» »சீதக்காதி - பின்னணியும் சுற்றுலாவும்

சீதக்காதி - பின்னணியும் சுற்றுலாவும்

Written By: Udhaya

சீதக்காதி தமிழகத்தின் புகழ்பெற்ற வள்ளல்களில் ஒருவர் ஆவார். இவர் இயற்பெயர் செய்யது அப்துல் காதிர் மரைக்காயர் என்பதாகும். இவர் பிறந்து வளர்ந்த ஊர்கள் எல்லாம் தற்போது மிகச் சிறப்பான சுற்றுலாத்தளமாக உள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

கீழக்கரையை காயல் என்று பழங்காலத்தில் அழைத்து வந்துள்ளனர். மேலும் தற்போது பலர் இந்த காயல் எனும் பெயரைக்கொண்டு சீதக்காதி வள்ளல் காயல் பட்டினத்தில் பிறந்தவர் என்றும் கூறப்படுகிறது.

கீழக்கரை

கீழக்கரை

கீழக்கரை புகழ்பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மிக பழமையான இடம் ஆகும். இது பல வரலாற்று நிகழ்வுகளுக்குப் பெயர் பெற்ற ஊர். அப்துல்கலாம் ஐயா அவர்களும் இந்த ஊருக்கு அருகே தான் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழக்கரை ஒரு நகராட்சிப்பகுதி ஆகும். இது புகழ்பெற்ற உத்திரகோசமங்கைக்கு அருகே அமைந்துள்ளது.

இங்கு கப்பலடி முனீஸ்வரன் கோயில், பெத்தேரி தேவாலயம்ஸ அந்தோணியார் தேவாலயம், ஜூமா மசூதி, பாலமுருகன் கோயில் ஆகியன குறிப்பிட்டு சொல்லக்கூடிய புனித தலங்கள் ஆகும்.

இங்குள்ள வழிவிடுமுருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் துன்பம் நீங்கி நல்ல நிலைக்கு வரலாம் என்பது நம்பிக்கை.

 காயல்பட்டினம்

காயல்பட்டினம்

காயல்பட்டினம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இடமாகும்.

தூத்துக்குடி மாவட்டம் இயற்கையிலேயே கடலோடு சேர்ந்த சுற்றுலா அமைப்பைக் கொண்டது. மேலும் இங்கு காயல்பட்டினம் கடற்கரை வெகு மக்களை கவரக்கூடிய தலமாகும்.

பத்ரகாளியம்மன் கோயில் உட்பட பல கோயில்களும், புனித தலங்களும் அமைந்துள்ளன.

 ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

தமிழ் நாடு மாநிலத்தின் கிழக்கு கிடற்கரையில் உள்ள கறைபடாத, அமைதியான நகரம் பாம்பன் தீவின் ஒரு பகுதியாக உள்ள இராமேஸ்வரம் நகரமாகும். பாம்பன் கால்வாய் வழியாகவே இந்த நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மன்னார் தீவுகள் இராமேஸ்வரத்திற்கு அருகிலேயே 50 கிலோமீட்டர் தொலைவிலேயே இருந்தாலும் கடல் வழியாக செல்வதாக இருந்தால் 1403 கிலோமீட்டர் தூரம் சுற்றித்தான் செல்லவேண்டும்.
இந்துக்களின் புனிதத் தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இராமேஸ்வரத்திற்கு கண்டிப்பாக ஒவ்வொருவரும் 'சார் தம்யாத்ரா' அல்லது புனிதப் பயணம் செய்ய வேண்டும். மகா விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், இலங்கை மன்னன் இராவணன் கடத்திச் சென்று சிறை வைத்த தன்னுடைய மனைவி சீதா தேவியை மீட்கும் பொருட்டாக, இலங்கைக்கு தரைப்பாலத்தைக் கட்டிய இடம் தான் இன்றைய இராமேஸ்வரம் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

இவை தவிர்த்து இங்கு நிறைய சுற்றுலா அம்சங்கள் உள்ளன.

 சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்

நீர்ப்பறவை சரணாலயம், நம்பு நாயகி அம்மன் கோயில், அக்னி தீர்த்தம், அரியமான் கடற்கரை, உத்திரகோசமங்கை, இராமலிங்க அரண்மனை, கோதண்டராமர் கோயில், பாம்பன் பாலம் உள்ளிட்ட எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் இங்கு அருகாமையில் உள்ளன.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


ராமநாதபுரம் நகரிலிருந்து அரைமணி நேரத்தொலைவில் அமைந்துள்ளது கீழக்கரை. இது 20கிமீக்கு சற்று குறைவான தூரம் ஆகும். இங்கிருந்து வெகு அருகில் ராமேஸ்வரம் அமைந்துள்ளது.

மேலும் சித்தார்கோட்டை, தேவி பட்டிணம் ஆகியவை அருகிலுள்ளன.

