» »கடவுளின் தேசத்தில் மனதை கொள்ளை கொள்ளும் சிம்மினி வனத்திற்கு போயிருக்கீங்களா? வாங்க கூட்டிட்டு போறோம்

கடவுளின் தேசத்தில் மனதை கொள்ளை கொள்ளும் சிம்மினி வனத்திற்கு போயிருக்கீங்களா? வாங்க கூட்டிட்டு போறோம்

Written By: Balakarthik Balasubramanian

திருச்சூரில் உள்ளச் சிம்மினி வன விலங்குச் சரணாலயம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைத்தான், நாம் இந்தப் பத்தியின் வாயிலாக தெரிந்துக்கொள்ளப் போகிறோம். இந்தச் சரணாலயம் திருச்சூர் மாவட்டத்தின், முகுந்தபுரம் தாலுகாவில் காணப்படுகிறது. இந்தச் சிம்மினி மிகவும் அடர்ந்த வெப்பமண்டலக் காடுகளுள் ஒன்றாகும். இந்த அடர்ந்த வனத்தின் உள்ளே எண்ணிலடங்கா இயற்கைத் தாவரங்களும், வன விலங்குகளின் வாழ்க்கை அழகும், நம்மை ஒரு முறையாவது இந்தக் காட்டிற்குள் பயணம் செய்து இன்பமானதொரு உணர்வினைக் கொள்ள ஆசைப்படுகிறது என்று தான் கூற வேண்டும்.

அந்த இடங்கள்ல அப்படி என்னதான் இருக்கு?

நான் கடந்த வாரம் இறுதியில் திருச்சூருக்குச் சென்று என் சொந்தங்களைக் கண்டேன். நாங்கள் நீண்டக் காலத்திற்குப் பிறகு சந்தித்தமையால் எங்களுக்குள் ஒரு நீண்ட நெடிய அன்புப் பிரச்சாரம் அறங்கேறிப் பலவற்றினையும் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தோம். இந்த நீண்ட அரட்டையின் முதல் பாதியில், இது வரை ஏற்பட்ட இடைவெளியினால் சிறியதொருச் சண்டை, அதன் பிறகு சமாதானம், ஜாலி என இனிமையானதொரு அரட்டையாக அந்தப் பயணம் சென்றுக்கொண்டிருக்க, அதுவே விடாமல் தொடர்ந்துக்கொண்டிருந்தது. எந்த ஒரு ஏனையத் திட்டங்களையும் வகுக்காத நாங்கள், உணவு உண்ணுவது, அரட்டை அடிப்பது, தூங்குவது எனத் தேய்ந்துபோனக் கேசட்டினை திரும்ப திரும்பப் போட்டுக்கொண்டுப் பாட்டுக் கேட்டு அலுத்துப்போவதினைப் போன்ற உணர்வினைக் கொள்ள, என்னுடைய அத்தை, மாமாவின் ஆலோசனைக்கு ஏற்ப, எங்காவது வெளியில் செல்லலாம் என முடிவெடுத்தோம். அதனால், நாங்கள் பேசிக்கொண்டிருந்தச் சலித்துப் போன அட்டவணைகளைப் பற்றி மறந்து, எங்காவதுச் செல்லலாம் என யோசிக்க, சிம்மினி வன விலங்கு சரணாலயம் நம்மை வெகுவாகக் கவரும் என்னும் சொல்லைக் கேட்டு அங்குச் செல்லலாம் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டோம். 

நம்ம தமிழ்நாட்டில் ஒரு உணவு சுற்றுலா

இந்தச் சரணாலயம், நான் கூறியதுபோல் திருச்சூர் மாவட்டத்தின் முகுந்தபுரம் தாலுகாவில் காணப்படுகிறது. இந்தச் சிம்மினி மிகவும் அடர்ந்த வெப்பமண்டலக் காடுகளுள் ஒன்றாகும். இந்த அடர்ந்த வனத்தின் உள்ளே எண்ணிலடங்கா இயற்கைத் தாவரங்களும், வன விலங்குகளின் வாழ்க்கையும் நம் மனதினை இயற்கையின் அழகால் ஆள்கிறது என்றுக் கூறும்பொழுது நம் மனம் நெகிழ்ச்சி அடைகிறது. கொச்சியிலிருந்து 2 மணி நேரம் நாம் பயணிக்க இந்த சரணாலயத்தை அடையலாம்.
சென்னையை பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்

சிம்மினி வன விலங்குச் சரணாலயம் பற்றியதோர் முன்னுரை:

இந்தச் சிம்மினி வனவிலங்குச் சரணாலயம் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒன்றாகும். இந்தச் சரணாலயத்தின் அழகினை நாம் அன்னாந்துப் பார்க்க, "நானும் அருகில் இருக்கிறேன்" என பீச்சி வழானி சரணாலயமும் இதன் அருகில் அமைந்து நம் மனதினைக் கண் கொள்ளாக் காட்சிகளால் கவர்கிறது. இந்த சரணாலயங்கள் கடல் மட்டத்திலிருந்து 1116 மீட்டர் உயரத்தில் அமைந்து நம் மனதினை வருடுகிறது. இந்த இடத்தின் உச்சக்கட்ட நிலையில் அமைந்திருக்கும் புண்டா உச்சத்தின் மூலம் அளவிட திட்டமிடுகின்றனர்.

டாப் கதாநாயகர்களின் பிறந்த இடங்கள்!

பல விலங்குகளுக்கு வீடாக விளங்கும் இந்தச் சிம்மினியில் யானைகளும், சாம்பார்ஸ் எனப்படும் மான் வகைகளும், கௌர்ஸ் எனப்படும் இந்தியக் காளைகளும், அணில்களும், ஸ்லோத் பியர் எனப்படும் சோம்பல் தன்மைக் கொண்ட கரடிகளும், புலிகளும், சிங்கம் வால் குரங்குகளும் எனப் பற்பல விலங்குகளின் வாழ்க்கை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்தியாவின் 50 மிகச்சிறந்த பயண புகைப்படங்கள்!!!

இந்தச் சரணாலயத்தில் 160 வகைக்கும் மேற்பட்டப் பறவைகளும் சுற்றித் திரிந்து நம் மனதினைப் பட்டாம்பூச்சிபோல் பறக்க வைக்கிறது. இந்த அடர்த்தியானக் காடுகளின் உள்ளேக் காணும் நீரோடைகளும், ஆறுகளும் ஆங்காங்கே அமைந்துப் பயணத்தின் சுவடுகளைப் பிரதிபலிக்க வைக்க, நாம் ஆச்சரியத்தின் எல்லைக்கேச் செல்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். இந்தக் காடுகளின் தன்மை, வெப்ப மண்டலப் பசுமை மாறாகவும், அரை பசுமையானத் தோற்றத்துடனும், ஈரத் தன்மை நீங்கா இலையுதிர் காடுகளாகவும், பச்சை பசேல் எனும் பசுமைத் தன்மைக் கொண்டக் காடுகளாகவும் காட்சியளிக்க, நம் மனம் அமைதியடைவதுடன். கண்களும் காற்றின் தன்மையால் குளிர்க்கொண்டுப் போகிறது.

மதுரை மாநகரில் இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?

மேலும், இங்குக் காணப்படும் பூக்களும், பூக்களில் இருந்து வீசப்படும் இயற்கை மனமும், அந்தப் பூக்களை சுற்றிக்கொண்டிருக்கும் வண்டுகளும், அந்த வண்டுகளை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கும் பறவைகளும், "நீ மட்டும் தான் பறப்பாயா என்ன!" எனப் போட்டிப் போட்டுப் பறந்துக் கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகளும், கீழே ராஜ நடைப் போட்டு நடந்துச் செல்லும் விலங்குகளின் வாழ்வாதாரமாக இந்தக் காடு இருக்க, நம்மை அந்த இடத்திலே அமர்ந்து அவற்றை ரசிக்கச் செய்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே மிகவும் பெரியதாகக் காட்சியளிக்கும் தெற்குப் பறவை சாரி பட்டாம்பூச்சிகளையும் நம்மால் இங்குக் காணமுடிகிறது.

சிம்மினியை எப்படி அடைவது? வாங்கப் பார்க்கலாம்!

சிம்மினியை எப்படி அடைவது? வாங்கப் பார்க்கலாம்!

சிம்மினியைப் பார்ப்பதற்கு ஏதுவானக் காலங்கள், அக்டோபர் முதல் மார்ச் வரை ஆகும்.

திருச்சூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு அழகிய சரணாலயம் தான் இந்தச் சிம்மினி வனவிலங்குச் சரணாலயமாகும். நாம் கீழ் நோக்கிக் காரினைச் செலுத்த, அம்பலூர் - வரண்டறப்பிள்ளி - பாலப்பிள்ளிச் சாலை வழியாக நாம் செல்ல சிம்மினியை அடைகிறோம். இந்தச் சுற்றுவழியாக நாம் செல்ல ஒன்றரை மணி நேரப் பயணத்தின் மூலம் நாம் காணும் அழகிய இடங்களைப் புகைப்படக்கருவியின் உதவியுடன் பதிவு செய்துக்கொண்டுத் தேனீரின் சுவையை ருசித்துக்கொண்டுச் செல்ல சிம்மினியை நாம் அடைகிறோம்.

காட்டின் பகுதியில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடியில் முறைப்படி நடத்தப்படும் பரிசோதனைகளை முடித்துவிட்டு அவர்களுக்கு ஒரு கட்டணத்தொகையினை நாம் தருவதன் மூலம், அதிகாரிகளால், நியமிக்கப்பட்ட வழிக்காட்டிகளை நம்முடன் அவர்கள் அனுப்புகிறார்கள். வனத்துறையின் தூண்டுதலால் நடத்தப்படும் வழிக்காட்டிப் பயணம் பற்றிய சிறியதொரு வகுப்பு, நமக்கு மிகவும் உதவிச் செய்ய, நம்முடைய இனிமையானதொருப் பயணத்தினை இனிதேத் தொடங்குகிறோம். காட்டின் எல்லைப் புறத்தின் உள்ளே நாம் நுழைய, நமக்கு அரை நாள் பயணமாக இது அமைகிறது. ஒருவேளை நம் பயணம், காட்டின் வழியாக இருக்குமாயின், அப்பொழுது ஒரு நாள், நம் அனைவருக்கும் தேவைப்படுகிறது.

Manoj K

காட்டின் வழியே அருமையானதொருப் பயணம் ஆரம்பம்:

காட்டின் வழியே அருமையானதொருப் பயணம் ஆரம்பம்:

நாம் சரணாலயத்தின் அடித்தளத்தில் இருந்து நம் பயணத்தினை ஆரம்பிக்க, நாங்கள் கண்ட அந்த அற்புதமானதொருக் காட்சி, ஆம், அந்த சிம்மினி ஏரி எங்கள் மனதினை, அதன் அழகைக் கொண்டுக் கட்டிப்போட்டது. இந்த ஏரியைக் கண்டுவிட்டு பின் நோக்கி செல்ல, அந்தக் குன்றுகளுக்குள்ளும், புதர்களுக்குள்ளும் சென்று மறைந்துக் கொண்ட எங்கள் மனம், வெளியில் வர மறுத்து அடம்பிடித்து அழுதது என்று தான் சொல்ல வேண்டும்.

பறவைகளின் வாய்களிலிருந்து உதிர்த்த அந்த அழகியச் சத்தம், அந்த அமைதியானத் தருணத்தில் எங்கள் செவிகளில் தேனாய் பாய, கிரிக்கெட் பூச்சிகளின் உரையாடல்களும் அவ்வப்போது எங்கள் காதுகளில் ரீங்காரமாய் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தக் காடுகளை ரசித்துக்கொண்டிருக்கும் நாம் வார்த்தையற்று ஊமையாகிவிட, அந்தக் காடுகளின் சூழல் எங்கள் மனதினை ஆள்கிறது என்பதனை நாங்கள் புரிந்துக்கொண்டு முன்னோக்கி சென்றோம். அப்பொழுது "பறவைகளின் நெஞ்சங்கள் படபடக்க அது வான் நோக்கிப் பறக்கும் அழகினை நாம் காணவேண்டுமென்றால், அதற்கு ஏதுவான ஒரு மாதம் நவம்பர் அல்லது திசம்பர்" என வழிக்காட்டியாளர் கூற, "இந்த மாதம், நவம்பர் அல்லது திசம்பராக இருக்கக்கூடாதா!" என்றதொரு ஏக்கமே அனைவரிடத்திலும் ஏற்படுகிறது.
Manoj K

காட்டின் வழியே அருமையானதொருப் பயணம் ஆரம்பம்:

காட்டின் வழியே அருமையானதொருப் பயணம் ஆரம்பம்:

நாங்கள் மார்சிக் காடு வழியே வீர நடைப்போட்டுச் செல்ல, வழிக்காட்டியாளர்கள், வன விலங்குகளின் வருகை எப்படி என்பதையும், எத்தகைய விலங்குகளை நாம் காணலாம், அவற்றை எப்படிக் கண்டறிவது என்பதைப் பற்றியும் எங்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார். நாங்கள் சென்ற வழியில் கண்டச் சாணம், முற்றிலும் காய்ந்துப்போகாமல் இயற்கையின் பெருமையை உணர்த்திக்கொண்டிருக்க, வழிக்காட்டியாளர்கள் இந்த வழியில் சற்றும் முன்பு யானைகள் சென்றிருப்பதனை எங்களுக்குத் தெளிவுப்படுத்த, யானைகள் பிளிருவதனைப் போன்றதொரு உணர்ச்சியினைக் கொண்டுப் பயத்துடனே முன் நோக்கி நகர்ந்தோம்.
அவர் கூறியதால் ஏற்பட்டதொரு அசாதாரண நிலைமை, எங்கள் பயத்தினைக் காட்டிக்கொடுக்க, "பயம் வேண்டாம். அவை அவ்வளவு ஒன்றும் ஆபத்து இல்லை" எனக் கூறி சகஜமாக நடந்து எங்களை சரியான திசையை நோக்கிப் பயணிக்க உதவி செய்தார். யானைப் பயத்திலிருந்து விடுபட்டு நாங்கள் செல்ல, "நானும் உங்களைப் பயமுறுத்தக் காத்திருக்கிறேன்" என சிறுத்தைகளின் காலடித் தடமும் எங்களை அச்சம் கொள்ள செய்து பின், மனம் அமைதி அடைந்தது.

அதுமட்டுமல்லாமல் நாங்கள் கண்ட அந்த ஒருப் பட்டாம்பூச்சியின் அழகும், அளவும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆம், அந்தப் பட்டாம்பூச்சிகள் நீல வண்ணத்தால் தீட்டப்பட்டு அதன் இறக்கைகளை விரித்து விரித்து மூட, அதுக் காண்போருக்கு வைரம் போன்றதொருக் கற்பனையை உருவாக்கியது. வழிக்காட்டியாளர்கள் எங்களிடம், "இந்தியாவின் பெரியத் தோற்றம் கொண்ட பட்டாம்பூச்சிகளுள் இதுவும் ஒன்று" எனக் கூற, வைரத்தினைப் போன்று இதுவும் காண்பதற்கு அரியது என்பதனைப் புரிந்துக்கொண்டு அன்னாந்து அதன் அழகைப் பார்த்தபடி நின்றோம். அப்பொழுது என் கவனத்தினை புரிந்துக்கொண்ட என்னவள் (என் அத்தை மகள்), இதன் பெயர் "ப்ளூ மோர்மோன்" என்றும் கூறினாள். மேலும் அவள், "மேற்குத் தொடர்ச்சியில் காணப்படும் இரண்டாவது பெரிய வகைப் பட்டாம்பூச்சி இது" என்றும் என்னிடம் கூறினாள்.
Manoj K

 பயணம் ஆரம்பம்:

பயணம் ஆரம்பம்:


