Search
  • Follow NativePlanet
Share

ஔரங்காபாத் – வரலாற்றின் சாட்சி

30

சிறந்த முகலாய மன்னர்களில் ஒருவரான ஔரங்கசீப் பெயரில் விளங்கும் இந்த ஔரங்காபாத் மஹாராஷிரா மாநிலத்தின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாகும். ஔரங்காபாத் என்ற பெயரின் பொருள் அரியணையால் கட்டப்பட்டது என்பதாகும். இந்தியாவின் மேற்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஔரங்காபாத் அமைந்துள்ளது. காம் நதிக்கரையில் அமைந்துள்ள ஔரங்காபாத் ஒரு மாவட்ட தலைநகராகவும் விளங்குகிறது. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த வித வசதிக்குறைவும் ஏற்படாதவாறு நிறைவான வசதிகளை இந்நகரம் தன்னுள் கொண்டுள்ளது.

1681 ஆம் ஆண்டு ஔரங்கசீப் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒரு மையமாக ஔரங்காபாத்தை பயன்படுத்தியதாக வரலாறு தெரிவிக்கின்றது. ஔரங்காபாத் பகுதி முகலாய சாம்ராஜ்யமாகவே நீண்ட நாட்களுக்கு திகழ்ந்தது.

ஔரங்கசீப் சிவாஜியை சமாளிப்பதற்கு ஒரு சிறந்த யுக்தியாக இந்த நகரத்தை பயன்படுத்தினார். மேலும் ஔரங்காபாத் இந்தியாவின் மத்தியில் இருந்த தால் ஆப்கன் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து வரும் எதிரிகளிடமிருந்தும் வரும் தாக்குதல் ஆபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்நகரம் ஒரு வசதியான கேந்திரமாக இருந்தது.

ஔரங்கசீப் மரணத்துக்கு பின்னர் ஔரங்காபாத் நகரத்தின் ஆட்சி ஹைதராபாத்தை சேர்ந்த நிஜாம் மன்னரின் ஆளுகைக்கு கீழ் வந்து இறுதியாக இந்திய யூனியன் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது.

ஒரு சுற்றுலாப்பயணிக்காக என்னவெல்லாம் ஔரங்காபாத்தில் காத்திருக்கின்றன?

ஔரங்காபாத் நகரத்தை மஹாராஷ்டிரா மாநிலத்தின் அதிகாரபூர்வமான சுற்றுலா தலைநகரம் என்றே சொல்ல லாம் என்றால் அப்படி சொல்வதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

ஒரு சுற்றுலா கேந்திரமாக திகழும் ஔரங்காபாத் நகரம் ஒவ்வொரு சுற்றுலா பயணிக்கும் காலத்தில் கடந்து போய் விட்ட வரலாற்றில் மூழ்கி திளைக்கும்  அற்புத அனுபவத்தை கொடுக்கின்றது என்பதே அதற்கு அடிப்படை.

முகலாய ஆட்சிக்கு முன்னர் ஔரங்காபாத் நகரத்தின் வரலாற்றினை பார்த்தால் அது பௌத்த மதம் சிறப்பாக தழைத்திருந்த யுகத்துக்கு இழுத்துச் செல்கிறது. அஜந்தா மற்றும் எல்லோரா குகைக்கோயில்கள் அக்காலத்திய பௌத்த மரபுக்கு சான்றாய் நிமிர்ந்து நிற்கின்றன.இந்த இரண்டு பண்பாட்டு ஸ்தலங்களும் யுனெஸ்கோ அமைப்பால் உலக பண்பாட்டு ஸ்தலமாக அறிவிக்கப்பட்டிருப்பது பெருமிதத்துடன் குறிப்பிடக்கூடிய விஷயமாகும்.

ஔரங்காபாத் நகரத்தின் பண்பாடு மற்றும் கலாசார அம்சம் என்று பார்த்தால் இது முழுக்க முழுக்க ஹைதராபாத் பண்பாட்டு கலாசாரத்தை ஆதார மூலமாக கொண்டிருப்பது தெரிய வருகிறது.

இந்த பழைய நகரம் இன்னமும் தன் வரலாற்று இயல்பையும் குணாம்சங்களையும் கொண்டிருப்பதை உயிரோட்டத்துடன் காண முடிகிறது. அது இந்த நகரத்தின் ஒவ்வொரு துறைகளிலும் அதாவது உணவு, மொழி, உள்ளுர் ரசனை என்று எல்லா அம்சங்களிலும் பிரதிபலிக்கிறது.

