Search
  • Follow NativePlanet
Share
» »அடிபொலி நூப்ரா பள்ளத்தாக்கு!!!

அடிபொலி நூப்ரா பள்ளத்தாக்கு!!!

By

கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில் அமைந்துள்ள நூப்ரா பள்ளத்தாக்கு, 'பூக்களின் பள்ளத்தாக்கு' என்று பொருள்படும் 'ல்டும்ரா' என்று அழைக்கப்படும் பெயருயுடையதாகும்.

கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண பூக்களின் அணிவகுப்பைக் காண முடியும். இந்தப் பள்ளத்தாக்கு பகுதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் தலைநகர் லேவிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ளது.

நூப்ரா பள்ளத்தாக்கின் ஹோட்டல்கள்

நூப்ரா பள்ளத்தாக்கின் சுற்றுலாத் தலங்கள்

நூப்ரா பள்ளத்தாக்கின் சுற்றுலாத் தலங்கள்

கார்டுங் லா கணவாய், டிஸ்கிட் மடாலயம், மைத்ரேய புத்தர் ஆகியவை நூப்ரா பள்ளத்தாக்கின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் நூப்ரா பள்ளத்தாக்கைச் சுற்றி அட்டகாசமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துகிடக்கின்றன.

படம் : alex hanoko

குளிர் பாலைவனம்!

குளிர் பாலைவனம்!

குளிர் பாலைவனமான நூப்ரா பள்ளத்தாக்கில் மழை வரத்து மிகவும் குறைவு. அப்படி பெய்கின்ற மழையும் பனியாறுகள் நிறைந்த பகுதியில்தான் பெய்யும் என்பதோடு, இங்கு மழைக்காலம் என்பதே கிடையாது.

படம் : shankii

சிறிய ஏரி

சிறிய ஏரி

நூப்ரா பள்ளத்தாக்கு பகுதியில் காணப்படும் சிறிய ஏரி ஒன்று.

படம் : Rohit Ganda

கார்டுங் லா கணவாய்

கார்டுங் லா கணவாய்

18380 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கணவாய் தான் உலகத்திலேயே மிகவும் உயரமான வாகனப் போக்குவரத்து சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணவாய் நூப்ரா பள்ளத்தாக்கில் லடாக் மற்றும் காரகோரம் மலைத்தொடருக்கு மத்தியில் அமைந்துள்ளது.

படம் : Michael Day

ஹுந்தர் கிராமம்

ஹுந்தர் கிராமம்

நூப்ரா பள்ளத்தாக்குக்கு அருகிலுள்ள ஹுந்தர் கிராமம்.

படம் : vaidyanathan

மைத்ரேய புத்தர்

மைத்ரேய புத்தர்

நூப்ரா பள்ளத்தாக்கிலுள்ள முதன்மையான பார்வையிடங்களில் ஒன்றான மைத்ரேய புத்தர் சிலை 'சிரிக்கும் புத்தர்', 'எதிர்காலத்தின் புத்தர்' என்று அழைக்கப்படுகிறது. டிஸ்கிட் மடாலயத்திலுள்ள இந்த மைத்ரேய புத்தர் சிலை 32 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

படம் : John Hill

பனிக்கு நடுவே!

பனிக்கு நடுவே!

கார்டுங் லா கணவாயில் உறைந்துகிடக்கும் பனிக்கு நடுவே வாகனங்கள் செல்லும் காட்சி.

படம் : Michael Day

ஷியோக் நதி

ஷியோக் நதி

லடாக் மற்றும் காரகோரம் மலைத்தொடரை பிரித்து மிகப்பெரிய பள்ளத்தாக்காக நூப்ரா பள்ளத்தாக்கு விளங்குவதற்கு ஷியோக் நதியும் காரணம். இந்த நதி நூப்ரா பள்ளத்தாக்கில் ஷியாச்சென் பனியாறுடன் இணைகிறது.

படம் : Mahuasarkar25

ஷியாச்சென் பனியாறு

ஷியாச்சென் பனியாறு

நூப்ரா பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் ஷியாச்சென் பனியாறு.

படம் : Steve Hicks

பனாமிக் வெப்ப நீரூற்று

பனாமிக் வெப்ப நீரூற்று

நூப்ரா பள்ளத்தாக்கைச் சேர்ந்த பனாமிக் எனும் சிறிய கிராமத்தில் இந்த பனாமிக் வெப்ப நீரூற்று அமைந்துள்ளது.

படம் : Elroy Serrao

ஒண்டி நெடுஞ்சாலை

ஒண்டி நெடுஞ்சாலை

ஸ்ரீநகரிலிருந்து, லே செல்லும் ஒண்டி நெடுஞ்சாலை. லேவை அடைந்த பிறகே நூப்ரா பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்ல முடியும்.

