» »மிசோரமில் கொண்டாடலாம் வாருங்கள்... #சாகசஉலா 5

மிசோரமில் கொண்டாடலாம் வாருங்கள்... #சாகசஉலா 5

Written By: Udhaya

இயற்கை வரைந்த ஓவியமாய் பல வடிவங்களில் ஓங்கி ஜொலிக்கும் மலைகளும், மாசு மருவில்லாது விரிந்திருக்கும் புல்வெளிப்பிரதேசங்களும், நெளிவுகளுடன் வளைந்தோடும் ஆறுகளும் வடகிழக்கு இந்தியாவின் விசேஷ அடையாளங்களாகும். இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பிரம்மாண்ட புவியியல் அமைப்பில் இந்த வடகிழக்கிந்திய மாநிலங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக வீற்றிருக்கின்றன. திராவிடம், ஆரியம் ஆகியவற்றோடு ஆசியம் எனும் மற்றொரு அம்சமும் நவீன இந்தியாவின் ஒரு அங்கமாக விளங்குவதை இவை பிரதிபலிக்கின்றன. இப்படி ஒரு விசேஷமான வடகிழக்கிந்தியாவின் ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் மாநிலங்களில் 'மிசோரம்' மாநிலமும் ஒன்று. இங்கு சாகசப் பயணம் செய்வதற்கு நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள்தானே?

லுங்க்லெய்

லுங்க்லெய்

மிசோரத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது லுங்க்லெய். இதனை லுங்க்லெஹ் என்றும் அழைப்பார்கள். அதற்கு பாறையால் செய்யப்பட்ட பாலம் என்று பொருள். ட்லவ்ங் ஆற்றின் கிளையாறாக உள்ள கசிஹ் என்ற ஆற்றிற்கு அருகில் பாலம் போலவே காட்சி அளிக்கும் பாறை ஒன்று உள்ளது. இந்த பாறையாலேயே லுங்க்லெய் இந்த பெயரை பெற்றது.

Coolcolney

புத்தர் ஓவியம்

புத்தர் ஓவியம்


லுங்க்லெய் நகரத்தில் வளமையான பல தாவர வகைகளையும் விலங்கின வகைகளையும் காணலாம். இயற்கை விரும்பிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது இந்நகரம். லுங்க்லெய்யிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள மோல்செங் என்ற கிராமத்தில் புத்தரின் செதுக்கிய ஓவியம் ஒன்றை காணலாம். இதில் அதிசயப்படுகிற விஷயம் என்னவென்றால் இந்த மாநிலத்திலேயே இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் பழங்காலத்தை சேர்ந்த இந்த புத்த ஓவியம் உள்ளது. இது ஒன்று மட்டும் இங்கே எப்படி வந்தது என்ற மர்மம் நீடிப்பதால் லுங்க்லெய் சுற்றுலாவை சுவாரசியமாக மாற்றியுள்ளது இது.

Thyes

 சுற்றியுள்ள தலங்கள்

சுற்றியுள்ள தலங்கள்

லுங்க்லெய்யை சுற்றி பல கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. கான்க்லங் வனவிலங்கு சரணாலயம், காம்சவி பூங்கா, சைகுடி ஹால் மற்றும் மிசோரத்தில் உள்ள துவம்லுயையா மோல் என்ற புற்தரையிலான கால்பந்து மைதானம் ஆகிவைகள் அவற்றில் சில. மேலும் நதியோரமாக உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்காகவும் லுங்க்லெய் சுற்றுலா புகழ் பெற்று விளங்குகிறது.

Krishna Chand Avatar

எப்படி அடையலாம்?

எப்படி அடையலாம்?


மிசோரத்தின் தலைநகரமான ஐசவ்லில் இருந்து 175 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது லுங்க்லெய்யின் மாவட்ட தலைமையகம். தலைநகரோடு மட்டுமல்லாமல் மிசோரத்தின் உள்ள மற்ற பகுதிகளோடும் லுங்க்லெய் இணைக்கப்பட்டுள்ளது. லுங்க்லெய்யின் வானிலை லுங்க்லெய் மாவட்டத்தில் வருடம் முழுவதும் இனிமையான வானிலையே நிலவும். அனைத்து காலங்களிலும் இதன் வானிலை எப்போதாவது தான் அதிகரிக்கும், அதுவும் தாங்கிக்கொள்ளும் அளவில் தான் இருக்கும். இதனால் வருடத்தில் அனைத்து காலங்களிலும் இங்கே சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.

 சம்பை

சம்பை

மிசோராமின் அட்சயப் பாத்திரம் என வழங்கப்படும் சம்பை, மியான்மர் மலைகளை மறைக்கும் வண்ணம் நிமிர்ந்து நிற்கும் தவறவிடக் கூடாத சுற்றுலாதளமாகும். பல வண்ண பூக்களும், வண்ணமும், வளங்களும் நிறைந்த இந்த இடத்தில் தேவதைக் கதைகளில் உள்ளதைப் போல பட்டாம்பூச்சிகளும் மிகுந்து காணப்படுகின்றன.

