» »சீனப் பெருஞ்சுவர் தெரியும்! அது என்ன இந்தியப் பெருஞ்சுவர்?

சீனப் பெருஞ்சுவர் தெரியும்! அது என்ன இந்தியப் பெருஞ்சுவர்?

Written By: Udhaya

இந்தியப் பெருஞ்சுவர் எங்கு இருக்கிறதென்பது யாருக்காவது தெரியுமா? அட.. சீனப்பெருஞ்சுவர் கேள்விபட்டிருக்கோம். இந்த இந்தியப் பெருஞ்சுவர் எங்கு இருக்கு. ஒருவேளை அமெரிக்கா மாதிரி, இந்தியாவைச் சுற்றி பெருஞ்சுவர் எழுப்பிட்டாங்களா என்ன? நீங்க நினைப்பதுபோல் ஒன்றும் இல்லை. ஆனால் இந்தியப் பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் அந்த பிரம்மாண்ட சுவர் இந்தியாவில்தான் உள்ளது. வாருங்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

 கும்பல்கர்க் கோட்டை :

கும்பல்கர்க் கோட்டை :

இந்தியாவிலேயே அதிக கோட்டைகளை உடைய மாநிலமான ராஜஸ்தானில் ராஜ்சமந்த் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த கும்பல்கர்க் கோட்டை. 15ஆம் நூற்றாண்டில் ராஜ ரானா கும்பா என்பவரால் இது கட்டப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 1100 அடி உயரத்தில் ஒரு மலையின் மீது அமைந்திருக்கும் இந்த கோட்டையின் சுற்றுச்சுவர் கிட்டத்தட்ட 36 கி.மீ தூரமுடையதாகும். சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்து மிக நீளமான சுவராக இருப்பதால் இது 'இந்திய பெருஞ்சுவர்' என்று அழைக்கப்படுகிறது.

Hemantisbest -

ராஜ பரம்பரையினர் :

ராஜ பரம்பரையினர் :

இந்த கும்பல்கர்க் கோட்டை சுவர் கிட்டத்தட்ட 15 அடி அகலமுடையதாக இருக்கிறது. 7 கோட்டை வாயில்களை உள்ளடக்கிய இந்த கோட்டையினுள் 300 ஹிந்து கோயில்களும் 60 ஜெயின் மத கோயில்களும் உள்ளன. 19ஆம் நூற்றாண்டு வரை ராஜ பரம்பரையினர் இங்கு வசித்திருக்கின்றனர். இங்கு தான் மேவார் ராஜ்யத்தின் மிகச்சிறந்த அரசனாக போற்றப்படும் மகாரான பிரதாப் பிறந்திருக்கிறார்.

wikipedia

ரானா கும்பா சிசோடியா :

ரானா கும்பா சிசோடியா :

இக்கோட்டையை கட்டிய ரானா கும்பா சிசோடியா ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவராவர். இவர் கட்டிய இந்த கோட்டை பின்நாட்களில் ஆபத்து காலங்களில் மேவாரின் ராஜ பரம்பரையினரை அரணாக காத்திருக்கிறது. 1535 ஆம் ஆண்டு சித்தூர்கர்க்ஹ் முற்றுகையின் போது சிறுவனாக இருந்த இளவரசன் உதய் இந்த கோட்டைக்கு தப்பித்து வந்து எதிரிகளின் கையில் சிக்காமல் தப்பித்தார். இந்த இளவரசன் தான் பின்னாளில் உதய்பூர் என்னும் பேரழகு நிறைந்த நகரத்தை நிர்மாணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

wikipedia

 சுற்றுலாப்பயணிகள் :

சுற்றுலாப்பயணிகள் :

இதன் 500 ஆண்டுகால வரலாற்றில் ஒரே ஒருமுறை மட்டுமே எதிரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏராளமான வரலாற்று கதைகளை தன்னுள் கொண்டுள்ள இக்கோட்டை இன்று தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகையை எதிநோக்கி காத்திருக்கிறது.

wikipedia

ஆரவல்லி மலை :

ஆரவல்லி மலை :


இந்த கோட்டையின் மதில் சுவர்களின் மேல் நின்றால் ஆரவல்லி மலைத்தொடரையும், தார் பாலைவனத்தையும் காண முடியும். கும்பல்கர்கில் இந்த கோட்டையை தவிர இருக்கும் மற்றுமொரு முக்கிய சுற்றுலாத்தலம் கும்பல்கர்க் தேசிய பூங்காவாகும்.

wikipedia

உயிரினங்கள்:

உயிரினங்கள்:

கும்பல்கர் வனவிலங்கு சரணாலயத்தில் நீங்கள் நான்கு கொம்பு இரலை மான்கள், காட்டுப்பன்றிகள், ஓநாய்கள், சிறுத்தைகள், குள்ள நரிகள், சாம்பார் மான்கள், கழுதைப் புலிகள், காட்டுப் பூனைகள், முயல்கள் போன்ற மிருகங்களை கண்டு ரசிக்கலாம்.

wikipedia

 கும்பல்கர் நகரை எப்படி அடைவது?

கும்பல்கர் நகரை எப்படி அடைவது?

கும்பல்கரின் அருகாமை விமான நிலையமாக உதைப்பூரின் மஹாராண பிரதாப் அல்லது தபோக் விமானம் நிலையம் அறியப்படுகிறது. எனினும் உதைப்பூரில் உள்ளது உள்நாட்டு விமான நிலையம் என்பதால் வெளிநாட்டு பயணிகள் டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

wikipedia

பயண வழிகாட்டி?

பயண வழிகாட்டி?

அதோடு கும்பல்கர் நகருக்கு வெகு அருகிலேயே பால்னா நகர ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக கும்பல்கர் நகரை அடைந்து விட முடியும். மேலும் ஜோத்பூர், உதைப்பூர், புஷ்கர், அஜ்மீர் போன்ற ராஜஸ்தானின் முக்கிய நகரங்களிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் கும்பல்கர் நகருக்கு இயக்கப்படுகின்றன.

wikipedia

எப்போது செல்லலாம்?

எப்போது செல்லலாம்?

கும்பல்கர் நகரில் வருடம் முழுவதும் மிதமான வெப்பநிலையே நிலவும். எனினும் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் கும்பல்கர் நகரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. இந்தக் காலங்கள் குறிப்பாக கும்பல்கர் நகரின் இயற்கை அழகை ரசிப்பதற்கும், கும்பல்கர் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றிப் பார்பதற்கும் பொருத்தமானதாக இருக்கும்.

wikipedia