» »பழனி முருகன் கோயிலை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

பழனி முருகன் கோயிலை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

Posted By: Staff

தங்கத்தமிழில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ பக்தி இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் சிவனையும், விஷ்ணுவையும் விட முருகன் கொண்டாடப்பட்டிருப்பது புலனாகும். படைத் தலைவனாக, மகனாக, தமையனாக, காதல் கணவனாக, தமிழ்க்கடவுளாக திகழ்கிறான் அழகின் உருவான முருகன்.

பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்க புதையல்கள் நிறைந்த மலை

அண்டம் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளான சிவ பெருமானுக்கே பாலகனாக இருக்கும் போது பாடம் எடுத்த பெருமையுடைய முருகனுக்கு கோயில்கள் இல்லாத ஊரே தமிழ்நாட்டில் இல்லை எனலாம். அப்படி ஆயிரக்கணக்கான கோயில்கள் இருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் தலையானதாக இருப்பது ஞானப் பழத்திற்காக கோபித்துக்கொண்டு தன்னாடு, தன்மக்கள் என்று வந்து அமர்ந்த பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் ஆகும்.  

நெடுவாசலில் அப்படி என்னதான் இருக்கு?

தமிழராய் பிறக்கும் பேறுபெற்ற ஒவ்வொருவரும் கட்டாயம் செல்லவேண்டிய இக்கோயிலை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.   

கோயில் புராண வரலாறு

கோயில் புராண வரலாறு

பிரபலமாக அறியப்படும் கதைப்படி நாரத முனிவர் கயிலாய மலைக்கு சென்று சிவனிடம் தனக்கு கிடைத்த ஞானப்பழத்தை அன்பளிப்பாக வழங்குகிறார்.

தான் இதை புசிப்பதை விடவும் தன் பிள்ளைகள் இதை உண்பதே சரி என்று முடிவெடுத்த சிவபெருமான் விநாயகர் மற்றும் முருகனை அழைத்து 'யார் முதலில் உலகத்தை மூன்று முறை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்த ஞானப்பழம்' என்று ஒரு போட்டியை வைக்கிறார்.

கோயில் புராண வரலாறு

கோயில் புராண வரலாறு

இதைக் கேட்டவுடன் முருகன் தனது மயில்வாகனத்தில் ஏறி உலகைச் சுற்றிவருகிறார். ஆனால் விநாயகரோ சமயோசிதமாக தன் பெற்றோரே தமக்கு உலகம் என்று கூறி சிவன்-பார்வதியை மூன்று முறை வலம் வந்து ஞானப்பழத்தை பெறுகிறார்.

உலகச் சுற்றிவந்த முருகன் இதுகண்டு கடும் கோபம்கொண்டு தென்னகம் வந்து பழனி மலையில் முற்றும் துறந்து தவத்தில் ஈடுபடுகிறார் என்று ஒரு புராண வரலாறு உண்டு.

கோயில் புராண வரலாறு

கோயில் புராண வரலாறு

மற்றொரு புராணக்கதைப்படி சிவ பெருமானை தரிசிக்க எல்லா முனிவர்களும், ரிஷிகளும் கயிலாயம் வந்துவிட பூமியின் எடை ஒருபக்கமாக அதிகரித்ததன் காரணமாக உலகம் சமநிலை இழந்துவிட சிவபெருமான் அகத்திய முனிவரை தென் பக்கம் சென்று சமநிலையை சரி செய்யுமாறு பணிக்கிறார்.

அகத்திய முனிவரோ இடும்பன் என்ற அரக்கனை அழைத்து தனது தோளில் இரண்டு மலைகளை சுமந்து சென்று தென்னகத்தில் வைக்குமாறு ஆணையிடுகிறார். அப்படி இடும்பன் மலைகளை கொண்டு செல்கையில் ஓரிடத்தில் அவற்றை கீழே வைத்துவிட்டு ஓய்வெடுக்கிறார்.

கோயில் புராண வரலாறு

கோயில் புராண வரலாறு

ஓய்வெடுத்த பிறகு மீண்டும் மலைகளை தூக்க முயன்ற இடும்பனால் எத்தனை முயற்சி செய்தும் ஒரு மலையை மட்டும் தூக்கவே முடியாமல் போகிறது.

பின் அந்த மலையின் மேல் சிறுவன் ஒருவன் நிற்பதை கண்டு கடும் சினம் கொள்கிறான் இடும்பன். மலை மீது நிற்கும் சிறுவன் கார்த்திகேயன் தான் என்பதை உணர்ந்த அகத்தியர் முருகனை மன்னிக்குமாறு இடும்பனிடம் வேண்டுகிறார்.

இடும்பன் மன்னித்ததோடு முருகன் நின்ற மலையையும் அதே இடத்தில் விட்டுச் செல்கிறான். இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் தான் பழனி என்றும் இடும்பன் தூக்கி வந்த மலையே பழனி மலையென்றும் சொல்லப்படுகிறது.

SivRami

முருகன் சிலை ரகசியங்கள்

முருகன் சிலை ரகசியங்கள்

பழனியில் இருக்கும் முருகனின் சிலையானது 18சித்தர்களுள் ஒருவரான போகர் என்பவரால் நவபாஷானத்தை கொண்டு உருவாக்கப்பட்டதாம்.

நவபாஷாணம் என்பது மிக வேகமாக இறுகும் தன்மை உடையதாகும். போகர் முருகனின் முகத்தை வடிவமைக்கவே அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் மற்ற பகுதிகளை முகம் அளவிற்கு கலைநயமாக வடிக்க முடியாமல் போய்விட்டதென்று சொல்லப்படுகிறது.

