Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிக சுவையான பிரியாணி கிடைக்கும் இடம் எது தெரியுமா ?

உலகின் மிக சுவையான பிரியாணி கிடைக்கும் இடம் எது தெரியுமா ?

அது என்ன மாயமோ தெரியவில்லை அந்த உணவின் பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். எத்தனை வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். நண்பர்களுடன் உணவகத்திற்கு சென்றால் யோசிக்காமல் அதை ஆர்டர் செய்வோம். கல்யாண விருந்தில் பரிமாரப்பட்டால் சுற்றியிருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப்படாமல் வயிறுமுட்ட சாப்பிடுவோம்.அது என்ன உணவு என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?.

உலகமெங்கும் உள்ள இந்திய உணவுப்பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த உணவான 'பிரியாணி' தான் அது. பெர்சியர்கள் மற்றும் முகலாயர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்திய இந்த உணவு இன்று ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் சமைக்கப்படுகிறது. பல்வேறு முறைகளில் விதவிதமான பிரியாணிகள் சமைக்கப்பட்டாலும் அவை எல்லாவற்றை விடவும் ஹைதராபாத் பிரியாணி தான் மிக சுவையானதாக புகழப்படுகிறது. வாருங்கள், ஹைதராபாத் நகருக்கே சென்று பிரியாணியை ஒரு பிடிபிடிக்கலாம்.

ஹைதராபாத்தில் உணவு சுற்றுலா:

ஹைதராபாத்தில் உணவு சுற்றுலா:

ஹைதராபாத் நகரம் இந்தியாவில் மிகவும் வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாகும். ஒருபக்கம் வானுயர்ந்த கட்டிடங்களில் நவீன யுகத்தின் தூதுவர்களான யுவன்களும், யுவதிகளும் தகவல் தொழில்நுட்ப துறையில் சாதனை புரிந்துகொண்டிருக்க மறுபுறம் தனது பழமையை கைவிடாமல் இன்றும் பாதுகாக்கிறது இந்நகரம்.

ஹைதராபாத்தில் உணவு சுற்றுலா:

ஹைதராபாத்தில் உணவு சுற்றுலா:

ஹைதராபாத் நகரம் உருவாக்கப்பட்ட 1591ஆம் ஆண்டிலிருந்து சுதந்திர இந்தியாவுடன் இணையும் வரை இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த காரணத்தினாலோ என்னவோ ஹைதராபாத் உணவுகளில் துருக்கிய மற்றும் அரேபிய உணவு முறைகளின் தாக்கம் கொஞ்சம் அதிகம்.

பாஸ்மதி அரிசி, ஹலால் மாமிசம்,ஏலக்காய்,கிராம்பு போன்ற மணமூட்டிகள் பிராதனமாக சேர்த்து பிரத்யேகமான முறையில் சமைக்கப்படும் ஹைதராபாத் உணவுகளிலேயே மிகவும் பிரபலமானது ஹைதராபாதி பிரியாணி தான்.

ஹைதராபாத்தில் உணவு சுற்றுலா:

ஹைதராபாத்தில் உணவு சுற்றுலா:

மற்ற பிரியாணி சமைக்கும் முறையிலிருந்து இருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் சமைக்கப்படுவதினால் கிடைக்கும் பிரத்யேகமான சுவையே ஹைதராபாதி பிரியாணி பிரபலமடைய காரணமாகும்.

ஹைதராபாத்தின் மன்னர்களான நிஜாம்களின் ராஜ உபச்சாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 26வகையான ஹைதராபாதி பிரியாணி வகைகள் பரிமாறப்பட்டிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Garrett Ziegler

ஹைதராபாத்தில் உணவு சுற்றுலா:

ஹைதராபாத்தில் உணவு சுற்றுலா:

ஹைதராபாதி பிரியாணி என்றாலே அது பொதுவாக ஆட்டிறைச்சி கொண்டுதான் சமைக்கப்படுகிறது. இது தவிர கோழி, மாடு, இறால் போன்றவற்றை கொண்டும் ஹைதிராபாத்தி பிரியாணி தயாரிக்கப்படுகிறது.

விறகடுப்பில் மிக மெதுவாக சமைக்கப்படும் கச்சே கோஸ்த் கி பிரியாணி, குங்குமப்பூ சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் சப்ராணி பிரியாணி, கீமா பிரியாணி போன்றவை சில பிரபலமான ஹைதராபாத்தி பிரியாணி வகைகள் ஆகும்.

