Search
  • Follow NativePlanet
Share
» »காண்பது கனவா? நிஜமா? என பிரம்மிக்க வைக்கும் இந்தியாவின் சூப்பரான மிதக்கும் கிராமங்கள்

காண்பது கனவா? நிஜமா? என பிரம்மிக்க வைக்கும் இந்தியாவின் சூப்பரான மிதக்கும் கிராமங்கள்

இந்தியாவில் தண்ணீரில் வாழும் சில அற்புதமான மிதக்கும் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் இயற்கை, கலாச்சார மற்றும் மரபுகளுடன் கலந்த சிறப்பு மிக்க இடங்களாகும். காண்பவர்களை பிரம்மிக்க வைக்கும் வகையில் கனவு போல தோற்றமளிக்கும் தண்ணீரில் மிதக்கும் அற்புதமான கிராமங்களில் இங்கே 7 கிராமங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

7 floating villages in India that feel like a dream

லோக்தக் ஏரி,மணிப்பூர்

வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியில் அமைந்துள்ள லோக்தக் ஏரி அதன் தனித்துவமான ஃபும்டிஸ்க்கு பிரபலமானது. இது ஒரு மிதக்கும் தீவாகும். இங்குள்ள மீனவர்கள் ஃபும்டிகளில், ஃபும்சாங்ஸ் எனப்படும் மிதக்கும் குடிசைகளில் வசிக்கின்றனர். இங்கு நீர் விளையாட்டு, படகு சவாரி மற்றும் பிற விளையாட்டுக்கள் பிரபலமானவை.

உரோஸ் மிதக்கும் கிராமம் ஸ்ரீநகர்

ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி மற்றும் நிஜுன் ஏரி மிதக்கும் குடியிருப்புகளின் தாயகம் எனப்படுகிறது. இங்குள்ள மக்கள் படகு வீடுகளில் வசிக்கிறார்கள். மேலும் இங்கு மிதக்கும் சந்தைகளும் உள்ளன. பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் தால் ஏரி அதன் அழகிய அழகு மற்றும் புனித யாத்திரை செல்வதற்கு பிரபலமான ஏரியாகும்.

மஜூலி அசாம்

மஜூலி பிரம்மபுத்திரா நதியில் உள்ள ஒரு அழகிய தீவாகும். மஜூலி அசாமிய கலாச்சாரத்தின் மையமாகவும் உள்ளது. இது யுனெஸ்கோ பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இங்குள்ள ஏரியில் நாரைகள், மீன்கள், கொக்குகள் போன்ற பலவகையான பறவைகளை பார்ப்பதற்கு ஒரு நல்ல இடமாகும். இங்கு அதன் பருவ காலங்களில் மிதக்கும் குக்கிராமங்கள், பாரம்பரிய நீர் சார்ந்த வாழ்க்கை முறையைக் காண ஒரு கண் கவர் இடமாக அமைகின்றன.

AI Generated Image

குட்டநாடு மிதக்கும் கிராமம் கேரளா

கேரளாவின் அரசு கிண்ணம் என்று அழைக்கப்படும் குட்டநாட்டில் கடல் மட்டத்திற்கு கீழே வீடுகள் மற்றும் பண்ணைகள் இருக்கும் கிராமங்கள் உள்ளன. நீர் வழி சாலைகளாக செயல்படுகின்றன. குட்டநாடு ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் மற்றும் சிற்றோடைகளின் வலையமைப்பை கொண்ட ஒரு காயல் இடம் ஆகும். மேலும் குட்டநாடு பசுமையான நெல் பயில்களால் சூழப்பட்டுள்ளது.

சிலிகா எரி மிதக்கும் கிராமம் ஒடிசா

இந்தியாவின் மிகப்பெரிய கடலோர குளம். சிலிகா ஏரியில் மிதக்கும் கிராமங்களில் வாழும் மீன்பிடி சமூகங்களை கொண்டது. பரந்த ஈர நிலங்கள் மற்றும் நம்ப முடியாத பல்வேறு வகை பறவைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு இடம் பெயர்ந்து வரும் நீர் பறவைகள் அதிக அளவில் உள்ளன. ஃபிளமிங்கோக்கள், பெலிகன்கள் மற்றும் ஐபிஸ்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட பறவை இனங்களின் தாயகமாகவும் இந்த ஏரி உள்ளது.

புலிகாட் ஏரி மிதக்கும் கிராமம் தமிழ்நாடு

புலிகாட் சரணாலயத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த மிதக்கும் கிராமம் இதன் வளமான சுற்றுச்சூழல், அங்கே வாழும் மீன்பிடி சமூகங்ககளின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. புலிகாட் ஏரியில் 60க்கும் மேற்பட்ட மீன் இனங்கள், 132க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன.

வேம்பநாடு ஏரி மிதக்கும் கிராமம்

இந்தியாவின் மிக நீளமான ஏரியான வேம்பநாடு ஏரியில் ஏராளமான மிதக்கும் குடியிருப்புகள் மற்றும் படகு வீடுகள் உள்ளன. உள்ளூர்வாசிகள் போக்குவரத்து, மீன்பிடித்தல் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு இந்த ஏரியை நம்பி உள்ளனர். இந்த ஏரி உப்பு நீரும் நன்னீரும் கலந்த ஒரு கலவையாக உள்ளது.

More News

    Read more about: indian villages
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+