» » லிங்கத்தை வழிபடும் அதிசய நவகிரகங்கள் எங்கு தெரியுமா?

லிங்கத்தை வழிபடும் அதிசய நவகிரகங்கள் எங்கு தெரியுமா?

Posted By: Udhaya

இந்துக்களின் இறை வழிபாட்டில் நம்பப்படும் ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும். கிரகம் என்றால் ஆளுகைப்படுத்தல் என பொருள்.

நவக்கிரகம் என்பது , ஒன்பது கிரகங்களின் ஆளுமைக்குரிய எனப் பொருள்படும். புவியிலுள்ள உயிர்களை ஆளுமைபடுத்துகின்ற அண்டங்களின் வெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.


உலகத்திலேயே 2-வது பெரிய சிவன் சிலை

நவக்கிரங்களை தமிழில் ஒன்பது கோள்கள் என்று அழைக்கின்றனர்.

இந்திய சோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும். இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும்.

எனினும் தற்கால அறிவியல் அடிப்படையில் இவைகளில் சில மட்டுமே உண்மையான கோள்கள். சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்). சந்திரன் பூமியின் துணைக்கோள். இராகு, கேது இரண்டும் விண் பொருட்களே அல்ல. இவை நிழற் கோள்கள் எனப்படுகின்றன அதாவது இல்லாத கிரகங்களாக கருதப்படுகின்றன..

பெங்களுருவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய நந்தியை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

கோள்கள் மனிதர்கள் மீதும், உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் மீதும் அதிகாரம் செலுத்துகின்றன எனும் நம்பிக்கையை கொண்டு கட்டமைக்கப்பட்டதே சோதிடத்தின் அடிப்படையாகும்.

பூமி அண்டத்தின் மையத்தில்

பூமி அண்டத்தின் மையத்தில்

பூமி அண்டத்தின் மையத்தில் இருப்பதாகவும், சூரியன் உட்பட்ட எல்லாக் கோள்களும் அதனைச் சுற்றி வருகின்றன என்றும் பழங்கால நம்பிக்கையில் சோதிடம் எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஏற்பவே சோதிடத்தில் கோள்களின் இயக்கங்கள் கணிக்கப்படுகின்றன.

Anant Shivaji Desa

ஏழு கோள்களும் தேவர்கள்

ஏழு கோள்களும் தேவர்கள்

பண்டைய இந்தியப் பண்பாட்டில் இராகு, கேது தவிர்ந்த ஏழு கோள்களும் தேவர்கள் எனவும், அவர்கள் வெவ்வேறு குண இயல்புகளைக் கொண்டவர்கள் எனவும் கருதினார்கள். இக் கோள்கள், அவரவர் குண இயல்புகளுக்கு ஏற்ப உலகுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் நன்மையையோ தீமையையோ செய்கிறார்கள் எனச் சோதிட நூல் கூறுகிறது.

Karthickbala

லிங்கத்தை வழிபடும் நவக்கிரகங்கள்

லிங்கத்தை வழிபடும் நவக்கிரகங்கள்

ஒரு குறிப்பிட்ட நேரத்தில், புவிக்குச் சார்பாக விண்வெளியில் கோள்கள் இருக்கும் நிலையும், ஒவ்வொரு கோளும் ஏனைய கோள்களின் நிலைகளோடு கொண்டுள்ள தொடர்பும் புவியில் இடம்பெறும் நிகழ்வுகள் மீது அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பாதிக்கின்றன என்று சோதிடம் கருதுகிறது. சரி லிங்கத்தை வழிபடும் நவக்கிரகங்கள் உள்ள தலத்துக்கு போகலாமா?

PC: Sengai Podhuvan

நாகநாதர் கோயில்

நாகநாதர் கோயில்

கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் என்பது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலம் ஆகும். இத்தலத்தின் மூலவர் நவக்கிரங்களில் ஒருவரான கேது தலமாகும்.
இச்சிவாலயத்தின் மூலவரை நாகநாதர் எனவும், அம்பாள் சவுந்தர்யநாயகி எனவும் அழைக்கப்படுகின்றார்.

Rsmn

அமைப்பு

அமைப்பு


நுழைவாயிலில் இறைவன் தேவியுடன் காளைமீது அமர்ந்த நிலையில் உள்ள சுதைச்சிற்பம் உள்ளது.

விநாயகர்

விநாயகர்

வாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம்.

நாகநாத சாமி

நாகநாத சாமி

மூலவராக நாகநாதர் உள்ளார்.

 தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் சேது சன்னதி உள்ளது.

சன்னதிகள்

சன்னதிகள்

திருச்சுற்றில் விநாயகர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், துர்க்கை, யோக நரசிம்மர், லட்சுமி நாராயணர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

Read more about: travel