முருகன் சிலை ரகசியங்கள்

முருகன் சிலை ரகசியங்கள்

ஆதி காலத்தில் கோயில் இன்றி வெறும் முருகன் சிலை மட்டுமே வழிபடப்பட்டு வந்திருக்கிறது. பின்னர் காலப்போக்கில் கவனிப்பார் இன்றி சிலை எங்கோ காட்டில் தொலைந்து போயிருக்கிறது.

பின் பல காலம் கழித்து பெருமாள் என்ற சேர மன்னன் பயணக் களைப்பு காரணமாக பழனி மலையின் அடிவாரத்தில் ஓய்வெடுக்கிறார். அம்மன்னனின் கனவில் தோன்றிய முருகன் தன்னுடைய சிலையை கண்டெடுத்து மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்.

முருகன் சிலை ரகசியங்கள்

முருகன் சிலை ரகசியங்கள்

அதனை தொடர்ந்து சேர மன்னன்பெருமாள் இன்று நாம் காணும் கோயிலை எழுப்பி முருகனை பிரதிர்ஷ்டை செய்திருக்கிறான்.

பொதுவாக மற்ற கோயில்களில் முருகன் கிழக்கு நோக்கியே காட்சி தருவார் ஆனால் இங்கு மட்டும் மேற்கு நோக்கி இருக்கிறார். மேலும் இங்குள்ள முருகனின் காதுகள் சற்றே பெரியதாக இருக்கும். பக்தர்களின் குறைகளை ஒன்று விடாமல் கேட்பதால் தான் முருகனின் காது பெரியதானதாக பக்தர்களிடையே ஒரு நம்பிக்கை இருக்கிறது.

வழிபட்டு முறை

வழிபட்டு முறை

விழா பூஜை, சிறு கால பூஜை, கால சாந்தி, உச்சிகால பூஜை, ராஜ அலங்காரம், ராக்கால பூஜை, தங்க வாகன தரிசனம் என தினமும் காலை முதல் இரவு வரை பூஜைகள் நடைபெறுகிறது.

பழனி முருகனுக்கு தினமும் பாலும், சந்தனமும், வாசனை திரவியங்களும் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.

அலங்காரம்

அலங்காரம்

பழனி முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம், வைதீகன் அலங்காரம், வேடன் அலங்காரம், ஆண்டி அலங்காரம் போன்ற அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

இவற்றுள் ராஜ அலங்காரத்தையும், ஆண்டி அலங்காரத்தையும் தரிசிப்பது மிகப்பெரிய பாக்கியமாக கருதப்படுகிறது.

அபிஷேகம்

அபிஷேகம்

நவபாஷாணம் என்ற அற்புத கலவையினால் மூலவரின் சிலை செய்யப்பட்டிருப்பதால் ஒரு நாளைக்கு எத்தனை முறை அபிஷேகம் செய்தாலும் இச்சிலைக்கு ஒரு பாதிப்பும் நேர்வதில்லை.

இச்சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வரும் நீரை பருகினால் தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உண்டு.

முடி காணிக்கை:

முடி காணிக்கை:

பழனிக்கு வரும் பக்தர்கள் தங்கள் தலை முடியை காணிக்கையாக கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அப்படி மொட்டை அடித்த பக்தர்களுக்கு முருகன் சிலைக்கு போடப்பட்டிருந்த சந்தனம் வழங்கப்படுகிறது. ஒரு இரவு முழுக்க நவபாஷாண முருகன் சிலைக்கு சந்தனக் காப்பாக இருந்த இந்த சந்தனத்தை தலையில் தடவுவதால் எண்ணற்ற நன்மைகள் ஏற்ப்படும் என சொல்லப்படுகிறது.

balu

பஞ்சாமிரிதம்:

பஞ்சாமிரிதம்:

பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது. தேன்,பேரிச்சை, வாழை, உலர்த்த திராட்சைகள், மற்றும் வெல்லம் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பஞ்சாமிர்தம் விநாயகப்பெருமானால் முதன்முதலில் தயாரிக்கப்பட்டதாக புராணங்களில் சொல்லப்படுகிறது.

திருவிழாக்கள்:

திருவிழாக்கள்:

பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் கோயிலில் தை பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் போன்றவை மிக முக்கிய விழாக்கள் ஆகும்.

இவற்றுள் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடக்கும் தை பூச விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். இதில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் மாலையிட்டு, பல நாட்கள் விரதம் இருந்து காவடி தூக்கி, வெறும் காலில் பாதயாத்திரையாக பழனிக்கு வருகின்றனர்.

திருவிழாக்கள்:

திருவிழாக்கள்:

இப்படி பாதயாத்திரையாக வருபவர்களுள் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்கள் காரைக்குடி முருகன் கோயிலில் இருந்து வரும் பக்தர்கள் தான்.

இவர்கள் காரைக்குடி முருகன் கோயிலில் இருந்து வைர வேலை எடுத்துவந்து முருகனுக்கு சமர்ப்பிக்கின்றனர்.

எப்படி சென்றடைவது:

எப்படி சென்றடைவது:

பழனி முருகன் கோயிலானது கோயம்பத்தூரில் இருந்து 100கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. அங்கிருந்தும் மற்ற தமிழக நகரங்களில் இருந்தும் தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குடும்பத்துடன் பழனிக்கு செல்பவர்கள் பழனியில் இருந்து வெறும் 58கி.மீ தொலைவில் இருக்கும் கொடைக்கானலுக்கும் அப்படியே சுற்றுலா சென்று வாருங்கள்.

Ajith

பயண வழிகாட்டி :

பயண வழிகாட்டி :

பழனி முருகன் கோயிலை பற்றிய மேலும் பல பயனுள்ள பயண தகவல்களை தமிழில் இருக்கும் ஒரே பயண இணையதளமான தமிழ்நேடிவ் பிளானட்டில் அறிந்துகொள்ளுங்கள்.