Search
  • Follow NativePlanet
Share
» »நம்ம சென்னை எவ்வளவு அழகானது தெரியுமா?

நம்ம சென்னை எவ்வளவு அழகானது தெரியுமா?

By Naveen

பிறந்த ஊர், பிழைக்க வந்த ஊர் என்பதையெல்லாம் தாண்டி இங்கே வாழும் எல்லோருக்கும் சென்னை நகரோடு தாய் மடியை போன்றதொரு பந்தம் இருக்கிறது. இதுவரை வாழ்கையில் பிரிக்க முடியாத அங்கமாக இருந்த சென்னை நகரம் இன்று சீரழிந்து கிடைக்கிறது. விடாது பெய்த மழை சென்னை மக்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டிருக்கிறது. வசதியானவரோ, ஏழையோ எல்லோருக்கும் பல விதங்களில் பாடம் கற்பித்திருக்கிறது இந்த மழை. குறிப்பாக சென்னையை எப்படியெல்லாம் சுரண்டியிருக்கிறோம் என்பதையும் தெள்ளத்தெளிவாக காட்டியிருக்கிறது.

சென்னையை காதலித்த பலருக்கும் மறுபடி எப்போது பழைய பொலிவோடு சென்னையை பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கம் இப்போதே மனதில் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அந்த ஏக்கத்தை போக்கும் விதமாகவும், சொர்ந்துபோயிருக்கும் நம் மனதுக்கும் உற்சாகம் அளிக்கும் விதமாகவும் பழைய சென்னையை கொஞ்சம் சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள்.

அன்பு !!

அன்பு !!

இந்த புகைப்படத்தில் சென்னையில் எங்கோ ஒரு சுவரில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் சென்னையின் மனதை அழகாக வர்ணிக்கிறது எனலாம்.

அடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கை தான் வாழத் தகுதியான ஒன்று என இங்கே எழுதியிருப்பதர்க்கேற்ப இந்த வெள்ளத்தில் சென்னை மக்கள் தங்களால் முடிந்த உதவியை அடுத்தவர்களுக்கு செய்தது நம்மால் என்றைக்கும் மறக்கமுடியாத ஒன்றாகும்.

McKay Savage

மெரீனா கடற்கரை:

மெரீனா கடற்கரை:

சென்னை மக்களின் உணர்வுகளோடு கலந்த ஓரிடம் மெரீனா கடற்கரை தான். இந்த பெருமழைக்கு பிறகு குப்பை கூடமாக மாறியிருக்கிறது.

இதனை சுத்தம் செய்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டியது ஒவ்வொரு சென்னைவாசியின் கடைமையாகும்.

Niyantha Shekar

மெரீனா கடற்கரை:

மெரீனா கடற்கரை:

ஒரு பொன் மாலைப்பொழுதில் மெரீனா கடற்கரையில் மகிழ்ச்சியில் திளைக்கும் காதல் ஜோடி ஒன்று.

Vinoth Chandar

மெரீனா கடற்கரை:

மெரீனா கடற்கரை:

மெரீனா கடற்கரையில் இரவு நேர குளிரில் எப்போதாவது ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டதுண்டா?

Vinoth Chandar

சென்னை சென்ட்ரல்:

சென்னை சென்ட்ரல்:

சென்னையில் இன்றும் மதராசப்பட்டினத்தை நினைவுபடுத்தும் ஓரிடம் என்றால் அது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தான்.

மழை காரணமாக பராமரிப்பு பணிகள் முடிவடையாத காரணத்தால் சில நாட்களுக்கு வெள்ளை நிறமாக காட்சியளித்தது இந்த ரயில் நிலையம்.

Arun Ganesh

வண்டலூர் வனவிலங்கு பூங்கா:

வண்டலூர் வனவிலங்கு பூங்கா:

பெருமழையின் சீற்றத்திற்கு மனிதர்களே தப்பாத நிலையில் வண்டலூர் வனவிலங்கு பூங்காவில் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த விலங்குகளின் நிலை தான் பரிதாபத்திலும் பரிதாபம்.

