Search
  • Follow NativePlanet
Share
» »அன்ஷி தேசியப் பூங்காவுக்கு சென்று வரலாமா?

அன்ஷி தேசியப் பூங்காவுக்கு சென்று வரலாமா?

அன்ஷி தேசியப் பூங்காவுக்கு சென்று வரலாமா?

PC: Amoghavarsha

காட்டுயிர் ஆர்வலர்களுக்கு பிடித்தமான இது கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்ட த்தில் கார்வாரிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டரில் இருந்து 925 மீட்டர் வரை உயரம் கொண்ட இப்பகுதி 340 ச.கி.மீ பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ளது. இந்த பகுதியில் சுற்றுலா சென்று, எந்தெந்த இடங்களுக்கெல்லாம் செல்லலாம் என தெரிந்துகொள்வோம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

அன்ஷி தேசிய வனவிலங்கு பூங்கா

முக்கியமான சுற்றுச்சூழல் கேந்திரமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கும் இந்த அன்ஷி தேசிய வனவிலங்கு பூங்கா தன்டெலி வனவிலங்கு சரணாலயத்தின் ஒருபகுதியை பிரித்து காட்டுயிர் பூங்காவாக உருவாக்கப்பட்டது.

புலிகள் பாதுகாப்பு

2007ம் ஆண்டு ஜனவரி மாத த்தில் இந்த பூங்காவுக்கு புலிகள் பாதுகாப்பு திட்டத்துக்கான சரணாலயமாகவும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்தியாவில் புலிகள் பாதுகாக்கப்படும் புலிகள் பாதுகாப்பு காடுகளில் இது மிக முக்கியமானதாகும்.

என்னென்ன இருக்கின்றன

இந்த பூங்காவில், புலிகள் மட்டுமல்லாமல் வேறு பல உயரினங்களும் காணப்படுகின்றன. விலங்குகள், ஊர்வன, பறவைகள், அரிய வகை தாவரங்கள் போன்றவை இந்த பூங்காவில் நிறைந்துள்ளன.

எப்போது செல்லலாம்

வெய்யில் காலங்களில் பெரிய அளவு கூட்டம் இருக்காது என்பதாலும், சீனன் நவம்பர் தொடங்கும் என்பதாலும், இந்த பூங்காவை விஜயம் செய்வதற்கு ஏற்ற காலம் நவம்பர் மற்றும் ஜூன் மாதங்கள் ஆகும்.

குரும்காட் தீவு

ஆமை வடிவத்தில் காணப்படும் இந்த குரும்காட் தீவு கரையிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. சுற்றுலாப்பயணிகள் மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு பொருத்தமான இயற்கை அமைப்பு இந்த தீவில் உள்ளது.

பூங்காவின் இயற்கை அழகு

பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி அதன் அழகை கண்டு மகிழுங்கள்

Read more about: travel karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X