Search
  • Follow NativePlanet
Share
» » நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் பூமியில் இருந்து புல்லட் ரயில் – பயணிக்க நீங்க ரெடியா!

நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் பூமியில் இருந்து புல்லட் ரயில் – பயணிக்க நீங்க ரெடியா!

தலைப்பை படித்த உடனே விந்தையாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஆனால் உண்மை தான். கடலுக்கு அடியில் பயணம், வானில் பயணம், என்பது போல விண்வெளிக்கே பயணம் செல்ல செல்வந்தர்கள் தயாராகி வருகின்றனர். ஜப்பானின் தொழில்நுட்பத்தை நம்பினால் அதுவும் சாத்தியம் தான் மக்களே! செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஜப்பான் திட்டங்களை வகுத்துள்ளதாக பல ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. ஆம்! இந்த கனவை நிஜமாக்க ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு புல்லட் ரயிலை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

Bullet train to mars and moon, Japan

பல ஆராய்ச்சியாளர்களின் முயற்சி

கஜிமா கன்ஸ்ட்ரக்ஷனுடன் இணைந்து ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த புதிய கிரகங்களுக்கு இடையேயான போக்குவரத்து அமைப்பு ஹெக்ஸாட்ராக் என்று அழைக்கப்படுகிறது. குறைந்த புவியீர்ப்புக்கு நீட்டிக்கப்பட்ட வெளிப்பாட்டின் விளைவுகளை குறைக்க நீண்ட தூரம் பயணிக்கும் போது 1G இன் ஈர்ப்பு விசையை பராமரிப்பதன் மூலம் இது செயல்படும். இது பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு இடையே ஓடும் விண்வெளி ரயில் ஆகும்.

தொழில்நுட்ப முன்னோடியான ஜப்பான்

பூமியின் ஈர்ப்பு, வளிமண்டலம் மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றை நகலெடுக்கும் வகையில் கண்ணாடி வாழ்விட அமைப்பை உருவாக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. மேம்பட்ட தொழில்நுட்ப யோசனைகளுக்கு பெயர் பெற்ற நாடான ஜப்பான், விண்வெளியில் பயணிக்க மக்களை அனுமதிக்கும் புல்லட் ரயிலை உருவாக்க தயாராக உள்ளதால், விண்வெளி பயணம் இனி அறிவியல் புனைகதை திரைப்படங்களுக்கு மட்டுப்படுத்தப்படாது.

Bullet train to mars and moon, Japan

எந்தவித பாதிப்பும் இல்லை

மனிதர்கள் வாழக்கூடிய வகையில் பூமியைப் போன்ற வளிமண்டலத்துடன் செவ்வாய் கிரகத்தில் செயற்கை விண்வெளி வாழ்விடத்தை உருவாக்குவதை ஜப்பான் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் எந்தவிதமான பாதகமான விளைவையும் ஏற்படுத்தாது. அதேபோல பயணிக்கும் பயணிகளுக்கும் எந்த வித பாதிப்பும் இதன் மூலம் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் இடையே பாதை

புல்லட் ரயில்கள் நடுவில் நகரும் சாதனத்துடன் கூடிய 'ஹெக்ஸாகேப்சூல்கள்' (அறுகோண வடிவ காப்ஸ்யூல்கள்) இருப்பதாகவும் கூறப்படுகிறது. 15 மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு மினி காப்ஸ்யூல் பூமியை சந்திரனுடன் இணைக்கும் அதே வேளையில் 20 மீட்டர் சுற்றளவு கொண்ட சற்றே பெரிய காப்ஸ்யூல் பூமியை செவ்வாய் கிரகத்துடன் இணைக்கப் பயன்படுத்தப்படும்.

Bullet train to mars and moon, Japan

விண்வெளி ரயில் நிலையங்கள்

சந்திரனில் உள்ள ரயில் நிலையம் சந்திர நிலையம் என்று அழைக்கப்படும் மற்றும் அது கேட்வே செயற்கைக்கோளைப் பயன்படுத்தும். மறுபுறம் செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலையம் செவ்வாய் நிலையம் என்று அழைக்கப்படும் மற்றும் இது செவ்வாய் கிரக செயற்கைக்கோளான போபோஸில் அமைந்திருக்கும். புவி நிலையம் டெர்ரா நிலையம் என்று அழைக்கப்படும் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) முன்னோடியாக இது இருக்கும்.

இன்னும் 30 ஆண்டுகளில் பயணம்

இந்த திட்டம் நிறைவேற 100 ஆண்டுகள் ஆகலாம் ஆனால் 2050 ஆம் ஆண்டுக்குள் மார்ஸ்கிளாஸ் மற்றும் லுனாகிளாஸின் எளிமைப்படுத்தப்பட்ட முன்மாதிரி பதிப்பை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் இலக்கு வைத்துள்ளனர்.

இன்டர்ஸ்டெல்லர் மற்றும் தி மார்ஷியன் போன்ற திரைப்படங்களைப் பார்க்கும்போது நாம் கற்பனை செய்யக்கூடிய வாழ்க்கையை நமது எதிர்கால தலைமுறை வாழ்வார்கள்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+