» »தசரா விடுமுறைக்கு சின்னதா டூர் ப்ளான் இருக்கா? ஹைதராபாத்தில் இந்த 7 இடங்களுக்கும் ஒரு விசிட் பண்ணுங்

தசரா விடுமுறைக்கு சின்னதா டூர் ப்ளான் இருக்கா? ஹைதராபாத்தில் இந்த 7 இடங்களுக்கும் ஒரு விசிட் பண்ணுங்

By: Balakarthik Balasubramanian

இந்தியாவின் பழமையான நகரமான ஹைதராபாத், கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் உயர்ந்து விளங்குமோர் நகரமாகும். தெலுங்கானாவின் தென்னிந்திய மாநிலமான இந்த இடம், முசி ஆற்றங்கரையில் காணப்படும் தலைநகரமாகும். 1591ஆம் ஆண்டு முகமது குய்லி குதிப் ஷா என்பவரால் நிறுவப்பட்ட இந்த இடம், அருமையான நகரமாய் இன்று விளங்க, ஐ.டி தொழிற்சாலைகளின் ஆதிக்கம் நிறைந்த இடமாகவும் காணப்படுகிறது.

ஹைதராபாத்தி பிரியாணி, ஹைதராபாத் ஹலீம் என இரண்டு முக்கிய உணவுகளுக்கு புகழ்பெற்ற இவ்விடம், தேசிய அளவில் மக்களால் விரும்பப்படும் ஒரு நகரமாகவும் விளங்குகிறது. உணவை தவிர்த்து, முத்துக்கள், அணிகலன்கள், என அனைத்து விதமான நகைகளுக்கு பிரசித்திபெற்றும் இந்த ஹைதராபாத் காணப்பட, இந்த நகரத்தில் தேனீர் கடைகள் ஆங்காங்கே நிறைய இடங்களில் நம் பார்வைக்கு தென்படுகிறது. மேலும், வாசனை பொருட்களை விற்கும் வியாபாரிகள் என முகலாய கலாச்சாரத்தின் பெருமையை பெருமளவில் தாங்கிக்கொண்டு நிற்க, பழமையான உணவு வகைகளையும் நம்மால் இங்கே ருசிக்க முடிகிறது.

பாரம்பரியத்தின் வசிப்பிடமாக இந்த நகரமானது காணப்பட, சாகச சினுங்கல்கள் பல சூழ்ந்து காணப்படும் இந்த ஹைதராபாத் மூலம், உங்கள் சோர்வான வார விடுமுறையை சுறுசுறுப்பாக எப்படி மாற்றுவது? எத்தகைய இடங்களையெல்லாம் நாம் இங்கே அருகில் பார்ப்பது? எனவும் பார்க்கலாம்.

அஹோபிலம் மலைகள்:

அஹோபிலம் மலைகள்:

ஹைதராபாத்திலிருந்து 6 மணி நேரம் அவகாசத்தின் மூலம் நாம் இந்த சிறிய நகரமான அஹோபிலமை அடைகிறோம். நரசிம்ம கடவுளின் வீடாக இந்த இடமிருக்க...இங்கே விஷ்ணு பெருமானின் அவதாரத்தை நம்மால் பார்க்க முடிகிறது. புராணத்தின்படி நரசிம்மா தூணிலிருந்து வெளியில் வந்து ஹிரன்யகசிபுவை கொன்று ப்ரகலாதனை காப்பாற்றியதாகவும் ஹிந்து புராணங்களின் கதாப்பாத்திரங்கள் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

இந்த மலையின் உச்சியை ‘உக்ர ஸ்தம்பம்' என்றழைக்கப்பட, இங்கே தான் நரசிம்ம கடவுள் எழுந்தருளியதாகவும் தெரியவருகிறது. இந்த இடத்திற்கு நாம் பயணம் வருவதன் மூலம், சூசகமான மலை ஏற்ற பயணத்தில் மனதை திளைக்க செய்கிறோம். இந்த ஒட்டுமொத்த இடமும் பாறைகளாக காணப்பட, எந்த ஒரு பிடிமானமும் நாம் பிடித்து செல்வதற்கு காணப்படவில்லை. அதனால், மலை ஏற வேண்டிய குச்சிகளை எடுத்துசெல்ல அறிவுறுத்தப்படுகிறது. இந்த பயணத்தின் ஏற்றமானது சீராக தொடங்கி 80 டிகிரி கோணத்தில் முடிவடைகிறது.

