» »திருவிதாங்கூர் ரகசியங்களை வெளிக்காட்டும் உதயகிரிக் கோட்டைக்கு போயிருக்கீங்களா?

திருவிதாங்கூர் ரகசியங்களை வெளிக்காட்டும் உதயகிரிக் கோட்டைக்கு போயிருக்கீங்களா?

Posted By: Udhaya

பழங்கால மன்னர்கள் நாட்டை ஆள்வதற்கும் போரை எதிர்கொள்வதற்கும் பல்வேறு வகையான கோட்டைகளைக் கட்டினர்.

எதிரிகளின் கண்களுக்குப்புலப்படாமலும், அவர்களின் சூத்திரங்களை எதிரிகள் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காகவும் பல்வேறு வசதிகளை அந்தந்த கோட்டைகளை செய்திருந்தனர்.

உள்நாட்டு மக்களுக்கு கூட தெரியாத சில அரச குடும்ப ரகசியங்கள் பல கோட்டைகளில் இருந்துள்ளன. அப்படியொரு ரகசியங்கள் நிறைந்த கோட்டைதான் உதயகிரி கோட்டை.

என்ன அந்த கோட்டைக்கு உடனே போக ஆர்வம் வந்திடிச்சா. முழுசா படிச்சிட்டு போங்க

மகாராஜா எக்ஸ்பிரஸ் - ஆசியாவின் காஸ்ட்லி ரயில் பயணம்!

உதயகிரிக் கோட்டை

உதயகிரிக் கோட்டை

உதயகிரிக் கோட்டை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

கி.பி 1600 களில் கட்டப்பட்ட பத்மநாபபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட காலத்தில் இக் கோட்டை திருவிதாங்கூர் அரசர்களுக்குப் பெரிய சொத்தாக அமைந்திருந்தது.

பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மரால் மீளக் கட்டப்பட்டது.

PC: Infocaster

ரகசியங்கள்

ரகசியங்கள்

90 ஏக்கர் பரப்பளவை கொண்ட இக்கோட்டைக்குள் 200 அடி உயரமுள்ள ஒரு குன்று உள்ளது. இதற்குள் துப்பாக்கிகளை வார்ப்பதற்கான வார்ப்பு உலை ஒன்றும் உண்டு.

கோட்டைக்குள் சமாதி:

கோட்டைக்குள் சமாதி:


டச்சு அட்மிரலான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் என்பவரது அவரது மனைவி, மகன் ஆகியோரதும் சமாதிகள் இங்குள்ள பகுதி அழிந்த நிலையில் காணப்படும் ஒரு கிறிஸ்தவ சிற்றாலயத்துள் உள்ளன.


PC: Srithern

எங்குள்ளது

எங்குள்ளது

இக்கோட்டை, திருவனந்தபுரம் - நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புலியூர்க்குறிச்சியில் உள்ளது.

திருவிதாங்கூர் அரசர்

திருவிதாங்கூர் அரசர்

பத்மநாபபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் அரசர்களின் மிக முக்கியமான படைநிலை இதுவேயாகும். இக்கோட்டை பாரிய கருங்கற்களால் ஒரு தனியான குன்றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது.

PC: Infoscator

யாருடையக் கட்டுப்பாட்டில் உதயகிரி கோட்டை

யாருடையக் கட்டுப்பாட்டில் உதயகிரி கோட்டை

உதயகிரிக் கோட்டை தற்போது தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கே பல்லுயிர்மப் பூங்கா என்ற பெயரில் சில மான்கள் வேலியிடப்பட்ட சிறிய பகுதியில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளன.

PC: Srithern

பறவைகள் சிறு சரணாலயம்

பறவைகள் சிறு சரணாலயம்

மேலும் காதற்பறவைகளும் கினி பன்றிகளும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. கினிக் கோழிகள் தன்னிச்சையாயத் திரிகின்றன. மீன் காட்சியத்தில் சில வகை மீன்கள் உள்ளன.

காதலர்களுக்கு இடமில்லை

காதலர்களுக்கு இடமில்லை


அத்தோடு பர்மா பாலத்தில் நடத்தல், மரக் குடிலில் ஏறுதல் போன்றவற்றுக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப் பூங்காவில் குடும்பத்துடன் வருவோர், தனியாய் வரும் ஆடவர், தனியாய் வரும் பெண்டிர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. காதலர்களாய் அல்லது நண்பர்களாய் வரும் ஆண்‌ - பெண்களுக்கு இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது

PC: Srithern

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

இது நாகர்கோயில் நகரில் இருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவிலிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.

நாகர்கோயிலில் இருந்து மார்த்தாண்டம், களியக்காவிளை, திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த பகுதி வரை செல்லும். அங்கிருந்து சிறிது தூரத்தில் தான் கோட்டை அமைந்துள்ளது.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

கன்னியாகுமரி, பத்மநாபபுரம் கோட்டை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம் முதலிய சுற்றுலாத்தளங்கள் இக்கோட்டை அருகே அமைந்துள்ளது.

Read more about: travel temple