» »ஆதி கால மதுரை எப்படி இருந்துருக்கு பாருங்களேன்!

ஆதி கால மதுரை எப்படி இருந்துருக்கு பாருங்களேன்!

Posted By: Staff

அட... கேரளாவில் இப்படி ஒரு இடமா... நம்ம பாத்ததே இல்லையே!

உலகிலேயே மிகப்பழமையான இன்றும் மக்கள் வாழ்ந்துவரும் ஒரு நகரம் என்றால் நிச்சயம் மதுரையைத்தான் அனைவரும் கூறுவார்கள். கிட்டத்தட்ட பத்தாம் நூற்றாண்டிலேயே மிக அதிக மக்களும், புலவர்களும், அரசர்களும் வாழ்ந்த செழித்தோங்கிய பூமி என்றால் அது மதுரை. மதுரையின் மண் வாசம் போதும், உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அவர்களின் மொழியை வைத்தே மண்ணின் மைந்தரை அடையாளம் கண்டுவிடலாம். அவர்களின் தமிழ் எப்போதுமே தனி வாசம் கொண்டது. பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய மதுரை 2ம் நூற்றாண்டின் தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் மற்றும் மதுரைக் காஞ்சி ஆகிய இரு நூல்களும் இந்த நகரத்தைப் பற்றியும் மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் விளக்கும். அப்படிப்பட்ட மதுரை ஆதி காலத்தில் எப்படி இருந்தது என்பதை குறிக்கும் புகைப்படங்களுடன் ஓர் டூர் போய்ட்டு வருவோமா?

இந்தியாவுக்கு சொந்தமில்லாத 10 இந்திய நகரங்களின் பெயர்கள் தெரியுமா?

ஆங்கிலேயரின் கட்டுப்பாடு

ஆங்கிலேயரின் கட்டுப்பாடு

1764ம் ஆண்டு முதல் மதுரை முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அந்த காலத்திலேயே மதுரையில் ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணி வீதி, மாசி வீதி ஆகிய நான்கு வீதிகள் இருந்துள்ளன. ஆங்கிலேயர்கள் இந்த ஊரின் அருமை தெரியாமல் பல தவறுகளைச் செய்துள்ளனர். ஒரு விசயத்தை இழந்தால் மட்டுமே இன்னொரு விசயத்தை பெற முடியும் என்று எண்ணி, மதுரை விரிவாக்கம் செய்ய மதுரையைச் சுற்றியிருந்து அகழிகளை மூடத் திட்டமிட்டார்.

மதுரையை சுற்றி வீதிகள்

மதுரையை சுற்றி வீதிகள்

இதன் பின்னர், கோட்டைக்கு வெளியே உள்ள வீதி வெளிவீதி எனவும், மேற்கு பக்கம் இருக்கும் வீதி மேலவெளிவீதி எனவும், வடக்கு பக்கம் இருந்த வீதி வடக்கு வெளிவீதி, தெற்கு வெளிவீதி, கீழவெளிவீதி எனப்பெயர் பெற்றது. இந்த வீதிகளில் நீங்கள் நடக்கும்போது ஒன்றை நினைவு கொள்ளுங்கள் பாண்டிய மன்னர்கள் உருவாக்கியிருந்த பல ஆயிரம் நினைவுச் சின்னங்களை நம் முன்னோர்கள் அழித்துவிட்டனர். அது நமக்கும் மிகுந்த பெரும் இழப்பாகும்.

 பிளாக்பர்ன் விளக்குத்தூண்

பிளாக்பர்ன் விளக்குத்தூண்

பிளாக் பர்ன் விளக்குத்தூண் என்பது கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதி சந்திப்பில் இருக்கும் விளக்குத்தூண் ஆகும். பிளாக் பர்ன் என்பவர்தான் அப்போதைய மதுரையின் ஆட்சியாளராக இருந்தார். அவரின் நினைவாக உருவாக்கப்பட்டது இந்த விளக்குத்தூண். பின்னாளில் இது சிதைக்கப்பட்டதாக தெரிகிறது.

 பழமையான பூமி

பழமையான பூமி

2500 ஆண்டுகளுக்கும் மிகப் பழமையானது இந்த மதுரை. இந்திய மாநகரங்களின் பட்டியலில் 30வது பெரிய நகரமாகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் மீனாட்சியம்மன் கோயிலுக்காக உலகப் புகழ் பெற்றதாகும். இந்த மாநகரம் தமிழ் மொழியுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டது.

ஆட்சி செய்தவர்கள்

ஆட்சி செய்தவர்கள்

மதுரையை பாண்டிய மன்னர்கள் மட்டுமே ஆட்சி செய்திருக்கிறார்கள் என்று நாம் கருதிவிடமுடியாது. ஆரம்பகால கட்டத்தின் குறிப்புகள் படி, மதுரையை, சங்ககால பாண்டியர்கள், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், பிற்கால பாண்டியர்கள், மதுரை சுல்தான்கள், விஜயநகர பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக ராச்சியம், ஆங்கிலேயர்கள் இன்னும் குறிப்பில் இல்லாத சிற்சில குறுநில மன்னர்களும் ஆட்சி செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

திருமலை நாயக்கர் மஹால்

திருமலை நாயக்கர் மஹால்

திருமலை நாயக்கர் மஹால்

மக்கள்

மக்கள்

கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்தே மதுரையில் மக்கள் அதிக அளவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இலங்கையில் விசயன் எனும் மன்னன் மதுராபுரியைச் சேர்ந்த பாண்டிய இளவரசியை மணந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. கிமு 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணியான மெகஸ்தனிஸ் என்பவர் தனது குறிப்புகளில் மதுரையை மதுரா என்றே குறிப்பிடுகிறார்.

மீனாட்சியம்மன் கோயில்:

மீனாட்சியம்மன் கோயில்:

மதுரை மக்கள்.

அமெரிக்கன் கல்லூரி

அமெரிக்கன் கல்லூரி

1940ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அமெரிக்கன் கல்லூரியின் புகைப்படம்.

மீனாட்சியம்மன் கோயில்:

மீனாட்சியம்மன் கோயில்:

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட மதுரை மாநகரை சித்தரிக்கும் ஓவியம்.

திருமலை நாயக்கர் மஹால்

திருமலை நாயக்கர் மஹால்

நாயக்கர் மஹாலின் உட்புறம்.

மீனாட்சியம்மன் கோயில்:

மீனாட்சியம்மன் கோயில்:

மீனாட்சியம்மன் கோயிலை நோக்கிச்செல்லும் பாதை.

பேருந்து

பேருந்து

1940களில் மதுரையில் ஓடிய பேருந்து!!

மதுரை !!

மதுரை !!

தெப்பக்குளம் மாரியம்மன் கோயில்.

மதுரை !!

மதுரை !!

2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ?

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் பழைய புகைப்படங்கள்

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்