Gopal Venkatesan

போங்கிர் கோட்டை:

போங்கிர் கோட்டை:

நீங்கள் வரலாற்றின் சுவடுகளை புரட்டி பார்க்கவும், பயணம் கொண்டு பரவசமடையவும் ஆசைக்கொண்டால் அதற்கு சிறந்த இடமாக இந்த போங்கிர் கோட்டையானது அமைகிறது. ஹைதராபாத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோட்டையானது காணப்பட, ஒட்டு மலை ஒன்று 500 அடி உயரத்தில் காணப்படுகிறது.
இந்த மலையில், பாறைகளால் செதுக்கப்பட்ட 250 படிகளானது அடிவாரத்திலிருந்து காணப்படுகிறது. இந்த படிகளின் வாயிலாக நாம் கோட்டையின் மேல்புறத்திற்கு செல்ல, இந்த வழிகாட்டுதல் வழிகளால் நம் பயணம் எளிதாக அமைகிறது. அந்த படிகளானது புதர் வழிகளில் செல்ல, மேலிருந்து கீழ் பார்த்து பெருமூச்செறிந்து மனதில் மகிழ்ச்சியை நிரப்பிக்கொள்கிறோம்.

BALU11

கான்பூர் (Ghanpur) கோட்டை:

கான்பூர் (Ghanpur) கோட்டை:

‘கில்லா கான்பூர்' என்றழைக்கப்படும் இந்த கான்பூர் கோட்டை, 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ககத்திய வம்சத்தின் ஆட்சியின்போது கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. இந்த கோட்டையின் விளிம்பில் இரண்டு அழகிய குட்டைகள் காணப்பட, பாறை நிலப்பரப்பும், அழகிய கம்பீரமான காட்சியை கண்களுக்கு தருகிறது.
இந்த மலைகளின் நிலப்பரப்பானது குகையை உருவாக்க, இந்த குகையில் நாம் பார்க்க வேண்டிய காட்சிகளோ பலவிதம். இந்த ஒட்டுமொத்த மலைப்பகுதியும் கான்பூர் கோட்டையில் இடிபட்ட நிலையில் சிதைந்து காணப்படுகிறது.

பெரும் பாறைகள் இந்த பயணத்தில் காணப்பட, செதுக்கப்பட்ட பறைப்படிகளின் வழியே நாம் செல்ல முடிகிறது. ஹைதராபாத்திலிருந்து 117 கிலோமீட்டர் தொலைவில் இந்த அழகிய இடமானது காணப்பட, சிறந்த வார விடுமுறையாக நமக்கு அமைகிறது.

கான்பூர் கோட்டை மலையில் காணப்படும் செயலானது ‘டார்ஷன் ஸ்விங்க்' என்றழைக்கப்பட, மலையில் இருந்து குதித்து விளையாடுவது இந்த செயலின் அழகிய அம்சமாக நிறைந்திருக்கிறது. இந்த விளையாட்டின் மூலமாக நமக்கு புதுவித அனுபவமானது கிடைக்க, மனம் இதமானதோர் உணர்வினை பெறுகிறது.

 கௌலாஸ் கோட்டை:

கௌலாஸ் கோட்டை:

பதினான்காம் நூற்றாண்டின் ககத்திய வம்சத்தால் கட்டப்பட்ட மகத்தான கோட்டை தான் இந்த கௌலாஸ் கோட்டை. 6 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துக் கிடக்கும் இந்த பகுதி, 1100 அடி உயரத்தில் அமைந்து நம் மனதினை சொக்க வைக்கிறது. ககத்திய வம்சத்தின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிறது இந்த கோட்டை.

