» »ஹைதராபாத்திலிருந்து கர்னூலுக்கு ஓரு அழகியச் சாலை பயணம் போகலாமா!

ஹைதராபாத்திலிருந்து கர்னூலுக்கு ஓரு அழகியச் சாலை பயணம் போகலாமா!

By: Balakarthik Balasubramanian

ஹைதராபாத்திலிருந்துக் கர்னூல் செல்வதற்கு ஏதுவான வழிகள் தான் எவை! வாங்கப் பார்க்கலாம், இந்தக் கட்டுரையின் மூலமாக! இந்தக் கர்னூல் பகுதியில் காணப்படும் அனைத்து இடங்களுமே நம் கண்களைக் குளிரூட்டி மனதினை இதமாக்கும் தன்மைக்கொண்டதாய் இருக்கிறது என்று தான் நாம் கூற வேண்டும்.

இந்தியாவின் மிக அசுத்தமான மூன்று சுற்றுலாத்தலங்கள்


ஆந்திரப் பிரதேஷத்தில் அமைந்திருக்கும் இந்தக் கர்னூல் நகரம், தென்னிந்திய வம்சங்களின் வரலாற்றினையும், பாரம்பரியத்தையும், அற்புதமானக் கட்டிடக் கலைகளின் தன்மையையும் தாங்கி சிறந்து விளங்குகிறது. இந்தப் பகுதி முந்தையக் காலத்தில் மன்னராட்சியாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் ரயாலசீமா நுழைவாயில் என்றும் இதுப் போற்றப்படுகிறது. இந்தப் பகுதி ஹைதராபாத்திலிருந்துக் கடப்பா, சித்தூர், மற்றும் ஆனந்தபூர் வழியாகவும் செல்கிறது.

கோவாவில் இப்படியும் கூத்தடிக்கலாம் தெரியுமா ?

வரலாற்றுப் பிரியர்களின் பார்வையில் வாயடைத்து நிற்கும் அளவுக்கு பிரசித்திப்பெற்ற இந்த இடத்தில் இருக்கும், பண்டைய வரலாற்றுத் தளங்களும், அரண்மனைகளும், ஆலயங்களும் என செல்லும் இடமெல்லாம் வரலாற்றின் பெருமைகளைத் தாங்கிக்கொண்டு நிற்கிறது. மேலும் இங்குக் காணப்படும், கட்டிடக் கலைகளும் மத முக்கியத்துவம் கொண்ட இடங்களும் அனைவராலும் பெருமையாகப் பேசும்படி விளங்குகிறது.

சென்னையின் இந்த ஷாப்பிங் மால்களுக்கெல்லாம் போயிருக்கீங்களா!

நாம் ஆரம்பிக்கும் புள்ளி:


ஹைதராபாத், தெலுங்கானா


செல்லப்போவது:


கர்னூல், ஆந்திரப் பிரதேசம்

இந்தப் பயணத்திற்கு நாம் திட்டமிடும் நாட்கள் எவ்வளவு:

நாம் வார இறுதியில் பயணம் செய்வது மிகச்சிறந்ததொரு முடிவாகும்.

உங்களுக்கு தெரியுமா கோடைய சமாளிக்க இந்தியாவில் இவ்ளோ இடம் இருக்காம்!

கர்னூலை அடைவது எப்படி:

கர்னூலை அடைவது எப்படி:

ஆகாய மார்க்கமாக:
இந்த வழியில் ஆகாய மார்க்கமாக எந்த ஒரு விமானங்களின் சேவையும் இப்பொழுது இல்லை, ஆனால் சிவில் விமான சேவை மையத்தின் முயற்சியால் ஓர்வக்கால் பகுதியில் ஒரு விமான நிலையம் அமைக்க திட்டமிட்டிருக்கின்றனர். இந்தப் பகுதி கர்னூல் நகரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. மேலும் இந்த விமான நிலையம் வரும் 2019 ஆம் ஆண்டுத் தயாராகிவிடும் எனவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

