» »மனதை மயக்கும் தர்மசாலாவில் உள்ள ட்ரைய்யுன்டினை நோக்கி ஒரு இனிமையான பயணம் ! வாங்கப் போகலாம்!

மனதை மயக்கும் தர்மசாலாவில் உள்ள ட்ரைய்யுன்டினை நோக்கி ஒரு இனிமையான பயணம் ! வாங்கப் போகலாம்!

By: Balakarthik Balasubramanian

டிரைய்யுன் பயணம் என்பதுப் பாராப் பங்கால் மற்றும் பியாஸ் பயணத்தினை விட மிக எளிதான ஒருப் பயணமாக அமைந்து நம் கால்களைத் தூண்டுகிறது. இந்தப் பயணத்தின் ஆரம்ப நிலையாக, தரம்கோட் அல்லது மெக்லியோட்கனி இருக்கிறது. அப்படி என்ன தான் அதிசயம் பற்றி நான் கூறுகிறேன் என்று யோசிக்கிறீர்களா! வாங்க, கீழ்க்காணும் பத்தியின் மூலமாக நாம் அதனைத் தெரிந்துக் கொள்ளலாம்.

மோடி தேசத்தில் ஒரே மலையில் 1000 கோயில்கள் - எங்கே? எப்போ? எப்படி?

நான் சமீபத்தில் தான் ஒரு மலை ஏற்றப் பயணம் சென்று ரசித்துத் திரும்பினேன். நான் அந்தப் பயணத்தின் போது என் குடும்பத்தாரை எவ்வளவோ வற்புறுத்தி அழைத்துச் செல்ல முற்ப்பட்டு அவர்கள் முடிவுக்கு முன்னால் தோற்றுப் போனேன். இருப்பினும், என்னை ஆறுதல் படுத்தும் நோக்கத்துடன் அவர்கள், "அடுத்துமுறை நாம் அனைவரும் ஒன்றாக செல்லலாம்" என என்னிடம் கூற, நானும் அவர்கள் கோரிக்கையை ஏற்று சம்மதம் தெரிவித்தேன். இறுதியாக என் அழைப்பிற்கு செவிசாய்த்த என் குடும்பத்தார் அனைவரும், வாட்ஸப்பின் உதவியுடன் ஒருத் தீர்மானத்திற்கு வந்தனர். ஆம், அழகியதொருப் பயணமாக நாங்கள் தர்மசாலாவுக்குச் சென்று அங்கிருக்கும் அதிசயங்களைக் காண அனைவரும் ஒரு மனதாகச் சம்மதம் தெரிவிக்க, நாங்கள் அந்த ஒரு நிமிடம் போனைக் கையில் வைத்துக்கொண்டு நிலையாக இருந்தாலும், எங்கள் முடிவினை அறிந்துக் கொண்ட எங்கள் மனம், துள்ளிக் குதித்து சுற்றுலாப் பயணத்துக்குத் தயாரானது.

மனதை மயக்கும் தர்மசாலா

PC : Ashish Sharma

மனம் மகிழ்ந்த மறு நிமிடம் அதற்குப் பங்கம் விளைவிப்பது தான் மனிதனின் குணம் என்பதற்கேற்ப, இந்தத் தர்மசாலாப் பயணம் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்குக் கடினமாக இருக்குமே! என்றதொருக் குழப்பம் வர, மீண்டும் எங்கள் மனம் சிறிதுத் தளர்ந்துக் கவலை அடைந்தாலும், 'இருப்பதிலே மிகவும் எளியதோர் பயணமாம் தர்மசாலா" என என் நண்பன் கூகுல் எங்களைப் பார்த்து பச்சைக் கொடிக் காட்ட, மூத்த உறுப்பினர்களும் பயணத்துக்குத் தயாராக முடிவு செய்தனர். ஆம், இதன் பிறகு நாங்கள் இது போல் ஒருப் பயணத்தினைத் திட்டமிட்டுச் செல்வது என்பது இயலாதக் காரியம் என எண்ணிய அனைவரும் சரி எனத் தங்கள் தலையை ஆட்டிப் பயணத்துக்குத் தயாராகினார்கள்.

