» »உலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

உலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

Written By: Udhaya

உலகில் சில விசயங்கள் நம்மை நாமே அறியாமல் உண்மை என நம்பிக்கொண்டிருப்போம். சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்பது சொல்லாடல். ஆனால் சூரியனும் இதர கோள்களும் சுற்றிக்கொண்டிருக்கின்றவே தவிர உதிப்பதில்லை. அது அறிவியல் பூர்வமாக தவறு என்று தெரிந்தாலும், நாம் இன்று வரை அப்படித்தான் பேசி வருகிறோம்.

இவ்வளவு ஏன்.. பூமி தட்டையானது என்றுதான் இன்றும் பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். பூமி உருண்டையானது. அது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது அறிவியல் நமக்கு கற்றுக்கொடுத்த உண்மை. சூரிய உதயம் காண கன்னியாகுமரிக்குத்தான் செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லையே. எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். ஆனால், கன்னியாகுமரியில் இன்னும் சிறப்பாக தெரிகிறது. மேலும் இது உலக சுற்றுலாத் தளமானதுக்கும் இப்படி ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் இதுவரை நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் அந்த முனை கன்னியாகுமரி கிடையாது என்ற தகவல் உங்களை நிச்சயமாக அதிர்ச்சிக்குள்ளாக்கும். அப்போ அது எந்த இடம் தெரியுமா?

 சூரிய உதயம்

சூரிய உதயம்

உலகம் முழுவதும் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருகின்றனர். அவர்கள் தமிழகத்தின் தஞ்சாவூர், மதுரை, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரியை மறக்காமல் சுற்றிப்பார்த்துவிட்டு செல்கின்றனர், பெரும்பான்மையானவர்கள் சூரிய உதயம் காண கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரு உண்மை தெரிவதில்லை.

Vkraja

சூரிய உதயம் காணும் இடம்

சூரிய உதயம் காணும் இடம்


கன்னியாகுமரியிலிருந்து காணும் சூரிய உதயத்தைக் காட்டிலும் இந்த இடம் மிகச் சிறப்பானதாக இருக்கும். ஆனால் இது பெரும்பாலும் கன்னியாகுமரி என்றே நம்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.. இது கன்னியாகுமரி அல்ல. சின்னமுட்டம்.

வெளியில் தெரியாத குட்டி கடற்கரை தேசம்.

 சின்னமுட்டம்

சின்னமுட்டம்

சின்னமுட்டம் ஒரு சிறிய கிராமம் மாதிரிதான் இருக்கும். இங்கு மீன்பிடி தொழில் செய்பவர்களே அதிகம். இங்குள்ள துறைமுகமும், சூரிய உதயம் காணும் இடமும் இதன் சிறப்பை விளக்கும். அப்போ சூரிய உதயம் காண போகலாம்தானே. இது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இடம். சின்னமுட்டம் என்பது மிகச் சிறந்த தமிழ் பெயர் ஆகும்.

தமிழில் முட்டு என்பதற்கு முனை என்று பொருள். வழக்கமாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் இந்தியாவின் முனை இதுவாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால் கன்னியாகுமரி அந்த பெயரைப் பெற்றுவிட்டது. பொதுவாக வெளி மாநிலத்தவர்கள், வெளி மாவட்டகாரர்களுக்கு இந்த இடம் கன்னியாகுமரி என்று தான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும்.

Godwinfelix00

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


இந்த பகுதியில் நாம் சூரிய மறைவு காணும் கன்னியாகுமரி முனையிலிருந்து சூரிய உதயம் காணக்கூடிய முட்டம் முனைக்கு எப்படி வருவது என்று காண்போம். முதலில் கன்னியாகுமரியில் காணவேண்டியவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

விவேகானந்த பாறை, திருவள்ளுவர் சிலை தவிர்த்து, காந்தி மண்டபம், காமராஜர் நினைவகம், ஆதிசங்கரர் கோயில், பகவதியம்மன் கோயில், முக்கடல் சங்கமம், சுனாமி பார்க், முக்கோண பூங்கா, அரசு அருங்காட்சியகம், பேச்சியம்மன், சிவன் கோயில்கள், தமிழ் அன்னைப் பூங்கா என எக்கச்சக்க இடங்கள் இந்த பகுதியில் காணவேண்டியவை இருக்கின்றன.

சூரிய மறைவு

சூரிய மறைவு


சூரிய மறைவு காணும் இடத்தில் இருக்கும் பீச்களில் நிறைய பெயர்கள் காணப்படுகின்றன. இவை பொதுவாக கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டாலும், இந்த இடத்தில் நிறைய பீச்கள் காணப்படுகின்றன.

மேற்கு கரையில் இருப்பது கோவளம் பீச் ஆகும். இங்கிருந்து சூரிய மறைவு வெகு அழகாக காணமுடியும். அடுத்து இருப்பது சன்செட் பாயிண்ட். இது கடற்கரைக்கு கொஞ்சம் தள்ளி அமைந்துள்ளது. இதனால் நீங்கள் கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்து பார்ப்பது போல் உணரமுடியும்.

