» »100 வருடங்களுக்கு முன்னும்! பின்னும்! கொல்கத்தாவின் உண்மை முகம்!

100 வருடங்களுக்கு முன்னும்! பின்னும்! கொல்கத்தாவின் உண்மை முகம்!

Written By: Udhaya

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் கொல்கத்தா நகரம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் நிரம்பி வழியும் நகரங்களில் ஒன்று. பழமையான இந்நகரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தலைநகரமாக இயங்கிய பெருமையை பெற்றுள்ளது. வெகு சமீப காலம் வரை கல்கத்தா என்று அறியப்பட்ட இந்நகரம் காலத்தில் உறைந்து போன பழமையின் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மக்களும், கலாச்சாரமும்! கொல்கத்தா மக்கள் பல காலமாக கலாரசனை மிகுந்தவர்களாகவும் பல்வேறு நிகழ்த்து கலை பாரம்பரியங்களை ஊக்குவிப்பவர்களாகவும், இலக்கிய படைப்புகளில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். நிகழ்காலத்துக்கும், நூறுவருடங்களுக்கு முன்பும் ஒருமுறை கொல்கத்தாவை ஒப்பிட்டோமேயானால், உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

கொல்கத்தா உயர்நீதிமன்றம் அப்போ

கொல்கத்தா உயர்நீதிமன்றம் அப்போ

1862ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த உயர்நீதிமன்றமே இந்தியாவின் மிகப்பழமையான நீதிமன்றமாகும். இது மேற்கு வங்காளம் மற்றும் யூனியன் பிரதேசமான அந்தமான் தீவுகளையும் உள்ளடக்கியது. இது ஒய்பேர்ஸ் தாக்குதலின்போது சிதிலமடைந்தது. பின்னர்தான் புதிதாக கட்டப்பட்டது. அதுதான் தற்போது கொல்கத்தாவில் இருப்பதாகும். பழைய கட்டிடமாக இருந்தாலும் இதன் கட்டிட அமைப்பு மிகவும் அழகாக இருக்கும். தூரத்திலிருந்து பார்க்கும்போது வேறு மாதிரியாகவும், அருகிலிருந்து பார்க்கும்போது வேறு மாதிரியாகவும் காட்சியளிக்கிறது.

Pc:Samual Bourne

கொல்கத்தா உயர்நீதிமன்றம் இப்போ

கொல்கத்தா உயர்நீதிமன்றம் இப்போ


150 வருடங்களைக் கடந்து புதுப்பிக்கப்பட்ட பொலிவுடன் சிறப்பாக காட்சியளிக்கிறது இந்த நீதிமன்றம். கொல்கத்தா வருபவர்கள் கட்டாயம் காணவேண்டியது இதன் கட்டிடக்கலையாகும். வெள்ளையும் காவியும் இணைந்த நிறத்தில் கிட்டத்தட்ட நம்ம ஊர் எழும்பூர் ரயில் நிலையத்தைப் போன்றுதான் காட்சிதரும். இது மாதிரியே சென்னையில் நீதிமன்றம் அமைந்துள்ளது. அது கொல்கத்தா நீதிமன்றத்துக்கு அடுத்து பழமையானதாகும்.

Pc:Sujay25

 கூக்ளி நதி அப்போ

கூக்ளி நதி அப்போ

ஊக்ளி அல்லது கூக்ளி நதி என்பது கங்கை ஆற்றின் ஒரு கிளை ஆறு ஆகும். இது மிகவும் புனிதமானதாக கொல்கத்தா மக்களால் பார்க்கப்படுகிறது. இது முர்சிதா பாத் எனும் இடத்தில் கங்கையிலிருந்து பிரிகிறது.

இந்த நதிக் கரைகளில் நிறைய பண்டிகைகள், விழாக்கள் கொண்டாடப்படும். மேலும் துர்க்கா பூஜை, தீபாவளி மற்றும் காளிபூஜா போன்ற பண்டிகைக்காலங்களில் தங்கள் வீடுகளை ஒளிமயமாக அலங்கரித்து பாரம்பரிய மரபுகளை அப்படியே பின்பற்றுவதில் கொல்கத்தாவாசிகள் தங்கள் தனித்துவத்தை உணர்கின்றனர் . தற்போது கொல்கத்தா நாடகக்குழுக்கள் நடத்தும் நாடக வடிவங்கள் மற்றும் பரீட்சார்த்த குறு நாடகங்கள் உலகாளவிய கவனிப்பை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Waddell

