Search
  • Follow NativePlanet
Share
» »கன்னியாகுமரியிலிருந்து, வாரணாசி வரை ஒரு நீண்ட பயணம்!!!

கன்னியாகுமரியிலிருந்து, வாரணாசி வரை ஒரு நீண்ட பயணம்!!!

By Staff

கன்னியாகுமரியிலிருந்து, வாரணாசி வரை செல்வது நெடுந்தூரப்பயணமாக இருந்தாலும் தேசிய நெடுஞ்சாலை 7 எல்லாவற்றையும் சாத்தியப்படுத்திக்கொடுக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை 7 தமிழ் நாட்டின் கன்னியாகுமரி நகரையும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியையும் இணைக்கிறது.

2369 நீளம் கொண்ட இந்தச் சாலை இந்தியாவிலேயே மிக நீளமான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக அறியப்படுகிறது.

எனவே இந்தச் சாலையில் நூல் பிடித்தாற்போல சென்றால் பயணக்களைப்பு ஏதுமின்றியும், விரைவாகவும், வழியெங்கும் அற்புதமான சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தவாறும் வாரணாசி போய் சேரலாம்.

படித்துப் பாருங்கள் : தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு அழகிய பயணம்!!!

கொச்சி டூ மும்பை = 36 சுற்றுலாத் தலங்கள்!!!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கன்னியாகுமரியிலிருந்து வாரணாசி (காசி) செல்வதற்கு முன் கன்னியாகுமரியையும் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்வோம்.

கன்னியாகுமரியின் சுற்றுலாத்தலங்கள்

படம் : dola.das85

திருநெல்வேலி

திருநெல்வேலி

பழங்காலக் கோவில்கள் ஏராளமாக நிறைந்த பகுதியாக திருநெல்வேலியும்,அதனைச் சுற்றிலுமுள்ள பகுதிகளும் அறியப்படுகின்றன. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய சிவாலயமான நெல்லையப்பர் ஆலயத்தை தன்னகத்தே கொண்ட பெருமையை கொண்ட நகரம் திருநெல்வேலி.

திருநெல்வேலியின் சுற்றுலாத்தலங்கள்

படம் : arunpnair

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் உணவுபொருட்கள் வியாபாரம் பெரிய அளவில் நடைபெறுகிறது. இங்கிருந்து பல ஊர்களுக்கு நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியன ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நீங்கள் விருதுநகர் வரும்போது பராசக்தி மாரியம்மன் கோயிலை தவறவிட்டுவிடாதீர்கள்.

படம் : Arunankapilan

மதுரை

மதுரை

மதுரையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, அழகர் கோயில் தவிர, நீங்கள் அதிசயம் தீம் பார்க்கில் உல்லாசமாக பொழுதைக் கழிக்கலாம், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிழக்காக 5 கி.மீ தூரத்தில் உள்ள வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கோ, மதுரைக்கு அருகேயுள்ள திருச்சுழி எனும் அழகிய கிராமத்துக்கோ சென்று வரலாம்.

மதுரையின் சுற்றுலாத்தலங்கள்

திண்டுக்கல்

திண்டுக்கல்

இந்தியா முழுவதும் பூட்டு என்றாலே அது திண்டுக்கல் என்ற அளவிலே மிகவும் புகழ்பெற்ற நகரமான திண்டுக்கல்லில் சில குறிப்பிடத்தக்க சுற்றுலாப் பகுதிகளும் இருக்கின்றன. திண்டுக்கல் பகுதியில் அமைந்துள்ள சின்னாளப்பட்டி என்ற சிறிய நகரம் 'சின்னாளப்பட்டி சேலை' என்றறியப்படும் பட்டுப்புடவைகளுக்காக பிரபலம்.

திண்டுக்கல்லின் சுற்றுலாத்தலங்கள்

கரூர்

கரூர்

கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், ஸ்ரீ கருவூர் மாரியம்மன் கோயில் போன்ற கோயில்கள் மிகவும் பிரபலம்.

கரூரின் சுற்றுலாத்தலங்கள்

நாமக்கல்

நாமக்கல்

"குப்பை இல்லா நகரம்" என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நகரம் நாமக்கல். இந்த நகரின் பிரபலத்துக்கு காரணமான நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலைத் தவிர இராமசந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை, அரங்கநாதர் கோயில், நரசிம்மர்-நாமகிரி தாயார் கோயில் ஆகிய இடங்கள் நீங்கள் நாமக்கல் வரும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டியவை.

படம் : Chitrinee

சேலம்

சேலம்

மாம்பழ நகரமான சேலம், பிரபலமான சுற்றுலா மற்றும் வழிபாட்டுத்தலமாகும். இந்நகரம் கோட்டை மாரியம்மன் கோயில், தாரமங்கலம் கோயில், சேலம் சுகவனேஸ்வரர் கோயில், அருள்மிகு அழகிரிநாதர் கோயில், எல்லைப்பிடாரி அம்மன் கோயில், ஜும்மா மஸ்ஜித் போன்ற பல வழிபாட்டுத் தலங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. அதேவேளையில் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களான ஏற்காடு மலை, கிளியூர் நீர் வீழ்ச்சி, தாரமங்கலம் மற்றும் மேட்டூர் அணை ஆகிய இடங்கள், சேலத்திற்கு மிக அருகில் அமைந்திருப்பதால், இவ்விடங்களுக்கு சேலத்தில் இருந்து எளிதாகச் செல்லலாம்.


