Search
 • Follow NativePlanet
Share
» »3 மாசத்துக்கு கல்யாணம் பண்ண தடை! அரசே இட்ட கட்டளை! ஏன் தெரியுமா?

3 மாசத்துக்கு கல்யாணம் பண்ண தடை! அரசே இட்ட கட்டளை! ஏன் தெரியுமா?

By IamUD

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இஸ்லாமிய மன்னர்களை மன்னர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக அக்பரை மன்னர் என ஒப்புக்கொள்ள முடியாது. அவர்கள் வைத்த பெயர்கள் அனைத்தையும் மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது எனக் கூறி, அலகபாத் நகரத்தின் பெயரை மாற்றியுள்ளார். அதைத்தொடர்ந்து இப்போது இன்னொரு அதிர்ச்சிகர விசயத்தையும் செய்துள்ளார் இவர்.

என்ன காரணம்?

ஜனவரியில் உத்தர பிரதேசத்தில் கும்பமேளா விழா நடக்கிறது. இது எப்போதும் மிகப்பெரிய அளவில் நடப்பது வழக்கம். இதற்கு நாடு முழுவதிலும் இந்து சாமியார்களும், குருக்களும், அகோரிகளும் வருவது வழக்கம். இதில் 2 லட்சம் பேர் வரை சாமியார்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விழா பாதிக்க கூடாது என்று திருமணத்தை தடை செய்துள்ளார் யோகி ஆதித்யநாத்.

பிரயாக்ராஜ்

பிரயாக்ராஜ்

நன்றாக படியுங்கள். பிரகாஷ்ராஜ் அல்ல.... பிரயாக்ராஜ். அலகாபாத்தின் புதிய பெயர் இதுதான். அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எல்லாம் இந்த பிரயாக்ராஜ் எனும் பெயரையே கடைபிடிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

அலகாபாத் எனும் பிரயாக்ராஜ்

அலகாபாத் எனும் பிரயாக்ராஜ்

வரலாற்று ஆவணங்களின் படி, 1580ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரயாகா என்றே அழைக்கப்பட்டு வந்ததாம். ஆனால் அக்பர் வாழ்ந்த காலத்தில் அவர் இந்த நகரத்தின் பெயரை இல்லகாபாத் என்று மாற்றியுள்ளார். பின்னர் வந்த ஷாஜகான் இதை அலகாபாத் என்று திருத்தினார். அதன் பின்னர் இந்த பெயரிலேயே இத்தனை ஆண்டுகாலம் அழைக்கப்பட்டு வந்த அலகாபாத் தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது.

நவீன இந்தியா

நவீன இந்தியா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று இந்த அலகாபாத் நகரமாகும். இந்துக்களின் முக்கியமான புனித நகரமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் நவீன இந்தியாவை உருவாக்கியதில் ஒரு முக்கியமான பங்களிப்பையும் இது கொண்டிருக்கிறது. பிரயாக் அல்லது பிரயாகை என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இந்நகரம் வேதங்கள் மற்றும் ராமாயணம் மஹாபாரதம் போன்ற காவியங்கள் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வரலாற்றுப்பின்னணி

வரலாற்றுப்பின்னணி

1575ம் ஆண்டில் மாமன்னர் அக்பர் இந்நகரத்தின் பெயரை இல்லாஹாபாஸ் என்று மாற்றினார். அதுவே பின்னர் அலாகாபாத் என்று திரிந்து நிலைத்துவிட்டது. வட இந்தியாவில் ஒரு முக்கியமான நீர்ப்பாதை கேந்திரமாக திகழ்ந்த இந்த நகரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த அக்பர் இங்குள்ள புனித சங்கம ஸ்தலத்திற்கு அருகேயே ஒரு கோட்டையை உருவாக்கினார்.

சுதந்திரப் போராட்டம்

சுதந்திரப் போராட்டம்

நூற்றாண்டுகளுக்கு பின்னர் ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் இந்நகரம் முக்கிய பங்காற்றி வரலாற்றில் தனி இடத்தை பெற்றது. இந்த நகரத்தில் முதல் இந்திய தேசிய காங்கிரஸ் 1885ம் ஆண்டில் பிறந்தது. 1920 களில் மஹாத்மா காந்தி இங்குதான் தனது அஹிம்சா வழி போராட்டத்தை கையில் எடுத்தார்.ஆங்கிலேயர் ஆட்சியின்போது அலாகாபாத் நகரம் வட மேற்கு பிராந்தியத்தின் கேந்திரமாக திகழ்ந்திருந்தது.

வரலாற்றுச்சின்னங்கள்

வரலாற்றுச்சின்னங்கள்

காலனிய ஆட்சியின் மிச்சங்களை இங்குள்ள மூயிர் கல்லூரி மற்றும் ஆல் செயிண்ட்ஸ் கதீட்ரல் போன்ற வரலாற்றுச்சின்னங்களில் தரிசிக்கலாம். அலாகாபாத் நகரத்தின் யாத்ரீக முக்கியத்துவம் பொதுவாக இன்று அலாகாபாத் நகரம் ஹிந்துக்களின் முக்கியமான புனித யாத்திரை ஸ்தலமாக அறியப்படுகிறது.

 யாத்ரீக ஸ்தலங்களுக்கெல்லாம் ராஜா

யாத்ரீக ஸ்தலங்களுக்கெல்லாம் ராஜா

யாத்ரீக ஸ்தலங்களுக்கெல்லாம் ராஜா என்பது இந்த ஊரின் புகழைக் குறிக்கும் சொல். சங்கம் எனும் முக்கியமான ஆற்று சங்கம ஸ்தலம் இந்த அலாகாபாத் நகரில் தான் அமைந்துள்ளது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித ஆறுகள் அலாகாபாத் பகுதியில் சங்கமிக்கின்றன.

