Search
  • Follow NativePlanet
Share
» »இந்த ஏகாதசியன்று தமிழகத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களுக்கு செல்லலாம் வாருங்கள்

இந்த ஏகாதசியன்று தமிழகத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களுக்கு செல்லலாம் வாருங்கள்

By Naveen

கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்கையில் மாதவன் "மாதங்களில் நான் மார்கழி" என்றான். இந்த மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் வைகுந்தப் பிராப்தம் பெற்று முக்தியை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

உலகெங்கும் இருக்கும் பெருமாள் கோயில்களில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் தமிழகத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களுக்கு ஒரு தெய்வீக சுற்றுலா செல்லலாம் வாருங்கள்.

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் :

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் :

திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ரங்கம் என்னும் திருவரங்கத்தில் பெருமாள் அரங்கநாத சுவாமியாக வீற்றிருக்கிறார். இக்கோயில் தான் 108வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதாக கருதப்படுகிறது. இக்கோயிலில் இருக்கும் 72.மீ ராஜ கோபுரம் தான் தென்னிந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய கோபுரமாகும்.

தல புராணம்:

தல புராணம்:

தனது பட்டாபிஷேகதிற்கு வந்த ராவணனின் தமையன் விபீஷணனுக்கு பரிசாக பிரம்மனின் தவ பலனால் தோன்றிய திருவரங்கம் கோயில் விமானத்தை ராமன் வழங்கியிருக்கிறார். இதனை தன் தலையில் சுமந்து இலங்கைக்கு எடுத்து செல்கையில் இளைப்பாறுவதற்காக கீழே வைத்துள்ளார்.

தல புராணம்:

தல புராணம்:

பின் என்ன முயற்சி செய்தும் விமானத்தை எடுக்க முடியாமல் போகவே செய்வதறியாது திகைத்த விபீஷணன் முன்பு தோன்றிய பெருமாள் தான் இவ்விடமே கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பேன் என்றுரைக்கிறார். எனினும் விபீஷணனின் கோரிக்கைக்கு இணங்க தான் தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார்.

 கோயில் வரலாறு:

கோயில் வரலாறு:

விபீஷணன் விமானத்தை வைத்த இடத்தை சுற்றி முதன்முதலில் தர்மவர்ம சோழன் என்ற மன்னன் கோயிலை கட்டியிருக்கிறான். பின் காவிரி ஆற்றில் ஏற்ப்பட்ட வெள்ளத்தினால் மண்ணில் புதையுண்ட கோயிலை பல காலம் கழித்து கிளிச்சோழன் என்ற மன்னன் கண்டுபிடித்து புதையுண்ட கோயிலை புனரமைத்திருக்கிறான்.

கோயில் அமைப்பு

கோயில் அமைப்பு

கிட்டத்தட்ட 600 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் இந்த கோயிலில் ஏழு அடுக்குகளாக சுற்றுச்சுவர்கள் இருக்கின்றன. இந்த ஏழு சுற்றுசுவர்களிலும் நான்கு புறங்களிலும் கோபுர வாயில்கள் இருக்கின்றன. ராஜகோபுரம் இருக்கும் பிரதான நுழைவு வாயில் இலங்கை இருக்கும் தென் திசையை நோக்கியபடி இருக்கிறது. இதன் மூன்று வெளி சுற்றுகளுக்குள் வீடுகள், வணிக வளாகங்கள் போன்றவை உள்ளன.

ஏகாதசி:

ஏகாதசி:

இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது . மார்கழி மாதத்தில் 21நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சொர்க்க வாசல் திறப்பு வைகுண்ட ஏகாதசி நாளன்று பிரமம் முகுர்த்தத்தில் நடைபெறுகிறது. கருட வாகனத்தில் அமர்ந்து சொர்க்க வாசல் வழியே பிரவேசிக்கும் பெருமாளை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பயண வழிகாட்டி:

பயண வழிகாட்டி:

திருவரங்கம் கோயிலை பற்றிய மேலும் பல பயனுள்ள தகவல்களையும், இக்கோயிலுக்கு எப்படி செல்வது?, இதனருகில் தங்குவதற்கு என்னென்ன ஹோட்டல்கள் இருக்கின்றன என்பது போன்ற தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

எப்போது கட்டப்பட்டது?:

எப்போது கட்டப்பட்டது?:

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் கட்டப்பட்ட காலம் 8ஆம் நூற்றாண்டு ஆகும். மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்ட இக்கோயிலில் விஷ்ணு பகவானின் ஐந்து அவதாரங்களான நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர் ஆகியோரின் சந்நிதிகள் இருக்கின்றன.

