» »குதிரையை தட்டினால் எழும்பும் இசை - சேந்தமங்கலம் கோட்டையில் நிகழும் அற்புதம்

குதிரையை தட்டினால் எழும்பும் இசை - சேந்தமங்கலம் கோட்டையில் நிகழும் அற்புதம்

Posted By: Udhaya

நாம் பல்வேறு அற்புத நிகழ்வுகளை கேள்விப்பட்டிருப்போம். பல அதிசயங்களை கண்டு மெய்சிலிர்த்திருப்போம். தூண்களின் பல்வேறு இசை வருவதை இன்றும் அதிசயமாக கொண்டாடுகிறோம்.

நம் முன்னோர்களின் அறிவியலை புகழ்ந்து கொண்டிருக்கும் நாம் அவர்களின் செயல்களையும் வீரத்தையும் நினைவூட்டி மார்தட்டிக் கொள்கிறோம். அப்படி ஒரு வீரதீர செயல்களை பறைசாற்றும் பதிவுதான் இது.

தூண்களில் இசை வடிப்பதே பெரியவிசயம் எனும்போது ஒரு குதிரையின் உறுப்புகளில் தட்டினால் பல்வேறு வகையான இசை வருவது நிச்சயம் அறிவியலின் உச்சம் தானே. வாருங்கள் வரலாற்றைப் புரட்டிப்பார்க்க சேந்தமங்கலம் செல்வோம்.

 சேந்தமங்கலம்

சேந்தமங்கலம்

விழுப்புரம் மாவட்டத்தில் சேந்தமங்கலம் அமைந்துள்ளது. இது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் நதியின் தென்கரைக்கு அருகில் உள்ளது.

Neethidoss

 சேந்தமங்கலம் கோட்டை

சேந்தமங்கலம் கோட்டை

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே சேந்தமங்கலத்தில் அமைந்துள்ளது இந்த கோட்டை. இது தமிழ்நாட்டிலுள்ள சிதிலமடைந்த கோட்டைகளில் ஒன்றாகும்.

Neethidoss

சதுர்முகதுர்க்கம்

சதுர்முகதுர்க்கம்

சதுர்முகதுர்க்கம் என்பது 4 வாசல்களையுடைய கோட்டை என்று பொருள்படும். இக்கோட்டை காடவராய மன்னர்களுள் ஒருவரான மணவாளப்பெருமான் காலத்திலும் அவரது மகன் கோப்பெருஞ்சிங்க காடவராயன் காலத்திலும் கட்டப்பட்டது.

திருமுனைப்பாடி

திருமுனைப்பாடி

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஊர் கி.மு முதலாம் நூற்றாண்டிலிருந்து புகழ்பெற்றிருந்ததாக தொல்லியல் சான்றுகளின் மூலம் தெரியவருகிறது. சோழர் ஆட்சிகாலத்தில் தொண்டைமண்டலத்தில் இருந்த திருமுனைப்பாடியின் ஒரு பகுதியாக சேந்தமங்கலம் இருந்திருக்கிறது. வரலாற்றில் திருமுனைப்பாடி நாடு நடுநாடு, சேதிநாடு, சனதாதநாடு என பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தது. அவை என்பவை ஆகும்.

கோட்டைக் கோயில்

கோட்டைக் கோயில்

கட்டடக்கலையில் ஒரு புதியவகை கட்டிடக்கலையை காடவராயர் தோற்றுவித்தனர். கோயில் சுவற்றில் உள்ள மதில்கள் கோயிலுக்கு அரணாக மட்டுமின்றி போர்க்களப் பாதுகாப்பிற்கு கோட்டையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Neethidoss

கோயிலின் சிறப்பு

கோயிலின் சிறப்பு

கோயில் கோட்டையைச் சுற்றி அகழி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையிலுள்ள சிவன் கோயில் கிழக்கு நோக்கி கெடிலம் நதியை பார்த்தபடி அமைந்துள்ளது. இக்கோயிலில் கண்ணைக் கவரும் பல்வேறு வகை சிற்பங்களும், கோயில் சாளரங்கள் கருங்கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

Neethidoss

மதிலில் ஊரும் பாம்பு

மதிலில் ஊரும் பாம்பு

கோயிலின் மேற்கூரையில் பாம்பு ஒன்று ஊர்ந்துசெல்வதைப் போன்ற சிற்ப அமைப்பு உள்ளது. இது தூரத்திலிருந்து பார்க்கும்போது நிஜ பாம்பைப் போலவே உள்ளது. இது அனைவரையும் கவர்கிறது

 நீராழி குளம்

நீராழி குளம்

கோட்டைக் கோயிலின் மேற்கே நீராழி குளம் என்ற பெயருடைய ஒரு குளமும் உள்ளது. இக் குளத்தின் நீர் சிவனுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படிருக்கிறது.

சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி

இவ்வூர் விழுப்புரத்திலிருந்து 24 கி.மீ தொலைவிலும், பண்ணுருட்டியிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் உளுந்தூர்பேட்டையிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் இருக்கின்றது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்