மசினகுடி - தீண்டா இயற்கை பேரழகு

வயது ஓர் தடை இல்லை என்றதோர் சொல்லுக்கு முன் உதாரணமாய் விளங்கும் இந்த எளிய ட்ரைய்யுன்ட் பயணம் நம் மனதினைச் சந்தோஷத்தினால் சிலிர்க்க வைக்கிறது. தர்மசாலாவிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு இடம் தான் இது. இங்கு நாம் பயணிக்கப் போகும் ஒரு பாதை நன்கு வரையறுக்கப்பட்ட ஒன்றாகச் சிறந்து விளங்குகிறது. மேலும், அதேபோல், காட்டின் உள்ளேச் செல்லும் பாதைகளும் மிகவும் உறுதியாகச் சிறப்பானதொருப் பாதையாகச் சிரமமின்றி இருக்கிறது.

மலையின் உச்சத்திலிருந்து நாம் நோக்க, ஒருப் பக்கம் காணும் கங்க்ராப் பள்ளத்தாக்கும், இன்னொருப் பக்கம் பார்வைக்கு சமர்ப்பிக்கும் தௌலத்தார் மலைத் தொடர்ச்சிகளும் நம் மனதினை அழகால் வருடுகிறது. இந்த ட்ரைய்யுன் பயணம், மெக்லியோட்கஞ்ச் அல்லது தரம்கோட் வழியாக மேற்க்கொள்ளப்படும் ஒரு பயணமாகும். மெக்லியோட்கஞ்சிலிருந்து இந்த இடம் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் வெளியில் அமைந்துள்ளது.

மனதை மயக்கும் தர்மசாலா

PC: rjp

இந்தப் பயணத்திற்கு ஏதுவானதொருக் கால நிலைகள்:

இந்தப் பயணத்தினை நாம் தொடர ஏதுவானதொரு கால நிலையாக, மே முதல் ஜூன் வரையும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையும் இருந்து நம்மை இனிமையானதொருப் புதிய உணர்வினை நோக்கி அழைத்துச் செல்கிறது.

நாம் பயணத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அத்தியவாசியப் பொருட்கள்:

பயணத்திற்கு ஏதுவானக் காலணிகள், மருந்துகள் நிறைந்த முதலுதவிப் பெட்டி, டார்ச் லைட், தூங்குவதற்கு உகந்தக் கூடாரங்கள், பூச்சிகளை விரட்டப் பயன்படுத்தப்படும் ஸ்ப்ரே வகைகள், மலை ஏறுவதற்கு ஏற்றதொருக் கம்பு, முதுகில் மாட்டும் தன்மைக் கொண்டப் பைகள், வெப்பம், ஒளிவீச்சுக்கள், தொப்பி, தலைமுதல் கால் வரைக் கவரும் தன்மைக் கொண்டக் கோட்டுகள், புகைப்படக்கருவி, சிற்றுண்டிகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை நாம் கொண்டுச் செல்ல வேண்டிய அத்தியவாசியப் பொருட்களாக நம் பயணத்தில் இடம் பெறுகிறது.
பெங்களூரிலிருந்துப் புறப்படும் நாம், தில்லியை நோக்கி விமானம் மூலம் பறந்துச் சென்றுச் சேர்கிறோம். அங்கிருந்துக் குளிர் சாதன வசதிக் கொண்டப் பேருந்தின் உதவியுடன் நாம் மெக்லியோட்கஞ்சினை அடைகிறோம்.