தண்டவாள மார்க்கமாக:
கர்னூல் மாவட்டத்தில் சுமார் 4 இரயில் நிலையங்கள் காணப்படுகிறது. ஆகாய மார்க்க கவலைகளைக் கறைக்கும் நோக்கத்துடன் காணும் இந்த நிலையங்கள், கர்னூல் நகரத்திலும், அதோனியிலும், நந்தியாலாவிலும், தோன் சந்திப்பிலும் அமைந்துப் பயணியர்களின் போக்குவரத்துச் சிரமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. மேலும் இந்த இரயில் நிலையங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைத்தும் தன் சேவையைத் தொடர்கிறது. அதனால், ஹைதராபாத்திலிருந்துக் கர்னூலுக்கு இரயில்கள் வந்த வண்ணமாகவும் போன வண்ணமாகவும் இருந்துக்கொண்டே இருக்கிறது என்று தான் நாம் கூறவேண்டும்.

சாலை மார்க்கமாக:
அரசுப்பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் ஹைதராபாத்திலிருந்துக் கர்னூலுக்கும், கர்னூல் பகுதியிலிருந்து ஹைதராபாத்துக்கும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், படகுகளும், கார் சவாரிகளும் ஹைதராபாத்திலிருந்து கர்னூல் பகுதிக்கு மிக மலிவு விலையில் இயக்கப்பட்டு மக்களின் குறைகளைத் தீர்க்கிறது. ஒருவேளை நாம் சாலையின் வழியாகப் புறப்பட்டு ஹைதராபாத்திலிருந்துக் கர்னூல் மாவட்டத்தை அடைவோமானால், தோராயமாக 240 கிலோமீட்டர் பயணம் நாம் செல்ல வேண்டியிருக்கிறது.

இந்த இடத்தினை நாம் காண சரியானதொருக் காலநிலை:
அக்டோபரிலிருந்து மார்ச் வரை இந்தக் கர்னூல் பகுதியினை நம்மால் எந்த ஒரு சிரமமுமின்றிக் காணமுடிகிறது.

kurkurnoobp.appr.gov.in

வானிலைப் பற்றிய தகவல்:

வானிலைப் பற்றிய தகவல்:


கோடைக்காலம்:
கதிரவனின் வெப்பம் 40 டிகிரி செல்ஸியஸ் நம்மைச் சுட, இந்தப் பகுதி மிகவும் கடும் வெப்பத்துடனும், ஈரப்பதத்துடனும் காணப்படுகிறது.
மழைக்காலம்:
கர்னூல் பகுதியில் ஜீலை முதல் செப்டம்பர் வரை மாரியின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். மழைப்பெய்து ஓய்ந்துப் போக வெப்பத்தின் தன்மைக் குறைந்து இந்தக் கர்னூல் பகுதிக் காண்பதற்கு அழகானக் காட்சிகளைக் கண்களுக்கு இதமாகப் படைத்துக்கொண்டிருக்கிறது.
குளிர்க்காலம்:
இந்தக் குளிர்க் காலத்தில் நம் மனம் இதமாகத் துடிக்க, வெப்பமும் மிதமானதொரு அளவிலான 20லிருந்து 30 டிகிரி செல்ஸியஸ் வரையே இருக்கிறது. இந்தக் காலக்கட்டங்களில் எந்த ஒரு சிரமமுன்றி நம்மால் இந்தக் கர்னூல் பகுதியின் அழகினைக் கண்களாலும், மனதாலும் ரசிக்க முடிகிறது.
இந்தப் பயணத்தின் நோக்கமாக நாம் கொண்டு செல்ல வேண்டியப் பொருள்கள்:
காற்றுப் புகமுடியாத அளவிற்கு பையின் கொள் அளவு முழுவதும் பொருட்களை வைத்துத் திணிக்காமல், தேவைக்கேற்ப குறைந்தப் பொருட்களை எடுத்து செல்வது, நம் சுமையைக் குறைக்கிறது. நமக்குத் தேவையான அத்தியவாசியப் பொருளான, ஆடைகள், அலைப்பேசி (போன்), கிரெடிட் கார்ட், பணம் போன்றப் பாதுகாப்பானவைகள், புகைப்படக்கருவி, நம்முடைய எலக்ட்ரானிக் பொருட்களின் சேமிப்புத் திறனைக் கூட்டக்கூடிய பொருட்கள் என இவை மட்டுமே நம் பயணத்துக்குத் தேவைப்பட, தேவையற்ற கன ரகப் பொருள்களை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும். அதேபோல் நாம் சுற்றிப்பார்க்க உதவும் அந்த நகரத்தினைப் பற்றிய வரைப்படம், தண்ணீர் பாட்டில்கள், மற்றும் சில சிற்றுண்டிகள் என நமக்கு அவசியமானவற்றை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது.