சங்கம கும்ப மேளா

சங்கம கும்ப மேளா

சங்கம ஸ்தலத்தில் தான் உலகிலேயே அதிக அளவில் மக்கள் திரளும் திருவிழாவான மஹா கும்ப மேளா நடைபெறுகிறது.

இந்தியா மற்றும் உலகெங்கிலுமிருந்து ஏராளமான யாத்ரீகர்கள் இந்த கும்ப மேளாவில் கலந்து கொண்டு சங்கமத்தின் புனித நீராடலில் ஈடுபடுகின்றனர். இது தவிர பல்வேறு மதச்சடங்குகள் மற்றும் திருவிழாக்களுக்கான ஸ்தலமாகவும் இந்த ஆற்றுச்சங்கமம் பிரசித்தி பெற்றுள்ளது.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை

மஹா கும்ப மேளா 12 வருடங்களுக்கு ஒரு முறை இந்த மஹா கும்ப மேளா எனும் திருவிழா கொண்டாடப்படுகிறது. கடைசியாக 2001ம் ஆண்டில் இது கொண்டாடப்பட்டது. இதில் 4 கோடி பேர் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. உலகிலேயே வேறு எந்த திருவிழாவிற்கும் இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் இதுவரையில் திரண்டதில்லை என்று பதிவாகியிருக்கிறது

மற்ற கும்பமேளாக்கள்

மற்ற கும்பமேளாக்கள்

மஹா கும்ப மேளாவைத்தவிர அர்த் மேளா எனும் திருவிழாவும் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை இங்கு கொண்டாடப்படுகிறது. வருடாந்திரமாக மஹா மேளா என்று ஒரு திருவிழா சங்கமப்பகுதியில் நடத்தப்படுகிறது. எலும்புகளை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் தங்கள் பாவங்களை கரைப்பதற்காக அப்போது புனித நீராடலில் ஈடுபடுகின்றனர். மஹா கும்ப மேளாவின்போது அலாஹாபாத் நகரம் முழுமையும் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த யாத்ரீகர்களால் நிரம்பி சுற்றுலா கேந்திரம் போன்று காட்சியளிக்கிறது.

இந்திய கலாச்சாரம்

இந்திய கலாச்சாரம்

காலப்போக்கில் அலாகாபாத் நகரம் இந்தியாவின் கலாச்சார, ஆன்மீக மற்றும் வரலாற்றும் பரிமாணங்களை நிலை நிறுத்துவதில் முக்கிய பங்காற்றி வந்திருக்கிறது. மஹாதேவி வர்மா, ஹரிவன்ஷ் ராய் பச்சன், மோதிலால் நேரு , ஜவஹர்லால்நேரு போன்ற பிரபல்யங்கள் இந்த நகரத்தை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் வரலாறு போன்ற முக்கியமான அம்சங்களைக்கொண்ட சுற்றுலா நகரமாக அலகாபாத் திகழ்வதில் வியப்பில்லை.

அலாகாபாத் நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

அலாகாபாத் நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

கோயில்கள், கோட்டைகள், பல்கலைக்கழகங்கள் என்று எராளமான அம்சங்கள் இந்த நகரத்தில் நிரம்பியிருக்கின்றன.

முக்கியமான ஹிந்து யாத்ரீக ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ள இந்நகரில்

 • பாதல்புரி கோயில்,
 • ஹனுமான் கோயில்,
 • பேட் ஹனுமான் ஜி கோயில்,
 • ஷிவ்கோடி மஹாதேவ் கோயில்,
 • அலோபி தேவி கோயில்,
 • கல்யாணி தேவி கோயில்,
 • மண்கமேஷ்வர் கோயில்,
 • நக்வாசுகி கோயில்
 • மற்றும்

  • பேனி மஹாதேவ் கோயில் ஆகியவை உள்ளன.
  • ஜவஹர்லால் நேரு நினைவு இல்லம்

   ஜவஹர்லால் நேரு நினைவு இல்லம்

   ஆனந்த் பவன் எனும் ஜவஹர்லால் நேரு நினைவு இல்லம் ஒரு முக்கியமான அம்சமாக அலாகாபாத் நகரத்தில் புகழ் பெற்றிருக்கிறது. இந்த இல்லம் சுதந்திர போராட்ட காலத்தில் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசிப்பதற்கு பயன்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலேயர் கால மற்றும் முகலாயர் காலத்தை சேர்ந்த பல வரலாற்று மிச்சங்களையும் இந்நகரத்தில் காணலாம்.

   அலாகாபாத் கோட்டை, மின்டோ பார்க், மற்றும் ஆல்ஃப்ரெட் பார்க் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

    பயணத்துக்கு உகந்த பருவம்

   பயணத்துக்கு உகந்த பருவம்

   நவம்பர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலம் இந்நகரத்திற்கு சுற்றுலா விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இவை தவிர்த்த மற்ற மாதங்களில் இந்நகரம் அதிக உஷ்ணம் மற்றும் வறட்சியுடன் காணப்படும். முக்கியமான யாத்ரீக தலமாக இருப்பதால் ஆன்மிக திருவிழாக்காலங்களில் இந்நகரத்திற்கு அதிக பயணிகள் வருகை தருகின்றனர்.

   பயண வசதிகள்

   பயண வசதிகள்

   விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் ஆகிய மூவழிகளின் மூலமாகவும் எளிதில் சென்றடையும்படி போக்குவரத்து வசதிகளை இந்நகரம் கொண்டிருக்கிறது.

   All Photos Taken From

   PC: wikimedia.org

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more