மேலும் ஔரங்காபாத் பலவிதமான கலாபூர்வமான முகலாய நினைவுச் சின்னங்களை தாங்கி நிற்கிறது. ஔரங்காபாத் அருகில் உள்ள குல்டாபாத் எனும் சிறு நகரத்தில் ஔரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ளது. இது ஒரு முக்கிய சுற்றுலா ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.

இருந்தாலும் மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று சின்னமாக ஔரங்காபாத்தில் உள்ள பீபீ கா மஃக்பாரா விளங்குகிறது.  ஔரங்கசீப் மன்னரின்  மனைவிக்காக எழுப்பப் பட்ட கல்லறை கட்டிடமான இது ஏறக்குறைய தாஜ் மஹாலுக்கு இணையான தோற்றத்தை உடையது என்பது குறிப்பிடத் தக்கது.

ஔரங்காபாதில் பார்க்க மற்றும் அனுவிப்பதற்கான விஷயங்கள்

ஹிம்ரூ தொழிற்சாலை ஔரங்காபாத் நகரத்தில் பார்க்க வேன்டிய முக்கிய இடமாகும். ஹிம்ரூ சால்வைகள் மற்றும் மஷ்ரூ, கிம்காப் வகை துணிகள் இங்கு தயாரிக்கப் பட்டு விற்கப்படுகின்றன.

இந்த பிரத்யேக துணி வகைகளை ரசித்து  வாங்கும் அனுபவம் பயணிகளுக்கு மறக்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த ஔரங்காபாத் நகரம் அப்போதைய “பட்டு பாதை” என்று அறியப்பட்ட ‘சில்க் ரூட்’ வழியில் ஒரு முக்கியமான வியாபார கேந்திரமாக விளங்கியது என்பது ஒரு அற்புதமான வரலாற்று உண்மையாகும்.

இங்கு வரும் பெண் பயணிகள் இங்கு விற்பனைக்கு கிடைக்கும் பைதானி வகை புடவைகளின் வனப்பிலும், ஆபரணக்கற்கள் பொதிக்கப்பட்ட நகைகளின் ஜொலிப்பிலும் தங்கள் மனதை பறி கொடுக்கின்றனர். குறிப்பாக ஔரங்காபாத் நகரில் உள்ள கன்னாட் எனும் மார்கெட் பகுதி இவற்றை வாங்குவதற்கு சிறந்த இடமாகும்.

இரும்பு, செம்பு மற்றும் மற்ற உலோகங்களால் செய்யப்பட்ட பித்ரி எனப்படும் ஒரு கலைப்பொருள் இங்கு விசேஷமாக விற்பனை செய்யப்படுகிறது. இது இந்த பிரதேசத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய கலைப்பொருள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஔரங்காபாத் நகரம் அதன் புராதனத்துக்கும் பண்பாட்டு பாரம்பரியத்துக்கும் புகழ் பெற்று விளங்குகிறது. பீபீ கா மக்பாராவை தவிர்த்து பான்சக்கி எனும் மற்றொரு சுற்றுலா ஸ்தலமும் இங்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது.

இது பாபா ஷா முசாபர் என்ற சூபி ஞானியின் கல்லறை ஸ்தலமாகும். மேலும் புர்வார் மியூசியம் என்ற ஒரு அருங்காட்சியகமும் ஔரங்கபாதில் பார்க்க வேண்டிய இடமாகும்.

இந்த பிரதேசத்தின் வரலாற்று சின்னங்களை காட்சிக்காக கொண்டுள்ள மூன்று அருங்காட்சியகங்கள் ஔரங்காபாதில் உள்ளன. சுன்ஹேரி மஹால் மியூசியம், யுனிவர்சிட்டி மியூசியம் மற்றும் சத்ரபதி சிவாஜி மியூசியம் என்பவையே அந்த மூன்று அருங்காட்சியகங்காளாகும்.

என்றும் மறக்க முடியாத அற்புதமான சுற்றுலா அனுபவத்துக்கான இடம்

ஔரங்காபாதின் சீதோஷண நிலை இனிமையான ஒன்றாக, மிதமான கோடை மற்றும் குளிர் காலத்தை கொண்டுள்ளது. மழைக்காலமும் இங்கு வரவேற்க க்கூடிய ஒன்றாகவே விளங்குகிறது.

