Search
  • Follow NativePlanet
Share
» »அரியனூரில் இருக்கும் ஆயிரத்தெட்டு லிங்கம் - அள்ளித்தரும் யோகம்

அரியனூரில் இருக்கும் ஆயிரத்தெட்டு லிங்கம் - அள்ளித்தரும் யோகம்

அரியனூரில் உள்ள ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில், சேலத்தின் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றாகும். விநாயகா அறக்கட்டளையின் ஒரு துறையின் கீழ், இது செயல்பட்டு வருகின்றது. இது அமையப்பெற்றுள்ள குன்றில், ஆயிரத்தெட்டு

By Udhaya

அரியனூரில் உள்ள ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில், சேலத்தின் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றாகும். விநாயகா அறக்கட்டளையின் ஒரு துறையின் கீழ், இது செயல்பட்டு வருகின்றது. இது அமையப்பெற்றுள்ள குன்றில், ஆயிரத்தெட்டு லிங்கங்கள் விரவிக்கிடப்பதையும், முன் பகுதியில் புனிதப் பசுவான நந்தியின் சிலையையும் காணலாம். கோயிலின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான கணேசர் சிலை உள்ளது. இது அமைந்துள்ள இடம் கண்கவர் காட்சிகள் சூழ்ந்து அமைதியாகவும் ரம்மியமாகவும் விளங்குகிறது. இக்கோயிலின் மூலக்கடவுளான ஸ்ரீ உமையாம்பிகை சமேத ஸ்ரீ அருணாச்சல சுந்தரேஸ்வரரின் திருவுருவச்சிலை, இம்மலை குன்றின் மேல் நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை காண்பதற்காகவே, மலையேற்றத்தையும் பொருட்படுத்தாது ஏறிப் போய் தரிசித்து வரலாம்.

அயோத்தியாபட்டினம் கோதண்ட ராமர் கோயில்

அயோத்தியாபட்டினம் கோதண்ட ராமர் கோயில்

இக்கோயில் அயோத்தியாபட்டினத்தில் அமைந்துள்ளது. ராமரின் பாதத்தடங்கள் இங்குள்ளதால் இக்கோயிலுக்கு இந்த பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலின் மிகச் சிறந்த சிற்பக் கலைக்காக, இது மிகவும் போற்றப்படுகிறது. இங்குள்ள தூண்கள், தட்டினால் இசை எழுப்பக்கூடிய தனித்தன்மை வாய்ந்தவைகளாகும்.

திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இக்கோயிலில், ராமரின் கதையை எடுத்துக்கூறும் வகையில் அமைக்கப்பெற்ற மிகப்பெரும் சிலைகள் பல உள்ளன. இக்கோயிலுக்கு வந்தால், அது அயோத்திக்குச் சென்று வந்ததற்கு ஈடாகும்.

ராவணனைத் தோற்கடித்தபின், ராமன், சீதை, லஷ்மணன், ஹனுமான் மற்றும் அவர்தம் படைவீரர்கள் தங்கிச் சென்ற இடத்திலேயே இக்கோயில் எழுப்பபட்டுள்ளது என்று சான்றோர் கூறுகின்றனர்.

அயோத்திக்கு சரியான நேரத்தில் செல்லமுடியாததால் ராமனின் முடிசூட்டுவிழா இவ்விடத்திலேயே நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் ராமநவமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் இக்கோயிலில் வந்து வழிபட்டுச் சென்றால், அவர்தம் வாழ்வின் இன்னல்கள் அனைத்தும் மறைவதாக நம்பப்படுகிறது.

அருள்மிகு அழகிரிநாதர் கோயில்

அருள்மிகு அழகிரிநாதர் கோயில்

சேலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அழகிரிநாதர் கோயில், "கோட்டைப்பெருமாள் திருக்கோயில்" என்றும் வழங்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், இதன் சிற்பக்கலைக்காக பெரிதும் அறியப்படுகிறது. இக்கோயில், அழகிரி பெருமாள் மற்றும் மாரியம்மனுக்காக கட்டப்பட்ட கோயில்கள் சூழ அமைந்துள்ளது.

பல்வேறு திருவிழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. அவைகளில் முக்கியமானது, வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். இச்சமயத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வதற்கு அலை மோதுகின்றனர்.

பிரமோத்ஸவம், நவராத்திரி, பவித்ரோத்ஸவம, புரட்டாசி மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது திருவில்லிப்புத்தூரிலிருந்து, பிரத்யேகமாக தொடுக்கப்பட்ட பூமாலை தருவிக்கப்பட்டு, ஆண்டாள் அம்மைக்கு சூட்டப்படுகிறது. இவ்விழாக்காலங்களில், சேலம் நகருக்கு அருகில் உள்ள ஊர்களிலிருந்து பக்தகோடிகள், இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

 கோட்டை மாரியம்மன் கோயில்

கோட்டை மாரியம்மன் கோயில்

கோட்டை மாரியம்மன் கோயில், சேலம் நகரின் மத்தியில் அமைந்துள்ள பழம்பெரும் கோயிலாகும். இக்கோயில், திருமணிமுத்தாறு நதிக்கரையில் அமைந்துள்ளது. இது, சேலம் கோட்டையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோட்டை மாரியம்மனுக்காக கட்டப்பட்டதாகும். இத்தெய்வம் மழையை கொண்டுவருவதாகக் கூறப்படுவதால், மழை பொய்க்கும் சமயங்களில் பக்தர்கள் இத்தெய்வத்தை வழிபடுவர். இது, இப்பகுதியை ஆண்ட சேரமன்னர்களின் ஆட்சிக்காலத்தின் போது கட்டப்பட்ட கோயிலாகும். சேலம் கோட்டைக்கு மிக அருகில் இக்கோயில் கட்டப்பட்டு இருப்பதால், இது இருக்கும் இடம் கோட்டை என்றே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படும் கோட்டை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா, பலநூறு பக்தர்களை இக்கோயிலுக்கு வரவழைக்கின்றது.

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X