கூக்ளி நதி இப்போ

கூக்ளி நதி இப்போ

கூக்ளி நதிக்கரைகளில் தற்போது சில ஆக்கிரமிப்புகள் வந்துவிட்டாலும்கூட, நதியின் பெருமை அப்படியேத்தான் இருக்கிறது. கங்கை நதியின் கிளை நதி என்பதால் கங்கைக்கு உண்டான அனைத்து நற்குணங்களும் இந்த நதிக்கு இருப்பதாகவும் நம்புகின்றனர்.
இந்த பகுதிகளில் கை ரிக்ஷா வண்டிகள் இந்த நகரத்தின் வித்தியாசமான அம்சமாக சுற்றுலாப்பயணிகளை கவர்கிறது என்றாலும் இந்த விஷயத்தில் மனித உரிமை ஆர்வலர்களின் அதிருப்தியையும் இந்நகரம் சந்தித்து வருகிறது. தவிர பழமையான மஞ்சள நிற டாக்சிகள் மற்றும் நெருக்கடியான நகரப்பேருந்துகள் போன்ற போக்குவரத்து வசதிகளை இம்மாநகரம் கொண்டிருக்கிறது. வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் ‘காலேஜ் ஸ்ட்ரீட்' எனும் சாலைக்கு விஜயம் செய்வது அவசியம். இங்கு எல்லா புத்தகங்களும் கிடைக்கின்றன. பிரபல்யமான சில நூல்களை இங்கே பேரம் பேசி சலுகை விலையில் வாங்கிக்கொள்ளலாம்.

Pc: Biswarup Ganguly

அவுரா பாலம் அப்போ

அவுரா பாலம் அப்போ

கல்கொத்தாவின் முக்கிய அடையாளமான ஹௌரா பாலத்தை பார்த்துவிட்டு அதன் பின்னணியில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளாமல் யாருமே திரும்புவதில்லை. இந்த தொங்குபாலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1943ம் ஆண்டு கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை இது பல்வேறு பாலிவுட் ஹாலிவுட் சினிமாக்காட்சிகளிலும் இடம்பெற்று வந்துள்ளது. இந்த பாலம் அத்தனை வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கிறது பாருங்களேன்.

Pc: Monster eagle

அவுரா பாலம் இப்போ

அவுரா பாலம் இப்போ


இந்த அவுரா பாலம் இப்போது மிகவும் பிரபலமானது. இங்கு பல்வேறு வகையான உணவுப் பொருள்களும் கிடைக்கின்றன. மேலும், அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றுடன் பரிமாறப்படும் மீன் குழம்புகள் மற்றும் மீன் பண்டங்களுக்கு வங்காளிகள் பிரசித்தமாக அறியப்படுகின்றனர். உள்ளூர் உணவுவகைகளை குறைந்த விலைக்கு வழங்கும் பலவகை உணவகங்கள் மற்றும் கடைகள் இந்நகரம் முழுதும் விரவியிருக்கின்றன. கல்கத்தா விஜயத்தின்போது இங்குள்ள சிறு உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகளை சுவை பார்ப்பது மிக மிக அவசியம். பெங்காலி இனிப்புகள் நாடு முழுதுமே புகழ் பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்தேஷ், மிஷ்டி தாஹி (இனிப்புத்தயிர்) மற்றும் பிரசித்தமான ரசமலாய் போன்றவை இந்நகரத்தின் இனிப்பு வகைகளில் குறிப்பிடத்தக்கவை. வித்தியாசமான உணவு வகைகளை சுவைக்க விரும்பும் பட்சத்தில் சைனா டவுன் எனும் பகுதிக்கு சென்று வரலாம். இங்கு காரமான ‘சைனீஸ்' உணவு வகைகள் கிடைக்கின்றன. ‘மோமோ' என்பது இங்கு கிடைக்கும் உணவுப்பண்டங்களில் ஒரு முக்கியமான வகை.

