Search
  • Follow NativePlanet
Share
» »ஆனைமலை - இங்கு சென்றிடவே மனம் விரும்பிடுமே

ஆனைமலை - இங்கு சென்றிடவே மனம் விரும்பிடுமே

பேரழகும் அதிசயங்களும் நிறைந்த இயற்கை வளத்தை கொண்டு வானுயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கும் முக்கியமான மலைகளில் ஆனைமலையும் ஒன்று. தென் இந்தியாவில் வேறுங்கும் இல்லாத அளவு மிக செழுமையாக வன உயிர்கள் வாழும் இடமாக இருப்பதால் ஆனைமலை மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் வனவிலங்கு சரணாலயங்கள் ஏராளமாக இருக்கின்றன.

ஆனைமலை

ஆனைமலை

மனிதன் உருவாக்கிய அத்தனை செயற்கையான விஷயங்களையும் விடுத்து இயற்கையுடன் ஏகாந்தமாக ஒன்றி அற்புதமான அனுபவத்தை பெற விரும்பினால் ஆனைமலை தான் நீங்கள் வரவேண்டிய இடம்.

Photo:Arunguy2002

ஆனைமுடி:

ஆனைமுடி:

ஆனைமலை மலைத்தொகுப்பில் இருக்கும் ஆனைமுடி தான் தென் இந்தியாவிலேயே மிக உயர்ந்த சிகரமாகும். கடல் மட்டத்தில் இருந்து 2,479 மீ உயரத்தில் இச்சிகரம் அமைந்திருக்கிறது. இதனாலேயே ஆனைமுடி தெனிந்தியாவில் அதிகம் விரும்பப்படும் ட்ரெக்கிங் தளமாக விளங்குகிறது. நவம்பர் முதல் மே மாதம் வரையிலான காலகட்டம் இங்கு ட்ரெக்கிங் செய்ய ஏற்ற சிறந்த காலகட்டமாகும்.

Photo:Prateek Rungta

எரவிக்குளம் தேசிய பூங்கா:

எரவிக்குளம் தேசிய பூங்கா:

கேரளா மாவட்டம் இடுக்கியில் ஆனைமலை மலைத்தொடரில் அமைந்திருக்கிறது யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் எரவிக்குளம் தேசிய பூங்கா.

Photo:matthieu-aubry

எரவிக்குளம் தேசிய பூங்கா:

எரவிக்குளம் தேசிய பூங்கா:

இந்த பூங்காவினில் தான் ஆனைமுடி மலைச்சிகரமும் அமைந்திருக்கிறது. இந்த பூங்காவில் தான் தமிழ் நாடு அரசின் மாநில விலங்காக அறியப்படும் மிகவும் அருகி வரும் வரையாடுகள் வாழ்கின்றன.இது தவிர சாம்பார் மான்கள், காட்டுப்பூனைகள், சிறுத்தைகள், லங்கூர் குரங்குகள், பலவகை கீரிகள் வாழ்கின்றன.

Photo:Arun Suresh

எரவிக்குளம் தேசிய பூங்கா:

எரவிக்குளம் தேசிய பூங்கா:

ஆணைமுடியில் ட்ரெக்கிங் போக விரும்புகிறவர்கள் இந்த பூங்காவின் வழியாகவே செல்ல முடியும். ட்ரெக்கிங் செய்யாமல் இந்த பூங்காவை மட்டும் சுற்றிபார்க்க நினைப்பவர்களுக்கு கேரள சுற்றுலாத்துறையால் மினி பேருந்தில் பூங்காவினுள் சுற்றிபார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்க்கு கட்டணமாக 65 ருபாய் செலுத்த வேண்டும்.

Photo:Sankara Subramanian

ஆனைமலை:

ஆனைமலை:

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகமாக வாழும் காட்டெருமைகள்.

Photo:Sankara Subramanian

ஆனைமலை:

ஆனைமலை:

பேரழகு கொண்ட ஆனைமுடி சிகரம்.

Photo:Arun Suresh

ஆனைமலை:

ஆனைமலை:

பனிபடர்ந்த ஆனைமலை மலைத்தொகுப்பில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தின் ஒரு காட்சி

Photo:Prateek Rungta

 ஆனைமலை

ஆனைமலை

ஆனைமலைக்கு பக்கத்தில் இருக்கும் நகரம் முணார் ஆகும். இதுவும் இந்தியாவின் மிக முக்கிய மலைவாசச்தலமாக விளங்குகிறது.

மூணாரில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே.

Photo:Sankara Subramanian

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+