» »கன்னியாகுமரியில் ஒரு அடடே நீர்வீழ்ச்சி சுற்றுலா வாங்க போய்ட்டு வருவோம்

கன்னியாகுமரியில் ஒரு அடடே நீர்வீழ்ச்சி சுற்றுலா வாங்க போய்ட்டு வருவோம்

Written By: Udhaya

கோடை வெயில் வாட்டி வதைக்க உடைகளை களைந்து எங்கேயாவது நீரில் மூழ்கியபடியே வாழ வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள். உடனே சென்று விடுகிறோம் என்கிறார்கள் பலர்.

இப்பதான் ஏப்ரலே வந்துருக்கு இனி மே நம்மள வச்சி செய்யப்போகுது என்கிறீர்களா இந்த அக்னி வெயிலிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்க ஒரு சூப்பர் டூர் போய்ட்டு வரலாமா

தமிழகத்திலேயே குறைந்த வெயில் உள்ள மாவட்டங்கள் ல ஒன்னு நம்ம குமரி மாவட்டம். அங்க ஒரு சுற்றுலாவ போட்டா சிறப்பா போய்ட்டு வந்துடலாம்ல... அட உங்க குழந்தைங்களுக்கும் பள்ளி விடுமுறை தானுங்களே... ஓகே னு மனசு சொல்லுதா அப்ரம் என்ன குறைந்த செலவில் குமரி சுற்றுலாவுக்கு நீங்க தயாரா நாங்களும் தயார் வாங்க வண்டிய கெளப்புவோம்.

கோடையில் நண்பர்களுடன் குதூகலிக்க ஏற்ற 75 இடங்கள் இவைதான்

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை பேருந்து, ரயில் வசதிகள் உள்ளன. குமரிக்கு நீங்கள் விமானத்தில் பயணிக்க விரும்பினால் அருகிலுள்ள திருவனந்தபுரம் விமானநிலையத்துக்கு வரவேண்டும். சரி முழுமையாக படிக்கலாம் வாங்க...

அடுத்த கட்டுரை:

முக்தி தரும் அந்த ஏழு நகரங்கள் பற்றிய சுவாரசியமான விசயங்களை கேள்விபட்டிருக்கிறீர்களா?

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் இருந்தாலும், இந்த கோடையை சமாளிக்கும் வகையில் வெயில் இல்லாத அல்லது குறைவான இடத்துக்கு மட்டும் முன்னுரிமை அளித்து இந்த டிரிப்பை தொடங்கலாம்.

Ravivg5

மாவட்டங்களும் குமரிமுனையும்

மாவட்டங்களும் குமரிமுனையும்

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரிலிருந்தும் கன்னியாகுமரிக்கு பேருந்து உள்ளது. எப்படியானாலும் முந்தையநாள் இரவுக்குள் குமரியை வந்தடைந்துவிடுங்கள்.

சென்னையிலிருந்து கன்னியாகுமரி சராசரியாக 12 மணி நேரம் ஆகும். திருச்சியிலிருந்து 6 மணி நேரத்திலும், மதுரையிலிருந்து 3 மணி நேரத்திலும் குமரியை அடையலாம்.

பயணக் கட்டணம்( தோராயமாக)

பயணக் கட்டணம்( தோராயமாக)

சென்னையிலிருந்து வரும் சராசரியாக நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 4 * 600 (அதிகபட்சம்) = 2400 ரூபாய் பேருந்து கட்டணம் ஆகும்.

அல்லது சொந்த வாகனத்தில் வந்தால் 10 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் வந்தடையலாம். ஆனா சுங்க வரி கிட்டத்தட்ட 7, 8 இடங்களில் செலுத்தவேண்டியிருக்கும்.

ஹோட்டல்கள்

ஹோட்டல்கள்

குமரி மாவட்டத்தில் குறைந்த விலை விடுதிகள், சராசரியான விடுதிகள், நட்சத்திர விடுதிகள் என நிறைய உள்ளன. பெரும்பாலும் தலைநகர் நாகர்கோயிலில் நல்ல தரமான குறைந்த விலை விடுதிகள் கிடைக்கும். அல்லது நீங்கள் கன்னியாகுமரியிலேயே விடுதி யைகண்டறியலாம்.

எளிய முறையில் குறைந்த செலவில் விடுதி கண்டறிய /hotels/

விடுதி கட்டணம்

விடுதி கட்டணம்

குறைந்த பட்சம் 800ரூ பாயிலிருந்து அதிகபட்சம் 5000 ரூ வரை அதற்கேற்ற தரத்துடன் பல்வேறு ஹோட்டல்கள் உள்ளன.

சராசரியாக 4 பேர் உள்ள குடும்பத்துக்கு 1000 ரூபாய் விடுதி தாராளமாக போதும்.

காலை சிற்றுண்டி

காலை சிற்றுண்டி

காலை 7 மணிக்கெல்லாம் தயாராகி விடுங்கள். பின்பு காலை சிற்றுண்டியை அருகிலுள்ள ஹோட்டல்களில் முடிக்கலாம். 200 ரூபாய்க்குள் நல்ல தரமான உணவு கிடைக்கும்.