ஸ்டெல்லா மேரிஸ் என்றழைக்கப்படும் பீச் அதைத் தொட்டார்போல அமைந்துள்ளது. அதையடுத்து மிஸ்டீரியஸ் மதர் மேரி எனும் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இருக்கும் பகுதிக்கு ஸ்டெல்லா மேரிஸ் பீச் என்று பெயர்.

Gladsondaniel002

மறைக்கப்பட்ட இரட்டை கடற்கரைகள்

மறைக்கப்பட்ட இரட்டை கடற்கரைகள்

இதுவும் குமரி கடற்கரைப்பகுதிதான். இங்கும் இரண்டு கடல்கள் சந்திக்கின்றன. இவை பார்ப்பதற்கு மறைக்கப்பட்டதைப் போன்ற ஒரு இடம் ஏனென்றால் இங்கு அந்த அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் வரமாட்டார்கள். தனிமையில் இனிமை காண நினைப்பவர்கள் இந்த கடற்கரையை தாராளமாக தேர்வு செய்யலாம்.

இது பார்ப்பதற்கு இரண்டு பக்கங்களைக் கொண்டது போல் தோற்றம் கொண்டது. ஒரு கூர்மையான முனையைக் கொண்டது இது.

Nirav Umaretiya

புனித சேவியர் குகை

புனித சேவியர் குகை


குமரி கடற்கரையில் குகையா என்று நிறைய பேர் கேட்கலாம். இது கோவளம் மற்றும் குமரி கடற்கரைகளுக்கு இடையே அமைந்துள்ளது. சூரிய மறைவு காணும் தளத்திலிருந்து வரும்போதே சாலையிலிருந்து நாம் இதை காணமுடியும். இதுவும் யாருமில்லாத இடமாகத்தான் இருக்கும். சில காதல் ஜோடிகள் இந்த இடங்களில் தனிமையில் பேசிக்கொண்டிருப்பார்கள். நல்ல பொழுது போக்குத்தளமாகும். எனினும் இரவு வேளைகளில் நிச்சயம் தவிர்க்கவேண்டும்.

Nirav Umaretiya

கோவளம் பூங்கா

கோவளம் பூங்கா

கன்னியாகுமரி பேருந்து நிலையத்திலிருந்து வெகு அருகில் இந்த பூங்கா அமைந்துள்ளது. அல்லது கன்னியாகுமரி கோவளம் சாலையில் 2 கிமீ தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது.

இங்கு சிறப்பான இடங்கள் பல இருக்கின்றன. மேலும் இதன் அருகிலேயே பேவாட்ச் பூங்கா அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து மகாவிர்சுவாமி ஜெய்ன் கோயில் அமைந்துள்ளது.

பேவாட்ச் கேளிக்கைப் பூங்கா, காலை 10 மணி முதல் இரவு 7.30மணி வரையில் திறந்திருக்கும். மேலும் இது பெரியவர்களுக்கு,. சிறியவர்களுக்கு, முதியோருக்கு என மூன்று வித கட்டணங்களை வசூலிக்கிறது

Irshadpp

கன்னியாகுமரி அருங்காட்சியகம்

கன்னியாகுமரி அருங்காட்சியகம்

இந்தியாவின் முதல் மெழுகு பொம்மை இந்த அருங்காட்சியகத்தில்தான் உள்ளது. பேவாட்ச்சுக்கு வருபவர்களில் பலர் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்துவிட்டு செல்கிறார்கள். வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் இந்த அருங்காட்சியகத்தால் ஈர்க்கப்படுகின்றனர்.

அருகிலேயே காமராஜர் நினைவகம், காந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லலாம்.

வாவ்! திருவள்ளுவர் சிலை வருவதற்கு முன் எப்படி இருக்கு பாருங்க கன்னியாகுமரி!

 வாவத்துறை

வாவத்துறை


வாவத்துரை என்பது கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது அங்குள்ள செயின்ட் ஆரோக்கிய நாதர் கத்தோலிக் கிறிஸ்துவ தேவாலயத்திற்கு புகழ் பெற்றது. கடற்கரையை ஒட்டியே உள்ள இந்த தேவாலயம், 2010-ஆம் ஆண்டு கோட்டரின் இன்றைய தலைமை குருவான அருள்திரு பீட்டர் ரெமிகஸ் D.D அவர்களால் நிறுவப்பட்டது. இந்த தேவாலயம் செயின்ட் ஆரோக்கிய நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எப்போதும் மக்களை நோயிலிருந்து காப்பாற்றி அனைவருக்கும் நல்ல உடல் நலத்தை அளிப்பவரே ஆரோக்கிய நாதர். கடற்கரையோரம் நீல வண்ண வானத்து பின்னணியில் எண்ணிலடங்கா எழிலோடு காட்சியளிக்கிறது இந்த தேவாலயம்.

Aamir Khan.

 விவேகானந்தர் நினைவு மண்டபம்

விவேகானந்தர் நினைவு மண்டபம்

விவேகானந்தர் நினைவு மண்டபம் 1970-ல் நீலம் மற்றும் சிவப்பு கிராநைட் கற்களால் கட்டப்பட்டது. இது கடலுக்கு நடுவில் ஒரு பாறை திட்டின் மேல், கடல் மட்டத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்தில், சுமார் 6 ஏக்கர் பரப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த நினைவு மண்டபம் இரண்டு பாறைகளுக்கு மேல் கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கிறது.