பயணத்திற்கு உதவும் சில வழித்தடங்கள்

பயணத்திற்கு உதவும் சில வழித்தடங்கள்

நாம் பயணத்திற்கு உதவும் சில வழித்தடங்கள் பற்றினக் குறிப்புகளை இப்பொழுது நாம் பார்க்கலாம்:
வழித்தடம் 1:
ஹைதராபாத் - ஹாசன் நகர் - ஷாம்ஷட்பாத் - கன்டிக்குடா - திம்மப்பூர் - மஹாபுப்னகர் - ரைச்சூர் - மந்திராலயம் - கர்னூல் - ஆலம்பூர்
நெடுஞ்சாலை வழி:
தேசிய நெடுஞ்சாலை 44 இன் வழியாகச் செல்லவேண்டும்.
வழித்தடம் 2:
ஹைதராபாத் - சைதாபாத் - ரங்காரெட்டி - கட்தால் - மஹாபுப்னகர் - திருமால்கிரி - முன்னானூர் - மஹாபுப்னகர் - கர்னூல் - ஸ்ரீசைலம்
நெடுஞ்சாலை வழி:
தேசிய நெடுஞ்சாலை 765 இன் வழியாக
மற்றும்
மாநில நெடுஞ்சாலை 5 இன் வழியாக
நாம் முதல் வழியினைத் தேர்ந்தெடுத்து நம் பயணத்தினை தொடருவோமாயின், தோராயமாக 8 மணி நேரம் ஆகிறது. மேலும் இங்கிருக்கும் புனித நகரமான மந்திராலயம் வழியாக செல்ல, சுற்றுலா வசதிக்கு ஏற்ப பல இடங்களை நம்மால் ரசிக்க முடிகிறது. கர்னூல் அருங்காட்சியகம், கோட்டை, அதன் பக்கத்தில் அமைந்திருக்கும் ஷீரடி சாய்பாபா, பால சாய்பாபா ஆலயங்கள், ஆலம்பூரில் உள்ள நவப்பிரம்ம ஆலயங்கள், தனித்துவம் வாய்ந்தப் பெருமைமிக்க சங்கமேஷ்வர ஆலயம் எனப் பார்ப்பதற்க்கு ஏதுவான ஸ்தலங்கள் பக்தியை நோக்கி நம்மைப் பயணிக்க வைக்கிறது.

wikipedia

நல்லமலா மலைப்பகுதி

நல்லமலா மலைப்பகுதி

ஒருவேளை நாம் செல்லப்போகும் ஒரு வழி இரண்டாம் வழி என்றால், நம் பயணத்திற்கு ஏதுவாக நாம் செலவிடவேண்டிய நேரமும் மாறுபடுகிறது. இந்த வழியில் நாம் பயணம் செய்ய, ஒன்றரை மணி நேரம் அதிகம் ஆக, தோராயமாக ஒன்பதரை மணி நேரம் ஆகிறது. இந்த வழி, நம்மைப் புனித நகரத்தின் வழியாக அழைத்துச் செல்ல, நாம் நல்லமலா மலைப்பகுதியில் இருக்கும் ஸ்ரீசைலமை அடைகிறோம். இந்த நகரம் பிரசித்திப்பெற்ற யாத்திரைத் தளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. மேலும் இந்த வழியின் வாயிலாக நாம் செல்ல நல்லமலா வனத்தினையும் நம்மால் காணமுடிகிறது. அதுமட்டுமல்லாமல் கர்னூல் கோட்டை, அருங்காட்சியகம், ஷீரடி சாய்பாபா, பால சாய்பாபா ஆலயங்கள், ஒரவக்காலு பாறைப் பகுதியில் அமைந்திருக்கும் தோட்டம் ஆகியவை நம் கண்களிற்கு வண்ணமயமானக் காட்சிகளை படைக்கிறது.