படம் : Fulvio Spada

பூக்களின் பள்ளத்தாக்கு

பூக்களின் பள்ளத்தாக்கு

பூக்களின் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் நூப்ரா பள்ளத்தாக்கில் பூத்துக்குலுங்கும் மலர்கள்.

படம் : Fulvio Spada

மணற்குன்றுகள்

மணற்குன்றுகள்

நூப்ரா பள்ளத்தாக்கில் காணப்படும் மணற்குன்றுகள்.

படம் : Raghavan V

பக்டீரியன் ஒட்டகம்

பக்டீரியன் ஒட்டகம்

பக்டீரியன் ஒட்டகம் என்பது இரண்டு திமில்களைக் கொண்ட ஒட்டகமாகும். பக்டீரியன் ஒட்டகத்தில் சவாரி செல்வது நூப்ரா பள்ளத்தாக்கில் மிகவும் பிரபலம்.

படம் : Ajay Tallam

ஒட்டகச் சவாரி

ஒட்டகச் சவாரி

பக்டீரியன் ஒட்டகத்தில் சவாரி செல்லும் சுற்றுலாப் பயணி.

படம் : John Hill

இராணுவ முகாம்

இராணுவ முகாம்

நூப்ரா பள்ளத்தாக்கில் கியாகர் என்ற இந்திய இராணுவ முகாம் ஒன்று உள்ளது. அந்த முகாமுக்கு வாகனங்களில் செல்லும் இராணுவ வீரர்கள்.

படம் : Dan

வளைந்து நெளிந்து செல்லும் பாதை!

வளைந்து நெளிந்து செல்லும் பாதை!

நூப்ரா பள்ளத்தாக்குக்கு வளைந்து நெளிந்து செல்லும் பாதை.

படம் : Bharath Kumar V

கார்டுங் லா கிராமம்

கார்டுங் லா கிராமம்

நூப்ரா பள்ளத்தாக்கிலிருந்து கார்டுங் லா கணவாய் செல்லும் வழியில் உள்ள கார்டுங் லா கிராமம்.

படம் : rv

வனப்பு

வனப்பு

நூப்ரா பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் பசுமையின் வனப்பை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

படம் : Sebastian Preußer

ஓடை

ஓடை

நூப்ரா பள்ளத்தாக்கில் இதுபோன்ற சிறுசிறு ஓடைகள் ஆங்காங்கு காணப்படும்.

படம் : Sebastian Preußer

நீரருந்தும் கால்நடைகள்

நீரருந்தும் கால்நடைகள்

ஓடை ஒன்றில் நீரருந்தும் கால்நடைகள்.

படம் : alex hanoko

இராணுவச் சாலை

இராணுவச் சாலை

சங்தாங் குளிர் பாலைவனத்துக்கு செல்லும் இராணுவச் சாலை.

படம் : Sankara Subramanian

உறைந்த பனியாறு

உறைந்த பனியாறு

நூப்ரா பள்ளத்தாக்கின் பனிக்காலங்களில் பனியாறுகள் எல்லாம் இப்படித்தான் உறைந்த நிலையில் காணப்படும்.

படம் : Madhav Pai

உயர்ந்தோங்கிய மலைகள்

உயர்ந்தோங்கிய மலைகள்

நூப்ரா பள்ளத்தாக்கிலிருந்து தெரியும் உயர்ந்தோங்கிய மலைகள்.

படம் : solarisgirl

டிஸ்கிட் மடாலயத்திலிருந்து...

டிஸ்கிட் மடாலயத்திலிருந்து...

டிஸ்கிட் மடாலயத்திலிருந்து தெரியும் நூப்ரா பள்ளத்தாக்கின் தோற்றம்.

படம் : Sitaram Shastri

பூந்தோட்டம்

பூந்தோட்டம்

மலைகளுக்கு அருகாமையில் இதுபோன்ற பூந்தோட்டத்தை கண்டு ரசிக்கும் அனுபவம் அலாதியானதுதானே?!

படம் : Alosh Bennett

பனிமலைகள்

பனிமலைகள்

நூப்ரா பள்ளத்தாக்கு செல்லும் வழியில் காணப்படும் பனிபடர்ந்த மலைகள்.

படம் : Sistak

செல்லும் வழி

செல்லும் வழி

நூப்ரா பள்ளத்தாக்கு செல்லும் வழி.

படம் :Sebastian Preußer

மிஸ் பண்ணிடாதீங்க!!!

மிஸ் பண்ணிடாதீங்க!!!

நூப்ரா பள்ளத்தாக்கு வரும்போது ஒட்டகச் சவாரி செய்ய மறந்துடாதீங்க. அப்பறம் ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க!!!

படம் : Karunakar Rayker

நூப்ரா பள்ளத்தாக்கை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

நூப்ரா பள்ளத்தாக்கை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடைவது

எப்போது பயணிக்கலாம்

படம் : Chinchu2

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X