நாங்கள் காடுகளின் அழகை ரசித்துக்கொண்டு முன் செல்ல, அந்தப் பாறைகளின் நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் விழும் அழகு, அவ்வளவு அருமையானதொருப் பரிசினை எங்கள் கண்களுக்கு காட்சிகளாக அளித்துக்கொண்டிருந்தது. அந்த இயற்கையின் பரிசினை ஏற்றுக்கொண்டு குழந்தைகளாக மாறிய நாங்கள், அந்த நீர்வீழ்ச்சியில் இறங்கி ஆட்டம்போடத் துவங்கினோம். ஆம், இரண்டு மணி நேரப் பயணத்தின் வாயிலாக நடைப்பயணத்தில் நாங்கள் ரசித்துக் கலைத்துப்போக, இப்பொழுது இந்த அருவி எங்களுக்கு ஒரு அழகான இடைவெளையினைத் தந்து மனதினை இதமாக்கியது. நாங்கள் பயணத்தில் உணர்ந்த வலிகளுக்கு மருந்தாக இந்த அருவி மாற, எங்கள் தசைகள் கொஞ்சம் கொஞ்சமாய் வலிகளில் இருந்து விலகி விடுதலை அடைந்து உற்சாகத்துடன் ஆடிப் பாடிக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

நாங்கள் அங்குக் கண்ட மலபார் குருவி ஒன்று எங்கள் மனதினை தூக்கிக் கொண்டு தூரச்சென்றது. மேலும் நாங்கள் கண்ட மலபார் செந்தார்க்கிளி, பிராமினி கிட் எனப்படும் பறவை, ஆரஞ்ச் வண்ணத்தில் அழகாய் காணும் பாடும்பறவை, காட்டில் இருக்கும் காகம், வெள்ளை மார்பகம் கொண்ட மரங்கொத்திப் பறவை எனக் கண்களுக்கு இதமானக் காட்சிகளைப் பறந்தபடி நமக்கு அளிக்கும் பறவைகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால், இத்தகையப் புதியப் பறவைகளைப் பற்றி வழிக்காட்டியாளர்கள் பல சுவாரஷ்யமான உண்மைகளைக் கூற, அந்தப் பறவைகள் மீது நாம் வைத்தக் கண்களை எடுக்க இயலாமல் தவிக்கிறோம்.

Aruna

அருமையான பயணம் :

அருமையான பயணம் :

ஆனாலும், விலங்குகளை நம்மால் நேராகப் பார்க்க முடியவில்லையே என்றதொரு வருத்தம் இதயத்தின் ஓரத்தில் தஞ்சம் புகுந்து அடுத்து முறைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என மனம் நமக்குக் கட்டளையிட, மூளையும் அதனையே விரும்புகிறது. நம்முடைய வழிக்காட்டியாளர், "இவை தான் அந்த விலங்குகளின் இருப்பிடம்" எனக் கூற, ஒருமுறையாவது அவற்றை நாம் பார்க்கமாட்டோமா என எண்ணிக்கொண்டு அந்தக் குகைகளை எட்டிப் பார்த்து ஏமாற்றத்துடன் செல்கிறோம்.

நாங்கள் காடுகளை நோக்கி இறங்கி நடக்க, சிம்மினி ஏரியின் அழகு எங்களை அந்த இடத்தில் சூழ்ந்துக்கொண்டது. நாங்கள் மாலை 4 மணிக்குக் கார் நிறுத்திய இடத்தினை விருப்பமின்றி அடைந்து மீண்டும் வீட்டை நோக்கிப் புறப்பட்டோம்.

நான், மூன் லைட் சொனாட்டாப் பற்றி நிறையவேக் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு நாம் செல்லும் படகுப் பயணத்தின் மூலமாக முழு நிலவினை நம்மால் காண இயலும் என நான் கேட்ட வார்த்தைகள் என் ஆசைகளைத் தூண்டியது. அதுவும் நம்மவளான ஒருத்தி அருகில் இருக்க, படகில் அவளும் நானும் அமர்ந்து அந்த முழு நிலவின் மீது காதல் கொள்ள, அந்தக் காதல் காட்சிகளை நம்மால் மறந்துவிட முடியுமா என்ன. "நான் உன்னை காதலிக்கிறேன்" என அவள் (நிலவின்) முன்னேக் கூறினாலும், அந்த வார்த்தைகளைக் கேட்டு அவள் கொள்ளும் ஒரு உணர்வினைப் பற்றி என்னால் இப்பொழுது வருணிக்க இயலாது. ஆனால், கண்டிப்பாக அடுத்து முறை என்னவளுடன் வந்து இந்த முழு நிலவின் அழகினை ரசிக்க வேண்டும் என முடிவு செய்து ஒரு வித ஏக்கத்துடன் நான் புறப்பட்டேன்.

Aruna

Read more about: travel forest

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்