ஔரங்காபாதில் உள்ள கன்னாட் மார்க்கெட் பகுதி ஷாப்பிங் செல்பவர்களின் சொர்க்கமாகும். இங்கு ஷாப்பிங் பிரியர்களுக்கு ஏராளமான கைவினைப்பொருட்களும் கலைப்பொருட்களும் வாங்க கிடைக்கின்றன. இங்குள்ள கடைகளில் இப்பகுதியின் விசேஷ அம்சமான கம் காப் என்று அழைக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளி இழைகளுடன் பருத்தி இழையும் சேர்த்து நெய்யப்பட்ட விசேஷ நூல் கிடைக்கின்றது.
இந்த நூலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஹிம்ரூ சால்வைகளும், புடவைகளும் இந்த மார்க்கெட் பகுதியில் எல்லா கடைகளிலும் கிடைக்கின்றன.அது மட்டுமல்லாமல் கன்னாட் மார்க்கெட் பகுதியினல் விதவிதமான எம்பிராய்டரி படைப்புகளும் கிடைக்கின்றன.
இவற்றில் உள்ள பார்டர் டிசைன்கள் அஜந்தா மற்றும் எல்லோரா ஓவியங்களில் காணப்படும் டிசைன்களின் நகல் என்பது ஒரு கூடுதல் தகவல். சிக்கலான நெசவு வேலைப்பாடுகளை கொண்ட, காலம் காலமாக தொடர்ந்து வரும் பாரம்பரிய முறைப்படி நெய்யப்பட்ட பைதான் வகை புடவைகளும் இங்கு கிடைக்கின்றன.