தமிழகத்தில் இருக்கும் மிகப்பழமையான கோயில்களுள் ஒன்றான இந்த பார்த்தசாரதி கோயில் 108 திவ்ய தேச கோயில்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

Roberta Romero

பார்த்தசாரதி என்றால் என்ன?:

பார்த்தசாரதி என்றால் என்ன?:

மகாபாரதத்தின் காப்பிய நாயகனான அர்ஜுனனுக்கு 'பார்த்தன்' என்ற பெயரும் உண்டு. அக்காப்பியத்தில் கிருஷ்ணாவதாரமாக இருந்த பெருமாள் இறுதிப்போரின் போது அர்ஜுனனின் சாரதியாக அதாவது தேரோட்டியாக இருந்திருக்கிறார். அப்படி பார்த்தனின் சாரதியாக, பார்த்தசாரதி ரூபமாக பெருமாள் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறார்.

Hayavadhan

கோயில் அமைப்பு:

கோயில் அமைப்பு:

இக்கோயில் மூலவராக கிருஷ்ண பகவான் உமையாள் ருக்மிணி அம்மையாரோடு காட்சி தருகிறார். ஸ்ரீ ராமர், கரிவரதர் என்றழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஆண்டாள், ஆஞ்சநேயர், பன்னிரு ஆழ்வார்கள், ராமானுஜர், மணவாள மாமுனிகள் போன்றோரது சந்நிதிகளும் இக்கோயில் வளாகத்தில் இருக்கின்றன.

Rasnaboy

கோயில் அமைப்பு:

கோயில் அமைப்பு:

இங்கே பார்த்தசாரதி பெருமாளுக்கும், நரசிம்மருக்கும் தனித்தனி கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் இருக்கின்றன. பல்லவர்கள், சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்கள் என தென்னிந்தியாவை ஆண்ட மூன்று மிகப்பெரும் சாம்ராஜ்யங்களின் கூட்டு படைப்பாக திராவிட கட்டிடக்கலையின் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோயில் திகழ்கிறது.

கோயிலின் சிறப்பு:

கோயிலின் சிறப்பு:

மகாபாரத போரில் ஆயுதம் எந்த மாட்டேன் என்று சபதம் மேற்கொண்டு பார்த்தனுக்கு சாரதியாக கிருஷ்ணர் பங்கேற்றதால் இக்கோயிலிலும் மீசையுடன் தனது பிராதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலேயே கிருஷ்ண பகவான் காட்சியளிக்கிறார். இப்படியொரு கோலத்தில் கிருஷ்ண பகவானை வேறெங்கும் காணமுடியாது என்பது இக்கோயிலின் பெரும் சிறப்புகளில் ஒன்றாகும்.

வைகுண்ட ஏகாதசி:

வைகுண்ட ஏகாதசி:

சென்னையின் முக்கிய பெருமாள் கோயிலான இந்த கோயிலில் மற்ற எல்லா விழாக்களையும் விட வைகுண்ட ஏகாதசி மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலில் நடக்கும் சொர்கவாசல் திறப்பை காண தமிழகத்தின் மிக முக்கிய வி.வீ.ஐ.பீ கள் கலந்துகொள்கின்றனர்.

கோயில் பிரசாதம்:

கோயில் பிரசாதம்:

பார்த்தசாரதி கோயிலில் தயிர்சாதம், புளியோதரை, சர்க்கரைப்பொங்கல் மற்றும் வடை ஆகியவை பிராசதமாக வழங்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி சமயத்தில் மட்டும் பார்த்தசாரதி பெருமாளுக்கு திருப்பதி எழுமலையான் போல அலங்காரம் செய்யப்பட்டு அந்த பத்து நாட்கள் திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Sankar.s

வரதராஜ பெருமாள் கோயில்:

வரதராஜ பெருமாள் கோயில்:

காஞ்சீபுரத்தில் இருக்கும் முக்கியமான கோயில்களில் ஒன்று இந்த வராத ராஜ பெருமாள் கோயிலாகும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த விஷ்ணு கோயிலானது தமிழகத்தில் ஸ்ரீ ரங்கத்துக்கு இணையான மதிப்புடைய வைணவத்தலமாகும்.

வரதராஜ பெருமாள் கோயில்:

வரதராஜ பெருமாள் கோயில்:

பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டு பின்னர் வந்த சோழர்கள் காலத்தில் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும் பிரம்மோர்த்சவம் இக்கோயிலின் முக்கிய பண்டிகையாகும்.

வரதராஜ பெருமாள் கோயில்:

வரதராஜ பெருமாள் கோயில்:

வரதராஜ பெருமாள் கோயில் கோயிலின் முகப்பு தோற்றம்.

வரதராஜ பெருமாள் கோயில்:

வரதராஜ பெருமாள் கோயில்:

வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள குதிரைகளின் சிற்பம் ஒன்று. பார்க்க ஏதோ களிமண்ணால் செய்யப்பட்டது போல காட்சியளிக்கிறது.

More News

    Read more about: temples spiritual places chennai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+