» »ஜென்ம நட்சத்திரம்... இன்று நீங்க போக வேண்டிய கோவில் இதுதான்!

ஜென்ம நட்சத்திரம்... இன்று நீங்க போக வேண்டிய கோவில் இதுதான்!

Written By: Udhaya

ஜென்ம நட்சத்திரப்படி ஒவ்வொரு நாளும் செல்ல வேண்டிய கோவில்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றி ஆன்மீக ஜோதிடம் கூறுகிறது.

ஜோதிடம் கூறும் நட்சத்திர பலன்களின்படி, இந்த கோவில்களுக்கு சென்று வருவதால் அன்றைய நாள் மகிழ்ச்சியோடு அமைவதோடு வருங்காலம் சிறப்பாக அமையவும் வழி ஏற்படும்.

இன்று நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் காலபைரவரும், கிருஷ்ணரும்.

கிருஷ்ணருக்கு உகந்த நீல நிறம் இன்றைய தினத்துக்கு ஏற்றதாக இருக்கும்.

இன்றையதினத்தில் நீங்கள் செல்லவேண்டிய கோவில் பற்றி காணலாம்.

காலபைரவர் திருக்கோயில், நாகப்பட்டினம்

காலபைரவர் திருக்கோயில், நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகட்டூர் எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த பைரவர் கோவில் இன்று செல்ல உகந்த தலமாகும்.

PC: Rabs003

தல சிறப்பு

தல சிறப்பு


இங்கு பைரவர் மூலவராக அருள் பாலிக்கிறார் என்பது இக்கோவிலின் தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.

PC: Redtigerxyz

 ஏன் இந்த கோவிலுக்கு செல்லவேண்டும்

ஏன் இந்த கோவிலுக்கு செல்லவேண்டும்

தமிழகத்தில் மூலவராக பைரவரைக் கொண்ட ஒரே கோவில் இதுதான். ஜென்ம நட்சத்திரப்படி இன்றைய தினத்தில் சென்று இறைவனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

PC: Arulraja

தல வரலாறு

தல வரலாறு

இறைவனை நோக்கி தவம் செய்த தாரகாசூரன் எனும் அரக்கன், தனக்கு சாவில்லா வாழ்வை அருள வேண்டினான். இறைவனோ அவன் முன் தோன்றி, ஏதேனும் ஒரு பொருளால் இறப்பை வேண்டிக்கொள் அதைத் தவிர வேறு எதுவும் உன்னை அழிக்கமுடியாது என்று வரம் கொடுத்தார்.

ஒரு பெண்ணால் தன்னை அழிக்கமுடியாது என எண்ணிய அரக்கன் ஒரு பெண் மட்டுமே என்னை அழிக்க வேண்டும் என வரம் வாங்கினான்.

அரக்கனின் அட்டூழியங்கள் தொடரவே, பார்வதி தேவி, சிவனின் ஆலகால விஷத்தை காளி எனும் பெண் வடிவில் அனுப்பி அவனை அழித்தார் என்கிறது தல வரலாறு.

PC: wiki

என்னென்ன பிரார்த்திக்கலாம்

என்னென்ன பிரார்த்திக்கலாம்

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் தனக்கு திருமணத் தடை இருந்ததாகவும், இங்கு வந்த பிறகு தடை நீங்கி திருமணம் நடைபெற்றதாகவும் கூறுகின்றனர்.

வேறு சிலரோ, குழந்தை வரும் வேண்டியும், கல்விக்காகவும் இந்த தெய்வத்தை வேண்டி செல்கின்றனர்.

PC: Wiki'

பிற தெய்வங்கள்

பிற தெய்வங்கள்

காசி விஸ்வநாதர், விசாலாட்சி,கணபதி,வள்ளி,தெய்வயானை, முருகர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.


PC: Yogakalyanam

பைரவியுடன் பைரவா

பைரவியுடன் பைரவா

பைரவியுடன் பைரவா

PC: wiki

ருத்ரதாண்டவ பைரவா

ருத்ரதாண்டவ பைரவா

ருத்ரதாண்டவ பைரவா

PC: wiki

Read more about: travel, temple, பயணம்
Please Wait while comments are loading...