விரைவான வெளியேற்றமாகவும் குன்னூர் அமையக்கூடும். கோயம்புத்தூரிலிருந்து 69 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடமிருக்க, 2 முதல் 3 மணி நேரம் வரை ஆவதோடு, இயற்கை விரும்பிகளின் பிடித்தமான இடமாகவும் குன்னூர் அமைகிறது.

விளக்கு பாறை, டால்பின் நோஸ், சிம் பூங்கா, லா வீழ்ச்சி என எண்ணற்ற இடங்கள் காணப்பட, குன்னூருவை நாம் பார்க்க வேண்டிய இடப்பட்டியலில் நாம் சேர்ப்பது உறுதி.

PC: Thangaraj Kumaravel

பாலக்காடு:

பாலக்காடு:


இதனை சில சமயங்களில் பல்காட் எனவும் அழைக்க, அமைதியான நகரமான பாலக்காடு கேரளாவில் நாம் கழிக்க வேண்டிய இடமாகவும் அமைகிறது. காலம் கடந்து நாம் பயணிக்க, கம்பீரமான பாலக்காடு கோட்டை, இந்த நகரத்தின் இதயத்துடிப்பாகவும் இருக்கிறது. ஹைதர் அலியால் இது மீண்டும் கட்டப்பட, கி.பி. 1766 ஆம் ஆண்டில் பாலக்காடு கோட்டை கட்டப்பட்டிருக்க, கேரளாவில் பாதுகாக்கப்பட்டு வரும் கோட்டைகளுள் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலாம்புழா அணை மற்றும் தோட்டங்கள், கல்பாத்தி ஆலயமென ஒரு சில இடங்களும் பாலக்காட்டில் காணப்படுகிறது. கோயம்புத்தூரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடமிருக்க, ஒன்றரை மணி நேரப்பயணமாகவும் அது நமக்கு அமையக்கூடும்.

PC: Vishnu Dhyanesh

 மைசூரு:

மைசூரு:

பெருமைமிக்க மைசூரு அரண்மனையும், மைசூருவின் மூர்க்கத்தனமான விழாவான தசராவும், என கர்நாடகாவின் மிகவும் முக்கியமான சுற்றுலா இடங்களுள் ஒன்றாக மைசூரு விளங்குகிறது. கோயம்புத்தூரிலிருந்து 195 கிலோமீட்டர் தொலைவில் இது காணப்பட, பயணம் முழுமையடைய 5 மணி நேரமும் ஆகிறது. மைசூருவின் புகழ்பெற்ற புள்ளிகளாக மைசூரு வனவிலங்கு பூங்கா, சாமுண்டி மலை, மற்றும் சாமுண்டீஸ்வரி ஆலயமும் காணப்பட, கரஞ்சி ஏரி என இன்னும் சில இடங்களும் பிரசித்திப்பெற்று காணப்படுகிறது.

PC: Arul Prasad

ஊட்டி:

ஊட்டி:


தமிழ்நாடுவின் மலைப்பகுதியான ஊட்டி, கோயம்புத்தூரிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட, தூரமாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது. இந்த மலைப்பகுதியை நீலகிரியின் இராணி என அழைக்க, தேயிலை தோட்டமும், மகத்தான நீலகிரி மலையுமென இவ்விடம் காணப்பட, இங்கே மிகவும் குறும்புத்தனமூட்டும் பொம்மை இரயில் பயணமானதும் காணப்படுகிறது.

ஊட்டியில் காணக்கூடிய விலைமதிப்பற்ற ஒரு சில இடங்களுள் ஊட்டி ஏரியும், ரோஜா தோட்டமும், தாவரவியல் தோட்டமும், கலஹட்டி வீழ்ச்சுயுமென பலவும் காணப்படுகிறது.

PC: Unknown

 கோத்தகிரி:

கோத்தகிரி:

கோயம்புத்தூரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் சிறு நகரம்தான் கோத்தகிரி ஆகும். 5882அடி உயரத்திலிருந்து காணப்படுகிறது இந்த உயரமான இலக்கு. மேற்கு தொடர்ச்சியின் மடியில் இவ்விடம் தழுவி காணப்பட, மதிமயக்கும் அழகைக்கொண்ட கோத்தகிரி எல்க் வீழ்ச்சி, காத்தரின் வீழ்ச்சி என பலவற்றையும் கொண்டிருக்கிறது.

கொடநான்ட் காட்சிப்புள்ளியிலிருந்து இந்த நகரத்தை பெருமூச்செறிந்து நாம் பார்ப்பதோடு, டால்பின் நோஸ் மற்றும் காத்தரின் வீழ்ச்சியையும் பார்க்கிறோம்.

PC: Hari Prasad Sridhar

வயநாடு:

வயநாடு:

இந்த இலக்கு குறைவாக மதிப்பிடப்பட, இனிமையான பசுமையும், குளிர் அல்லது பருவமழைக்காலத்தில், இந்த கால நிலையானது மென்மையாக அமைந்திட, விடுமுறைக்கு ஏற்றதாகவும் அமையக்கூடும். கேரளாவில் காணப்படும் இவ்விடம்,கோயம்புத்தூரிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது.

வயநாட்டில் நாம் தவிர்க்க கூடாத சில இடங்களாக பனசுரா அணையும், வயநாடு வனவிலங்கு சரணாலயமும், பூக்கோத் ஏரியும், என பலவும் காணப்படுகிறது. புகழ்மிக்க செம்பரா சிகரத்துக்கு நாம் பயணம் செய்ய, வயநாடின் கண்கொள்ளா காட்சியாகவும் அது நமக்கு அழகாக ஓய்விற்கு ஏற்று அமையக்கூடும்.

PC: Kalidas Pavithran

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X