இருந்தாலும் நகரத்தை உற்சாகத்தோடு சுற்றிப்பார்ப்பதற்கு நம்மோடு கை கோர்க்க கூடிய பொருத்தமான பருவ காலம் என்று பார்த்தால் அது குளிர் காலம் என்று தயங்காமல் சொல்லலாம்.

இயற்கை ரசனைக்கு தீனி போடுவதற்காக இங்குள்ள பானி பேகம் தோட்டம் மாலை நேரத்தை உல்லாசமாக கழிக்கும் வகையில் கண் கவரும் எழிலுடன் அமைந்துள்ளது.

ஔரங்காபாத் நகரம் மும்பையிலிருந்து 334 கி.மீ தூரத்தில் உள்ளது. எல்லா பெரிய நகரங்களுடனும் இது விமான, ரயில் மற்று சாலை வசதிகள் மூலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

எண்ணற்ற ரயில்கள் ஔரங்காபாத் நகரம் வழியே செல்வதோடு ஏராளமான அரசு பேருந்துகளும் அதிக அளவில் ஔரங்காபாத் நகருக்கு இயக்கப்படுகின்றன. இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றும், ஒப்பற்ற அனுபவத்தை தரக்கூடிய சூழலையும் பெற்றுள்ள ஔரங்காபாத் நகரத்தை ஒரு முறையாவது விஜயம் செய்யும் வாய்ப்பை கண்டிப்பாக தவற விடாதீர்கள்.

‘வாசல்களின் நகரம்’ என்று அறியப்படும் ஔரங்காபாத் நகரத்துக்கு வருகை தாருங்கள், கலையம்சம், வரலாற்றுப்பின்னணி மற்றும் ஆன்மீகம் போன்றவற்றில் மூழ்கி வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை பெற்றிடுங்கள்.

(ஒரு காலத்தில் இந்த நகரத்தில் 54 வாசல்கள் இருந்தன. அதனாலேயே இந்த பெயர் வந்தது. இருப்பினும் தற்சமயம் 4 பிரதான வாசல்களும் 9 துணை வாயில்களும் இருப்பது குறிப்பிடத் தக்கது)

ஔரங்காபாத் சிறப்பு

ஔரங்காபாத் வானிலை

சிறந்த காலநிலை ஔரங்காபாத்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஔரங்காபாத்

  • சாலை வழியாக
    ஔரங்காபாத் நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மற்ற நகரங்களுடன் சிறப்பான முறையில் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து ஔரங்காபாத், அஜந்தா, எல்லோரா பகுதிகளுக்கு பல சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 1100 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அல்லது 300 ரூபாய் செலவில் அரசுப்பேருந்துகளிலும் செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஔரங்காபாத் ரயில் நிலையம் பிரதான ரயில் பாதையில் அமைந்திருக்கவில்லை என்றாலும் இங்கிருந்து 120 கி.மீ தொலைவில் மன்மாட் ரயில் நிலையம் பிரதான ரயில் பாதையில் அமைந்துள்ளது. மன்மாட் ரயில் நிலையத்திலிருந்து ஔரங்காபாத் நகருக்கு டாக்சி மூலம் செல்ல 900 ரூபாய் செலவாகலாம். ஔரங்காபாதிற்கு மும்பையிலிருந்து இரண்டு முக்கிய ரயில்கள் புறப்படுகின்றன. தபோவண் எக்ஸ்பிரஸ் – இது தினமும் அதிகாலையில் மும்பையில் புறப்பட்டு பிற்பகலில் சென்றடைகிறது. தேவகிரி எக்ஸ்பிரஸ் – இது இரவில் புறப்படும் ரயில். ஹைதராபாதிலிருந்து கீழ்க்கண்ட ரயில்கள் ஔரங்காபாதிற்கு உள்ளன. அஜந்தா எக்ஸ்பிரஸ் – தினமும் SC MMR எக்ஸ்பிரஸ் – வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் புனேயிலிருந்து: புனே – நந்தேட் எக்ஸ்பிரஸ் (பயண நேரம் 7 மணி நேரம் மட்டும்) இது திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஔரங்காபாதில் சிகால்தானா என்று அழைக்கப்படும் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங் ஃபிஷர் கிளாஸ், கிங் ஃபிஷர் ரெட் மற்றும் ஜெட்லைட் போன்ற விமான சேவைகள் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் ஔரங்காபாத் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மூலம் விமான மார்க்கமாக நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. ஜெய்பூர், ஜோத்பூர், மும்பை, புனே டெல்லி போன்ற நகரங்களுக்கு நேரடி சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat