» »ராஜராஜ சோழன் உடல் உண்மையில் எங்கே சென்றது தெரியுமா?

ராஜராஜ சோழன் உடல் உண்மையில் எங்கே சென்றது தெரியுமா?

Posted By: Udhaya

ராஜராஜ சோழன் இறப்பில் சந்தேகம் நிலவுவதாக பலர் கூறிவரும் நிலையில், அவரது உடல் எங்கே என்பதும் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலர் பேசிக்கொண்டிருந்தாலும், உண்மையில் ராஜராஜ சோழன் இறந்த பிறகு அவரது உடல் எரியூட்டப்பட்டதா அல்லது புதைக்கப்பட்டதா அல்லது எங்கே சென்றது என்பது குறித்து அறியாமல் பலர் இருக்கின்றனர். சிலர் எகிப்து மம்மி போல ராஜராஜ சோழனின் உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

உடையாளூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சமாதி உண்மையில் ராஜராஜனுடையதுதானா? அப்படியென்றால் அவ்வளவு பெரிய மாமன்னரின் சமாதி இவ்வளவு சிறிய இடத்தில் உள்ளது ஏன்? உண்மையில் ராஜராஜ சோழனின் உடல் எங்கே உள்ளது? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமா வாருங்கள் சுற்றுலாவோடு சுயவரலாற்றையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வரலாம்.

 ராஜராஜ சோழனின் சாம்ராஜ்யம்

ராஜராஜ சோழனின் சாம்ராஜ்யம்

சோழர்களின் தலைசிறந்த மாமன்னர்கில் ராஜராஜ சோழனுக்கு தனி இடம் உண்டு. அவன் செய்வதற்கரிய பல காரியங்களை கனகச்சிதமாக செய்துமுடித்து பல இடங்களை தன் குடைக்கு கீழே கொண்டு வந்தவன்.

Native Planet

 சுற்றுலா தளங்கள்

சுற்றுலா தளங்கள்


இன்று தென்னிந்தியாவின் தமிழகம், கேரளம், ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தின் பல சுற்றுலாப் பகுதிகள் அன்று ராஜராஜனின் ஆளுமைக்குட்பட்டதுதான்.

Youtube

 மர்ம மரணம்

மர்ம மரணம்


ராஜராஜ சோழன் கோபமுற்று தன் மகனிடம் சண்டையிடும்போது மரணமடைந்ததாகவும், ராஜேந்திர சோழன்தான் அவரை கொன்றிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவது ஒருபுறம் இருக்கட்டும். இறந்த ராஜராஜ சோழனின் உடல் எங்கே தெரியுமா?

 கல்வெட்டுக்களில் வாழும் ராஜராஜ சோழன்

கல்வெட்டுக்களில் வாழும் ராஜராஜ சோழன்

தமிழகத்தின் கட்டுமான திறனுக்கு சான்றாக உலகப்புகழ் பெற்று விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோயில் உட்பட ராஜராஜனின் அனைத்து செயல்களுக்கும் கல்வெட்டுக்கள் மூலம் பதில் சொல்லிவிடலாம். ராஜராஜன் இறந்தாலும் கல்வெட்டுக்களில் வாழ்ந்து வருகிறார்.

இறந்தபின் என்னவாயிற்று

இறந்தபின் என்னவாயிற்று

ஆனால் 1014ம் ஆண்டுக்குப் பின் ராஜராஜன் இறந்ததற்கான சான்றுகளும், அவர் உடல் என்னவானது என்பதற்கான சான்றுகள் இன்றுவரை தெளிவாக எங்கேயும் கிடைக்கவில்லை என்கிறார்கள் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள்.

Native Planet

 கல்வெட்டு கூட இல்லையா

கல்வெட்டு கூட இல்லையா

சோழர்கள் எதைச் செய்தாலும் கல்வெட்டுக்களில் எழுதி வைத்துவிட்டு செல்வது வழக்கம் என்பது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் தூண் சாய்ந்த போதும் கூட அவருக்கான நினைவுச்சின்னமோ கல்வெட்டோ அந்த காலத்தில் வைக்கப்படாததன் மர்மம் என்ன என்பது கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கே பெரும் புதிராக இருக்கிறது.

