Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் பழமையான நகரங்கள்

இந்தியாவின் பழமையான நகரங்கள்

இந்தியாவின் பழமையான நகரங்கள்

இந்தியா, உலகின் மிகப்பழமையான அதேசமயம் வாழ்வியல் முறைகளிலும், அறிவியல் அறிவிலும் சிறப்பான நிலையை எட்டி இருந்த நாகரீகங்களான இந்து சமவெளி நாகரீகமும், ஹரப்பா மொஹெஞ்சதாரோவும் இருந்த இடம். இன்று மேலை நாடுகள் என சொல்லப்படும் பல நாடுகளில் மனிதர்கள் விலங்குகளுடன் ஒன்றாக காட்டில் வசித்துக்கொண்டிருக்கயில் இங்கே கங்கை கரையில் திரிகோணம விதியும், நான்மறைகளும் கற்பிக்கப்பட்டன. இன்றும் இந்தியாவின் பல இடங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக முறை மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன. உலகின் முக்கல் வாசி நாடுகளின் வரலாறே இன்னும் ஆயிரம் வருடங்களை தாண்டவில்லை. சரி, வாருங்கள் இத்தனை சிறப்புகள் நிறைந்த இந்திய நாட்டின் மிகப்பழமையான நகரங்கள் எவைஎவை என்பதை தெரிந்துகொள்வோம்.

வாரணாசி (அ) காசி:

photo:Achilli Family | Journeys

உத்திர பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் இன்னும் இயங்கி கொண்டிருக்கும் நகரங்களில் உலகிலேயே மிகப் பழமையானது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இங்கு குறிப்பிடத்தகுந்த பல கணித அறிஞர்களும், எழுத்தாளர்களும், ஆன்மீக குருக்களும் வாழ்ந்திருக்கின்றனர். இங்கு இருக்கும் காசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் முக்கிய யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் என்று அழைக்கப்படும் வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், சம்பூர்னானந்த் சமஸ்கிரத காசி வித்யாபீடம் போன்ற தொன்மையான கல்வி நிறுவனங்களும் இருக்கின்றன. இந்தியாவின் உண்மையான முகத்தை பார்க்க ஆசைப்படுபவர்கள் நிச்சயம் காசிக்கு வரவேண்டும்.

புஷ்கர்:

Photo:Koshy Koshy

ராஜஸ்தான் மாநிலத்தில் தார் பாலைவனத்தை ஒட்டி அமைந்திருக்கும் சிறிய நகரம் தான் இந்த புஷ்கர். இங்கு வருட வருடம் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒட்டகத் திருவிழா உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாபயணிகளை ஈர்க்கிறது. இந்த சந்தை மட்டுமே பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம். இங்கிருக்கும் புஷ்கர் ஏரியை ஒட்டி பிரம்ம தேவனுக்கு உலகில் இருக்கும் ஒரே ஒரு கோயில் அமைந்திருப்பது இவ்விடத்தின் தனிச்சிறப்பாகும். ஒட்டகத் திருவிழா நடக்கும் சமயம் இங்கு வருவதற்கு சிறந்த நேரமாகும். அப்போது இங்கு நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறலாம், ஒட்டக சவாரி செய்யலாம் மேலும் இங்கு கிடைக்கும் சுவையான ராஜ ராஜஸ்தானி உணவுகளை சுவைத்து மகிழலாம்.


உஜ்ஜைன்:

Photo:Bernard Gagnon

மகாபாரத்தில் குறிப்பிடப்படும் அளவு பழமை வாய்ந்த இந்நகரம் மத்திய பிரதேச மாநிலத்தில் க்ஷிர்பா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. முற்காலத்தில் அவந்தி பேரரசின் தலைநகரமாக விளங்கிய இது உஜ்ஜைனி என அழைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தான் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் பெரும் ஆன்மீக திருவிழாவான 'கும்ப மேளா' நடக்கிறது. 12 முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றான மகாகலேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலும் இங்கே அமைந்திருக்கிறது. இதன் பழமையான கோயில்களை காணவும், இங்கிருக்கும் வரலாற்று சுவடுகளை காணவும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

மதுரை:

Photo:McKay Savage

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை தென் இந்தியாவின் முக்கிய கலாச்சார கேந்திரங்களுள் ஒன்று. இந்நகரத்தில் தான் சங்கம் வைத்து அக்கால புலவர்கள் தமிழ் வளர்த்துள்ளனர். அப்படிப்பார்த்தால் இந்நகரம் 2500 ஆண்டு கால பழமை உடையதாகும். இங்கிருக்கும் மதுரை மீனாட்ச்சியம்மன் கோயில் கட்டிடக்கலை அதிசயம். இக்கோயிலை மையமாக வைத்து தாமரை வடிவில் அதை சுற்றிய பகுதிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளாக இங்கு அதே பூஜை புனஸ்கார முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வருடம் முழுவதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள தொன்மையான இடங்களைக்கான வருகின்றனர்.

பாட்னா:

Photo:Andrew Moore

இந்தியாவில் இத்தனை சிறப்புகளை உடைய வேறு நகரம் இருக்குமா என்பது சந்தேகமே. உலகின் முக்கிய மதங்களில் ஒன்றான புத்த மதத்தை தோற்று வித்த புத்தர் பிறந்த இடம் இது. மேலும் 4ஆம் நூற்றாண்டிலேயே பல்கலைக்கழகம் அமைத்து நற்க்கல்வி போதித்திருக்கின்றனர். ஏறத்தாழ இந்திய துணைக்கண்டம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மகத பேரரசின் தலைநகரமாக விளங்கிய இந்நகரம் சிறந்த சுற்றுலாவுக்கான இடங்களை அதிகம் கொண்டிருக்க விட்டாலும் அகழ்வாராய்ச்சி செய்பவர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பெரும் புதையலாக பாட்னா விளங்குகிறது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+