மனதை மயக்கும் தர்மசாலா


PC : Zainraza95

அங்குக் குடும்பத்துடன் செல்லும் நாம் ஒரு விடுதியினைக் கண்டுப்பிடித்து அதனை ஓய்வுக்குத் தயார் செய்துவிட்டு, தர்மசாலாப் பயணத்தின் அழகினை ரசிக்க குதூகலமாய் புறப்படுகிறோம். நாங்கள் மதிப்பிற்குரியத் தலாய் லாமாவின் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுக் கண்களை பக்திக் கொண்டு மூட, அது எங்கள் அனைவருக்கும் ஒரு வித அமைதியினைத் தந்தது. அங்கிருக்கும் திபெத் அருங்காட்சியகத்தின் மூலமாக நாங்கள் திபெத்திய வரலாற்றினையும் அவர்களுடைய ஈடு இணையற்றக் கலாச்சாரத்தின் பெருமையினையும் உணர்ந்தோம். அங்கு கிடைத்த வெண்ணெய் தேனீரினை பருகி நாங்கள் மெய் மறந்துப் போக, "ஆச்சரியம் வேண்டாம் தோழார்களே! நாம் மெக்லியோட்கஞ் பகுதியில், இதுப் போன்ற இனிமையானதொருத் தேனீரினைச் சுவைக்கலாம் எனவும்" என் தோழர்கள் எங்களுக்குப் பரிந்துரை செய்தார்கள். அது மிகவும் ருசியான தன்மைக் கொண்டதாகவும் சூடாகவும் இருந்தது. அதன் பிறகு, நாங்கள் அனைவரும் திபெத்திய பாணியில் கிடைத்த இரவு உணவினை உண்டு ஒருப் புதுவித அனுபவத்தினைக் கொண்டு பின் மீண்டும் ஓய்வறைக்குத் திரும்பி அசர, அயர்ந்துத் தூங்கத் தயாரானோம்.


நாள் 1: தர்மசாலா - பாக்சுநாக் - ட்ரைய்யுன்ட்

நாங்கள் முதல் நாளில் மும்முரமாக காலை 8 மணி அளவில் புறப்பட்டு தர்மசாலாவிலிருந்துப் பாக்சூ நாக்கினை அடைந்தோம். அந்தப் பகுதிச் செங்குத்தாக மேலே ஏறிச் செல்ல, நாங்களும் அந்த 9 கிலோமீட்டரினை 4 மணி நேரத்திற்குப் பிறகுக் கடந்துச் சென்றுச் சேர்ந்தோம். ஆம், கடல் மட்டத்திலிருந்து 2875 மீட்டர் உயரத்தில் உள்ள ட்ரைய்யுன்ட் பகுதி தான் நாங்கள் சென்றுச் சேர்ந்த ஒரு இடம் என்பதனைத் தெரிந்துக் கொண்டு ஒரு சிறியப் பெருமூச்செறிந்தோம். 8 மணிக்குக் கிளம்பிய நாங்கள் மதியம் 12.30 மணி அளவில் இந்த இடத்தினை அடைந்து மகிழ்ச்சியுடன் உலாவினோம். ஒரு வேளை உங்களால் நடக்க முடியவில்லை என்றால், கார் சவாரியின் உதவியுடன் நீங்கள் பாக்சுநாக்கினை அடைந்துப் பயணத்தினைச் சிரமமின்றிக் க(ழி)ளிக்கலாம். அதுவும் இல்லையென்றால், பாக்சுநாக்கிலிருந்து மீண்டும் சவாரியின் மூலம் ட்ரைய்யுன்ட் பகுதியினை சிரமமின்றி அடையலாம்.