சேலத்தின் சுற்றுலாத்தலங்கள்

தர்மபுரி

தர்மபுரி

கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் தர்மபுரி மாவட்டம், கோயில்களுக்காகவும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இவற்றில் சென்றாய பெருமாள் கோயில், ஒகேனக்கல் அருவி ஆகியவை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.

தர்மபுரியின் சுற்றுலாத்தலங்கள்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

தமிழ்நாட்டின் பிற பகுதிகளைப் போலவே பல்வகை மத நம்பிக்கைகளின் கலாச்சார மையமாக கிருஷ்ணகிரி நகரம் விளங்குகிறது. இந்த நகரத்தைச் சுற்றிலும் பல்வேறு பழமையான கோவில்களும் தொடர்ச்சியாக உள்ளன.

கிருஷ்ணகிரியின் சுற்றுலாத்தலங்கள்

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூரில் கமர்ஷியல் தெரு, லால் பாக், காளை கோயில், UB சிட்டி, இஸ்கான் கோயில் ஆகியவை கண்டிப்பபக பார்க்க வேண்டிய இடங்கள்.

பெங்களூரின் சுற்றுலாத்தலங்கள்

சிக்பல்லாபூர்

சிக்பல்லாபூர்

சிக்பல்லாபூரில் பல இயற்கையான சுற்றுலா அம்சங்களும் மனித முயற்சியில் உருவான நினைவுச்சின்னங்களும் பயணிகள் கவரும் வகையில் அமைந்துள்ளன. பிரசித்தி பெற்ற நந்தி ஹில்ஸ் சிக்பல்லாபூரில் தாலுக்காவில்தான் அமைந்துள்ளது.

சிக்பல்லாபூரின் சுற்றுலாத்தலங்கள்

படம் : Jayaprakash Narayan MK

கர்னூல்

கர்னூல்

ஆந்திரா பிரிக்கப்பட்ட பிறகு தற்போது சீமாந்திரா பகுதியில் கர்னூல் நகரம் அமைந்திருக்கிறது. ஜகன்னாத கட்டு கோயில், கர்னூல் கோட்டை அல்லது கொண்ட ரெட்டி புருஜு ஆகியவை கர்னூலில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

கர்னூலின் சுற்றுலாத்தலங்கள்

படம் : Poreddy Sagar

ஹைதராபாத்

ஹைதராபாத்

பழமையின் அடையாளங்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கு மத்தியில், நவீன யுகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கான கேந்திரமாகவும் மாறியுள்ள நகரங்களில் இந்தியாவிலேயே இது ஒன்றுதான் என்று சொல்லும்படியாக ஹைதராபாத் நகரம் விளங்குகிறது.

ஹைதராபாத்தின் சுற்றுலாத்தலங்கள்

நாக்பூர்

நாக்பூர்

ஆரஞ்சுப்பழங்களின் நகரம் என்று பிரபல்யமாக அழைக்கப்படும் நாக்பூர் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரமாகும். மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு அடுத்த்தாக மூன்றாவது முக்கிய நகரமாக இது விளங்குகிறது.

நாக்பூரின் சுற்றுலாத்தலங்கள்

படம் : Pankaj.awachar

ஜபல்பூர்

ஜபல்பூர்

பளிங்குக்கல் பாறைகள் அதிக அளவில் காணப்படும் பேடகாட் என்ற இடம் இங்கு அமைந்துள்ளதனால், ஜபல்பூர் இந்தியாவின் பளிங்குக்கல் நகரமாக அறியப்படுகிறது. இது, ஜபல்பூரை தனித்துவத்தோடு விளங்கச் செய்து, உலகப்பிரசித்தி பெற்ற நகரமாகவும் புகழ் பெறச் செய்துள்ளது.

ஜபல்பூரின் சுற்றுலாத்தலங்கள்

ரேவா

ரேவா

ரேவாவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள், கோட்டைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமங்கள் பல உள்ளன. இதனைத் தவிர, இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை அழகும், மனிதனால் படைக்கப்பட்ட அற்புதங்களையும், ரேவா நகரில் ஒரு சேர காணமுடியும்.

ரேவாவின் சுற்றுலாத்தலங்கள்

படம் : sudhir chaturvedi

வாரணாசி

வாரணாசி

பனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி, தொடர்ச்சியாக மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். இங்கு கங்கை நதியில் ஒரு முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விமோச்சனம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்நகரின் தனிச்சிறப்பாக கங்கை நதிக்கு அழைத்துச் செல்லும் படித்துறைகளை சொல்லலாம். இவற்றில் தசாஸ்வமேத் படித்துறையில் தான் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆராதனைகள் செய்யப்படுகின்றன. மேலும் தர்பங்கா படித்துறை, ஹனுமான் படித்துறை மற்றும் மன்மந்திர் படித்துறை ஆகியன இங்குள்ள மற்ற சில படித்துறைகளாகும்.

படம் : Jeeheon Cho

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X