» »தமிழகத்துக்கு ஒரு நியாயம் கர்நாடகத்துக்கு ஒரு நியாயம். மகதாயி பிரச்ன என்ன தெரியுமா?

தமிழகத்துக்கு ஒரு நியாயம் கர்நாடகத்துக்கு ஒரு நியாயம். மகதாயி பிரச்ன என்ன தெரியுமா?

Posted By: Udhaya

மகதாயி என கர்நாடக மக்களாலும், மான்டோவி என கோவா மக்களாலும் அழைக்கப்படும் வெறும் 87 கி.மீ நதிதான் இன்று இரு மாநிலங்கள் நடுவே நீரூபூத்த நெருப்பாக யுத்தம் நிலவ காரணம். ஏற்கனவே தமிழகத்துடன் காவிரியைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்று பிடிவாதமாக இருக்கும் கர்நாடகம், தற்போது கோவாவுடனும் மல்லுக்கட்டுகிறது.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் இந்த நதி, 35 கி.மீ தூரம் அம்மாநிலத்திலும், எஞ்சிய 52 கி.மீ தூரம், கோவாவிலும் பாய்கிறது. இதன்பிறகு அரபிக்கடலில் கலக்கிறது. கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா எல்லைப்புற பகுதிகளிலுள்ள மக்கள் இந்த நதிநியை குடிநீர் தேவைக்காக நம்பிக்கொண்டுள்ளனர்.

இதில் கர்நாடக அரசு 7.56 டிஎம்சி அடி தண்ணீரை குடிநீர் தேவைக்காக கேட்கிறது. ஆனால் கோவா அரசு உச்சநீதிமன்றத்தை அணுக, அது கர்நாடக கோரிக்கையை ஏற்க மறுத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அப்போது வட கர்நாடகாவில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. காவிரி விவகாரத்திலும், நடுவர்மன்றம் அமைக்கப்பட்டு அது கர்நாடகாவிற்கு எதிராக இடைக்கால தீர்ப்பு வழங்கியபோது 1991ல் பெரும் கலவரம் வெடித்தது. பல தமிழர்கள் பலியானார்கள் என்பது நினைவில் இருக்கலாம். இப்போது நாம் பார்க்கவிருப்பது, இந்த மகதாயி நதி விவகாரத்தில் ஏற்படும், பாதிப்புகளும், பாதிக்கப்படும் சுற்றுலாத் தளங்களும்.

கோவாவின் எதிர்ப்பிற்கு காரணம்

கோவாவின் எதிர்ப்பிற்கு காரணம்


கர்நாடக அரசு நதிநீர் திட்டத்தை கையில் எடுத்தால், சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சொல்கிறது கோவா. 700 ஹெக்டேர் பரப்பிலான வனம் நீரில் மூழ்கும், 60,000 மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும் என்கிறது கோவா. இந்த வழித்தடத்தில் எண்ணற்ற இயற்கைப் பகுதிகள் பாதிக்கப்படும் என்றும், இதற்கு அருகிலுள்ள சுற்றுலாப் பகுதிகளும் பாதிக்கப்படுவதாகவும் தெரிகிறது. இந்த பகுதியில் இருக்கும் இயற்கை அழகுகளைப் பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

Amol.Gaitonde

மகதாயி ஓடும் பாதை

மகதாயி ஓடும் பாதை

கர்நாடகாவின் மகதாயி நதிதான் கோவாவில் மாண்டோவி என்று அழைக்கப்படுகிறது.

இது கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தில் உருவாகி, கோவாவின் பனாஜி அருகே அரபிக் கடலில் கலக்கிறது.

இந்த ஆறு மற்ற ஆறுகளைப் போலல்லாம் இதன் வழியில் மிக அழகான பல இடங்களை சுற்றுலா பிரதேசமாக உருவாக்கி வைத்துள்ளது. அவற்றைக்குறித்து இப்போது காண்போம்.

கர்நாடகத்தில் உருவாகும் மகதாயி

கர்நாடகத்தில் உருவாகும் மகதாயி


மகதாயி என்பது கர்நாடகத்தில் தாயைப் போல் பாவிக்கிறார்கள். கர்நாடகத்துக்கு ஒரு குணம் இருக்கிறது. அதாவது தங்களுக்குத்தான் தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் ஆறு என்பது போன்ற கொள்கை அது. ஒருங்கிணைந்த இந்தியாவில் நீருக்காக அதிக அளவில் பிரச்சனை செய்வது கர்நாடகத்தில்தான். பெலகாவி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பீம்காட் எனும் இடத்தில் இந்த ஆறு உற்பத்தியாகிறது.

