Search
  • Follow NativePlanet
Share
» »Let's set foot in Eelam 2024: வாருங்கள் ஈழத்தில் கால் பதிப்போம்...!

Let's set foot in Eelam 2024: வாருங்கள் ஈழத்தில் கால் பதிப்போம்...!

உலகில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான 23 நாடுகளில், இலங்கையும் கடந்தாண்டு சேர்க்கப்பட்டு உள்ளது. இது, அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், மூன்று தசாப்தங்கள், பயணம் செய்ய உலகளவில் சுற்றுலா பயணிகள் தவிர்த்து வந்த நாடுகளில், இலங்கையும் முதன்மையாக இருந்தது என்பதை யாராலும் மறக்கவும், மறைக்கவும் முடியாது.

அந்தளவுக்கு உள்நாட்டு போர், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி போன்ற காரணங்களால், உலகம் முழுவதும் அன்றாடம் செய்திகளில் இலங்கை நாடு இடம்பெற்றது. ஆனால், அந்நாட்டில் பயணம் செய்தவர்களுக்கு தெரியும், அங்கு இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கு பஞ்சமில்லை என்பது.

srilanka , ella tour

சுவடை தாங்கி நிற்கும் வீடுகள்

அதை நானும் மறுக்கவில்லை. முதல் வெளிநாட்டு பயணம்; அதுவும் நான்கு நாட்கள் மட்டுமே பயணம் என்றாலும், கடந்தாண்டு (2023) நவம்பர், டிசம்பர் மாதங்கள் வாழ்வில் மறக்க முடியாது.

விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையின் வடமாகாண பகுதி யாழ்ப்பாணம். விமான நிலையத்தில் இருந்து, அந்நகரின் இயற்கையை ரசித்து கொண்டே சென்றபோது, ஆங்காங்கே சிதிலமடைந்த வீடுகளில் குண்டுகள் துளைத்து வெளியேறிய சுவடுகளை காண முடிகிறது.

தான் பிறந்து வாழ்ந்த இடத்தை விட்டு, புலம்பெயர்தல் என்பது எவ்வளவு கொடியது என்பதை, சிதிலமடைந்த வீடுகளும், அதன் முன் நிராதரவாக நிற்கும் கார்களை பார்க்கும் போது உணர முடிகிறது.

போர் பிடியில் இருந்து மீண்ட இலங்கையை நோக்கி, உலகளவில் சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கும் முயற்சியில், அந்நாட்டு சுற்றுலா துறை பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அதன் ஒரு முயற்சியாக, சர்வதேச கருத்தரங்குகள், தமிழர்களின் அடையாளமாக கருதப்படும் ஜல்லிக்கட்டை, இலங்கையின் கிழக்குப் பகுதியான திரிகோணமலை, சம்பூர் பகுதியில், முதல் முறையாக வெற்றிக்கரமாக நடத்தி காட்டியது இலங்கை சுற்றுலா துறை.

'ஜாப்னா'வின் கருப்பு பக்கம்

இதுபோன்ற முன்னெடுப்புகளால், 20230ல் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 5 கோடியாக உயரும் என்றும், அந்நாட்டு சுற்றுலா துறை எதிர்பார்ப்பில் உள்ளது. அது எல்லாம் சரி, நீங்க சொன்ன 'கருப்பு' பகுதி பற்றி சொல்ல மாட்டீங்களா என்று தானே கேட்கிறீர்கள்...!

இலங்கையின் இயற்கை எழிலை மட்டும் ரசிக்க விரும்பவில்லை; அதை தாண்டி வித்தியாசமான அனுபவங்கள், வரலாற்று சுவடையும் அறிய வேண்டும் என நினைக்கும் நபர்களின் ஆசையை, அந்நாட்டில் உள்ள 'Dream your space pvt ltd' நிறுவன இயக்குநர் சுரேன் கண்ணா நிறைவேற்றி வைக்கிறார்.

போரால், ஒரு நாடு, அங்கு வசிக்கும் மக்கள் எத்தகைய துன்பியல்களை எதிர்கொண்டு இருப்பர் என்பதை, நம்மால் யூகிக்க முடியாது. அந்தளவுக்கு, பல்வேறு விதமான கொடூரமான நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக நடந்தேறும்.

jafna, Sri Lanka

இரண்டு பேக்கேஜ்

அவை விட்டுச் சென்ற சுவடுகளை, நம் கண்ணால் பார்ப்பதற்கு, ஓர் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் சுரேன் கண்ணாவிடம் பேசுவோம் வாருங்கள்.... அவர் கூறியதாவது:

இன்றைய நவீன யுகத்தில், எதையும் கண்முன்னே ஒரு நொடியில் கொண்டு வர முடியும். சுமார் 30 ஆண்டுகள் வரை, உள்நாட்டு போர் நடந்தது. அத்தகைய போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள், அந்த பகுதிகளின் தற்போதைய நிலையை,'வாருங்கள் ஈழத்தில் கால்பதிப்போம்' என்ற தலைப்பில், நான்கு இரவு, ஐந்து நாட்கள் கொண்ட 'பேக்கேஜ்' திட்டத்தில், சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வோம்.

இரண்டு பேக்கேஜ் திட்டங்களில், ஒன்று யாழ்ப்பாணத்தில் கருப்பு பகுதிகளையும், மற்றொன்று இங்குள்ள பாரம்பரிய கோவில்களையும் சுற்றி காண்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்து தருகிறோம்.

இலங்கையின் வட மாகாண பகுதியான யாழ்ப்பாணத்தில், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள், போர் தாக்கத்தை,'பிளாக் ஜாப்னா' என்றே நாங்கள் கூறுகிறோம். அதாவது, யாழ்ப்பாணத்தின் கருப்பு பக்கத்தை, நாங்கள் கண்முன்னே பயணங்கள் வாயிலாக நிறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்

வாருங்கள் ஈழத்தில் கால் பதிப்போம்...!

நாள் ஒன்று

திரிகோணமலை

மூன்று நாள்

யாழ்ப்பாணம்

எங்கெங்கு...

நல்லுார் கந்தசாமி கோவில்,மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை, நாகுலேஸ்வரம் கோவில், கோணேஸ்வரம் கோவில், சங்கரி தேவி சக்தி பீடம், கிளிநொச்சி, கன்னியா வெந்நீர் ஊற்று(ராமாயணத்தின்படி,ராவணன் அரசனின் தாயார் இறந்த போது வெந்நீர் ஊற்றுகள் உருவானது) ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில், நாகதீப் கோவில், மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை...

திட்டங்களில், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டலில் தங்குமிடம், ஏ.சி., பொருத்தப்பட்ட பயண பஸ், ஆங்கிலம், தமிழ் மொழிப்பெயர்ப்பாளர் ஆகியவை பொருந்தும்.

கட்டணம், பயணம் திட்டம் குறித்து இன்னும் விரிவாக அறிய... தொடர்பு கொள்ளவும்.

Dream your Space Pvt Ltd

Www.dream your space.com, மின்னஞ்சல்: [email protected], +94112950977, +94705805882, +94755973937

More News

    Read more about: jaffna srilanka travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+