Search
  • Follow NativePlanet
Share
» »இஸ்லாமிய சுல்தானை மணந்த இந்து ராணி - பாகமதியின் அதிர்ச்சி வரலாறு! #NPH 6

இஸ்லாமிய சுல்தானை மணந்த இந்து ராணி - பாகமதியின் அதிர்ச்சி வரலாறு! #NPH 6

By Udhaya

பாகமதி. இந்த பெயர் திடீரென பிரபலமானதற்கு, அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியான பாகமதி திரைப்படம்கூட காரணமாக இருக்கலாம். அப்படி பாகமதி பற்றிய வரலாற்றைப் படிக்கும் போது அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகின்றன. இது நேட்டிவ் பிளானட் ஹிஸ்டரி Native Planet History

 பாகமதி

பாகமதி

வரலாற்றில் ராணியாக கருதப்படும் பாகமதி, இஸ்லாமிய அரசனை மணந்துகொண்டவர் என்று நம்பப்படுகிறது. இவர் வாழ்ந்த இடம் தற்போதைய ஹைதராபாத் என்றும் கூறப்படுகிறது. இந்த கதையில் மேலும் பல அதிர்ச்சிகர தகவல்கள் இருக்கின்றன. வாருங்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

கலப்பு மணம்

கலப்பு மணம்

இந்தியாவை ஆண்ட முகலாயர்களில் இந்து மதத்தைச் சார்ந்த பெண்களை கலப்பு மணம் செய்தவர்கள் சிலரே. அப்படி அக்பரை உதாரணம் கூறுவார்கள் சிலர். அந்த வகையில் தற்போது ஹைதராபாத் என்று அழைக்கப்படும் பகுதிக்கு அருகே ஒரு கிராமத்தில் வாழ்ந்தவர் பாகமதி. அவரை பார்த்து காதல்கொண்ட மன்னர் கலி குதூப் ஷா. இவர்களின் காதல் காவியம் நடந்த இடங்களைப் பற்றியும். அந்த இடங்கள் தற்போது எப்படி இருக்கின்றன என்பது பற்றியும் காண்போம்.

யாகுட்புரா

யாகுட்புரா

ஹைதராபாத் நகருக்கு மிக மிக அருகில் அமைந்துள்ள இடம் யாகுட்புரா. இதுதான் பாகமதியின் ஊராக அறியப்படுகிறது. இங்குள்ள சிச்சலம் எனும் இடத்தில்தான் பாகமதி பிறந்ததாக நம்பப்படுகிறது. நடுத்தர வீட்டுப் பெண்ணான பாகமதி மீது காதல் கொண்டு கலி குதூப் ஷா அவரை ராணியாக்கிக்கொண்டார் என்கிறது அந்த தகவல். அவர் பிறந்து வளர்ந்த இடத்தைப் பற்றி இந்த பதிவில் காண்போம்

ஹைதராபாத்

ஹைதராபாத்

பாகமதி பிறந்த மண்ணுடன் சேர்த்து இப்போது இது ஹைதரபாத் என்று அழைக்கப்படுகிறது. மூஸி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் இந்த நகரமானது வரலாற்று காலத்தில் கீர்த்தி பெற்றிருந்த குதுப் ஷாஹி வம்சத்தை சேர்ந்த மன்னரான முஹம்மது குலி குதுப் ஷா என்பவரால் 1591ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நடனப்பெண்மணியான இந்த பாகமதி மீது ஷாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக இந்த நகருக்கு பாகநகர் என்று பெயரிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் முஸ்லிம் மதத்திற்கு மாறி ஹைதர் மஹால் என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்ட இந்த பெண்ணை ஷா ரகசியமாக திருமணமும் செய்து கொண்டார். எனவே இந்த நகரம் ஹைதராபாத் என்றே பின்னர் வழங்கப்படலாயிற்று. இங்கு நிறைய சுற்றுலா அம்சங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