Pc: dola.das85

 கல்கத்தா துறைமுகம் அப்போ

கல்கத்தா துறைமுகம் அப்போ


திரைப்படங்களில் கொல்கத்தா! கொல்கத்தா நகரம் சினிமாப்படங்களில் ஒரு முக்கியமான கதைக்களமாக அவ்வப்போது இடம் பெற்று வந்திருக்கிறது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் தயாரிப்புகளில் ஏதோ இடத்தில் கல்கத்தா இடம் பெறத் தவறுவதில்லை. கல்கத்தாவின் அடையாளங்களான ஹௌரா பாலம் மற்றும் டிராம் வண்டிகள் போன்ற காட்சிகள் பல படங்களில் காண்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதல் முதலாக சுரங்க ரயில் வசதியான ‘மெட்ரோ' கொல்கத்தாவில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. கொல்கத்தாவின் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், விக்டோரியா மெமோரியல் மற்றும் ஆசியாடிக் சொசைட்டி போன்றவற்றிற்கு உள்ளூர் சினிமா படங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.

Pc:Pandy

 கொல்கத்தா துறைமுகம் இப்போ

கொல்கத்தா துறைமுகம் இப்போ

கல்வி கடற்பயண துறைகளில் அளிக்கப்படும் படிப்புகளுக்கான கேந்திரமாக கொல்கத்தா நகரம் பிரசித்தி பெற்றுள்ளது. நாட்டிலேயே பழமையான கடற்பயண கல்வி மையமாக அறியப்படும் MERI கல்வி மையம் வெகு காலமாக கல்கத்தாவில் இருந்து வருகிறது. எனவே இந்தியக்கடல் மாலுமிகள் பலருக்கும் கொல்கத்தா நகரத்தின் மீது ஒரு பிரியம் உண்டு. விளையாட்டு கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்றவற்றில் இந்த நகரத்திற்கு உள்ள ஆர்வத்தை இங்குள்ள பல்வேறு ஸ்டேடியங்கள் மூலமாக உணர முடியும். இந்த ஸ்டேடியங்கள் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சி மைதானமாக பயன்படுத்தப்படுகின்றன. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் எனும் கொல்கத்தா நகரத்தின் கிரிக்கெட் குழு இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் அங்கம் வகிக்கிறது.

Pc: খাঁ শুভেন্দু

ஷாகித் மினார் அப்போ

ஷாகித் மினார் அப்போ

கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை அதிகாரியாக இருந்த டேவிட் என்பவரின் நினைவாக இந்த இடம் அமைக்கப்பட்டது. இதற்கு முதலில் அவர் பெயர்தான் வைக்கப்பட்டிருந்தது. இது 1828 ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

Pc: India Illustrated

 ஷாகித் மினார் இப்போ

ஷாகித் மினார் இப்போ


இரவு நேர பொழுதுபோக்கு கொல்கத்தா நகரத்தின் இரவு நேர பொழுதுபோக்கு அம்சங்கள் நாட்டிலேயே மிகச்சிறந்தவையாக பிரசித்தி பெற்றுள்ளன. இங்குள்ள நைட்கிளப்கள் சாதாரண நுழைவுக்கட்டணத்தை கொண்டுள்ளன. காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் மக்களுக்கான பாதுகாப்பை பேணுவதில் அக்கறை எடுத்துக்கொள்கின்றன. அது மட்டுமல்லாமல் அதிகாலை நேரத்திலும் நகரப்பகுதிகளை இணைக்கும் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகின்றன. கொல்கத்தா நகரம் எல்லாவகையான பயணிகளுக்கும் ஏற்ற அம்சங்களை கொண்டுள்ளது.

Pc:Arnab Dutta

அலிபூர் ஜூ அப்போ

அலிபூர் ஜூ அப்போ

ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்ட இந்த அலிபூர் ஜூ எனும் மிருகக்காட்சிசாலை கொல்கத்தா நகரத்தின் சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த பூங்காவின் அழகு புகைப்பட ஆர்வலர்க விரும்பக்கூடிய வகையில் உள்ளது. மாலை நேர குடும்ப பொழுதுபோக்கிற்கும் இது ஏற்ற இடமாகும். 250 ஆண்டுகள் கடந்து உயிர்வாழும் ஒரு ஆமையை பாதுகாப்பதற்காக சமீபத்தில் இந்த பூங்கா பாராட்டுகளை பெற்றுள்ளது.

Frank Finn

 அலிபூர் ஜூ இப்போ

அலிபூர் ஜூ இப்போ

அலிபூர் ஜூ தற்போதைய நிலையில் கொல்கத்தாவின் மிக முக்கியமான குளிர் கால சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. இங்கு வருடத்திற்கு 30 லட்சம் பேர் வருகை தருகின்றனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் வரை வருகை தருகின்றனர்.

Biswarup Ganguly -

Read more about: travel, kolkata