Search
  • Follow NativePlanet
Share
» »சிலிர்க்க வைக்கும் ஹனி மூன் பயணத்திற்கு சூப்பரான இடங்கள்...1 லட்சம் பட்ஜெட்டில் என்ஜாய் பண்ணலாம்

சிலிர்க்க வைக்கும் ஹனி மூன் பயணத்திற்கு சூப்பரான இடங்கள்...1 லட்சம் பட்ஜெட்டில் என்ஜாய் பண்ணலாம்

கையில் ஒரு லட்சம் இருந்தால் போதும். அதற்குள்ளாக அருமையான ஒரு ஹனிமூன் டிரிப் சென்று விட்டு வர முடியும். அப்படிப்பட்ட அருமையான நகரங்கள் குறித்த ஒரு பட்டியலை தான் இப்போது பார்க்க போகிறோம். வாருங்கள்.

Honeymoon destinations

உதய்ப்பூர்

இந்தியாவின் மிக அழகான ஒரு நகரம். சிட்டி ஆப் பேலஸ் என்று இது அழைக்கப்படுகிறது. இங்குள்ள பிச்சோலோ ஏரி மிக மிக ரம்மியமானது. இந்த ஏரியில் சூரிய அஸ்தமனத்தின் போது படகு சவாரி செய்வது போன்ற ஒரு அற்புதமான அனுபவம் யாருக்கும் கிடைக்காது. அம்பிராய் ஏரியின் அருகே இருந்து இரவு உணவு உண்ணும் அனுபவம் யாருக்கும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாதது. மிகவும் பாரம்பரியமான நகரமான உதய்ப்பூர், தேனிலவு தம்பதிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கக் கூடியது.

போர்ட் பிளேர்

அந்தமான் தீவுகளின் நுழைவுப் பகுதியான போர்ட் பிளேர், அழகான கடலோர நகரம். வெண் மணற்பரப்பைக் கொண்ட கடற்கரைகள், சூரிய அஸ்தமனங்களை கண்டு களிக்க கூடிய அற்புதமான ஒரு அனுபவம் தரக்கூடிய போர்ட் பிளேயர், தேனிலவுப் பயணத்திற்கு ஏற்றது. செலவு அதிகம் பிடிக்காமல், அதே சமயம் மனதுக்கு ரம்மியமான ஒரு அனுபவத்தையும் கொடுக்கக் கூடியது. இங்குள்ள நீல் தீவில் உள்ள நேச்சுரல் பிரிட்ஜ் மிகவும் அற்புதமான ஒரு திரில்லான அனுபவத்தை தரும்.

Honeymoon destinations

கேங்டாக்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கேங்டாக், இமயமலை தொடரின் அழகான காட்சிகளை நம் கண் முன் நிறுத்தி வைத்துள்ளது. கலாச்சாரம் பாரம்பரியம் உள்ளிட்டவை கலந்த ஒரு அற்புதமான நகரம் இது. இங்குள்ள சோம்கோ ஏரி மிகப் பிரபலமானது. அங்கு படகு பயணம் செய்வது மிக அற்புத அனுபவத்தை தரும். புத்த மடாலயம், கேபிள் கார் ரைடு என அற்புத அனுபவம் தரும் நகரம் கேங்டாக்.

ஆலப்புழா

கேரள மாநிலத்தின் ஆழப்புழா இந்தியாவின் வெனிஸ் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவின் பேக் வாட்டர் அழகை இந்த இடத்தில் நாம் கண்டு ரசிக்க முடியும். இங்குள்ள படகு இல்லம் அற்புத அனுபவத்தை கொடுக்கும். தேனிலவு தம்பதிகள் ஒரு சில நாட்கள் படகு வீட்டை வாடகைக்கு எடுத்து இங்கேயே தங்கி, அங்கேயே சமைத்து சாப்பிட்டு முழு தீவுகளையும் சுற்றி வந்து மிக உற்சாகமான ஒரு அனுபவத்தை பெற முடியும். காலை நேர அனுபவம் மறக்க முடியாததாக இருக்கும். மாலை அதற்கும் மேலான சந்தோஷ அனுபவத்தை தரும்.

ஜெய்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் பிங்க் சிட்டி, அதாவது இளஞ்சிவப்பு நகரம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. ரொமான்ஸ், வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றை கலந்து இந்த நகரம் காணப்படுவது தனி சிறப்பு. அமர் கோட்டை, வண்ணமயமான பஜார்கள், ராம் பாக் அரண்மனையில் ராயல் டின்னர் என உற்சாக அனுபவத்தை இந்த ஊரில் நாம் பெற முடியும். பாரம்பரிய நகரில் தங்கி இருந்து அங்குள்ள அழகையும் நாம் கண்டு உணர முடியும், ரசிக்க முடியும். தேனிலவு தம்பதிகளுக்கு சிறந்த ஒரு அடைக்கலம் ஜெய்ப்பூர் என்பது சந்தேகம் இல்லை.