S-fairy

ஹைதராபாத்தில் உணவு சுற்றுலா:

ஹைதராபாத்தில் உணவு சுற்றுலா:

ஹைதிராபாத்தில் பிரியாணி சாப்பிட சிறந்த உணவகமாக சொல்லப்படுவது 'பேரடைஸ் ரெஸ்டாரன்ட்' ஆகும். கிட்டத்தட்ட 60 வருடங்களாக பிரயாணி தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் இந்த உணவகத்தில் நிஜாம்களின் காலத்தில் எப்படி பிரியாணி சமைக்கப்பட்டதோ அந்த சுவை சற்றும் மாறாமல் சமைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஹைதராபாத்தில் உணவு சுற்றுலா:

ஹைதராபாத்தில் உணவு சுற்றுலா:

பேரடைஸ் ரெஸ்டாரண்டை தவிர்த்து ஹைதராபாத் நகரின் அடையாளமான சார்மினாருக்கு அருகில் இருக்கும் ஷாதப் ரெஸ்டாரன்ட், பதேர்கட்டி என்ற இடத்தில் இருக்கும் ஹோட்டல் மதீனா, செகந்தராபாத் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் ஆல்பா ஹோட்டல் ஆகிய இடங்களிலும் அதிசுவையான ஹைதராபாதி பிரியாணி கிடைக்கிறது.

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

திருப்தியாக பிரியாணி சாப்பிட்ட பிறகு அப்படியே கொஞ்சம் ஹைதராபாத் நகரையும் சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள்.

ஹைதராபாத்தில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலங்கள் பற்றி அடுத்தடுத்த பக்கங்களில் தெரிந்துகொள்வோம்.

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

ஹஸ்ரத் ஹுசைன் ஷாஹ் வாலி என்பவரால் 1562ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் ஹுசைன் சாகர் ஏரி ஆகும். இதன் நடுவே அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை போன்ற 18 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலை ஒன்றும் இருக்கிறது.

இந்த ஏரியை சுற்றித்தான் பிரபலமான 'நெக்லஸ் ரோடு' அமைந்திருக்கிறது. இரவு நேரத்தில் வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் ஒளிரும் போது உண்மையாகவே நெக்லஸ் போல இந்த சாலை காட்சியளிக்கிறது.

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

ஹைடெக் சிட்டி என்று அழைக்கப்படும் ‘ஹைதராபாத் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி இஞ்சினியரிங் கன்சல்டன்சி சிட்டி' (தகவல் தொழில்நுட்பத்துறை சேவை நகரம்) ஒரு முக்கியமான நகர்ப்புற பகுதியாக ஹைதரபாத் நகரில் அமைந்துள்ளது.

சைபர் சிட்டி அல்லது ஹைடெக் சிட்டி என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு நகர்ப்பகுதியில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ், விப்ரோ, டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், மைண்ட்ஸ்பேஸ் மற்றும் எல் அண்ட் டி, இன்ஃபோசிஸ், ஏ.பி.ஐ.ஐ.சி, ஐ.பி.எம், கூகுள் போன்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச பெருநிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை கொண்டுள்ளன.

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

கின்னஸ் புத்தகத்தால் உலகின் மிகப்பெரிய படப்பிடிப்பு வளாகம் என அங்கீகரிக்கப்பட்ட 'ராமோஜி பிலிம் சிட்டி' ஹைதராபாத்தின் முக்கியமான சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாகும்.

ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கான அத்தனை வசதிகளையும் உள்ளடக்கியிருக்கும் இந்த வளாகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான கேளிக்கை அம்சங்களும் இருக்கின்றன. நமக்கு அதிஷ்டம் இருந்தால் பிரபலமான கதாநாயகர்களின் படப்பிடிப்புகளை காணலாம்.

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

பிர்லா மந்திர்:

ஹைதராபாத் நகரத்தில் பிர்லா பிளானட்டேரியத்துக்கு அருகிலேயே இந்த பிர்லா மந்திர் அமைந்துள்ளது. நௌபாத் பஹாட் எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் ஹிந்துக்களின் முக்கிய ஆன்மீகத்திருத்தலமாக புகழ் பெற்று விளங்குகிறது.

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிரத்யேக வரவழைக்கப்பட்ட வெண்பளிங்கு கற்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயிலின் மூலவராக வெங்கடாச்சலபதி இருக்கிறார்.

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

கோல்கொண்டா கோட்டை :

கோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது.

கோல்கொண்டா கோட்டை 1512ம் ஆண்டிலிருந்து இப்பகுதியை ஆண்ட குதுப் ஷாஹி ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது.இந்தக்கோட்டையில் காணப்படும் ஒலியியல் அம்சம் ஒரு விசேஷமான அம்சமாக அறியப்படுகிறது. அதாவது கோட்டை வாயிற்பகுதியில் நின்று நாம் கைகளைத்தட்டினால் அந்த சத்தமானது மிகத்துல்லியமாக 91 மீட்டர் உயரத்திலுள்ள கோட்டையின் மேல் மாடத்தில் எதிரொலிக்கிறது.

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

ஹைதராபாத்தையும் சுற்றிபார்க்கலாம்:

இவை தவிர ஹைதராபாத்தில் இன்னும் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் மற்றும் ஆன்மீக ஸ்தலங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய முழுமையான விவரங்களையும், ஹைதராபாத்தில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Read more about: hyderabad food tour biriyani
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X