Search
  • Follow NativePlanet
Share
» »மாம்பழம் சாப்பிட பிடிக்குமாங்க உங்களுக்கு..??

மாம்பழம் சாப்பிட பிடிக்குமாங்க உங்களுக்கு..??

By Nagaraju

நாமெல்லாம் சிறு வயதில் கோடை காலம் எப்போது வரும் என்று எதிர்நோக்கி காத்திருப்போம். கோடை விடுமுறை கிடைக்கும் நேரம் காலம் தெரியாமல் விளையாடலாம், உறவினர்கள் வீட்டுக்கு போகலாம் என்பதெல்லாம் இருந்தாலும் கூட முக்கியமாக மா மரங்களில் பூ விட்டு அது மாங்காயாக மாறியிருக்கும். உப்பு,மிளகாய் பொடி தூவி நாவுற சுவைக்கலாம், பழுத்த மாம்பழங்களை சாப்பிட்டு மகிழலாம் என்பதற்காகவே கோடையை எதிர்நோக்கியிருப்போம்.

சித்திரை மாத கத்திரி வெயில் இன்னும் கொஞ்ச நாளில் ஆரம்பிக்கப்போகிறது என்பதை நினைத்தாலே பலருக்கு வெளியில் போகவே பயமாக இருக்கும். இத கொடுமைகளை எல்லாம் தாண்டி ஆறுதல் தரும் ஒரு விஷயம் இந்த மாம்பழங்கள் தான். வாருங்கள், இந்தியாவில் எந்தெந்த இடங்களிலெல்லாம் சுவையான மாம்பழங்கள் கிடைக்கின்றன என்பதை தெரிந்துகொள்வோம்.

அல்போன்சோ மாம்பழம் - தேவ்காட் :

அல்போன்சோ மாம்பழம் - தேவ்காட் :

உலகத்திலேயே அதிசுவையான மாம்பழமாக சொல்லப்படுவது அல்போன்சோ மாம்பழம் தான். போர்ச்சுகல் நாட்டை பூர்வீகமாக கொண்ட இப்பழம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேவ்காட் என்னும் நகரில் 45,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு ஒவ்வொரு வருடமும் 50 ஆயிரம் டன் பழங்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.

Photo:Prato

அல்போன்சோ மாம்பழம் - தேவ்காட் :

அல்போன்சோ மாம்பழம் - தேவ்காட் :

அரபிக்கடலின் கரையோரத்தில் அமைந்திருக்கும் நகருக்கு கடந்த சில வருடங்களாக சுற்றுலாப்பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கோவாவின் அசுத்தமான, இரைச்சல் நிறைந்த கடற்க்கரைகளை தவிர்க்க விரும்புகிறவர்களின் தேர்வாக தேவ்காட் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Photo:curdriceaurora

அல்போன்சோ மாம்பழம் - தேவ்காட் :

அல்போன்சோ மாம்பழம் - தேவ்காட் :

இதன் காரணமாக இங்குள்ள தேவ்காட் கடற்கரையில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக ஸ்நார்கிலிங்க், பீச் கேம்ப், உல்லாச படகு பயணம் போன்றவை நடத்தப்படுகின்றன. இதைதவிர தேவ்காட்டின் மற்றுமொரு முக்கியமான அடையாளம் பிரிட்டிஷ் படைகளாலும், டச் படைகளாலுமே கைப்பற்ற முடியாத கோட்டையாக விளங்கிய விஜய துர்க் கோட்டையாகும்.

Photo: Ravi Vaidyanathan

அல்போன்சோ மாம்பழம் - தேவ்காட் :

அல்போன்சோ மாம்பழம் - தேவ்காட் :

அமிர்தத்திற்கு இணையான அல்போன்சா பழங்களை அது விளையுமிடத்திலேயே சென்று சாப்பிட்டுவிட்டு அப்படியே அங்குள்ள கடற்கரைகளையும், கோட்டைகள் மற்றும் கோயில்களுக்கும் சென்று வாருங்கள். புதுமையான ஒரு சுற்றுலாவாக இது நிச்சயம் இருக்கும்.

Photo: Flickr

அல்போன்சோ மாம்பழம் - தேவ்காட் :

அல்போன்சோ மாம்பழம் - தேவ்காட் :

தேவ்காட்டை எப்படி அடைவது ?. அங்கு எந்தெந்த ரயில்கள் செல்கின்றன?. அங்கே தங்குவதற்கு என்னென்ன ஹோட்டல்கள் உள்ளன என்பது பற்றிய விவரங்களை தமிழின் முன்னணி பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:OmkarSapre

பங்கனபள்ளி மாம்பழம் - ஆந்திர பிரதேசம் :

பங்கனபள்ளி மாம்பழம் - ஆந்திர பிரதேசம் :

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள குர்னூல் மாவட்டத்தில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள பங்கனபள்ளி என்ற ஊரில் தென் இந்தியாவின் சுவையான மாம்பழங்கள் விளைகின்றன. இந்த மாம்பழங்கள் ஒவ்வொன்றும் 300 - 400 கிராம் எடைகொண்டதாகவும், முழு மஞ்சள் நிறத்திலான தோளினை உடையதாகவும் இருக்கின்றன.

Photo:Gnt

பங்கனபள்ளி மாம்பழம் - ஆந்திர பிரதேசம் :

பங்கனபள்ளி மாம்பழம் - ஆந்திர பிரதேசம் :

இந்த பங்கனபள்ளி கிராமத்தில் இருந்து கொஞ்ச தூரத்திலேயே இந்திய துணைக்கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய குகைகலான பெலும் குகைகள் அமைந்திருக்கின்றன. இது 150 அடி ஆழமுடையதாகும். இதனுள் பண்டைய காலத்தில் புத்த - ஜைன மத துறவிகள் வாழ்ந்ததற்கான தடையங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Photo:Venkasub

பங்கனபள்ளி மாம்பழம் - ஆந்திர பிரதேசம் :

பங்கனபள்ளி மாம்பழம் - ஆந்திர பிரதேசம் :

இந்த குகைகளினுள் இயற்கையாக அமைந்த தியான கூடம், துறவிகளின் ஓய்வு படுக்கை, சிங்கத்தின் முகம் போன்று அமைந்திருக்கும் நுழைவு வாயில் போன்றவற்றை காண முடியும். சுற்றுலாப்பயணிகளை கவரும் பொருட்டு இந்த குகையினுள் ஒலி - ஒளி நிகழ்சிகள் நடத்தப்படுகின்றன.

Photo:Pravinjha

பங்கனபள்ளி மாம்பழம் - ஆந்திர பிரதேசம் :

பங்கனபள்ளி மாம்பழம் - ஆந்திர பிரதேசம் :

இதை தவிர நல்ல மலா மலையை ஒட்டி அமைந்திருக்கும் 9 நந்தி கோயில்களை கொண்ட மகாநந்தி கிராமம், மற்றும் ஆந்திராவின் புகழ்பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றான யகாந்தி உமா மகேஸ்வரர் பங்கனப்பளிக்கு அருகில் இருக்கும் சுற்றுலாத்தலங்கலாகும்.

Photo:porus

பங்கனபள்ளி மாம்பழம் - ஆந்திர பிரதேசம் :

பங்கனபள்ளி மாம்பழம் - ஆந்திர பிரதேசம் :

பெலும் குகையினுள் இருக்கும் துறவிகள் படுக்கை.

Photo:PP Yoonus

More News

Read more about: food tour beaches temples
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+