கன்னியாகுமரியில் உணவு விலை ஹோட்டல்களைப் பொறுத்து மாறுபடும். அதே நேரத்தில் நீங்கள் கொடுக்கும் காசுக்கு நல்ல தரமான சுவையான உணவு கேரண்டி.

கன்னியாகுமரி கடலுக்குள் ஒரு வாக்

கன்னியாகுமரி கடலுக்குள் ஒரு வாக்

கடலுக்குள் நடந்து செல்கிறோமா அடடே என வாயைப்பிளக்கிறீர்களா ஆம் PIER எனும் அமைப்பு சுனாமிக்கு பிறகு கன்னியாகுமரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. .

இங்கு செல்வதற்கு பெரிதாக அனுமதி என்று எதும் தேவையில்லை. உங்கள் குடும்பத்துடன் கடலை ரசிக்கலாம்.

காலை 8 லிருந்து அழகாக வீசும் காற்றில் கடலை சுற்றிவிட்டு, ஷாப்பிங் சென்றுவிட்டு, மதிய வெயில் வருவதற்குள் சென்றுவிடலாம்

புறப்படுவோம் காளிகேசம் நீர்வீழ்ச்சிக்கு

புறப்படுவோம் காளிகேசம் நீர்வீழ்ச்சிக்கு

மணி 11 ஆகிவிட்டதால் தலையில் சூரியனின் வெப்பம் இறங்கும் அளவுக்கு வெயில் போடு போடும். தாமதிக்காமல் நீர்வீழ்ச்சி பயணத்தை தொடர்வோம்.

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்த காளிகேசம் நல்ல பசுமையான இடமாகும். இங்குள்ள நீர்வீழ்ச்சி உங்களை கோடை வெப்பத்திலிருந்து ஆறுதல் அளிக்கும்.

கன்னியாகுமரியிலிருந்து சொந்த வாகனத்தில்

கன்னியாகுமரியிலிருந்து சொந்த வாகனத்தில்


நீங்கள் சொந்த வாகனத்தில் வந்திருந்தால், கன்னியாகுமரி, நாகர்கோயில், பூதப்பாண்டி, தரிசனங்கோடு வழியாக கீரிப்பாறையை அடையலாம்.

இந்த வழி அநேகமாக போக்குவரத்து நெரிசலாக இருக்கும் பட்சத்தில், புத்தளம், பறக்கை வழியாக நாகர்கோயிலை அடைந்து மேற்கொண்டு பயணிக்கலாம்.

google earth

பொதுப்போக்குவரத்து என்றால்

பொதுப்போக்குவரத்து என்றால்

கன்னியாகுமரி - நாகர்கோயில் வரை பொதுப் பேருந்தில் அல்லது ரயிலில் பயணிக்கலாம். ஆனால் நாகர்கோயில் - கீரிப்பாறை பயண வசதிகள் மிகக் குறைவு என்பதால் வாடகைக்கு வண்டி எடுத்து செல்வது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.

அதிபட்சம் பேருந்து கட்டணம் 100 ரூ க்குள் முடியும். வாடகைக்கு கிடைக்கும் வண்டிகள் ஏற, இறங்க 1000 முதல் 2000 வரை கேட்கலாம். அது நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாகனத்தைப் பொறுத்தது.

 500 வருட பழமையான மரம்

500 வருட பழமையான மரம்

கீரிப்பாறை காட்டில் 500 வயதான மரம் ஒன்று இருக்கிறது. இதை சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்து செல்கின்றனர்.

இந்த மரத்திற்கு தொல்காப்பியர் என்று பெயர் . முற்காலத்தில் வாழ்ந்த தொல்காப்பியர் பெயரே இந்த மரத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

infocaster

https://en.wikipedia.org/wiki/Kanyakumari_district#/media/File:Keeriparai_-_Forest_Stream.JPG

காளிகேசம் நீர்வீழ்ச்சி

காளிகேசம் நீர்வீழ்ச்சி

மிக அருமையான சூழலை கொண்ட நீர்வீழ்ச்சியில் நீங்கள் ஆடிப்பாடி மகிழலாம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வனத்துறையிடம் உரிய அனுமதி வாங்கிவிட்டு செல்வது அறிவுரைக்குரியது.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை

திற்பரப்பு

திற்பரப்பு

அங்கிருந்து 1 மணி நேர பயண தூரத்தில் மற்றொரு நீர்வீழ்ச்சி திற்பரப்பு அமைந்துள்ளது.

கோதையாற்றிலிருந்து வரும் நீரானது திற்பரப்பு அருவியாக கொட்டுகிறது.

குளித்து மகிழ்ந்து ஆடிப்பாடி கொண்டாட இன்றைய மாலைப் பொழுது சாய்ந்து இரவை எட்டும் நேரம் வந்துவிடும். தாமதிக்காமல் கன்னியாகுமரியில் நீங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு புறப்படுங்கள்.

இன்னும் பாக்கியிருக்கிறது. நாளை மேலும் சில நீர்வீழ்ச்சிகளுக்கு செல்வோம் தயாராகியிருங்கள்.

Infocaster

Read more about: travel, water falls
Please Wait while comments are loading...