பஞ்சமுக அனுமான் கோவில்

பஞ்சமுக அனுமான் கோவில்


ஐந்து முகங்களையுடைய அனுமான் கோவில் இராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலிற்குப் பின்னர் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் இராமர், அவருடைய துணைவியார் சீதா தேவி மற்றும் அனுமனின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 1964-ம் ஆண்டு தனுஷ்கோடி கிராமத்தைப் புயல் தாக்கி அழித்த போது அங்கிருந்த இந்த சிலைகள் இப்போதுள்ள இடத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகளுக்குள் இந்த கடவுள்களின் ஆன்மா இருக்கிறது என ஆச்சரியமூட்டும் வகையில் நம்பப்படுகிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த கோவிலிற்கு வந்து செல்கின்றனர்.

ஜடா தீர்த்தம்

ஜடா தீர்த்தம்


இரமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 3.5 கிமீ தொலைவில் ஜடா தீர்த்தம் அமைந்துள்ளது. தனுஷ்கோடிக்கு செல்லும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஜடா தீர்த்தத்திலும் நீராடி செல்வார்கள். ஸ்ரீ இராமருடன் நெருங்கிய தொடர்புடைய இடமான இந்த தீர்த்தத்தில், இராவணனை கொன்று சீதா தேவியை மீட்டுக் கொண்டு அயோத்திக்கு செல்லும் வழியில் இராமர் நின்று சென்றதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இராமர் உருவாக்கி பூஜித்த லிங்கம் 'இராமலிங்கம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் இராமர் தனது ஜடா என்ற சடைமுடியை அலசி பிராமண வதம் செய்த பாவத்தை களைந்தார். தனது பாவங்களை கழுவி சுத்தம் செய்த பின்னர் தான் இராமர் சிவலிங்கத்தை வணங்கினார்.

குருசடை தீவு

குருசடை தீவு


குருசடை தீவு வெளியிட ஜீவராசிகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் சொர்க்கமாக இருக்கும் தீவாகும். இந்த தீவிற்கு வருபவர்களில பெரும்பாலோர் கடலுயிர் பற்றிய சிறப்பு வல்லுநர்களாகவோ அல்லது நீர் சம்மந்தமான உயிர்களை ஆராய்ச்சி செய்பவர்களாகவோ இருந்து கடலுயிர் வாழ்க்கை முறையை தீவிரமாக கவனித்து, கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவர்களாகவே இருப்பார்கள். எனினும், இந்த தீவு தனித்தன்மையான பவளப்பாறைகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும். மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் இந்த தீவுகள், மண்டபம் பகுதியில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. மன்னார் வளைகுடாவில் வாழ்க்கையை அனுபவித்திடும் டால்பின்கள் மற்றும் கடற்பசுக்களை இந்த தீவில் உங்களால் காண முடியும்.

உத்திரகோசமங்கை

உத்திரகோசமங்கை

இராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் சிவ பெருமானுக்கான கோவிலான உத்திரகோசமங்கை ஒவ்வொரு வருடமும் சைவப்பிரிவினை சேர்ந்தவர்களை பெருமளவில் வரவழைக்கும் சுற்றுலா தலமாகும். மாணிக்கவாசகரின் வரிகளில் இந்த புகழ் பெற்ற கோவிலை பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த கோவிலை பரமக்குடி மற்றும் இராமநாதபுரத்திலிருந்து எளிதில் அடைய முடியும். சேது மாதவ தீர்த்தம், லட்சுமண தீர்த்தம் மற்றும் இராமநாதபுரம் போலவே இந்த புனிதத்தலமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த கோவில் நாடு முழுவதுமுள்ள இந்துக்களால் மிகவும் போற்றப்படும் இடமாக விளங்குகிறது.

 அரியமான் கடற்கரை

அரியமான் கடற்கரை

பாக் நீரிணைப்பின் ஒரு பகுதியில் அமைந்துள்ள அரியமான் கடற்கரை நன்றாக பராமரிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்காக, எப்பொழுதும் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும் பிடித்தமான கடற்கரையாகும். சுற்றுலா வருவதை மட்டுமே பொழுது போக்காக கொண்டிருக்கும் இராமேஸ்வரம் பகுதி மக்களில் பெரும்பாலோனோர் அடிக்கடி வந்து செல்லும் கடற்கரையாக இது உள்ளது. உண்மையில், அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் தங்களுடைய வார இறுதி நாட்களை கழித்திட பெருவாரியான மக்கள் வரும் கடற்கரையாகவும் அரியமான் கடற்கரை உள்ளது. நீலக்கடல் நீர் மின்னுவதாகவும், நாள் முழுவதும் அமைதியாகவும் இருக்கக் கூடிய அழகிய கடற்கரையாக அரியமான் கடற்கரை உள்ளது. நாள் முழுவதும் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரை சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். இராமநாதசுவாமி கோவிலிலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள இந்த கடற்கரை 150மீ அகலமும், 2 கிமீ நீளமும் உடையதாகும்.

Read more about: travel beach ramanadhapuram

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்