Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் அட்டகாசமான 8 கடற்கரை சாலைகள்!

இந்தியாவின் அட்டகாசமான 8 கடற்கரை சாலைகள்!

By

கடலும் கடற்கரையும் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா?! அற்புதமான மாலை வேளையில் கடல் அலைகளை ரசித்துக்கொண்டே கடற்கரையில் உலாவும் இன்பத்தை கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாது.

அதேபோல கடற்கரை காற்றை வாங்கிக்கொண்டு அதன் அருகிலேயே பல கி.மீ தூரம் சாலையில் பயணிக்கும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அந்த வகையில் இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மிக அழகான கடற்கரை சாலைகள் உங்களுக்காகவே காத்துக்கொண்டிருக்கின்றன. எப்போது செல்லப்போகிறீர்கள்?!

விசாகப்பட்டணம் பீச் லைன்

விசாகப்பட்டணம் பீச் லைன்

வங்காள விரிகுடாவின் நீண்ட பீச் லைனுடன் 40 கி.மீ நீளத்துக்கு நீண்டு கிடக்கிறது விசாகப்பட்டணத்தின் மரைன் டிரைவ். கைலாசகிரியிலிருந்து, விசாகப்பட்டணம் செல்லும் கடற்கரைச் சாலை கவின் கொஞ்சும் அழகுடன் காட்சியளிக்கிறது. ஒரு பக்கம் பசுமையான கிழக்கு தொடர்ச்சி மலைகள், மறுபக்கம் வங்காள விரிகுடா என்று இந்த கடற்கரைச் சாலையில் பயணிப்பது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.

மரவந்தே தேசிய நெடுஞ்சாலை 17

மரவந்தே தேசிய நெடுஞ்சாலை 17

இந்தியாவின் மிக அழகிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக மரவந்தே தேசிய நெடுஞ்சாலை 17 கருதப்படுகிறது. இதன் சிறப்பம்சம் ஒரு பக்கம் சௌபர்னிகா நதியும், மறுபக்கம் மரவந்தே கடற்கரையும் அமைந்திருக்க அவற்றின் இடையே நீண்டு செல்கிறது இந்த நெடுஞ்சாலை. இதே போன்றதொரு சாலையை நீங்கள் இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடி

மும்பை மரைன் டிரைவ்

மும்பை மரைன் டிரைவ்

'அந்த அரபிக்கடலோரம் ஒரு அழகை கண்டேனே...' என்று அரபிக்கடலின் ஓரத்தில் அமைந்திருக்கும் மும்பையின் மரைன் டிரைவ் அட்டகாச அழகுடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. 'C' வடிவில் காணப்படும் இந்த மரைன் டிரைவ் 3 கி.மீ நீளத்தில் நரிமன் பாயிண்ட் பகுதியையும், பாபுல்நாத் பகுதியையும் இணைக்கிறது.

கொச்சி மரைன் டிரைவ்

கொச்சி மரைன் டிரைவ்

கொச்சியிலுள்ள மரைன் டிரைவ் மும்பையிலுள்ள மரைன் டிரைவ் பகுதியின் நகலைப்போன்று தோற்றமளிக்கிறது. இந்த மரைன் டிரைவ் பகுதியில் நிறைய ஷாப்பிங் மால்கள் அமைந்துள்ளதால் பயணிகள் உல்லாசமாக ஷாப்பிங் செய்வதற்கும் இது ஏற்ற இடமாக உள்ளது. மரைன் டிரைவுக்கு அருகிலேயே அமைந்துள்ள கொச்சியின் முக்கிய சாலையான எம்.ஜி ரோடில் புகழ்பெற்ற கயீஸ் பிரியாணி உணவகம் உள்ளிட்ட பிரபலமான உணவகங்கள் அமைந்துள்ளன. நீங்கள் கொச்சி வந்தால் இந்த கயீஸ் பிரியாணியை ருசிக்க மறந்து விடாதீர்கள்.

சென்னை பீச் ரோடு

சென்னை பீச் ரோடு

உலகின் 2-வது பெரிய கடற்கரையான மெரினா பீச்சை ஒட்டி காணப்படும் கடற்கரைச் சாலை காமராஜர் சாலை என்ற பெயரிலும் அறியப்படுகிறது. இந்த கடற்கரைச் சாலை சென்னை பல்கலைகழகம், சேப்பாக்கம் மற்றும் திருவெல்லிக்கேணி மின்சார ரயில் நிலையங்கள், புகழ்பெற்ற கண்ணகி சிலை, லைட் ஹவுஸ் ஆகியவற்றை கடந்து சாந்தோம் பீச் வரை நீண்டு செல்கிறது.

பாண்டிச்சேரி கடற்கரைச் சாலை

பாண்டிச்சேரி கடற்கரைச் சாலை

பாண்டிச்சேரியின் புகழ்பெற்ற கடற்கரையான வீதி உலா கடற்கரையை ஒட்டி செல்கிறது இந்த கடற்கரைச் சாலை. 1.5 கி.மீ நீளம் நீண்டு செல்லும் இந்த கடற்கரைச் சாலை பாண்டிச்சேரியின் புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது.

கிழக்கு கடற்கரைச் சாலை

கிழக்கு கடற்கரைச் சாலை

கிழக்குக் கடற்கரைச் சாலை சென்னையையும் கடலூரையும் புதுச்சேரி வழியாக இணைக்கிறது. அதோடு இச்சாலை வங்காள விரிகுடா கடற்கரை ஓரமாக தமிழகத்தின் தலைநகரம் சென்னையையும் கன்னியாகுமரி முனையையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டிணம், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், மீமிசல், தொண்டி மற்றும் ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வரை நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

பூரி மரைன் டிரைவ்

பூரி மரைன் டிரைவ்

வங்காள விரிகுடாவை ஒட்டி பூரியிலிருந்து, கொனார்க் வரை நீண்டு செல்லும் கடற்கரைச் சாலை பூரி மரைன் டிரைவ் அல்லது கொனார்க் மரைன் டிரைவ் என்று அழைக்கப்படுகிறது. பூரி மற்றும் கொனார்க் நகரங்களின் கோயில்களையும், கடற்கரைகளையும் ஒருசேர தரிசனம் செய்யும் ஆன்மீக அனுபவத்தை இந்த மரைன் டிரைவ் வழங்குகிறது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+