விவேகானந்தர் கன்னியாகுமரி வந்த பொழுது கடலில் நீந்திச் சென்று இப்பாறையில் அமர்ந்து இரவு முழுவதும் தீவிர தியானத்தில் இருந்ததாக கூறப்படுவது உண்டு. அதன் பிறகே இந்நாட்டிற்கு சேவை செய்ய அவர் தன்னை அற்பணிக்கவும், வேதாந்தங்களை உலகம் முழுவதும் பரப்பவும் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
Devasyapratima

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

திருவள்ளுவர் கன்னியாகுமரியின் முக்கிய அடையாளங்களின் ஒன்று. இது மிகப்பெரிய கற்களால் செய்த தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலையாகும். இதன் உயரம் 133 அடி. இச்சிலை விவேகாந்தர் பாறைக்கு அடுத்து நிறுவப்பட்டிருக்கிறது.

இதன் மேடையின் உயரம் 38 அடியாகும். இது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 38 அறத்துப்பாலை குறிக்கும். மேடையின் மேல் இருக்கும் சிலையின் உயரம் 95 அடியாகும். இது 25 இன்பத்துப்பாலையும் 70 பொருட்பாலையும் குறிக்கும். இச்சிலையை செதுக்கிய சிற்பியின் பெயர் Dr. வி. கண்பதி ஸ்தபதி.

Karthikeyan

 குமரி அம்மன் கோயில் அல்லது பகவதி அம்மன் கோயில்

குமரி அம்மன் கோயில் அல்லது பகவதி அம்மன் கோயில்

குமரி அம்மன் கோயில் அல்லது கன்னியாகுமரி கோயில் கடல் கரையோரமாக அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரதான தெய்வம் பார்வதி தேவி. பார்வதி தேவி சிவனை அடையும் பொருட்டு இங்கு தவம் செய்ததாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி என்ற பெயர் கன்யா (அர்த்தம்: கன்னி) + குமரி (அர்த்தம்: பெண்) என்பதை குறிக்கும். புராண கதைகளின் படி சிவனுக்கும் கன்னியாகுமரிக்கும் (பார்வதி தேவி) நடக்கவிருந்த திருமணம் நடக்கவில்லை.

ஆதலால் பார்வதி தேவி தான் ஒரு கன்னி தேவதையாக விளங்க முடிவு செய்து விட்டதாக கூறுகிறது புராணம். மேலும் திருமணத்திற்காக சேகரித்த தானியங்கள் அனைத்தும் சமைக்கப்படாமல் போனதால், அவைகள் கல்லாக மாறிப்போனதாகவும் கதைகள் உண்டு.

Parvathisri -

வியூ டவர்

வியூ டவர்

குமரி கடற்கரையை அடையும்போதே நம்மை காட்சியரங்கம் ஒன்று வரவேற்கும் இங்கிருந்து நீங்கள் கடற்கரையை கண்டு ரசிக்கலாம். இது பீச் சாலை என்று அழைக்கப்படும் சாலையில் அமைந்துள்ளது. இது கோவளம் செல்லும் வழியாகும்.

Suswa9498

போட்டிங்க்

போட்டிங்க்

விவேகானந்த பாறைக்கு மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லவேண்டுமென்றால் இங்கு நீங்கள் முன்கூட்டியே வந்து பயணச்சீட்டு பெறவேண்டும். இதுவும் வயதைப் பொறுத்து அமையும். அரசு சார்பாக இயக்கப்படும் படகுகள் உங்களை அழைத்துச் செல்லும். இதுக்கு செல்லும் வழியில் ஒரு சிவன் கோயிலும் உள்ளது.

Raman Patel

ஆரோக்யநாதர் ஆலயம்

ஆரோக்யநாதர் ஆலயம்

இங்குள்ள ஆலயங்களில் சிறப்பு பெற்ற ஒரு ஆலயம் இதுவாகும். இதன் அருகிலுள்ள பீச் வாவுத்துரை பீச் என்று அழைக்கப்படுகிறது. இந்த சாலையில் வாவுத்துரை பீச் சாலை இணைகிறது.

Mapantony

 சூரிய உதயம் காணும் இடம்

சூரிய உதயம் காணும் இடம்

சின்னமுட்டம் கிராமம் அருகே அமைந்துள்ள இந்த இடம் விவேகானந்த கேந்த்ரா என்று அழைக்கப்படுகிறது. இந்த கடற்கரை பார்ப்பதற்கே அழகாக அமைந்துள்ளது இங்கு ஹன்டடு பீச் என்ற ஒன்று இருக்கிறது. இதைத்தான் மக்கள் கன்னியாகுமரி என்று நம்புகின்றனர். ஆனால் இது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். இனி ஒவ்வொரு முறையும் குமரி சுற்றுலா வந்தால் இங்கு தவறாமல் வருவீங்கதானே!

Read more about: travel temple kanyakumari

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்