Maheshrig

நேரு விலங்கியல் பூங்கா

நேரு விலங்கியல் பூங்கா

ஹைதராபாத் நகரத்தில் மீர் ஆலம் குளத்துக்கருகில் அமைந்துள்ள இந்த நேரு ஜுவாலஜிகல் பார்க் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பெயர் பெற்றுள்ளது. . 1959-ம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த வனவிலங்கு பூங்கா 1963-ம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது. இந்த பூங்காவில் புலி, சிறுத்தை, ஆசியச்சிங்கம், மலைப்பாம்பு, உராங்குடான் குரங்கு, முதலை, காட்டெருமை, கலை மான், மான் மற்றும் இந்திய காண்டாமிருகம் போன்ற விலங்குகள் இங்கேயே வளர்க்கப்பட்டு இனப்பெருக்கம் செய்விக்கப்படுகின்றன. காட்டு விலங்குகள் பற்றி தெரிந்து கொள்வதற்கான கல்விக்கூடம் போன்று அமைந்துள்ளதால் குழந்தைகளோடு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் தவறாமல் இந்த வனவிலங்கு பூங்காவுக்கு விஜயம் செய்கின்றனர். தினசரி இந்த பூங்காவில் யானைச்சவாரி மற்றும் காட்டுச்சுற்றுலா போன்றவை பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இயற்கை வரலாறு பற்றிய காட்சிப்பொருட்களை கொண்டிருக்கும் ஒரு விசேஷ அருங்காட்சியகமும் இந்த வனவிலங்கு பூங்காவில் உள்ளது.

nikesh.kumar44

நிசாம் அருங்காட்சியகம்

நிசாம் அருங்காட்சியகம்

ஹைதராபாத் நகருக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு பயணியும் கண்டிப்பாக காண வேண்டிய இடங்களில் இந்த நிசாம் அருங்காட்சியகமும் ஒன்றாகும். நிசாம் மன்னர்களின் அரண்மனைப்பகுதியின் ஒரு அங்கமாக உள்ள இங்கு ஏராளமான ஓவியங்கள், ஆபரணங்கள், அரிய பரிசுப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் பழமையான கார்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெள்ளியில் உருவாக்கப்பட்ட ஹைதராபாத் நகர சின்னங்களின் மாதிரி வடிவமைப்புகளையும் இங்கு பார்வையாளர்கள் காணலாம். மரத்தாலும் தங்கத்தாலும் செய்யப்பட்ட சிம்மாசனம், வாசனைத்திரவியங்கள் வைப்பதற்கான வெள்ளிக்குப்பிகள், ரத்தினங்கள் பொதிக்கப்பட்ட வெள்ளி காபி குவளைகள், முத்துச்சிப்பி பதிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பேழை போன்றவை இங்குள்ள பொருட்களில் சில. பிரேதப்பெட்டிகள், வைரங்கள் பதித்த தங்க உணவுப்பெட்டி, வெள்ளிசரிகை வேலைப்பாடு கொண்ட யானையும் பாகனும் கொண்ட பொம்மை போன்றவையும் இங்கு பயணிகளை கவரும் அம்சங்களாக காட்சிக்கு உள்ளன. அதுமட்டுமல்லாமல் நிசாம் வம்சத்தினரின் நவீன அந்தஸ்து அடையாளங்களான ரோல்ஸ்ராய்ஸ் கார் மற்றும் ஜாகுவார் கார் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Randhirreddy

உஸ்மான் சாகர் ஏரி

உஸ்மான் சாகர் ஏரி

ஹைதராபாத் நகரிலுள்ள இந்த ஓஸ்மான் சாகர் ஏரி உள்ளூர் மக்களால் கண்டிபேட் என்றும் அழைக்கப்படுகிறது. ஹுசேன் சாகர் ஏரியை போன்றே மற்றுமொரு செயற்கை ஏரியான இது மூஸி ஆற்றில் ஒரு அணையை கட்டும்போது உருவாக்கப்பட்டுள்ளது. 1920ம் ஆண்டில் உருவான நாள் முதல் இந்த ஏரி ஹைதராபாத் நகரம் மற்றும் சுற்றியுள்ள நகரங்களுக்கான நீராதாரமாக விளங்கி வருகிறது. வெள்ளப்பெருக்கிலிருந்தும் இப்பகுதியை ஓஸ்மான் சாகர் ஏரி பாதுகாத்துவருகிறது. இந்த ஏரி உருவாவதற்கு முன்னர் 1908ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெரும் வெள்ளப்பெருக்கில் ஹைதரபாத் நகரம் முழுவதுமே பெரும் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Sankarshansen

