» »பொங்கல் ஸ்பெஷல்: ராமேஸ்வரத்திலிருந்து குமரிக்கு ஒரு ஆன்மீக பயணம்

பொங்கல் ஸ்பெஷல்: ராமேஸ்வரத்திலிருந்து குமரிக்கு ஒரு ஆன்மீக பயணம்

Posted By: Udhaya

ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு இரண்டு வழிகளில் குறைந்த நேரத்தில் செல்லலாம்.

முதல் வழி ராமேஸ்வரம் தூத்துக்குடி திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி 309 கிமீ , 5 மணி நேரம் பிடிக்கும்

இரண்டாம் வழி ராமேஸ்வரம் தூத்துக்குடி திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி 5 மணி நேரம் பிடிக்கும்

இரண்டு வழிகளிலும் செல்லுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காலை 6 மணிக்கெல்லாம் ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. எனவே நம் பயணத்தையும் காலை 6 மணியிலிருந்து தொடங்குவோம். முந்தையநாள் இரவே ராமேஸ்வரத்தை அடையும்படி திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

ராமேஸ்வரத்தில் தங்கும் விடுதிகள் நிறைய கிடைக்கும்.

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

தனுஷ்கோடி இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர். இது பாம்பனுக்கு தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது.

PC:Nataraja

தனுஷ்கோடி எஞ்சிய ரயில் நிலையம்

தனுஷ்கோடி எஞ்சிய ரயில் நிலையம்

இங்கு வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர். இங்குள்ள கோதண்டராமர் கோயில் ராமேஸ்வரத்திலிருந்து 12 கி. மீ., தொலைவில் உள்ளது.

PC: Nsmohan

பாம்பன் தீவு

பாம்பன் தீவு

பாம்பன் தீவு என்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் நீரிணையில் அமைந்துள்ள ஒரு தீவு. இந்தியாவைச் சேர்ந்த இத்தீவு இராமநாதபுரம் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

சுற்றுலா மற்றும் இந்துக்களின் புனிதத் தலமாக உள்ள இராமேஸ்வரம் இத்தீவின் முக்கிய நகரம் ஆகும்.


PC: Ravichandar84

பாம்பன் பாலத்திலிருந்து தீவின் காட்சி

பாம்பன் பாலத்திலிருந்து தீவின் காட்சி

பாம்பன் தீவு கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்கள் அகலம் கொண்டது.

இதன் நீளம் தனுஷ்கோடி முதல் இராமேஸ்வரம் வரை ஏறக்குறைய 7 கிமீ வரை பரந்துள்ளது.

PC: KARTY JazZ

பாம்பன் பாலம்

பாம்பன் பாலம்

பாம்பன் பாலம் பாக் நீரிணையில் ராமநாதபுர மாவட்டத்தையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரு பாலம் ஆகும். இதற்கு ஒரு தனிச் சிறப்புண்டு. அதாவது இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.

இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும்.

PC: ShakthiSritharan

பாம்பன் பாலம் செயல்பாடு

பாம்பன் பாலம் செயல்பாடு

இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் தொடருந்து பாலம் இதுவாகும். இதன் நீளம் 2.3 கிமீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது.

இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர்.

PC: Rockfang

பாம்பன் பாலத்திலிருந்து தீவின் காட்சி

பாம்பன் பாலத்திலிருந்து தீவின் காட்சி

இது வங்காள விரிகுடாக் கடலின் கரையில் அமைந்துள்ளது.இங்கு பல தீர்த்தங்கள், பல கோவில்கள் அமைந்துள்ளன. புகழ் பெற்ற ஆலயங்களுள் இங்கு உள்ள ராமநாதசுவாமி ஆலயமும் ஒன்று.

PC: Achuudayasanan

ராமநாதசுவாமி கோவில்

ராமநாதசுவாமி கோவில்


இங்கு ராமநாதசுவாமி கோவில் இறுதியில் கொடுக்கப்பட்டிருந்தாலும், உங்கள் நேர மேலாண்மை கருதி காலையில் முதல் வேளையாக சுவாமியை தரிசனம் செய்துவிட்டு கடற்கரை அழகை ரசிக்கலாம்.

இராமநாதசுவாமி கோயில் இந்து சமயத்தின் ஒரு முக்கிய புனித வழிபாட்டிடமாதலால் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். உலகின் மிக நீண்ட பிரகாரம் கொண்ட கோவில் என்ற பெருமை இக்கோவிலுக்கு உண்டு.

PC: Himanis Das

தீர்த்தங்கள்

தீர்த்தங்கள்

இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அவை,

மகாலட்சுமி தீர்த்தம்,கெந்தமாதன தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், ரமஹத்தி விமோசன தீர்த்தம், காயத்திரி தீர்த்தம் , கங்கை தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் , யமுனை தீர்த்தம், சங்கு தீர்த்தம், கயை தீர்த்தம், சக்கர தீர்த்தம், சர்வ தீர்த்தம், சேது மாதவர் தீர்த்தம், சிவ தீர்த்தம், நள தீர்த்தம் , சாத்யாமமிர்த தீர்த்தம், நீல தீர்த்தம் , சூரிய தீர்த்தம், கவய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கோடி தீர்த்தம்

PC: எஸ்.பி.கிருஷ்ண மூர்த்தி

தூத்துக்குடி

தூத்துக்குடி

வெறும் 3 மணி நேர பயணத்தில் தூத்துக்குடியை வந்தடையலாம். தூத்துக்குடியில் கிடைக்கும் மக்ரூன் சிறப்பான உணவாகும்.

PC: Ramkumar

 இரவுக் காட்சி

இரவுக் காட்சி

இரவு நேரத்தில் மிளிரும் தூத்துக்குடி நகரம்.

PC: Ramr2r

மக்ரூன்

மக்ரூன்

தூத்துக்குடிக்கு ஸ்பெஷலான உணவு இதுதான்.

PC: Preethan87

திருநெல்வேலி

திருநெல்வேலி

திருநெல்வேலி (அ) நெல்லை நகரம், பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது

PC: Nijumania

Read more about: travel, pongal