Bogman

மலைகளின் அழகு

மலைகளின் அழகு

மியான்மர் மலைகளின் நீலநிற தோற்றத்தை அழகுற எடுத்துக்காட்டும் சம்பை, தன்னகத்தே கொண்டுள்ள பழங்கால சின்னங்களாலும், தொல்பொருள் கற்களாலும் தன் பழமையையும், வரலாற்றுப் பெருமையையும் பறைசாற்றியபடி இருக்கிறது. மிஜோராமின் வேகமாக வளரும் ஊர்களில் ஒன்றான சம்பையின் வளர்ச்சிக்கு மியான்மரின் அருகாமையும் ஒரு காரணமாகும். இந்திய மியான்மர் வர்த்தகத்தில் சம்பை முக்கியப் பங்காற்றுகிறது.

אנטוריום

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

இந்தியாவில் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்களில் சம்பை ஒன்றாகும். சமப்பகுதிகள் முழுதும் அழகிய மியான்மர் மலைகளால் சூழப்பட்டுள்ளன. முர்லென் தேசியப் பூங்கா, முரா பூங்கா, ரி தில் ஏரி, தசியாமா செனோ நெய்ஹ்னா ஆகிய இடங்களுக்கு சம்பை புகழ்பெற்று விளங்குகிறது. சம்பையின் கலாச்சார வரலாறு! மிசோராம் மக்களின் வரலாறு சம்பையிலேயே துவங்கி சம்பையிலேயே இறுதியுறுவதாக அறியப்படுகிறது.
Joe Fanai

எப்படி அடையலாம்

எப்படி அடையலாம்


பழங்கால சின்னங்கள், கட்டிடங்கள், நினைவுச்சின்னங்கள் ஆகியவை இங்கு ஏராளமாக உள்ளன. பல இன பழங்குடிகள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். ஹ்மார்ஸ், ரால்த்ஸ், சைலோ போன்றவர்கள் இப்பகுதியை சமப்படுத்தி விவசாய பூமி ஆக்கியிருக்கிறார்கள். சம்பை அடையும் வழி அய்ஜ்வாலில் இருந்து 192கிமீ தொலைவில் உள்ளது சம்பை. சிறப்பான சாலை வசதிகளும், வாடகைப் பேருந்து வசதிகளும் உள்ளது. சம்பை வானிலை மிதமான வானிலை வருடம் முழுதும் நிலவுகிறது. வெயில் காலங்கள் மிதமாகவும், குளிர்காலங்கள் நடுநிலையான வானிலையுடனும் உள்ளன. மழைக்காலத்தில் மிசோராமின் மற்ற இடங்களைப் போலவே அதிகமான மழை பெய்கிறது.

தெஞ்ஜாவ்ல்

தெஞ்ஜாவ்ல்

மிஜோராம் மாநிலத்தில் உள்ள தெஞ்ஜாவ்ல் ஒவ்வொரு சுற்றுலா விரும்பியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அழகிய கிராமமாகும். செர்சிப் மாவட்டத்தில் நிர்வாகத்தின் கீழ வரும் இவ்வூர் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளாக இருந்தது. மிஜோராம் தலைநகர் அய்ஜாவ்லில் இருந்து 43கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது.

R london

காடு

காடு


1961வரை மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருந்த அடர்ந்த காடாக இருந்த இப்பகுதியை 1961 சமப்படுத்தி ஊரக உருவாக்கினார்கள். 1963ல் பெங்குவாயோ சைலோ இவ்வுரை உருவாக்கியதாகவும் நம்பப்படுகிறது. அப்போதிருந்து கைத்தறித் துறையில் இவ்வூர் சிறந்து விளங்குகிறது.

R london

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

வழமைக்கு மாறான, வித்தியாசமான சுற்றுலாவை விரும்புகிறவர்கள் தெஞ்ஜாவ்ல் செல்லலாம். பூக்கள் மற்றும் விலங்குகளுடன் இருக்கும் இவ்வூர் சிறியதாக இருந்தாலும் சில மதிமயக்கும் சுற்றுலா தளங்களைக் கொண்டுள்ளது. வன்டாவ்ங்க் நீர்வீழ்ச்சி என்ற மிஜோராமின் உயரமான நீர்வீழ்ச்சி, தெஞ்ஜாவ்ல் தேசிய மான்கள் பூங்கா, பாம்பிற்கும் ஒரு பெண்ணிற்கும் இடையேயான காதலுக்கு புகழ்பெற்ற சாவ்ங்ச்சி குகை, துவாலுங்கி த்லான் என்ற இடத்தில் தன் கணவனுக்கு அருகில் தன்னைத்தானே புதைத்துக் கொண்ட பெண்ணின் கல்லறை இருப்பதாக நம்புகிறார்கள்.

Joe Fanai

 தெஞ்ஜாவ்ல் அடைய வழி

தெஞ்ஜாவ்ல் அடைய வழி

அய்ஜாவ்லில் இருந்து 43கிமீ தொலைவில் இருக்கும் இவ்வூருக்கு பேருந்து வசதிகளும், தனியார் வாகன வசதியும் உண்டு. அய்ஜாவ்ல் விமானநிலையத்தில் இருந்ந்து கார் மூலமும் பயணிக்கலாம். தெஞ்ஜாவ்ல் வானிலை வருடம்முழுதும் இங்கு மிதமான வானிலையே நிலவுகிறது. வெயில் காலங்களில் மிதமான வெப்பமும், மழைக்காலத்தில் அடர் மழையும், குளிர்காலத்தில் இதமான குளிரும் நிலவுவதால் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

Read more about: travel forest trip

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்