Search
  • Follow NativePlanet
Share
» »மங்களூரு அருகே இருக்கும் இப்படி ஒரு தீவைப் பற்றி கேள்விபட்டிருக்கீங்களா?

மங்களூரு அருகே இருக்கும் இப்படி ஒரு தீவைப் பற்றி கேள்விபட்டிருக்கீங்களா?

கர்நாடகாவில் உள்ள செயிண்ட் மேரி தீவு தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்தத் தீவு உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இந்த தீ

By Udhaya

கர்நாடகாவில் உள்ள செயிண்ட் மேரி தீவு தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்தத் தீவு உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இந்த தீவுக்கு எப்படி செல்வது, அங்கு என்னவெல்லாம் பார்க்கலாம், மேலும் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களைப் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

எரிமலை

எரிமலை

இந்த தீவில் எரிமலை ஒன்று காணப்படுகிறது. இதைக் காணவே இதற்கென தனி சுற்றுலா விரும்பிகள் வருகை தருகின்றனர். இங்கு உள்ள தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை பாறைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இந்தியாவில் இருக்கக் கூடிய 26 புவியியல் நினைவுச் சின்னங்களில் செயிண்ட் மேரி தீவும் ஒன்று. இது மிகவும் அழகான தீவாக இருந்தாலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாகத் தான் இருக்கிறது.

Bailbeedu

 வாஸ்கோட காமா

வாஸ்கோட காமா

போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோட காமா கேரளாவின் காப்பாட் கடற்கரையில் கால்வைக்கும் முன் இந்த செயிண்ட் மேரி தீவில் நங்கூரமிட்டு நின்றிருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்தியாவில் முதலில் காலடி வைத்த மாலுமி என்று வரலாற்றில் போற்றப்படும் இந்த காமா, கேரளாவில்தான் வந்ததாக நிறைய பேர் நம்பிக்கொண்டிருக்கையில், இவர் கேரளா வில் காலடி எடுத்து வைக்க வில்லை. முதலில் இவர் கர்நாடக மாநிலம் மால்ப்பே பீச் சில் தான் தரையிறங்கினார் என்றும் சிலர் கூறிகின்றனர். ஆனால் இது தீவு என்பதால் இதை அவர் இந்தியாவாக கருதவில்லை போலும்.

Man On Mission

 பாலைவனம்

பாலைவனம்

இந்தத் தீவு தற்போது கட்டிடங்கள் ஏதுமின்றி, விலங்குகளை கூட பார்க்க முடியாத பாலைவனம் போல் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. செயிண்ட் மேரி தீவுக்கு அருகில் 58 கிலோமீட்டர் தொலைவில் மங்களூர் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்துக்கு இந்தியாவில் மிகப்பெரிய விமான நிலையங்களிலிருந்து விமானங்கள் அடிக்கடி இயக்கப்படுகின்றன, மேலும் பேருந்து, ரயில் வசதிகளும் இங்கு உள்ளன. ஆனால் தீவுக்குள் செல்வதற்கு படகு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Bailbeedu

ஃபெர்ரி சேவை

ஃபெர்ரி சேவை

மேலும் பயணிகள் இந்தத் தீவை அடைய ஃபெர்ரி எனப்படும் சொகுசு மோட்டார் படகுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் இந்த ஃபெர்ரி படகுகள் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தே இயக்கப்படும். சில சமயங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கும். இதனால் இந்த சேவை நிறுத்தப்படும். இங்கு வந்தவர்கள் சில சமயங்களில் ஏமாந்து போய் விட வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக பெர்ரி சேவையை முன்கூட்டியே அறிந்துகொண்டு இங்கு பயணம் செய்யவேண்டும்.