aptdc.gov.in

புனித மந்திராலய நகரம்

புனித மந்திராலய நகரம்

நாம் செல்லும் வழி, முதல் வழி எனில் இந்தத் தூரத்தினை கடக்க நமக்கு சுமார் 385 கிலோமீட்டர் ஆகிறது. நாம் பயணத்தின் பாதைகளை வேகமாக கடந்து வர இந்தப் புனித மந்திராலய நகரத்தின் முன்புக் கண்டிப்பாக நிறுத்தி ஸ்ரீ குரு ராகவேந்திர ஸ்வாமி ஆலயத்தினை தரிசித்துவிட்டுப் பின்புச் செல்வது மிகவும் இனிமையானதொரு உணர்வினை நமக்கு அளிக்கிறது.


இங்குக் காணப்படும் விரிந்தவனா, பக்த பிரகலாதனின் அவதாரமாக நம்பப்பட்ட ஒருக் குருவால் கட்டப்பட்டது என்றும் ஒருக் கதை உண்டு. பக்த பிரகலாதா, விஷ்னுவின் தீவிர பக்தனாவார். அந்தக் குரு, இந்த விரிந்தவனாவில் தங்கியதாகவும் புராணம் கூறுகிறது. ஆம், அவர் சுமார் 361 வருடங்கள் இங்குத் தங்கியிருந்ததாகவும் புராணத்தின் மூலம் நமக்குத் தெரிகிறது.


மந்திராலயத்திலிருந்துப் புறப்படும் நாம் 2 மணி நேரப் பயணத்தின் வாயிலாக 94 கிலோமீட்டர் தொலைவில் வண்டியை நிறுத்தி அங்கிருக்கும் கர்னூல் தொல்பொருள் அருங்காட்சியகத்தினைக் கண்டு நெகிழ்ந்து போகிறோம். தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் இந்தக் கர்னூல் பகுதியில் பல அற்புதங்கள் நிகழ்ந்தது. இந்த ஆராய்ச்சியின் போது உடைந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆலய சிற்பங்களும், இளவரசர்கள் பயன்படுத்திய ஆயுதங்களும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

aptdc.gov.in

கொண்டா ரெட்டி புருஜூ

கொண்டா ரெட்டி புருஜூ

மேலும், இதன் அருகேப் புகழ்பெற்ற கர்னூல் கோட்டையும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பிரசித்திப்பெற்ற ஷீரடி சாய்பாபாவும், பால சாய்பாபா ஆலயங்களும் இங்கு அமை்து நமக்குப் பக்தியினைப் பிரயாணத்தின் மூலமாகத் தந்து மனதினை ஆள்கிறது. இந்தக் கோட்டை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் வகையில் அமைந்துக் காணப்பட, "கொண்டா ரெட்டி புருஜூ" என்றும் இதனை அழைப்பார்கள். இந்தக் கோட்டையினை விஜய நகரப் பேரரசரான அச்யூத்த தேவராயூலுக் கட்டியதாகவும் வரலாறுக் கூறுகிறது.


