Search
  • Follow NativePlanet
Share
» »இது இந்தியாதான்... ஆனா இங்க இங்குறவங்கள்லாம் கிட்டத்தட்ட பங்களாதேஷ் காரங்க

இது இந்தியாதான்... ஆனா இங்க இங்குறவங்கள்லாம் கிட்டத்தட்ட பங்களாதேஷ் காரங்க

இது இந்தியாதான்... ஆனா இங்க இங்குறவங்கள்லாம் கிட்டத்தட்ட பங்களாதேஷ் காரங்க

இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் 'அகர்தலா நகரம்' கவுஹாத்திக்கு அடுத்ததாக மிக முக்கியமான நகரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இது திரிபுரா மாநிலத்தின் தலைநகரமாகும். மக்கள் தொகை மற்றும் நகர நிர்வாகப்பரப்பு ஆகியவற்றை பொறுத்து இது இப்பிரதேசத்திலேயே இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.

பங்களாதேஷிலிருந்து 2 கி.மீ தூரத்திலேயே உள்ள அகர்தலா ஒரு கலாச்சார கேந்திரமாகவும் விளங்குகிறது. திரிபுரா மாநிலத்தின் மேற்குப்பகுதியில் வீற்றிருக்கும் இந்நகரத்தின் வழியாக ஹரோவா ஆறு ஓடுகிறது. பொழுதுபோக்கு, சாகச அம்சங்கள் மற்றும் கலாச்சார அம்சங்கள் போன்ற யாவும் நிறைந்த ஒரு சுற்றுலா நகரமாக அகர்தலா பெயர் பெற்றிருக்கிறது.

Sharada Prasad CS

அகர்தலாவில் ஓர் அழகிய சுற்றுலா

காட்டுயிர் வளம் மற்றும் தாவரச்செழுமை ஆகியவற்றை கொண்டிருப்பதால் சுவாரசியமான இயற்கை எழில் அம்சங்களுக்கும் குறைவில்லை. புவியியல் ரீதியாகவும் இப்பகுதியிலுள்ள இதர மாநில தலைநகரங்களிடமிருந்து அகர்தலா வேறுபட்டு காட்சியளிக்கிறது. பங்களாதேஷை நோக்கி நீண்டு செல்லும் கங்கை-பிரம்மபுத்திரா சமவெளிப்பிரதேசத்தின் மேற்கு முனையில் இந்த நகரம் அமைந்திருப்பதே இதற்கு காரணம்.

அகர்தலாவில் ஓர் அழகிய சுற்றுலா

அடர்த்தியான கானகப்பகுதியை கொண்டிருப்பது இதன் முக்கியமான சுற்றுலாச்சிறப்பம்சங்களில் ஒன்று. மாநில தலைநகரமாக விளங்கினாலும் பரபரப்பில்லாத உல்லாச பொழுதுபோக்கு நகரம் போன்றே அகர்தலா காணப்படுகிறது. மற்ற பெருநகரங்களை போன்ற பரபரப்பான சூழலை இங்கு பார்க்க முடிவதில்லை. இதன் அமைதியான, சந்தடியற்ற சூழல் சுற்றுலா அனுபவத்திற்கு மிகவும் ஏற்றாற் போல் காட்சியளிக்கிறது. அகர்தலா நகரத்தின் வரலாற்றுப்பின்னணி மஹாராஜா கிருஷ்ண மாணிக்யா எனும் மாணிக்ய ராஜவம்ச மன்னர் தெற்குப்பகுதியில் ரங்கமதியில் இருந்த தம் ராஜ்ஜியத்தின் தலைநகரத்தை இந்த அகர்தலாவிற்கு மாற்றியதிலிருந்து இந்நகரத்தின் வரலாறு துவங்குகிறது.

அகர்தலாவில் ஓர் அழகிய சுற்றுலா

குல்கி வம்சத்தினரின் இடைவிடாத படையெடுப்புகள் இந்த ராஜ்ஜியத்திற்கு தொல்லையாக இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த வங்காளப்பகுதியுடன் அம்மன்னர் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பியதும் இந்த தலைநகர் மாற்றத்துக்கான காரணமாகும்.

அகர்தலாவில் ஓர் அழகிய சுற்றுலா

அகர்தலா நகரத்தை சுற்றி ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிரம்பியுள்ளன. பழமையான கலாச்சாரத்தை தக்க வைத்துக்கொண்டு நவீனமயமாகவும் வளர்ந்திருக்கும் முக்கியமான வடகிழக்குப்பிரதேச நகரங்களில் இது முக்கியமான நகரமாகும். சமஸ்தான மாளிகைகள் மற்றும் அரண்மனைகள் போன்றவறை ஏராளமாக கொண்டுள்ள இந்த நகரத்தில் நவீனக்கட்டிடங்களும் ஒன்றாக கலந்து வண்ணமயமான தோற்றத்தை அளிக்கின்றது.

அகர்தலாவில் ஓர் அழகிய சுற்றுலா

அகர்தலா நகரத்திற்கு விஜயம் செய்யும்போது கீழ்க்கண்ட இடங்களை தவறாமல் பார்த்து ரசிப்பது சிறந்தது.

