» »ஆண்டுக்கு ஒருமுறை தங்கமாக மாறும் நந்தி! வெளியில் கசிந்த ரகசியங்கள்!

ஆண்டுக்கு ஒருமுறை தங்கமாக மாறும் நந்தி! வெளியில் கசிந்த ரகசியங்கள்!

Written By: Udhaya

திருவண்ணாமலை, தமிழகத்தின் வடதிசையில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதன் சிறப்பாக இங்குள்ள அண்ணாமலையார் கோயிலைக் குறிப்பிடலாம். ஆண்டு முழுவதும் திருவண்ணாமலையில் திருவிழாக்கள் நடந்தவாறே இருக்கும். 4லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த திருவிழாக்களில் கலந்துகொள்வார்கள். அப்படிபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலில் நந்தி சிலை ஒன்று தங்கமாக ஒளிர்வதை சுற்றுலாப் பயணிகள் விரும்பி தரிசித்து செல்கின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் ஆண்டிற்கு ஒருமுறைதான் இந்த நிகழ்வு நடக்குமாம். வாருங்கள் அந்த அதிசயத்தைத் தெரிந்துகொள்ள ஒரு சுற்றுலா செல்வோம்.

எங்குள்ளது

எங்குள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கம் பகுதியில் அமைந்துள்ளது இந்த கோயில். இது ரிஷபேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

பழமை

பழமை

சிவ கோயிலான இது கட்டப்பட்டு இருநூறு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்றும் பழமை மாறாத அதே நேரத்தில் பொலிவுடன் காணப்படுகிறது கோயில்.

Bijay chaurasia

சிறப்பம்சம்

சிறப்பம்சம்


இந்த கோயிலின் சிறப்பம்சம் நந்திதான். தங்கநிறத்தில் காட்சியளிக்கும் நிகழ்வை காண அருகாமை பகுதியிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பயணிகள் வருகை தருகின்றனர்.

Thamizhpparithi Maari

மின்னும் ஒளியில்

மின்னும் ஒளியில்


தங்க நிறத்தில் காட்சியளிக்கும் இந்த அதிசய நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மூன்றாம் நாள் கண்டுகளிக்கலாம்.

வேணுகோபால பார்த்தசாரதி கோயில்

வேணுகோபால பார்த்தசாரதி கோயில்

பெருமாள் கோயிலான இது 700 ஆண்டுகள் பழமையானது. மிகவும் தொல்லியல் சிறப்பு வாய்ந்த இந்தகோயிலுக்கு பல அறிஞர்களும், பிரபலங்களும் வருகை தந்துள்ளனர். இந்த கோயிலின் கட்டுமான திட்ட அடிப்படையில்தான் அண்ணாமலையார் கோயிலையே கட்டியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் செங்கம் பல சுற்றுலா அம்சங்கள் நிறைந்ததாகும்.

Iamkarunanidhi

சாத்தனூர் அணைக்கட்டு

சாத்தனூர் அணைக்கட்டு

சாத்தனூர் அணைக்கட்டு இங்கிருந்து 20கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். தமிழகத்திலுள்ள குறிப்பிடத்தக்க அணைகளுள் இதுவும் ஒன்று.

Ersivakm

முதலைப்பண்ணை

முதலைப்பண்ணை

இந்த அணை 1958-இல் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது. இங்கு அழகிய பூங்காவும், ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய முதலைப்பண்ணை ஒன்றும் உள்ளது. இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடிகள். முழு அளவு 119 அடி உயரம். திருவண்ணாமலை உட்பட பல பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதியையும் அளிக்கிறது.


Jeganila

 குப்பநத்தம் அணை

குப்பநத்தம் அணை

குப்பநத்தம் அணை இந்த கோயிலிலிருந்து சுமார் 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Ersivakm

தீர்த்தமலை

தீர்த்தமலை

மிகவும் புகழ்வாய்ந்த மலையான தீர்த்தமலை இங்கிருந்து 30கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது இந்த தீர்த்தமலை. இம்மலையில் அமைந்துள்ள தீர்த்தகிரீசுவரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

Vinoth88

 ராமன் பூசித்த தலம்

ராமன் பூசித்த தலம்

ராவணனை வென்று திரும்பிய ராமன் அயோத்தி செல்லும் வழியில் இங்கு சிவபூசை செய்தான் என்பது நம்பிக்கை. இங்கிருந்து 12கிமீ தொலைவில் அனுமான் தீர்த்தம் உள்ளது. பாவங்கள் போக்கும் தலமாக இது அமைந்துள்ளது.

Vinoth88

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டை

உலகப்புகழ் பெற்ற செஞ்சிக் கோட்டைக்கு செல்ல இங்கிருந்து 60கிமீ பயணிக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் தப்பியிருக்கும் வெகுசில கோட்டைகளுள் மிகமுக்கியமானது இந்த கோட்டை ஆகும். மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.

Unknown

 பல போர்கள் சந்தித்த கோட்டை

பல போர்கள் சந்தித்த கோட்டை

இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.

Unknown

அமைப்பு

அமைப்பு

செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

சென்னையிலிருந்து 160 கிமீ தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 40 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த கோட்டை. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் திருவண்ணாமலை, பாண்டிச்சேரிக்கு பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை செல்லும் வழியில் உள்ள திண்டிவனத்திலிருந்து இந்த கோட்டையை எளிதில் அடையலாம்.

 கல்பேர் வள்ளலார் கோயில்

கல்பேர் வள்ளலார் கோயில்

திருவண்ணாமலையிலிருந்து 7கிமீ தொலைவில் உள்ள வள்ளலார் கோயில், மிகவும் பிரபலமான இடமாகும்.