கொண்டா ரெட்டி புருஜூவின் பெருமையை உணர்த்திக்கொண்டிருக்கும் கட்டிடக்கலைகளின் அழகு, வரலாற்றுச் சுவடுகளாக இங்குக் காணப்படும் ஒரு பிரசித்திப்பெற்ற ஒன்றாகவும் திகழ்கிறது. எர்ரா புருஜு எனப்படும் இடிப்பாடுகளில் இருந்துக் காத்துக்கொள்ளும் ஒரு இடமும் அதன் பெருமையை தாங்கிக்கொண்டு இங்கிருக்கிறது. மேலும் இங்குக் காணப்படும் வேதங்களும், சிற்பங்களும் நம்மை அழகால் கவர்ந்து மனதினை ஆள்கிறது. இங்குள்ள இரண்டுப் பழமைவாய்ந்த ஆலயங்கள்., எல்லம்மா தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டவையாகும்., கோட்டையின் பாதப்பகுதியில் காணும் இந்த ஆலயங்கள் நம்மை மனதோடு ஒன்றி அமைதியடைய செய்கிறது.
இங்கு நட்சத்திர அமைப்புடன் அழகாகக் காட்சியளிக்கும் ஷீரடி சாய்பாபா ஆலயம் மிகவும் பிரசித்திப்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாகும். மேலும் பரப்பளவின்படிப் பெரியக் கோயிலாகவும் திகழும் இந்த ஆலயம் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்து நம் மனதினைச் செல்லும் இடமெல்லாம் அமைதிப்படுத்தியப் படி இருக்கிறது. அதேப்போல், இதற்கு அருகில் காணப்படும் பாலச் சாய் பாபா ஆலயமும் மிகவும் பிரசித்திப்பெற்ற ஒன்றாகவும் விளங்குகிறது.

aptdc.gov.in

சாய் ஆலயம்:

சாய் ஆலயம்:


புராண நகரமாக விளங்கும் ஆலம்பூர், பால சாய்பாபா ஆலயத்திலிருந்து 23.3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துக் காட்சியினை நமக்கு வழங்கிகொண்டிருக்கிறது. இந்த ஆலயம், நல்லமலா மலைப்பகுதியின் அடிவாரத்தில் காணப்படுகிறது. மேலும் இந்த இடம், துங்கபத்ரா மற்றும் கிருஷ்ன நதிகள் சங்கமிக்கும் ஒரு இடத்திலும் அமைந்து நம்மை வெகுவாகக் கவர்கிறது. ஆலம்பூரில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், ஒன்பதுக் கோயில்களை சிவனுக்காக அர்பணிக்கப்பட்டுப் பெருமையுடன் விளங்குகிறது. இதனை "நவ பிரம்மேஷ்வர தீர்த்தம்" என்றும் புகழ்ந்து கூறுவார்கள். இங்குக் காணப்படும் ஜோகுலாம்பா ஆலயம், சக்திப் பீடங்களுள் ஒன்றாக அதன் புகழை ஓங்கி நிற்கிறது.

aptdc.gov.in

சங்கமேஷ்வர ஆலயம்

சங்கமேஷ்வர ஆலயம்

இங்கிருந்து நாம் 2 கிலோமீட்டர் தொலைவில் செல்ல, நம்மால் தனித்தன்மைக் கொண்டு விளங்கும் சங்கமேஷ்வர ஆலயத்தினைக் காணமுடிகிறது. இந்த ஆலயம், ஏழு நதிகள் சங்கமிக்கும் ஒரு இடத்தில் அமைந்துக் காட்சிகளைப் பக்தியுடன் நமக்குத் தர, நம் மனம் அமைதிக்கொண்ட இன்ப உணர்வினை அடைகிறது. வனச்சிறை வாசம் சென்றப் பாண்டவர்கள், இங்குச் சிவப்பெருமானுக்கு லிங்கம் அமைத்து குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) செய்ததாகவும் வரலாறுக் கூறுகிறது.

இந்த ஆலயம், ஸ்ரீசைலம் அணையைக் கட்டுவதற்காக நீருக்குள் மூழ்க்கடிக்கப்பட்டு, பின் 2003 ஆம் ஆண்டு, மீண்டும் இந்த ஆலயம் தலைத்தூக்கி தண்ணீரை விட்டு வெளியே வந்தது. பக்தர்கள்/பக்தைகளுக்காக இந்த ஆலயம் கோடைக்காலத்தின் நீர் நிலைகள் வற்றும் நேரத்தில், 40 அல்லது 50 நாட்கள் திறக்கப்பட, ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டுச்செல்ல, அந்த மாதத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று தான் கூறவேண்டும்.

Read more about: travel
Please Wait while comments are loading...