உஜ்ஜயந்தா அரண்மனை:

மஹாராஜா ராதா கிஷோர் மாணிக்யா என்பவரால் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை அகர்தலா நகரத்தில் முக்கியமாக பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும் 1901ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனை தற்போது மாநில சட்டப்பேரவையாக பயன்படுத்தப்படுகிறது.

அகர்தலாவில் ஓர் அழகிய சுற்றுலா

நீர்மஹால்:

பிரதான நகரத்திலிருந்து 53 கி.மீ தூரத்தில் உள்ள நீர்மஹால் எனும் இந்த கம்பீர அரண்மனை மஹாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்யா என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. ருத்ராசாகர் ஏரியின் வடபகுதியில் வீற்றுள்ள இந்த அரண்மனை ஒரு கோடை வாச மாளிகையாக கட்டப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மற்றும் ஹிந்து கட்டிடக்கலை பாணிகளின் கலவையான அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த அரண்மனை அகர்தலா நகரின் அடையாளமாக புகழ் பெற்றிருக்கிறது.

அகர்தலாவில் ஓர் அழகிய சுற்றுலா


ஜகந்நாத் கோயில்:

அகர்தலா நகரத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றான இந்த ஜகந்நாத் கோயில் ஒரு அற்புத கட்டிடக்கலை அதிசயமாகும். எண்கோண வடிவில் அமைந்துள்ள இந்த கோயிலின் கருவறையைச்சுற்றி அழகான பிரதட்சிணப்பாதை காணப்படுகிறது. 8

அகர்தலாவில் ஓர் அழகிய சுற்றுலா

மஹாராஜா பீர் பிக்ரம் காலேஜ்:

பெயரிலிருந்தே இந்த கல்லூரி பீர் பிக்ரம் அவர்களால் கட்டப்பட்ட ஒன்று என்பதை புரிந்துகொள்ளலாம். தனது ராஜ்ஜியத்தின் இளைய தலைமுறையினருக்கு தரமான உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கல்லூரியை அவர் நிர்மாணித்துள்ளார். இது 1947ம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. லட்சுமிநாராயண் கோயில்: இது அஹர்தலா நகரத்திலுள்ள மற்றொரு முக்கியமான கோயிலாகும். கிருஷ்ணானந்த செவயாத் என்பவரால் இது கட்டப்பட்டிருக்கிறது.

அகர்தலாவில் ஓர் அழகிய சுற்றுலா

ரபீந்த் கானன்:

ராஜ் பவன் மாளிகையின் உள்ளே இருக்கும் இந்த ரபீந்த் கானன் ஒரு பரந்த பசுமையான தோட்டப்பூங்காவாகும். இது எல்லா வயதினராலும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு பூங்கா என்று பல்வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஒரு நவீன நகரமாக வளர்ந்து வருவதால் அகர்தலா நகரத்தில் நவீன வசதிகளுக்கு குறைவில்லை.

அகர்தலாவில் ஓர் அழகிய சுற்றுலா

உலகத்தரம் வாய்ந்த உணவகங்கள் மற்றும் சிக்கனமான தங்கும் விடுதிகள் போன்ற யாவும் நகர மையத்திலேயே அமைந்திருக்கின்றன. சர்வதேச, சீன மற்றும் இந்திய உணவுவகைகள் போன்ற யாவும் இங்குள்ள உணவகங்களில் கிடைக்கின்றன. எல்லா வசதிகளுடனும் குறைந்த வாடகையுடன் இங்கு தங்கும் விடுதிகள் சேவைகளை வழங்குகின்றன.

கடந்த பத்தாண்டுகளில் அகர்தலா நகரம் ஒரு வணிகக்கேந்திரமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. வடகிழக்குப்பகுதியிலிருந்து அரிசி, எண்ணெய் வித்துக்கள், தேயிலை மற்றும் சணல் போன்றவை இங்கு பெருமளவில் வியாபாரம் செய்யப்படுகின்றன. இந்த நகரத்திலுள்ள மார்க்கெட் பகுதிகளுக்கும் சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்வது அவசியம்.

மேலே சொல்லப்பட்ட பொருட்கள் மட்டுமல்லாமல் பலவகையான கைவினைப்பொருட்கள் மற்றும் உல்லன் துணிவகைகளை இந்த மார்க்கெட் பகுதியில் வாங்கலாம். இது இந்தியாவுலதான்... ஆனா இங்க இங்குறவங்கள்லாம் கிட்டத்தட்ட பங்களாதேஷ் காரங்க மாதிரிதான். ஏன்னா அந்த பாரம்பரியமும், பண்பாடும்தான் இவங்ககிட்ட காணப்படுது.. எல்லாத்துக்கும் மேல மொழி, நிலம் எல்லாமே அரசியலுக்காகத்தானே.. மனிதம் எல்லார் பண்பாட்டையும் போற்றத்தானே செய்யும்.

More News

Read more about: agartala
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+