Search
  • Follow NativePlanet
Share
» »இவ்வளவு கம்மி பட்ஜெட்டில் காஷ்மீர் சுற்றுலாவா? சோன்மார்க், குல்மார்க், ஸ்ரீநகர் சுற்றி பார்த்திடலாம்!

இவ்வளவு கம்மி பட்ஜெட்டில் காஷ்மீர் சுற்றுலாவா? சோன்மார்க், குல்மார்க், ஸ்ரீநகர் சுற்றி பார்த்திடலாம்!

பூமியின் சொர்க்கம் அதாவது 'paradise on earth' என்றழைக்கப்படும் இடம் எது என்று உங்களுக்கு தெரியுமா? வெறும் எதுவும் இல்லை. நம் இந்திய வரைபடத்தில் மகுடமாக இருக்கும் காஷ்மீர் தான் அந்த சொர்க்கவாசல். காஷ்மீர் என்று சொன்னாலே பனி மூடிய சிகரங்களும், பனி அடர்ந்த மலைப் பாதைகளும், வெள்ளி போன்ற பால் ஆறுகளும் தான் நம் நினைவுக்கு வருகிறது அல்லவா? அதோடு இப்போது மட்டுமல்லாமல் குளிர்காலமும் ஆரம்பித்துவிட்டது. எங்கு பார்த்தாலும் பனிப்பொழிவும் துவங்கிவிட்டது! இது தான் காஷ்மீர் செல்வதற்கு சிறந்த நேரம். ஆம் இந்த நேரத்தில் சென்றால் தான் பனிப்பொழிவில் நனைந்து விளையாடி மகிழலாம். பல சாகச நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.

இளைஞர்களுக்கும், சாகச பிரியர்களுக்கும், புதுமண தம்பதிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் மிகவும் பிடித்த இடமான அழகிய காஷ்மீருக்கு இந்திய ரயில்வே டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ஒரு மலிவு விலை விமான பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்ன? இந்த பேக்கேஜில் எந்தெந்த இடங்களுக்கு செல்லலாம்? கட்டணம் எவ்வளவு? எல்லா தகவல்களும் கீழே!

வெறும் ரூ. 35,900 ஒரு வார சுற்றுலா

வெறும் ரூ. 35,900 ஒரு வார சுற்றுலா

மும்பையிலிருந்து ஸ்ரீநகர், குல்மார்க், சோன்மார்க் மற்றும் பஹல்காம் ஆகிய இடங்களுக்கு ஐந்து இரவுகள் மற்றும் ஆறு பகல்கள் கொண்ட சுற்றுலாத் தொகுப்பு இதுவாகும். ஜம்மு காஷ்மீருக்குச் செல்லத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்காக வெறும் ரூ. 35,900 க்கு ஒரு சிறப்பு விமானப் பயணத் தொகுப்பை அறிமுகப்படுத்துவது குறித்து IRCTC சமீபத்தில் ட்வீட் செய்திருந்தது அதில் "காஷ்மீர்- தி ஹெவன் ஆன் எர்த் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும், நிலப்பரப்பை அனுபவிக்கவும் ஒரு மயக்கும் இடமாகும். ஒரு தனி நபருக்கு ரூ 35,900 இல் 6D/5N ஐஆர்சிடிசி விமானப் பயணப் பேக்கேஜை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்". என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

முழு டூர் பேக்கேஜ் விவரம்

முழு டூர் பேக்கேஜ் விவரம்

முதல் நாளில் மும்பையில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமானத்தில் பயணிகள் செல்வார்கள். அன்றே சங்கராச்சாரியார் கோவில், ஹவுஸ்போட்டில் செக்-இன், தால் ஏரியில் மாலை ஷிகாரா சவாரி ஆகியவை செய்யலாம். இரண்டாம் நாளில் பஹல்காமிற்கு செல்லும் வழியில் அவந்திபுரா இடிபாடுகள், பீடாப் பள்ளத்தாக்கு, அரு பள்ளத்தாக்கு மற்றும் சந்தன்வாடி ஆகியவற்றைப் பார்வையிட்டுக் கொண்டே பள்ளத்தாக்கின் இயற்கை அழகை ரசித்து மகிழலாம்.

மூன்றாம் நாளில் அங்கிருந்து அழகிய குல்மார்க்கிற்குச் செல்வார்கள். நான்காம் நாளில் தங்க புல்வெளியான சோன்மார்க்கை சுற்றிப் பார்ப்பார்கள். ஐந்தாம் நாளில் ஸ்ரீநகரின் நிஷாத் பாக், செஷ்மாஷாஹி மற்றும் ஷாலிமார் கார்டன்ஸ் ஆகியவற்றை பார்த்துவிட்டு மாலையில் ஷாப்பிங் செய்தவுடன் இரவு தங்குவார்கள். ஆறாம் நாள் காலையில் காலை உணவுக்கு பிறகு மும்பை விமான நிலையத்தை வந்தடைவார்கள்.

இந்த அழகிய சுற்றுலாவிற்கான கட்டணம்

இந்த அழகிய சுற்றுலாவிற்கான கட்டணம்

IRCTC மிகவும் மலிவு விலையில் காஷ்மீர் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதே உணமி. ஒரு சுற்றுலாப்பயணிக்கான கட்டணம் தனி நபருக்கு ரூ. 44,300, டபுள் ஷேரிங்கில் ரூ. 35,900 மற்றும் ட்ரிபிள் ஷேரிங்கில் ரூ. 34,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் குழந்தைகளுடன் பயணம் செய்தால், நீங்கள் தனி கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பேக்கேஜ் செப்டம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் தொடங்கும்.

எப்படி புக்கிங் செய்வது?

எப்படி புக்கிங் செய்வது?

ஆர்வமுள்ள பயணிகள் IRCTC இன் இணையதளமான www.irctc.co.in ஐப் பார்வையிட்டு அதனைப் பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக் கொண்டு புக்கிங் செய்யலாம். IRCTC சுற்றுலா வசதி மையங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மூலம் ஆஃப்லைன் முறையிலும் முன்பதிவு செய்யலாம்.

இது உண்மையிலேயே ஒரு அரிய மலிவு விலை வாய்ப்பு தான். ஐஆர்சிடிசியின் காஷ்மீர் டூர் பேக்கேஜ், அதன் இயற்கை அழகு மற்றும் கண்ணுக்கினிய பனோரமாக்களை ஆராய்வதற்கான சரியான ஒரு வார பயணத்தை உங்களுக்கு வழங்கும். இந்த பட்ஜெட் சுற்றுலாவை புக் செய்து பனிப்பொழிவில் ஆனந்தமாக இருந்துவிட்டு வர இது ஒரு அற்புதமான வாய்ப்பாகும். ஆகவே முந்திக் கொள்ளுங்கள்!

More News

    Read more about: low budget trip to kashmir
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+