» » நெடுவாசலில் அப்படி என்னதான் இருக்கு?

நெடுவாசலில் அப்படி என்னதான் இருக்கு?

Posted By: Udhaya

நெடுவாசல்.... தமிழகமெங்கும் கேட்கும் தற்போதைய ஹாட் பேச்சு இந்த ஊரைப் பற்றிதான்.

மத்திய அரசு இந்த ஊரில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தொடங்கிய நிலையில் சுற்றுப்புற மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர், அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பல இடங்களில் எதிர்ப்பு போராட்டங்களும், கைதுகளும் நடந்துவருகின்றன.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் மட்டுமல்லாது சுற்றியுள்ள அனைத்து இடங்களும் பாதிக்கப்படும் என்கின்றனர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்.

சுற்றிலும் பசுமையான, விவசாயத்துக்கு ஏதுவான நிலங்களனைத்தையும் நாசப்படுத்திவிடும் என்று கோபத்துடன் கொந்தளிக்கின்றனர் இப்பகுதி மக்கள். சரி அப்படி நெடுவாசலைச் சுற்றி என்னதான் இருக்குனு பாக்கலாமா?

அதிகம் படித்தவை: கஜுராஹோ - இது அந்த விசயத்துக்கான கோயில்

எங்குள்ளது?

எங்குள்ளது?


மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நெடுவாசல் பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

சுற்றிலும் பசுமையான சூழல்களால் ஆன நெடுவாசல் கிராமம் மட்டுமில்லாமல் இந்த திட்டத்தால் புதுக்கோட்டை வட்டாரமே பாதிக்கப்படும் என்கின்றனர் இவர்கள்.

அந்த வட்டாரத்தில் என்னலாம் இருக்கு?

அந்த வட்டாரத்தில் என்னலாம் இருக்கு?

புதுக்கோட்டை வட்டாரத்தில் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பல இதனால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து அவதிப்படுவர் என்றும் கூறுகின்றனர்.

சரி அப்படி அந்த வட்டாரத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

 சித்தன்னவாசல்

சித்தன்னவாசல்


சித்தன்னவாசல் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாகும். இங்குள்ள கல்வெட்டுக்கள் உலகப்புகழ் வாய்ந்தவை.

தமிழகத்தின் வரலாறுகள், மன்னர்கள் பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ள இந்த சித்தன்ன வாசல், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ளது.
PC: Thamizhpparithi Maari

 சித்தன்னவாசல் குகை

சித்தன்னவாசல் குகை


சித்தன்னவாசல் குகை

PC: Thamizhpparithi Maari

சமணப்படுக்கைகள்

சமணப்படுக்கைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசல் என்னும் சிற்றூருக்கு அருகில் சித்தன்னவாசல் குன்றில் இந்த சமணர் படுக்கைகள், கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன.

இயற்கைக்குகையில் பளிங்கினை ஒத்த வழுவழுப்பான தலையணை போன்ற அமைப்புடன் ஆன 17 எண்ணிக்கையிலான கற்படுக்கைகள் இங்கு காணப்பெறுகின்றன.


PC: Thamizhpparithi Maari

திருமயம் மலைக்கோட்டை

திருமயம் மலைக்கோட்டை


இக்கோட்டை ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றது.

திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது. எனினும் இந்த அகழிகள் பல இடங்களில் தூர்ந்து போய்க் காணப்படுகின்றன.

Pc: Vishnoo

பீரங்கி நடைமேடை

பீரங்கி நடைமேடை


மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி

PC: Balajijagadesh

புதுக்கோட்டை அருங்காட்சியகம்

புதுக்கோட்டை அருங்காட்சியகம்

புதுக்கோட்டை மாநகரின் திருக்கோகர்ணத்தில் 1910 ஆம் ஆண்டில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களால் தொடங்கப்பெற்ற பழமையான அருங்காட்சியகம் ஆகும்.இவ்வருங்காட்சியகம், தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகம் ஒரு காப்பாட்சியரால் நிருவகிக்கப்பெறுகின்றது.

PC: Thamizhpparithi Maari

Read more about: travel, பயணம்