தரியா பஹதூர்காட் தீவு

இந்த தரியா பஹதூர்காட் தீவு மால்பே பகுதியில் உள்ள முக்கியமான தீவுகளில் ஒன்றாகும். உடுப்பி பிரதேசத்தில் உள்ள மால்பே தீவுகள் மற்றும் கடற்கரைக்கு பிரசித்தமாக விளங்குகிறது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த மால்பே தீவுகளை கண்டு ரசிக்க வருகை தருகின்றனர். தரியா பஹதூர்காட் கோட்டை இந்த தீவுகளில் ஒன்றில் அமைந்துள்ளது. இந்த தீவு 250 கஜ நீளத்துக்கு சுமார் 1.6 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. சிறியதாக இருந்தாலும் எழில் கொஞ்சும் இயற்கை அம்சங்களை இது பெற்றுள்ளது. இந்த கோட்டைக்கு அருகில் ஒரு பழமையான ஓடு தயாரிப்பு தொழிற்சாலையும் சில அழகிய கோயில்களும் காணப்படுகின்றன. பிடனூர் பஸவப்ப நாயக்கரால் இந்த கோட்டை பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. மால்பே கடற்கரையிலிருந்து சில மைல்கள் மேற்காக இந்த தரியா பஹதூர்காட் கோட்டை அமைந்துள்ளது. உடுப்பி ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலேயே இந்த தரியா பஹதூர்காட் கோட்டை அமைந்துள்ளதால் இங்கு வருவது மிக எளிது. மால்பே நகரத்திலிருந்து இந்த கோட்டைத்தீவுக்கு படகுப்போக்குவரத்து மலிவான கட்டணத்தில் இயக்கப்படுகிறது. உடுப்பியிலிருந்து மால்பே பகுதிக்கு நல்ல சாலை வசதிகளும் உள்ளன.

Man On Mission

மால்பே கடற்கரை

மால்பே கடற்கரை

மால்பே நகரத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குவியும் இடம் இந்த மால்பே கடற்கரையாகும். உள்ளூர் மக்களால் கூட அதிக விரும்பப்படும் இந்த கடற்கரைப்பகுதியில் சுவையான உணவுப்பண்டங்களை விற்கும் உணவகங்கள் அதிகம் உள்ளன. கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு விழாக்களும் இந்த கடற்கரையில் அடிக்கடி நிகழ்த்தப்படுகின்றன. இங்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையும் சமீப காலமாக பெருமளவில் உயர்ந்துள்ளது.

சாகச விளையாட்டுக்கள்

பயணிகள் இந்த கடற்கரைப்பகுதியில் படகுச்சவாரி, தூண்டில் மீன் பிடித்தல், அலைச்சறுக்கு விளையாட்டு, வலை மீன் பிடிப்பு போன்ற பல வகையான பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடலாம். கடற்கரையை ஒட்டியே அமைந்துள்ள விடுமுறை விடுதிகள் தங்கும் வசதிகளையும் இன்ன பிற பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளன.


மீன்பிடி துறைமுகம்

மால்பே கடற்கரை ஒரு மீன்பிடி துறைமுகமாகவும் விளங்குகிறது. இதமான காற்றும், அசைந்தாடும் பனை மரங்களும் சிறிதான அலைகளும் இந்த கடற்கரையின் எழில் அம்சங்களாக திகழ்கின்றன. இங்கிருந்து மால்பே கப்பல் கட்டும் தளமும் காட்சிக்கு தெரிகின்றது.


எப்படி செல்லலாம்

உடுப்பியிலிருந்து 6 கி.மீ தூரத்திலேயே மால்பே கடற்கரை அமைந்துள்ளது. உடுப்பி ரயில் நிலையம் மிக அருகில் உள்ளது. மேலும் சாலை வழியாக வெகு விரைவில் நீங்கள் மால்பே கடற்கரையை அடையலாம். உடுப்பியிலிருந்து மால்பே'க்கு அடிக்கடி பஸ் வசதிகளும் உள்ளன. மால்பே பேருந்து நிலையத்திலிருந்து நடக்கும் தூரத்திலேயே மால்பே கடற்கரை உள்ளது.

Man On Mission

Read more about: travel beach island
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X