மனதை மயக்கும் தர்மசாலா

இந்தப் பயணத்தின் முதல் நாள் இறுதிச் சுற்றில் என் மனதில் தோன்றிய ஒரு எண்ணம் என்னவென்றால், இது பியஸ் குன்ட் பயணம் போன்றோ, பாரா பங்கல் பயணம் போன்றோ கடினமாக இல்லையே என்றதொரு உணர்வு தான் எனக்குள் எழுந்தது. என் குடும்பத்தினருடன் நான் இணைந்து ரசித்த இந்தப் பயணம் நான் ஏறிய மலை ஏற்றங்களை விடவெல்லாம் உயர்ந்ததுவோ என்றதொரு எண்ணம் அவ்வப்போது என் மனதில் எட்டிப்பார்த்து செல்கிறது. நாங்கள் சென்ற வழியில் கண்ட அந்தக் கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்கும் மலர்களும், பசுமை மாறாச் செடி வகைகளும், ஓக் எனப்படும் மரங்களும் அங்கு ஆங்காங்கே அமைந்து நம் கண்களுக்கு விருந்துப் படைக்கக் காத்துக்கொண்டிருக்கிறது.

மனதை மயக்கும் தர்மசாலா

PC : Satdeep Gill

ட்ரைய்யுன்டினை அடையும் நாம் இயற்கை நிறைந்த அந்தப் பகுதியின் அழகினை ரசித்துக்கொண்டேப் பஞ்சமற்றுப் பரந்து விரிந்திருக்கும் இயற்கை அன்னைத் தந்தக் காட்சிகளைக் கண் குளிரக் காண்கிறோம் என்று தான் கூற வேண்டும். அந்தக் காட்சியினைப் பார்க்கும் நம் கண்கள், இயற்கை அன்னையின் மீதுக் கொண்ட அன்பினால் தான், கடவுள் இவற்றினை மீண்டும் எடுத்துக்கொண்டுக் காகிதத் துண்டுகளை மட்டும் வீசி எறிந்துவிட்டானோ என்றுக் கூட நமக்குத் தோன்றுகிறது. அந்த அழகிய இடத்தினை மீண்டும் காண ஆசைக் கொள்ளும் நம் கார்னியா, அவற்றினை தன் கரங்களால் கேமரா உதவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு நினைவுகளைப் பத்திரப்படுத்திக்கொள்ள ஆசைப்படுகிறது என்று தான் கூற வேண்டும். அப்படி நாங்கள் நினைவலைகளில் தேக்கிய, 300 புகைப்படங்களை பத்திரப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்ந்தோம். நாங்கள் அனைவரும் ட்ரைய்யுன்ட் அழகினை ரசித்தவாறேச் செல்ல மனமற்றுத் தங்கி ஓய்வெடுக்க, மறு நாள் நாங்கள் பார்க்கப் போகும் கப்ரோட்டோவினைப் பற்றியக் கனவு அலைகளைக் கொண்டுக் கண்களை இதமாக்க முயற்சிச் செய்ய, ட்ரைய்யுன்ட் பகுதியின் அழகே கனவிலும் எங்கள் மனதினை ஆட்சி செய்து இதயம் தந்த அரியாசணத்தில் அமர்ந்தது.

நாள் 2: ட்ரைய்யுன்ட் - கப்ரோட்டோ - பாக்சுநாக்

ட்ரைய்யுன்டில் எங்களுடையக் காலை உணவினைக் கொண்டு வயிற்றை தேவைக்கேற்ப நிரப்பி நாங்கள் ஆரோக்கியத்துடன் புறப்பட, கப்ரோட்டினை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம். இந்த இடத்தின் ஒரு முக்கிய இயற்கை வளமாக விளங்கும் அழகியத் தௌலத்தார் மலைத்தொடர்ச்சியும், லாக்கா பனிப்பாறைகளும் நம் கவனத்தை முழுவதுமாக ஈர்த்து மனதினைக் காட்சிகளால் இதமாக்குகிறது. அந்த சூழலை நாங்கள் நன்கு உணர்ந்து இயற்கை முன் சரணடைந்து நிற்கதியாகி பின் அங்கிருந்துப் புறப்பட்டு ட்ரைய்யுன்டினை நோக்கி நகர்ந்தோம்.