மெக்கா மசூதி

மெக்கா மசூதி

ஹைதராபாத் நகரில் உள்ள பழமையான மசூதிகளின் ஒன்று என்ற பெருமையை மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மசூதிகளில் இதுவும் ஒன்று என்ற பெருமையையும் இந்த மெக்கா மசூதி பெற்றுள்ளது. முஸ்லிம்களுக்கான ஆன்மிக திருத்தலமாக மட்டுமல்லாமல் குறிப்பிடத்தக்க வரலாற்றுப்பின்னணியையும் பெற்றுள்ளதால் இந்த மசூதி மாநில அரசாங்கத்தால் பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படுகிறது. சார்மினார் மற்றும் சௌமொஹல்லா அரண்மனை போன்ற இதர முக்கியமான அம்சங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளதால் இந்த மசூதிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகளும் விஜயம் செய்கின்றனர். முஹம்மத் குலி குதுப் ஷா இந்த மசூதியின் நிர்மாணத்தை 16ம் நூற்றாண்டில் துவங்கியுள்ளார். மெக்காவிலிருந்து எடுத்துவரப்பட்ட மண்ணைக்கலந்து இந்த மசூதி கட்டுவதற்கான கற்கள் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Lala Deen Dayal

 மீர் ஆலம் டேங்க்

மீர் ஆலம் டேங்க்

ஹைதராபாத் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மீர் ஆலம் டேங்க் பிரபலமான நேரு ஜுவாலஜிகல் பூங்காவிற்கு வெகு அருகிலேயே உள்ளது. ஹுசேன் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் போன்ற ஏரிகள் கட்டப்ப்படுவதற்கு முன்பாகவே இந்த ஏரி ஹைதராபாத் நகரின் குடிநீர்த்தேவையை பூர்த்தெ செய்யும் நீராதாரமாக திகழ்ந்துள்ளது. இது 1804ம் ஆண்டு ஹைதராபாத் ராஜ்ஜியத்தின் பிரதானியாக விளங்கிய மீர் ஆலம் பஹதூர் என்பவரால் இது புனரமைக்கப்பட்டுள்ளது. ஆதியில் மீர் அக்பர் அலிகான் சிக்கந்தர் ஜா ஆசிஃப் ஜா எனும் மூன்றாவது நிஜாம் மன்னர் காலத்தில் இது வெட்டப்பட்டிருக்கிறது.

unknown

மிருகவாணி தேசியப்பூங்கா

மிருகவாணி தேசியப்பூங்கா

மிருகவாணி எனப்படும் தேசியப்பூங்கா ஹைதரபாத் நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்திலுள்ள சில்கூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த தேசியப்பூங்காவிற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான இயற்கை ரசிகர்களுக்காக இந்த பூங்கா பலவகையான உயிரினங்கள் மற்றும் தாவரவகைகளை கொண்டுள்ளது. ஏறக்குறைய 600 வகையான தாவர இனங்கள் இந்த வனப்பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது. மூங்கில், பலஸ், சந்தனம், தேக்கு, பிக்குஸ் மற்றும் ரேலா போன்ற மரவகைகள் இங்கு வளர்ந்திருப்பதை பயணிகள் காணலாம். இந்திய முயல், சிறு மான், புனுகுப்பூனை, காட்டுப்பூனை, காட்டுப்பன்றி மற்றும் சாம்பார் மான் போன்றவை இங்கு வசிக்கும் விலங்குகளில் சில. ஊர்வன வகைகளில் சாரைப்பாம்பு இங்கு அதிகம் காணப்படுகிறது.

J.M.Garg

 மஹாவீர் ஹரிணா வனஸ்தலி தேசியப்பூங்கா

மஹாவீர் ஹரிணா வனஸ்தலி தேசியப்பூங்கா

ஹைதராபாத் நகரத்திற்கு அருகில் உள்ள வனஸ்தலி எனும் இடத்தில் இந்த மஹாவீர் ஹரிணா வனஸ்தலி நேஷனல் பார்க் எனும் தேசியப்பூங்கா அமைந்துள்ளது. விஜயவாடா சாலை வழியாக இந்த தேசியப்பூங்காவை சென்றடையலாம். இது ஒரு மான்கள் பாதுகாப்பு வனச்சரகமாக அறியப்படுகிறது என்ற போதிலும் இங்கு இதர உயிரினங்களையும் பார்வையாளர்கள் பார்க்கலாம். வரலாற்றுக்காலத்தில் இந்த வனப்பகுதியானது நிஜாம் மன்னர்கள் வேட்டைக்கு பயன்படுத்திய கானகமாக விளங்கியுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகே இது தேசியப்பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. வேட்டைப்பகுதியாக விளங்கிய இந்த கானகத்தின் உயிரினங்களையும் தாவரவகைகளையும் பாதுகாகாக்கும் நோக்கத்துடன் தேசியப்பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.

