Search
  • Follow NativePlanet
Share
» »பாலபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசயம் நிகழும் திருநாகேஸ்வரம் ராகு கோயில் !!

பாலபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசயம் நிகழும் திருநாகேஸ்வரம் ராகு கோயில் !!

By Naveen

கோயில்களின் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் இருக்கும் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று திருநாகேஸ்வரம் ராகு கோயிலாகும். சைவத்திருத்தலமான இக்கோயில் நவகிரக ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து இறைவனை மனமுருகி வேண்டினால் தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

அதோடு ராகு காலத்தின் போது இங்கிருக்கும் பாம்பின் வடிவான ராகுவின் விக்ரகத்திற்கு பாலபிஷேகம் செய்யும் போது அந்த பால் நீல நிறத்தில் மாறுவதாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட அதிசயம் நிகழும் திருநாகேஸ்வரம் கோயிலை பற்றிய மேலும் பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - எங்கே அமைந்திருக்கிறது?

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - எங்கே அமைந்திருக்கிறது?

தஞ்சை மாவட்டத்தில் கோயில்களின் நகரம் எனப்படும் கும்பகோணம் நகரில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில் தான் இந்த ராகு ஸ்தலம் கோயில் உள்ளது.

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - மூலவர்:

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - மூலவர்:

சைவத்திருக்கோயிலான இதன் மூலவராக சிவபெருமான் நாகநாதராக லிங்க ரூபத்தில் வீற்றிருக்கிறார். சிவபெருமானின் உமையாள் பார்வதி தேவி பிறைசூடி அம்மனாக காட்சிதருகிறார்.

நாயன்மார்களால் தேவாரத்தில் பாடல்பெற்ற ஸ்தலம் என்ற சிறப்பும் இக்கோயிலுக்கு உண்டு.

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - அமைப்பு:

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - அமைப்பு:

இந்த கோயில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஒருசில வரலாற்று அறிஞர்களோ இக்கோயில் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் ஆதித்ய சோழனால் இக்கோயில் கட்டப்பட்டது என்ற கூற்றை முன்வைக்கின்றனர்.

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - அமைப்பு:

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - அமைப்பு:

பின்னாளில் வந்த நாயக்கர்கள் மற்றும் மாராத்திய மன்னர்களால் இக்கோயில் மேலும் விஸ்தரிப்பு செய்யப்பட்டிருக்கிறது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட அலங்கார நுழைவுவாயில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும்.

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - புராண வரலாறு:

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - புராண வரலாறு:

நாகங்களின் அரசனான ஆதிசேஷன் சிவபெருமானின் அருள் வேண்டி பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்திருக்கிறான். அவனின் தவத்தில் திருப்தியுற்ற சிவபெருமான் ஆதிசேஷன் முன்பு தோன்றி அவன் வேண்டிய வரத்தை அளித்ததோடு மட்டுமில்லாமல் இதே இடத்தில் நாகநாதராக தோன்றி மனிதனுக்கு தீங்கு விளைவிப்பதில் முதன்மையானதான ராகுவிடம் இருந்து பக்தர்களை காப்பேன் என்றும் உறுதியளிக்கிறார்.

திருநாகேஸ்வரம் ராகு கோயில்

திருநாகேஸ்வரம் ராகு கோயில்

இங்கே நவகிரகங்களில் ஒன்றான ராகுவுக்கு தனி சந்நிதி உள்ளது. பொதுவாக ராகு பகவான்மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார்.
ஆனால் இங்கே முற்றிலும் மனித வடிவில் காட்சி தருகிறார்.

மேலும் ராகு பகவானுடன் அவரின் மனைவியரான நாகவல்லி, நாக்கன்னி ஆகியோருடன் காட்சிதருவது இன்னும் சிறப்பு.

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - கிரி குசாம்பிகை :

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - கிரி குசாம்பிகை :

மிகப்பெரும் சிவ பக்தரான பிருங்கி முனிவர்சிவனை மட்டுமே வழிபடும் வழக்கம் உடையவர். அவர் தன்னை வணங்காதது கண்டு கோபம்கொண்ட பார்வதி தேவிஅர்த்தநாரீஸ்வரர் ஆக இறைவனின் இடது பாகத்தைப் பெற்றாள்.

அப்போதும் வண்டின் ரூபம் தரித்த முனிவர்ஈசனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார். அப்போது சக்தி முனிவரின் உடலில் இருந்து தனது அம்சமான ரத்தத்தையும் சதையையும் எடுத்துவிடுகிறார். இருந்தும் எலும்புக்கூடான நிலையிலும் முனிவர் சிவனை வழிபடுவதை நிறுத்தவில்லை.

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - கிரி குசாம்பிகை :

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - கிரி குசாம்பிகை :

இப்படி தனது பக்தனின் வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட சிவபெருமான் பார்வதி தேவியை பூவுலகம் சென்று சிலகாலம் தன்னை விட்டுப் பிரிந்து வழிபட்டு வரும்படியும் மதுரையில் பின்பு அன்னையை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிவிட்டார்.

அப்படி பூலோகம் வந்த பார்வதிக்கு துணையாகஅலைமகளும், கலைமகளும் இருக்கும்படி சிவன் பணித்தார்.

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - கிரி குசாம்பிகை :

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - கிரி குசாம்பிகை :

பார்வதி பூலோகத்தில் செண்பகவனமான இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த போது அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர். இந்தக் கோலத்தையே திருநாகேஸ்வரம் கோவிலில் காண்கிறோம்.

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - நீல நிறமாகும் பால்:

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - நீல நிறமாகும் பால்:

ராகுவுக்கு உகந்த நிறம் பாம்பு விஷத்தின் நிறமான நீல நிறமாகும். இக்கோயிலில் பாலபிஷேகம் செய்யும் போது ராகுவின் தலை மேல் ஊற்றப்படும் பால் கீழே வருகையில் நீல நிறத்தில் மாறும் அதிசயத்தை காணலாம்.

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - பூசை நேரம்:

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - பூசை நேரம்:

பொதுவாக சைவ கோயில்களில் இருப்பதை போலவே இங்கும் தினமும் ஆறு கால பூசைகள் செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் இக்கோயிலில் நடக்கும் மிகமுக்கியமான விழாவாகும்.

அதேபோல கிரி குசாம்பிகை சந்நிதியில் நவராத்திரி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

திருநாகேஸ்வரம் ராகு கோயில்:

திருநாகேஸ்வரம் ராகு கோயில்:

திருநாகேஸ்வரம் கோயிலை பற்றிய மேலும் பல பயனுள்ள பயண தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

ராகு தோஷம் உள்ளவர்கள் நிச்சயம் திருநாகேஸ்வரதிற்கு வந்து நாகநாதரை வழிபடுங்கள்.

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - புகைப்படங்கள்:

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - புகைப்படங்கள்:

விநாயகர் சந்நிதி!!

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - புகைப்படங்கள்:

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - புகைப்படங்கள்:

வாயில் கோபுரம்!!

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - புகைப்படங்கள்:

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - புகைப்படங்கள்:

ராகு தரிசனம் !!

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - புகைப்படங்கள்:

திருநாகேஸ்வரம் ராகு கோயில் - புகைப்படங்கள்:

கல்லில் வடிக்கப்பட்ட தேரின் சக்கரம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X