 பீம்காட்

பீம்காட்


பீம்காட் அல்லது பீம்காடு என்பது பாதுகாக்கப்பட்ட காடுகளின் பட்டியலில் இருக்கும் ஒரு காடு ஆகும். இந்த நிலப்பரப்பு பல்வேறு இனங்கள் வாழ்வதற்கு நிலத்தையும் காடுகளையும் பகிர்ந்தளிக்கிறது. மொததம் 19 ஹெக்டேருக்கும் மேல் பரந்து விரிந்த இந்த காடு காட்டுயிர் பாதுகாப்பு பட்டியலில் 2011ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இந்த பகுதியில் மிகமுக்கியமாக பார்க்கப்படவேண்டியது பாரப்பிடி குகைகள்.இங்குதான் வாலில்லா வௌவால்கள் சிறப்பு. ஆம் இந்த இடத்தில் இது அதிக அளவில் வாழ்கிறது. இதற்கு முன்பு வௌவால்களுக்கென தனி பாதுகாப்பகம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா என்ன?

Kalyanvarma

பீம்காட் கோட்டை

பீம்காட் கோட்டை

17ம் நூற்றாண்டில் சிவாஜியால் கட்டப்பட்ட கோட்டை இதுவாகும். இது இந்த காட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.

இது மிகச்சிறந்த கற்களால் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பக்கமும் 300அடி உயரம் கொண்டது.

380அடி உயரமும், 825அடி அகலமும் கொண்டது இந்த கோட்டை. இது ஒரு மிகச்சிறந்த வரலாற்று நினைவுச் சின்னமாகும்.

வஜ்ரபோகா நீர்வீழ்ச்சி

வஜ்ரபோகா நீர்வீழ்ச்சி

இந்த காடுகளில் பயணம் செய்யவிரும்புபவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய நீர்வீழ்ச்சி இதுவாகும். இந்த அருவிக்கு செல்ல ஜம்போதி எனும் கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 9கிமீ தூரம் தென்மேற்கு திசையில் பயணிக்கவேண்டும். காவலி மற்றும் சப்போலி எனும் கிராமங்களுக்கிடையில் ஒரு மலையேற்றப்பாதையும் உள்ளது. 660அடி உயரத்திலிருந்து பாயும் நீர்வீழ்ச்சி மிக அழகாக காட்சியளிக்கும்.

ஜூன் முதல் அக்டோபர் வரையுள்ள காலம் இங்கு செல்வது சிறந்தது. அடுத்த சுற்றுலாவை இப்போதே திட்டமிடுங்கள்.

மாதேய் வனவிலங்கு சரணாலயம்

மாதேய் வனவிலங்கு சரணாலயம்


208 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த காடு, வங்கப் புலிகள் பாதுகாப்பகமாகவும் இருக்கிறது. இங்கு சுற்றுலா செல்வதற்கு தனி அனுமதி வாங்கவேண்டும்.

இங்கும் நிறைய நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. அவற்றும் முக்கியமானவை வாஸ்ரா சாக்லா நீர்வீழ்ச்சியாகும். மேலும் விர்டி நீர்வீழ்ச்சியும் முக்கியமான சுற்றுலா கவர்ச்சி நிறைந்த இடமாகும். எனினும் இவை குறித்து வேறுஒரு கட்டுரையில் காணலாம்.

Glassy Tiger

தன்டேலி வனவிலங்கு சரணாலயம்

தன்டேலி வனவிலங்கு சரணாலயம்

866ச கிமீ அளவுக்கு பரந்துவிரிந்த இடம் இதுவாகும். அன்ஷி தன்டேலி புலிகள் பாதுகாப்பகம் இது 2006ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது யானைகள் சரணாலயமாகும்.

மேலும் இது 2321சகிமீ தூரம் பரந்தது. தன்டேலியில் 200 வகையான பறவையினங்கள் வாழ்ந்துவருகின்றன.

@Vikas patil photography

தூத்சாகர் நீர்வீழ்ச்சி

தூத்சாகர் நீர்வீழ்ச்சி

தூத்சாகர் என்றால் பாற்கடல் என்று பொருள். பால் கடல்' எனும் பெயரை இந்த தூத்சாகர் அருவிக்கு யார் சூட்டினார்களோ தெரியவில்லை, ஆனால் இதன் பெயருக்கு ஏற்றார் போலவே இந்த அருவி மகாசமுத்திரம் போன்று ஒங்காரமிட்டவாறு சீறிக்கொண்டு மலையுச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அழகு காணக்கிடைக்காத காட்சி. இந்த கவின் கொஞ்சும் அருவி பனாஜி நகரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக-கோவா எல்லையில் அமைந்திருக்கிறது.