J.M.Garg

ஆஸ்மன் கர் அரண்மனை

ஆஸ்மன் கர் அரண்மனை

ஹைதராபாத் நகரில் உள்ள இந்த ஆஸ்மன் கர் அரண்மனை ஒரு மலையின்மீது கம்பீரமாக வீற்றுள்ளதால் ‘ஆகாய வீடு' எனும் பொருள் தரும்படியான ஆஸ்மன் கர் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை தற்போது தொல்லியல் அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமாக இயங்குகிறது. இந்த அரண்மனை வளாகத்திலேயே செயிண்ட் ஜோசப் பள்ளியும் அமைந்துள்ளது. ஹைதராபாத் ராஜ்ஜியத்தின் பிரதானியாக இருந்த சர் ஆஸ்மன் என்பவர் இந்த அரண்மனையை 1885ம் ஆண்டில் நிர்மாணித்துள்ளார். பைகா வம்சத்தை சேர்ந்த இவரது குடும்பத்தினருக்கான ஓய்வு மாளிகையாக இது கட்டப்பட்டிருக்கிறது. உயரமான பகுதியில் வானத்தை தரிசிக்கும்படியாக ஒரு கனவு மாளிகையை உருவாக்கும் நோக்கத்துடன் இவர் இந்த அரண்மனையை கட்டியதாக சொல்லப்படுகிறது

Nayeem

 கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது. கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது. இருப்பினும் தனது காலத்தில் இந்த கோல்கொண்டா எந்த அளவுக்கு சிறப்புடன் விளங்கியிருக்கக்கூடும் என்பதை இப்போதும் கண்கூடாக காணலாம். கோல்கொண்டா கோட்டை 1512ம் ஆண்டிலிருந்து இப்பகுதியை ஆண்ட குதுப் ஷாஹி ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது.

Haseeb1608

கே.பி. ஆர் தேசியப் பூங்கா

கே.பி. ஆர் தேசியப் பூங்கா

காசு பிரம்மானந்த ரெட்டி நேஷனல் பார்க் அல்லது சுருக்கமாக கே.பி. ஆர் நேஷனல் பார்க் என்று அழைக்கப்படும் இந்த வனப்பூங்கா ஹைதராபாத் நகரின் சொகுசுப்பிரதேசமான ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. நிஜாம் இளவரசர் முகர்ரம் ஜாவுக்கு சொந்தமான சிரான் அரண்மனை இந்த பூங்கா வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ளது. கான்கிரீட் காட்டுக்குள் ஒரு நிஜக்காடு என்று இந்த கே.பி. ஆர் பூங்கா வர்ணிக்கப்படுகிறது. அரண்மனைப்பகுதியை உள்ளடக்கிய இந்த வனப்பகுதிக்கு 1998ம் ஆண்டில் தேசியப்பூங்கா அந்தஸ்து வழங்கப்பட்டது. அப்போது இப்பகுதியின் பெயரும் மாற்றி அமைக்கப்பட்டது.

Malyadri

.

ரேமாண்ட் கல்லறை

ரேமாண்ட் கல்லறை

ஹைதராபாத் நிஜாம் மன்னரின் ராணுவப்படையில் முக்கிய ஃபிரெஞ்சு தளபதியாக விளங்கிய மைக்கேல் ஜொவாச்சிம் மேரி ரேமாண்ட் என்பரின் சமாதியே ரேமாண்ட் கல்லறை என்று அழைக்கப்படுகிறது. 200 வருடங்கள் பழமையான இந்த கல்லறைக்கு உள்ளூர் மக்கள் ஊதுவத்தி மற்றும் மலர்களுடன் விஜயம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், நிஜாம் மன்னர் சார்பாகவும் ஒரு பெட்டி செரூட் பழங்களும் ஒரு பீர் பாட்டிலும் ஒவ்வொரு மார்ச் மாத 25ம் தேதியின் போது வழங்கப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. 1940ம் ஆண்டு வரையில் இந்த கல்லறையானது உள்ளூர் மக்களால் ஒரு சன்னதி போன்று கருதப்பட்டு வந்துள்ளது. நிஜாம் மன்னரின் ராணுவத்தில் முக்கிய பதவி வகித்த இந்த ஃபிரெஞ்சு தளபதி தனது வீரம், கருணை மற்றும் அன்பு போன்ற குணங்களுக்காக மக்களிடையே புகழ் பெற்று விளங்கியுள்ளார்.

Prnvsujay

Read more about: travel hyderabad history
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more