இந்த கோட்டையை நாம் அடைய, கிராமத்திலிருந்து 3 கிலோமீட்டர்கள் நாம் பயணம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. இந்த பாதையில் நாம் செல்ல, வழிகாட்டியளர்களின் உதவியானது நமக்கு அவசியமாகிறது. இந்த பயணம் எளிமையாகவும், முழுமை அடையக்கூடியதாகவும் கூட நமக்கு அமைகிறது.

காயத்ரி நீர்வீழ்ச்சி:

காயத்ரி நீர்வீழ்ச்சி:


அடிலபாத் அருகில் காணப்படும் இந்த காயத்ரி நீர்வீழ்ச்சியானது காதிம் நதியில் காணப்படுகிறது. கோதாவரி துணை நதிக்கு அருகில் 100அடி உயரத்திலிருந்து இதன் நீர் விழ, பருவமழைக்காலத்தின்போது அது நமக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்து, நீர்வீழ்ச்சியின் அழகால் மனதினை நிரப்புகிறது.

1 லிருந்து 2 மணி நேர பருத்தி நிலத்தின் வழியாக நாம் எளிய பயணம் செல்ல, அடர்த்தியற்ற காடுகளின் வழியே நடக்க, தண்ணீர் நிறைந்த பள்ளத்தாக்கினை நாம் அடைகிறோம். பாறைகளும், மலைப்பகுதியும் சூழ்ந்திருக்கும் இவ்விடமானது, முன்னே வலதுப்பக்கத்தில் நீர்வீழ்ச்சியை கொண்டிருக்கிறது. இங்கிருந்து இயற்கையின் அழகில் இதமானதோர் உணர்வினை பெற்று அதன் பிறகு நாம் திரும்ப செல்வதே நல்லதாகும்.

துப்பாக்கி பாறை மலை:

துப்பாக்கி பாறை மலை:


ஹைதராபாத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த துப்பாக்கி பாறை மலை காணப்பட, ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஒன்று இங்கே காணப்படுகிறது. கற்பாறைகளை பாறை நிலப்பரப்பானது சூழ்ந்திருக்க, பெரும் பாறைகளும் இங்கே ஏறுவதற்கு ஏற்ற அழகிய வடிவம் கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

கற்பாறைகள் வெவ்வேறு வடிவத்தில் ஏறுவதற்காக காணப்பட, குளிர்காலத்தின்போது நாம் இந்த பாறைகளில் ஏறுவது இனிமையானதோர் உணர்வினை தருகிறது. பருவமாதங்களில் பெய்யும் மழையால் பாறையானது வலுக்கிவிட, அந்த நேரங்களை நாம் தவிர்த்து விலகுவது நல்லதாகும்.

நரசப்பூர் காடு:

நரசப்பூர் காடு:

ஹைதராபாத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இந்த காடு, பயணம் செல்வதற்கு சிறந்த இடமாக அமைந்து இயற்கை ஆர்வலர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த காடானது நன்கு வரையறுக்கப்பட்ட ஒன்றாக தெரிவதில்லை என்றாலும், ஹுல்லபலூ நகரத்தை விட்டு வெளியில் வரும் திருப்திக்காக நாம் இங்கே பயணம் செய்கிறோம்.

கற்பாறைகளாலும், பசுமையான புல்வெளிகளாலும், மரங்களாலும்..நகரத்தை விட்டு ஒதுங்கிய பகுதியில் சூழ்ந்து காணப்படும் இந்த பெரும் காட்டிற்கு, பருவ பயணம் வகுக்கப்பட்டு அதன் வாயிலாக வந்தும் செல்லப்படுகிறது. நீங்கள் இங்கே வருவதற்கு உங்கள் மனதில் திட்டமிட்டிருந்தால், இங்கே காணும் குழுக்களில் ஏதேனும் ஒன்றின் ஆலோசனை பெற்று அதன்பின் வருவது சிறந்த வழியாகும்.

Vijayche123

Read more about: travel, temple, fort