அவை என்ன ஆனது என்று இன்றுவரை சரியான தகவல் இல்லை.

Vinoth Chandar

மீனவர்கள்:

மீனவர்கள்:

மாம்பழ நிறத்தில் சூரியன் உதிக்க அதிகாலையில் மீன் பிடிக்கும் மீனவர்கள்.

இந்த வெள்ளத்தின் போது மீனவர்கள் மட்டும் உதவிக்கு வராமல் இருந்திருந்தால் உயிர்ச்சேதம் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Kannan B

மீனவர்கள்:

மீனவர்கள்:

இப்போது பரவலாக எல்லா இடங்களிலும் மழை வெள்ளம் வடிந்து விட்டதால் மக்களை மீட்பதற்காக கொண்டுவரப்பட்ட படகுகள் ஆங்காங்கே நிற்கிறதாம்.

அதை கரைக்கு கொண்டு சேர்க்கும் கைமாரையவது நாம் அவர்களுக்கு செய்வோம்.

Sridharan Chakravarthy

கோயில்கள்:

கோயில்கள்:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில் மதங்கள் கடந்து மனிதநேயம் தலைதூக்கியது.

சர்வ மதத்தினரும் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் தங்கவைக்கப்பட்டனர்.

படம்: கபாலீஸ்வரர் கோயில்

Vinoth Chandar

கோயில்கள்:

கோயில்கள்:

கபாலீஸ்வரர் கோயில் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் 'அம்மா' பேனர்.

'அண்ணா' வழியில் வந்ததாக சொல்லிக்கொள்ளும் இவர்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

Vinoth Chandar

கோயில்கள்:

கோயில்கள்:

அன்பே சிவம் !!

இடம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்.

Vinoth Chandar

அழகிய சென்னை:

அழகிய சென்னை:

சென்னையில் வரையபப்ட்டிருக்கும் ஒரு சுவரோவியம்.

McKay Savage

அழகிய சென்னை:

அழகிய சென்னை:

ரிப்பன் பில்டிங் !!

M.R. Krishnamoorthy

அழகிய சென்னை:

அழகிய சென்னை:

எம்.ஜி.ஆர் சமாதிக்கு முன்பாக இருக்கும் பறக்கும் குதிரை மற்றும் இரட்டை இலை சின்னம்.

Karthikeyan K

அழகிய சென்னை:

அழகிய சென்னை:

என்றும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் தியாகராய நகர் ரங்கநாதன் தெரு.

Claudio Accheri

அழகிய சென்னை:

அழகிய சென்னை:

இரவு நேரத்தில் விளக்குகளின் வெளிச்சத்தில் மிளிரும் நேப்பியர் பாலம்.

vishwaant avk

அழகிய சென்னை:

அழகிய சென்னை:

மயிலாப்பூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் கோலப்போட்டி.

Simply CVR

அழகிய சென்னை:

அழகிய சென்னை:

அடையாறு ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் செட்டிநாடு அரண்மனை.

Kumaran

அழகிய சென்னை:

அழகிய சென்னை:

அந்த நாள் ஞாபகம் !! நாட்டாமை பட கட்-அவுட்.

Gavin Malavolta

அழகிய சென்னை:

அழகிய சென்னை:

எத்தனையோ சாதிகள் மதங்களால் நாம் பிரிக்கப்பட்டிருந்தாலும் இந்த வெள்ளத்தின் போது நாம் நடந்துகொண்ட விதம் ஒட்டுமொத்த உலகையே நம்மை ஆச்சரியத்தோடு திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.

நம்பிக்கை இழக்காமல் மீண்டும் சென்னையை புனரமைப்போம். இது நம்ம சென்னை !!

Nandakumar Subramaniam

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X