மெக்லியாட் கஞ்ச்

தர்மசாலா அருகில் உள்ள ஒரு மலை நகரம் தான் இந்த மெக்லியாட் கஞ்ச். திபெத்திய கலாச்சாரத்தை இங்கு கண்டு மகிழ முடியும். அருமையான மலைப்பகுதி, அழகான காபி ஷாப்புகள் என்று தம்பதி சகிதம் சென்று சந்தோஷமாக தேனிலவு பயணத்தை அனுபவிக்க சிறந்த ஒரு இடம் இந்த மெக்லியாட் கஞ்ச். சிறந்த மறக்க முடியாத அனுபவத்தையும் இங்கு நாம் பெற முடியும். தலாய்லாமா கோவில் அல்லது சிப் சாய் என்று அழைக்கப்படும் கோவில் இங்கு உள்ளது.

கூர்க்

கர்நாடக மாநிலத்தின் மலை நகரமான கூர்க் அற்புதமான ஒரு சுற்றுலா தளம். தேனிலவு தம்பதிகளுக்கு சிறந்த ஒரு இடம். பனி படர்ந்த காலை நேரங்கள், நறுமணமான காபி தோட்டங்கள், ரொமான்ட்டிக்கான தங்குமிடங்கள், அழகான ரிசார்ட்டுகள் என்று அற்புதமான ஒரு இடமாக இந்த கூர்க் விளங்குகிறது. நீண்ட தூரம் வாக்கிங் செல்வதற்கு ஏற்ற வசதியான இடங்கள், காபி தோட்டங்களின் வழியாக நடந்து செல்லும் போது கிடைக்கும் அனுபவமே அலாதியானது. அபே நீர்வீழ்ச்சி இங்கு சிறந்த ஒரு சுற்றுலா தலம். அங்கு சென்று பார்க்கும் போது ஒட்டுமொத்த மலையின் அழகையும் ரசிக்க முடியும்.

கோவா

கோவா சுற்றுலாவுக்கு மட்டுமல்ல தேனிலவுக்கும் சிறந்த ஒரு நகரமாகும். இங்குள்ள கடற்கரை மிக மிக அழகானது. தேனிலவு தம்பதிகளுக்கு சிறந்த ஒரு அனுபவத்தை இந்த கோவா தரும். இங்கு சில நாட்கள் தங்கி கடற்கரைகளை சுற்றிப் பார்த்து அங்குள்ள வாட்டர் ஸ்போர்ட்ஸ் போன்றவற்றில் ஈடுபட்டு நாட்களை செலவிடும்போது கிடைக்கும் சந்தோஷம் நீண்ட காலத்திற்கு நம்மை உற்சாகமாக வைத்திருக்க உதவும். வடக்கு கோவாவில் உள்ள கிராமங்களுக்கு செல்லும்போது இன்னும் சிறப்பான அனுபவங்களை நாம் பெறமுடியும். கடலோரங்களில் அமர்ந்து மெழுகுவர்த்தி டின்னரில் கலந்து கொள்ளும்போது உற்சாக மனநிலையை அடைய முடியும். சிறந்த ஒரு தேனிலவு தலம் கோவா என்பதில் சந்தேகம் இல்லை.

ரிஷிகேஷ்

ஆன்மீக நகரம் மட்டுமல்ல, அருமையான தேனிலவு நகரமும் கூட. அட்வென்சர் நிறைந்த ஒரு நகரமும் கூட. கங்கை அருகே தங்கிக் கொண்டு அங்கிருந்து அமைதியான கங்கை நதியையும் ரசிக்க முடியும், தேனிலவு பயணத்தையும் ரசிக்க முடியும். காலை நேரங்களில் யோகாசனங்களில் கலந்து கொள்ளலாம். கங்கா ஆரத்தி கண்டு மகிழலாம். திரில்லிங்கான வாட்டர் ஸ்போர்ட்ஸ் கூட இங்கு உண்டு. திரில்லிங்கும் சந்தோஷமும் இணைந்த ஒரு தேனிலவு அனுபவத்தை இது தரும்.

மணாலி

மணாலி இமயமலை தொடர்களுக்கு நடுவில் அமைந்துள்ள ஒரு எழிலான நகரமாகும். தேனிலவு பயணங்களுக்கு மிகச்சிறந்த ஒரு நகரம். பழைய மணாலியில் உள்ள அழகான தெருக்களை கண்டிப்பாக நீங்கள் ரசிக்க வேண்டும். அங்குள்ள ஹிடிம்பா கோவில் மிக மிக அற்புதமானது. சோலாங் பள்ளத்தாக்கில் அட்வெஞ்சரசான பயணங்களை மேற்கொள்ள முடியும். பனி படர்ந்த மணாலியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சொர்க்கம்தான் என்பது சந்தேகம் கிடையாது.

More News

    Read more about: honeymoon
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+