Search
  • Follow NativePlanet
Share
» »வாவ்...மும்பையில் இவ்வளவு சூப்பரான இடங்களா? மிஸ் பண்ணான போயிட்டு வாங்க

வாவ்...மும்பையில் இவ்வளவு சூப்பரான இடங்களா? மிஸ் பண்ணான போயிட்டு வாங்க

மும்பை என்றால் பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வரும் இடங்கள் மரீன் டிரைவ், கேட் வே ஆஃப் இந்தியா, எலிபண்டா குகைகள் போன்ற பிரபலமான சுற்றுலா தலங்கள் தான். ஆனால் இந்த நகரத்திற்குள் பலரும் அறியாத பல இடங்கள் உள்ளன. குறிப்பாக சுற்றுலா பயணிகள் பலருக்கு மும்பையில் இப்படி ஒரு இடங்கள் இருப்பதே தெரியாது. வெகு சிலருக்கே தெரியும். அப்படி சுற்றுலா பயணிகள் பலரும் அறியாமல் மறைந்திருக்கும் 7 அற்புதமான இடங்களை பார்க்கலாம்.

Gilbert hill

கில்பர்ட் ஹில்

கில்பர்ட் ஹில், மும்பை நகரத்தின் நடுப்பகுதியில், உயர்ந்து நிற்கும் ஒரு அற்புதமான பாறை அமைப்பு ஆகும். கில்பர்ட் ஹில் ஒரு மோனோலித்திக் பாறை (monolithic rock) ஆகும். அதாவது ஒரே கல்லால் ஆன பாறையாகும். இது சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று நம்பப்படுகிறது. இது உலகளவில் மிகச் சில இடங்களில் மட்டுமே காணக்கூடிய புவியியல் அற்புதங்களில் ஒன்றாகும்.

சோட்டா காஷ்மீர்

சோட்டா காஷ்மீர், மும்பையின் மிகச் சிறிய, ஆனால் அழகான மறைந்திருக்கும் இடங்களில் ஒன்றாகும்.இது ஆரே காலனியில் (Aarey Colony) அமைந்துள்ளது மற்றும் மும்பையின் இயற்கை மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. பசுமை சூழ்ந்த தோட்டம், காஷ்மீரின் அழகை, மும்பையில் தரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. போட்டிங் லேக், படகு சவாரி செய்யக்கூடிய சிறிய ஏரி, இது சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய அம்சமாக உள்ளது.

Take a Poll

வோர்லி கோட்டை

இது 17ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.வோர்லி சீ லிங்க் இந்த கோட்டத்திலிருந்து, பிரபலமான பந்த்ரா-வோர்லி சீ லிங்கை தனித்துவமான கோணத்தில் காணலாம்.இது மற்ற மும்பை இடங்களைப் போல கூட்ட நெரிசலற்ற அமைதியான சுற்றுலாத் தலமாக இருக்கிறது.

Global Pagoda

குளோபல் விபாசனா பகோடா

குளோபல் விபாசனா பகோடா மும்பையின் புறநகரான கோரை (Gorai) பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கியமான ஆன்மிக மற்றும் அமைதி அளிக்கும் இடங்களில் ஒன்றாகும். இது புத்தமதத் தத்துவத்தினைப் பிரதிபலிக்கும் சிறப்புமிக்க நினைவுச் சின்னமாக விளங்குகிறது. இது ஆசியாவின் மிகப்பெரிய கூம்பு வடிவ மண்டபங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சேவ்ரி கோட்டை - ஃப்ளமிங்கோ பாயிண்ட்

மும்பையின் தென் பகுதியிலுள்ள சேவ்ரி கோட்டை மற்றும் அருகிலுள்ள ஃப்ளமிங்கோ பாயிண்ட் வரலாற்று சிறப்புமிக்கதும், இயற்கையின் அதிசயமுமான இரண்டு முக்கியமான இடங்கள் ஆகும்.சேவ்ரி கோட்டைக்கு அருகில் உள்ள மழைக்காடுகளில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஃப்ளமிங்கோக்கள் வரும். இது பறவை ஆர்வலர்களுக்கும், புகைப்பட ஆர்வலர்களுக்கும் சிறந்த இடம்.

கன்ஹோஜி ஆங்ரே தீவு

மும்பை நகரத்தின் அழகிய கடற்கரைக்கு அருகில், பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் இருக்கும் ஒரு வரலாற்று பொக்கிஷம் கன்ஹோஜி ஆங்ரே தீவு. இது, மும்பை மற்றும் அலிபாக் இடையே அரபிக்கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும்.17-ஆம் நூற்றாண்டில், மராட்டிய பேரரசின் முக்கிய கடற்படை தளமாக இருந்தது.

பங்கங்கா குளம்

மும்பையின் மலபார் ஹில் பகுதியில் அமைந்துள்ள பங்கங்கா குளம்,நகரின் பழமையான, ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும். இது மும்பையின் மிகப் பழமையான நீர்நிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.இது பழமையான வைஷ்ணவ, சைவ மற்றும் ஜைனக் கோவில்கள் சுற்றிலும் அமைந்துள்ள முக்கிய புனித நீர் நிலை ஆகும்.

More News

    Read more about: mumbai maharashtra
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+