Csyogi.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

தூத்சாகர் அருவியை ரயில் மூலமாக சுலபமாக அடையலாம். இந்த அருவியின் அருகாமை ரயில் நிலையமாக கால்லெம் ரயில் நிலையம் அறியப்படுகிறது. அதோடு கர்நாடக மாநிலத்திலிருந்து ஹூப்ளி, தர்வாத், அல்நாவர், லோண்டா, தீனைகாட், கேஸ்டில் ராக், தூத்சாகர் ரயில் பாதையில் தூத்சாகர் அருவியை அடைய முடியும். மேலும் தூத்சாகர் செல்லும் சாலை காட்டு வழியாக இருப்பதாலும், பல இடங்களில் சாலையை நதி கடந்து செல்வதாலும் கார் போன்ற வாகனங்களில் தூத்சாகர் அருவிக்கு பயணிப்பது ஆபத்தில் முடியலாம். தூத்சாகர் அருவியை தேடி எண்ணற்ற டிரெக்கிங் பிரியர்கள் வந்து செல்கின்றனர். எனவே இங்கு டிரெக்கிங் செல்பவர்கள் தங்கி ஓய்வெடுக்க சில தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நதி ஓடும் பாதையிலே

நதி ஓடும் பாதையிலே

கர்நாடகத்தில் உற்பத்தியாகும் மகதாயி நதி, பார்வாட் அருகே மாநில எல்லையை கடந்து கோவாவுக்குள் நுழைகிறது. மேலும் இங்குள்ள காடுகளை வளமாக்கிவிட்டு, சட்டோரம் எனும் இடத்தில், ராக்கெட் நீர்வீழ்ச்சியையும், போரா நீர்வீழ்ச்சியையும் இணைத்துக்கொண்டு டேராடூம், நேனோடெம் வழியாக பாய்ந்து, மாதேய் பல்லுயிர் காடுகள் வழியாக பாய்கிறது.

இப்படி பாய்ந்து கோவா மாநிலத்தை வளமாக்கிவிட்டு தலைநகரை நோக்கி ஓடி வருகிறது இறுதியில் பனாஜி அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இதற்கு முன் இந்த நதியில் எண்ணற்ற நதிகள் இணைகின்றன.

கமல் பசாதி

கமல் பசாதி

இது ஒரு சமண கோயில். இது பெலகாவி கோட்டைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. 1204ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சிலை இங்குள்ளது. இது சாளுக்கியர்களின் கைவண்ணத்தில் அவர்களின் தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்களுக்கு காந்ததன்மை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Swapneel Bhandarkar

சிக்கி பசாடி

சிக்கி பசாடி


இதுவும் ஜெய்ன் நினைவாக கட்டப்பட்ட ஒரு இடம்தான். ஜெய்ன்களின் கட்டிடங்களில் தனிப்புகழ் கொண்டதாகும்.
பெலகாமிலிருந்து 7கிமீ தூரத்தில் ஹன்சவேரி எனும் இடம் அமைந்துள்ளது. இது அருள்மிகு ரெவன் சித்தேஸ்வரர் கோயில் ஆகும்.

Burgess, James

கோகாக் நீர்வீழ்ச்சி

கோகாக் நீர்வீழ்ச்சி

கர்நாடகத்தின் நயகரா நீர்வீழ்ச்சி என்றாலும் மிகை இல்லை. உண்மையில் இது மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாகும். குதிரையின் பாதத்தை போன்ற தோற்றம் கொண்டது இந்த நீர்வீழ்ச்சி.

இது கோல்காபூரிலிருந்து 100கிமீ தூரத்திலும், பெலகாமிலிருந்து 65கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலம் இங்கு செல்வதற்கு ஏற்றகாலமாகும்.

Sandeep Prakash

சலீம் அலி பறவைகள் சரணாலயம்

சலீம் அலி பறவைகள் சரணாலயம்

மண்டோவி ஆறு பாயும் வழியில்தான் இந்த சலீம் அலி பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது.

இங்கு நிறைய பறவை இனங்கள் வாழ்கின்றன.

செங்குருகு, கருங்குருகு, சிவப்பு கணு, ஜேக் ஸ்னிப், கோணமூக்கு உள்ளான் என நிறைய பறவை வகைகள் இங்கு காணப்படுகின்றன.

Shyamal

Read more about: travel, temple, river