மனதை மயக்கும் தர்மசாலா

ட்ரைய்யுன்ட் பகுதியில் எங்கள் மதிய உணவினை மனதார உண்டு மனதினை அமைதியாக்க முற்பட, மனமோ ஏமாற்றம் கொண்டு ஏக்கத்துடனேப் பின் நோக்கி மீண்டும் செல்கிறது. ஒருவழியாக கால்களின் வேகத்துக்கு ஈடுக்கொடுத்து நாங்கள் அனைவரும் செல்ல பாக்சுநாக்கினை அடைந்தோம். முன்பு செல்லும் பொழுது அவற்றினைக் குதூகலத்துடன் கண்ட எம் கண்கள், இயற்கைப் பிணைப்பு நம்மை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாய் விலகுவதனை நினைத்து சிறிதுக் கவலையுடன் உம்மென்றேக் காணப்பட்டது. நாங்கள் சென்ற வழியில் கண்டப் பாக்சு நீர்வீழ்ச்சி எங்கள் மனதினை கொஞ்சம் மகிழ்ச்சியடையச் செய்தது. அந்த நீர்வீழ்ச்சியிலிருந்து விழுந்த நீரில் தொலைந்த எங்கள் மனதினைப் புகைப்படக்கருவியின் உதவியுடன் தேடி அந்த அழகினைக் கேமராக் கொண்டு நாங்கள் கவர்ந்தோம். நாங்கள் அடுத்து 4 மணி நேரப் பயணத்தின் வாயிலாகப் பாக்சுநாக்கினை அடைந்தோம். இந்த 4 மணி நேரத்தில் நாங்கள் எளிதானதொருப் பயணத்தின் மூலமாக சுமார் 13 கிலோமீட்டர்களைக் கடந்து இருக்கிறோம் என்பதனை தெரிந்துக் கொள்ளும் நாம், அழுது அடம்பிடிக்கும் ஒருக் குழந்தையை, அவன்/அவள் தாய் வழுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வேகமாகச் செல்வதனைப் போன்றதொரு உணர்வினைக் கொண்டுத் தத்தளிக்கிறது எம் மனம். அங்கிருந்து நாம் மெக்லியோட்கஞ்சிற்குப் புறப்பட்டுப் பேருந்தில் ஏறி ஏக்கத்துடன் அமர்ந்துத் தில்லியினை நோக்கி மீண்டும் செல்கிறோம்.

மனதை மயக்கும் தர்மசாலா

PC : Alok Kumar

என் மனதில் ஏற்பட்டதொருத் தாக்கத்தினை நான் தெரிந்துக் கொண்டேன்! ஆனால், இயற்கை அன்னை என் குடும்பத்தினைரை எந்த அளவுக்கு அழகைக் கொண்டுப் பாதித்தாள் என நான் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்க, வீட்டிற்கு வந்த என் தாய், அவளுடைய உடன்பிறப்புகளிடம் பயணத்தின் அழகினைப் பற்றி முனகிப் பேச தொடங்கினாள். நான் பயணத்தினைப் பற்றியதோர் கருத்தினை அவர்களிடம் கேட்க, அனைவரும் தங்களுடையக் கருத்துக்களை ஒரே நேரத்தில் சல சலவெனச் சத்தத்துடன் கூற ஆரம்பித்தனர், அந்த சத்தம் நான் கண்ட பாக்சு நீர் வீழ்ச்சியினை எனக்கு நினைவுப் படுத்தியது என்று தான் கூற வேண்டும். இந்தப் பயணத்தின் மூலம் என் பெற்றோர்கள் அதிகமாகவே இயற்கையால் ஈர்க்கப்பட்டனர் என்பதனை நான் அவர்கள் பேச்சின் மூலம் தெரிந்துக் கொள்ள, நானும் மனதில் ஒருத் தீர்மானம் எடுத்துக்கொண்டேன். யாருக்காவது மலை ஏற ஆசை என்றால், அவர்களுக்கு இந்த இடத்தினை நான் கண்டிப்பாகப் பரிந்துரை செய்ய தயாராக உள்ளேன்

Read more about: travel, trek
Please Wait while comments are loading...