 ராஜராஜனின் சமாதி

ராஜராஜனின் சமாதி

கும்பகோணத்திலிருந்து ஆறேழு கிலோமீட்டர் தூரத்தில் உடையாளூர் எனும் கிராமத்தில் ராஜராஜசோழனின் சமாதி அமைந்துள்ளது என்று சிலர் கூறுகின்றனர். அதே வேளையில் சிலர் அதை மறுக்கவும் செய்கின்றனர்.

Native Planet

 பள்ளிப்படை கோயில்கள்

பள்ளிப்படை கோயில்கள்

பொதுவாகவே அரசகுடும்பங்களின் வாரிசுகள் இறந்த இடங்களில் அவர்கள் நினைவாக சின்னம் எழுப்பப்படும். அவர்களது உடலை அங்கேயே புதைத்தோ அல்லது எரித்தோ சின்னம் எழுப்பப்படும். அதுதான் பள்ளிப்படை என்று அழைக்கப்பட்டுவருகிறது. இதை கோயிலாகவும் வணங்கி வருகின்றனர்.

 சிவலிங்கம்

சிவலிங்கம்

அந்த கோயில்களில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவாலயங்களுக்கு ஈடாக வழிபட்டுவந்துள்ளதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

அழிந்து போன நினைவுச் சின்னங்கள்

அழிந்து போன நினைவுச் சின்னங்கள்


உலகம் போற்ற வாழ்ந்த மாமன்னர் ராஜராஜ சோழரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறத்தக்க வகையில் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டு காலப்போக்கில் படையெடுத்து வந்தவர்கள் அழித்துச் சென்றிருக்கலாம் என்ற தகவலும் உள்ளது.

பழையாறை

பழையாறை


ராஜராஜனின் காலத்தில் தலைநகராக விளங்கிய பழையாறை எனும் நகரம் தற்போது தஞ்சை அருகே சிதையுண்டு பல சிறிய ஊர்களாக பிரிந்து கிடக்கின்றது.

Native Planet

கீழ்பழையாறை

கீழ்பழையாறை


தஞ்சாவூர் அருகே கீழ் பழையாறை எனும் கிராமத்துக்கு அருகே உள்ள உடையாளூர் கிராமத்தில் உள்ள சமாதி ராஜராஜனுடையது என்று பலர் கூறி வந்தாலும். அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.

 சிவன் கோயில்

சிவன் கோயில்

இதே ஊரில் இடிபாடுகளுடன் சிவன் கோயில் ஒன்றும் இருக்கிறது. அது பலர் அறியாத சுற்றுலாத் தளமாக உள்ளது.

 முடிகொண்டான் ஆற்றங்கரை

முடிகொண்டான் ஆற்றங்கரை

தஞ்சை அருகே உள்ள முடிகொண்டான் ஆற்றங்கரை எனும் கிராமத்தில் சோழ பரம்பரையின் முறைப்படி கட்டப்பட்ட பல கோயில்கள் இடிபாடுகளுடன் காணமுடிகிறது.

 உடையாளூர் பால்குலத்தம்மன்

உடையாளூர் பால்குலத்தம்மன்

இந்த ஊரிலுள்ள பால்குலத்தம்மன் கோயிலின் முன் அமைக்கப்பட்டுள்ள இரண்டு தூண்கள் அந்த இடிபாட்டு சிவன்கோயிலிலிருந்து எடுக்கப்பட்ட கற்களை கொண்டு கட்டப்பட்டதே. இதில் உள்ள கல்வெட்டு ஒரு செய்தியை உலகுக்கு கூறுகிறது.

சிவபாதசோழமங்களம்

சிவபாதசோழமங்களம்

முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிகாலத்தில் சிவபாதசோழமங்களத்தின் (ஊர் பெயர்) கோயில் ஒன்றில் ராஜராஜசோழனின் நினைவுச் சின்னம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரின் சமாதி இருந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை.

Youtube

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்