Search
  • Follow NativePlanet
Share
» »கடற்கரையும் குகையும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்? இங்கே பாருங்கள்!

கடற்கரையும் குகையும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்? இங்கே பாருங்கள்!

கடலை ஒட்டிய குகைகள் முதன்மையாக அலைகளால் ஏற்படும் அரிப்பிலிருந்து உருவாகின்றன, அவைகள் கடலை ஒட்டியோ அல்லது ஏரிக்கரையிலோ உருவாகிறது. ஆனால் அது மட்டுமே அதன் அர்த்தம் இல்லை, அவை பார்ப்பதற்கும் ஆராய்வதைற்கும் சிறந்தவை. கடல் குகைகளின் தளங்கள் முழுவதும் உயிர்களால் நிறைந்துள்ளன. அனிமோன்கள், நட்சத்திரமீன்கள் மற்றும் கடற்பாசிகள் போன்றவற்றை நாம் இங்கே கண்டு களிக்கலாம்.

ஆராயப்படாதவற்றை ஆராய்வதில் ஆர்வமும் சாகசமும் இருப்பது உங்களுக்கு ஆறுதல் தரும் இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும். அது போன்று ஒன்றுதான் இந்த கடல் குகைகள். சரி! அவை இந்தியாவில் உள்ளனவா? என்று எண்ணுகிறீர்களா? இருக்கிறது, நம் கோவாவில்!

இந்த குகைகள் கோவாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. சில கடற்கரைகளுக்கு அருகில் உள்ளன, சில குகைகளை மலையேற்றத்திற்குப் பிறகு மட்டுமே அடைய முடியும். நீங்கள் கோவாவை அதிகம் அனுபவிக்க விரும்பினால், இந்த குகைகளுக்குச் செல்ல நீங்கள் தவறக்கூடாது. இங்கு நீங்கள் நீந்தலாம், டைவிங் செய்யலாம், ஸ்நோர்கெலிங் மற்றும் வாட்டர்ராஃப்டிங்கில் ஈடுபடலாம்.கோவாவில் உள்ள இரண்டு கடற்கரை குகைகளின் பட்டியல் இதோ

cupa cave-1

கௌராட்டி குகை, கண்டோலிம்

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இயற்கையின் மடியில் ஓய்வெடுக்க நினைக்கும் உங்களுக்கு இந்த கௌராட்டி குகை ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுற்றுலாத் தலமாக இருக்கும். இந்த குகை அகுவாடா கோட்டையிலிருந்து 15 நிமிட நடைப்பயணத்தில் அமைந்துள்ளது.

டெவில்'ஸ் ஃபிங்கர் என்றும் அழைக்கபடும் இந்த குகையின் பாறைகள் மிகவும் வழுக்கும் என்பதால் இங்கு அடி எடுத்து வைக்கும் போது நீங்கள் அதீத கவனமாக இருக்க வேண்டும். பிளாட், ஹீல்ஸ் அல்லது மற்ற காலணிகளுக்கு பதிலாக, உங்கள் மலையேற்ற காலணிகள் அல்லது ஷூக்களை அணிந்தால் நல்லது.

கோவாவில் உள்ள டபோலிம் விமான நிலையத்திலிருந்து கண்டோலிம் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவா விமான நிலையத்திலிருந்து கண்டோலிமை கார் அல்லது டாக்சி மூலம் அடைய அரை மணி நேரத்தில் அடையலாம். கண்டோலிமில் இருந்து கார், டாக்சி அல்லது இரு சக்கர வாகனம் மூலம் இந்த குகைகளை அடையலாம்.

condolimcave

குபா கடல் குகை, கனகோனா

புகழ்பெற்ற பலோலெம் மற்றும் அகோண்டா கடற்கரைகளில் இருந்து 15-20 கிமீ தொலைவில் உள்ள கனகோனாவின் லோலிம் கிராமத்தில் 'குபா' குகையை நீங்கள் காணலாம். இந்த குகை கோவாவின் மறைக்கப்பட்ட ஒரு அழகிய ரத்தினமாகும்.
இந்த அழகான குபா கடல் குகையை அடைய, நீங்கள் 25-30 நிமிடங்கள் சமதளம் மற்றும் பாறைத் திட்டுகள் வழியாக நடக்க வேண்டும். வெப்ப அலைகளைத் தவிர்க்க, காலை 8-10 மணிக்குள் நடைபயணம் மேற்கொள்வது நல்லது. குகையும் கடலும் ஒன்றாக சேர்ந்து இருப்பதால் இந்தக் குகைகளுக்கு நீங்கள் செல்லும்போது அலை குறைவாக இருக்கும்போது செல்வது நல்லது. பாதை சற்று கடினமானதாக இருப்பதால், நல்ல மலையேற்ற காலணிகளை அணிவது சிறந்தது. குபா கடல் குகைக்கு செல்வது உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும்.

கோவா விமான நிலையத்திற்கும் கனகோனாவிற்கும் இடையே இருக்கும் தூரம் 62 கிமீ ஆகும். மத்திய கோவாவில் இருந்து 1 மணி நேரத்தில் கனகோனாவை அடைந்திடலாம்.
நீங்கள் கடற்கரை பிரியராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இந்த இரண்டு குகைகளையும் நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். ஆதலால், நீங்கள் எப்போது கோவா செல்ல திட்டமிட்டாலும் இந்த இரண்டு குகைகளையும் உங்களது விஷ்-லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

Read more about: candolim sanquelim canacona ponda goa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X